TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 23rd November 2023

1. உலக பாரம்பரிய வாரமானது ஆண்டுதோறும் எந்த மாதத்தின்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

அ. ஜனவரி

ஆ. ஏப்ரல்

இ. செப்டம்பர்

ஈ. நவம்பர் 🗹

  • உலக பாரம்பரிய வாரமானது ஆண்டுதோறும் நவம்பர்.19 முதல் நவம்பர்.25 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கலாசாரம் & பாரம்பரியத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய தலங்களைக்கொண்டாடுகிறது. இந்தியாவில், இத்திருவிழா இந்திய தொல்லியல் துறையால் அனுசரிக்கப்படுகிறது.

2. APEC முறைசாரா தலைவர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. அமெரிக்கா 🗹

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உலகளாவிய உட்கட்டமைப்பு & முதலீட்டுக்கான கூட்டாண்மை & முன்னேற்றத்துக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் முதலீட்டாளர் மன்றத்தில் பங்கேற்றார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்கான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகளை மையமாகக்கொண்ட இந்தக் கலந்துரையாடல். இந்த மாநாட்டில் இந்த அமைப்பின் பங்கேற்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதன் பின்னர், APEC முறைசாரா தலைவர்களின் பேச்சுவார்த்தையில் அமைச்சர் பங்கேற்றார்.

3. லூக் பிரீடன் என்பவர் கீழ்காணும் எந்த நாட்டின் புதிய பிரதமரானார்?

அ. இஸ்ரேல்

ஆ. உக்ரைன்

இ. லக்சம்பர்க் 🗹

ஈ. மாலத்தீவுகள்

  • லக்சம்பர்க்கின் முன்னாள் நிதி அமைச்சர் லூக் பிரீடன் அந்நாட்டின் புதிய பிரதமரானார். இதன்மூலம் அவருடைய கிறித்தவ மக்களாட்சிக் கட்சியும் முன்னாள் பிரதமர் சேவியர் பெட்டலின் தாராளவாத கட்சியும் இணைந்த கூட்டணி அரசாங்கத்திற்கு அவர் தலைமைதாங்குகிறார். லக்சம்பர்க்கில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தி வந்த மைய-வலது சாரி கட்சியான பிரீடனின் கிறித்தவ சமதர்மவாத மக்களாட்சிக் கட்சியானது யாதொரு கூட்டணியும் இல்லாமல் கடந்த மாதம் நடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாமல் வென்றது.

4. ‘தேசிய மருந்தக ஆணைய மசோதா, 2023’ஐ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ. மத்திய சுகாதார அமைச்சகம் 🗹

ஆ. மத்திய MSME அமைச்சகம்

இ. மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஈ. மத்திய மின் அமைச்சகம்

  • மத்திய சுகாதார மானது கடந்த 1948ஆம் ஆண்டின் மருந்தகச் சட்டத்தை ரத்துசெய்து, இந்திய மருந்தகக் குழுமத்தை தேசிய ஆணையத்துடன் இணைக்கும் நோக்கத்துடன், தேசிய மருந்தக ஆணைய மசோதா, 2023 வரைவை வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இம்மசோதா தரமான மற்றும் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய அளவிலான மருத்துவக் கல்விக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. அடைவகங்கள் மற்றும் முடுக்கிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் தகவல் தளத்தை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் எது?

அ. IISc பெங்களூரு

ஆ. IIT மெட்ராஸ் 🗹

இ. IIT பாம்பே

ஈ. IIT தில்லி

  • ஐஐடி மெட்ராஸில் உள்ள சிறப்புவாய்ந்த மையமான துளிர் நிறுவல்கள் மற்றும் இடர் நிதியளிப்பு குறித்த ஆராய்ச்சி மையம் (CREST) அடைவகங்கள் (Incubators) மற்றும் முடுக்கிகளுக்கு (Accelerators) ஏற்றவாறு இந்தியாவின் முதல் தகவல் தளத்தை உருவாக்குவதாக அறிவித்தது. ஐஐடி மெட்ராஸில் உள்ள துளிர் நிறுவனமான, ‘YNOS’ உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தத் தளம் அடைவகங்கள் மற்றும் முடுக்கிகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. இந்த நிறுவனங்கள் தொழில் முனைவோர் சூழலமைப்பின் நிச்சயமற்ற தன்மைகளை வழிநடத்தும் போது துளிர் நிறுவல்களை ஆதரிப்பதில் முதன்மை பங்கு வகிக்கின்றன.

6. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2050ஆம் ஆண்டில், கீழ்காணும் எந்த நிலை உலகளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் இறப்புகளுக்கு வழிகோலும்?

அ. நீரிழிவு நோய்

ஆ. புற்றுநோய்

இ. நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்தன்மை 🗹

ஈ. உயர் இரத்த அழுத்தம்

  • உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகமானது, நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் தன்மை (Anti-Microbial Resistance) உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 1.27 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்துவதோடு தெற்காசியாவில் 389,000 பேர் இதனால் உயிரிழந்ததாக மதிப்பிட்டுள்ளது.
  • உடனடியாக இல்லாமல், 2050 வாக்கில், AMR ஆனது உலகளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் இறப்புகளுக்கு வழி கோலும் என்று கணித்துள்ளது. இது குறிப்பிடத்தக்க பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் உலகளாவிய ஏற்றுமதியில் 3.8% வரை சாத்தியமான சரிவையும் மற்றும் சுகாதாரம் தொடர்பான செலவுகளில் $1 டிரில்லியன் அதிகரிப்பையினையும் ஏற்படுத்தும்.

7. அண்மையில் காலமான S வெங்கிடராமன், கீழ்காணும் எந்த நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார்?

அ. இந்திய தேர்தல் ஆணையம்

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி 🗹

இ. உச்சநீதிமன்றம்

ஈ. BCCI

  • ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் S. வெங்கிடராமன் அண்மையில் தனது 92ஆம் வயதில் காலமானார். இந்திய ஆட்சிப் பணியில் தமிழ்நாடு தொகுதியைச் சேர்ந்த வெங்கிடராமன், 1990 டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். அவர் வங்கித்துறை சீர்திருத்தங்களைத் தொடங்கி, இரட்டை மாற்று விகித முறையை நோக்கிச் செல்வதன்மூலம் மாற்று விகித அமைப்பில் தொடக்கநிலை மாற்றத்தை ஏற்படுத்தினார்.

8. ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது கீழ்காணும் எந்தத் துகள்களின் காஸ்மிக் டெலிவரி முறைமையை சிஸ்டத்தை கண்டறிந்தது?

அ. தூசி

ஆ. கூழாங்கல் 🗹

இ. பனி

ஈ. டைட்டானியம்

  • NASAஇன் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது தனது ஓர் அண்மைய ஆய்வில் வெளிப்புற சூரிய குடும்பத்திலிருந்து உள்நோக்கிச்செல்லும் பனிமூடிய கூழாங்கற்களை உள்ளடக்கிய அதிநவீன அண்ட விநியோகச் சங்கிலியைக் கண்டறிந்துள்ளது. இந்தக் பனிக் கூழாங்கற்கள் அந்தந்த விண்மீன்களுக்கு நெருக்கமாக உருவாகும் செயல்பாட்டின்போது கோள்களுக்கு நீரைக்கொண்டுசெல்கின்றன என்ற நீண்டகால கோட்பாட்டுக்கு இந்த ஆய்வு ஆதரவாக உள்ளது.

9. ‘அழிந்துபோன வெப்பநீராற்றல் புலம்’ என்பது எந்தப் பெருங்கடலுக்கு மேலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

அ. இந்தியப் பெருங்கடல்

ஆ. அட்லாண்டிக் பெருங்கடல் 🗹

இ. பசிபிக் பெருங்கடல்

ஈ. அண்டார்டிக் பெருங்கடல்

  • 2000ஆம் ஆண்டில் அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட அழிந்துபோன வெப்பநீராற்றல் புலம், கடல் மேற்பரப்பிலிருந்து 700 மீட்டருக்கு மேல் அமைந்துள்ளது. இது பல்வேறு மர்மங்களை தன்னுள் உள்ளடக்கி உள்ளது. குறைந்தபட்சம் 120,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட இச்சூழல், மேல்நோக்கிச்செல்லும் கவசம் மற்றும் கடல்நீருக்கு இடையே ஒரு தனித்துவமான தொடர்புகளை ஏற்பத்தியுள்ளது. இருப்பினும், இந்த அழிந்துபோன வெப்ப நீராற்றல் புலத்தின் அருகிலுள்ள பகுதிகளில் போலந்து சுரங்க உரிமைகளைப் பெறுவதால், இந்தச்சூழலமைப்பு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஜிகா வைரஸ் ஆனது எதன்மூலம் பரவுகிறது?

அ. வௌவால்

ஆ. கொசு 🗹

இ. குரங்கு

ஈ. நாய்

  • புனேவில் உள்ள எரவாடா பகுதியில் உள்ள 64 வயது பெண் ஒருவருக்கு கொசுக்களால் பரவும் ஜிகா என்ற நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் முதன்மையாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் உள்ள ஏடிஸ் (Stegomyia) என்ற கொசு இனத்தின், முக்கியமாக Aedes aegypti என்ற கொசுக்களில் உள்ள பாதிக்கப்பட்ட கொசுக்களால் பரவுகிறது.

11. நடப்பு 2023ஆம் ஆண்டில்வரும் உலக தொலைக்காட்சி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Accessibility 🗹

ஆ. Communication

இ. Inclusion

ஈ. Awareness

நவம்பர்.21 அன்று கடைப்பிடிக்கப்படும் உலக தொலைக்காட்சி நாலாந்து உலகளவில் காட்சி ஊடகத்தின் முக்கியப் பங்கையும் முடிவெடுப்பதில் அதன் வளர்ந்துவரும் சிறப்பையும் எடுத்தியம்புகிறது. தொலைக்காட்சியானது 1924இல் ஸ்காட்டிய பொறியாளர் ஜான் லோகி பேர்ட் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவை முதல் உலக தொலைக்காட்சி மன்றத்தை நடத்தியது. ஆண்டுதோறும் நவம்பர்.21ஐ உலக தொலைக்காட்சி நாளாக அது நியமித்தது. நடப்பு 2023ஆம் ஆண்டில்வரும் உலக தொலைக்காட்சி நாளுக்கானக் கருப்பொருள், ‘Accessibility – அணுகல்’ என்பதாகும். இந்தியாவில் தேசிய ஒளிபரப்பு கடந்த 1982இல் தொடங்கியது.

12. 2023 – NASAஇன் IMPACT பிளானட் விருது பெற்ற இந்தியர் யார்?

அ. டாக்டர் சுஜித் ராய் 🗹

ஆ. அகிலேஷ் துதேஜா

இ. பாலாஜி சீனிவாசன்

ஈ. உமேஷ் சச்தேவ்

  • பிரைன்அலைவ் நிறுவனர் டாக்டர் சுஜித் ராய், ஜியோஸ்பேஷியல் AI அறக்கட்டளை மாதிரி திட்டத்திற்கான சிறந்த பங்களிப்பிற்காக, 2023 – NASAஇன் IMPACT பிளானட் விருதைப் பெற்றார். Dr சுஜித் ராய், NASA இம்பேக்ட் மற்றும் மான்செஸ்டர் பல்கலைக்கழகம்போன்ற உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனங்களில் இயந்திர கற்றல் மற்றும் கணினி வலையமைப்பு அறிவியலில் R&Dஇல் பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்: 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்.

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியா 9 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து போட்டியை நிறைவுசெய்தது. தென்கொரியா 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 2ஆம் இடம் பிடித்தது.

உலகின் 5ஆம் நிலை வீரரான இராகேஷ் குமார் 3 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். காம்பவுண்ட் ஆடவர் பிரிவில் அவர் தங்கம் வென்றார். அதிலேயே ஆடவர் ஓபன் அணிகள் பிரிவில் ராகேஷ் குமார், சூரஜ் சிங் கூட்டணி முதலிடம் பிடித்தது. பின்னர் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இராகேஷ் குமார்/ஷீத்தல் தேவி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவில் ஷீத்தல் தேவி, ஜோதி இணை 148-137 என்ற கணக்கில் தென் கொரியாவின் ஜின் யங் ஜியோங்/நா மி சோய் ஜோடியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

2. ஈரோடு உள்பட 4 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்:

புற்றுநோய் பாதிப்புகள் அதிகமுள்ள ஈரோடு, திருப்பத்தூர் உள்பட நான்கு மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டில் புற்றுநோய் கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் `220 கோடியில் கட்டப்பட்டு வருவதாகவும் 2025ஆம் ஆண்டுக்குள் காச நோய், தொழுநோய் இல்லா தமிழ்நாடு என்னும் இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin