TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 23rd January 2024

1. உலக பொருளாதார மன்றத்தில் இந்தியாவால் தொடங்கப்பட்ட, “Global Alliance for Global Good – Gender Equity and Equality” என்பதன் முதன்மை நோக்கம் என்ன?

அ. கல்வி புத்தாக்கம்

ஆ. பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம்

இ. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை

ஈ. பொருளாதார வளர்ச்சி

  • டாவோஸில் நடந்த 54ஆவது ஆண்டு உலக பொருளாதார மன்றத்தின்போது, “உலக நன்மைக்கான உலகளாவிய கூட்டணி – பாலின தகைமை மற்றும் சமத்துவம்” என்ற அமைப்பை இந்தியா தொடங்கியது. இந்த முன்னெடுப்பு உலகளவில் பெண்களின் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் நிறுவனங்களில் கவனஞ்செலுத்தும் இக்கூட்டணி அறிவுப்பகிர்வு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நன்னலம், தரமான கல்வி, பாலின சமத்துவம் மற்றும் வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டாண்மைபோன்ற நிலையான வளர்ச்சி இலக்குகளை தீர்வுகாண்பதற்கான சிறந்த நடைமுறைகளை எளிதாக்குகிறது.

2. உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற G-77 மூன்றாவது தெற்கு உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?

அ. Leaving No One Behind

ஆ. Economic Resilience and Economic Security

இ. Sustainable Development

ஈ. Global Unity & Prosperity

  • மூன்றாவது தென் உச்சிமாநாடு என்பது 2024 ஜன.21-22 ஆகிய தேதிகளில் உகாண்டாவின் கம்பாலாவில் நடந்த G-77 குழுவின் கூட்டமாகும். “Leaving No One Behind” என்பது இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். இந்த உச்சிமாநாட்டில் G77+சீனா மாநாடும் அடங்கும். G-77 என்பது சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உட்பட 134 நாடுகளின் குழுவாகும். வளர்ந்த நாடுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பன்னாட்டு செலவாணி நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் எதிர்வினையாக G-77 நிறுவப்பட்டது. G-77இன் கொள்கைகளில் பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல், நட்புறவுகளை வளர்த்தல் மற்றும் சச்சரவுகளுக்கு அமைதியான வழியில் தீர்வுகளை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.

3. சமீபத்தில் எந்த நகரத்தில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சரால் அதிநவீன, ‘ஆயுஷ் தீக்ஷா’ மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது?

அ. புவனேசுவரம்

ஆ. கொல்கத்தா

இ. பெங்களூரு

ஈ. கொச்சி

  • மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் புது தில்லியில் ஆயுஷ் தொழில் வல்லுநர்களின் மனிதவள மேம்பாட்டுக்கான முதல் மையமான, ‘ஆயுஷ் தீக்ஷா’வுக்கு அடிக்கல்நாட்டினார். இந்த அதிநவீன மையம் புவனேசுவரத்தில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்திற்குள் உருவாக்கப்படும்.
  • திறன்மேம்பாடு, மனித வளத்தை வலுப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்குதல், வருவாயை உருவாக்கும் நோக்கத்துடன் சுய-நிலைத்தன்மையை அடைதல் ஆகியவற்றிற்காக தேசிய முக்கியத்துவம்வாய்ந்த நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், ஆயுஷ் நிபுணர்களுக்கு, குறிப்பாக ஆயுர் வேதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்நிறுவனம் பயிற்சித்திட்டங்களை வழங்கும்.
  • ‘ஆயுஷ் தீக்ஷா’ மையம் `30 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு அரங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய நாற்பது நவீன அறைகள், இயற்கை நூலகத்திற்கான பிரத்யேக இடம், கலந்துரையாடல் அறைகள், சமையலறை, ஓய்வறை உள்ளிட்ட அதிநவீன வசதிகளை இது கொண்டிருக்கும்.

4. கங்கர் பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. ஒடிஸா

இ. சத்தீஸ்கர்

ஈ. பஞ்சாப்

  • சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜக்தல்பூரில் அமைந்துள்ள கங்கர் பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா, தனித்துவமான நிலப்பரப்பு அடிப்படையிலான சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்திற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து செயல்படுகிறது. கடந்த 1982இல் நிறுவப்பட்ட இந்தப்பூங்கா, கோலாபா ஆற்றின் குறுக்கே 200 சதுர கிமீ நிலப்பரப்பில் அமைந்துள்ளது. குடும்பசார், கைலாஷ் மற்றும் தண்டக் போன்ற தனித்துவமான குகைகளுக்குப் பெயர் பெற்ற இந்தத் தேசியப் பூங்கா, தீர்த்தகர் அருவியை தன்னகத்தே கொண்டுள்ளது.

5. 2024 – விங்ஸ் இந்தியா விருதுகளில், ‘ஆண்டின் சிறந்த விமான நிலையங்களாகத்’ தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்கள் எவை?

அ. சென்னை மற்றும் கோயம்புத்தூர்

ஆ. பெங்களூரு மற்றும் தில்லி

இ. மும்பை மற்றும் ஹைதராபாத்

ஈ. தில்லி மற்றும் லக்னோ

  • 2024 – விங்ஸ் இந்தியா விருதுகளில் பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையம் (KIA) மற்றும் தில்லியில் உள்ள இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம் ஆகியவை கூட்டாக, “ஆண்டின் சிறந்த விமான நிலையம்” விருது பெற்றன. 2024 ஜன.18 அன்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வில் மத்திய சிவில் வான் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய M சிந்தியா அவர்கள் இந்த விருதை வழங்கினார். மங்களூரு விமான நிலையம் 5 மில்லியனுக்கும் குறைவான பயணிகள் பிரிவில், “சிறந்த விமான நிலையம்” விருதைப் பெற்றது.

6. ஆறாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்களை நடத்துகின்ற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிஸா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • தென்னிந்தியாவில் முதன்முறையாக நடக்கும் 6ஆவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்போட்டிகளை தமிழ்நாடு நடத்தி வருகிறது. 2024 ஜன.19-31 வரை, சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் இருபத்தாறு விளையாட்டுகள் மற்றும் 275 நிகழ்வுகளில் 5600 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தப் போட்டிக்கான, ‘வீர மங்கை’ என்ற சின்னம், காலனித்துவ எதிர்ப்பு அரசியான இராணி வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்துகிறது. 2018 முதல் ஆண்டுதோறும் இளையோர் நலத்துறையால் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

7. SLIM (Smart Lander for Investigating Moon) திட்டத்துடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. NASA

இ. JAXA

ஈ. ESA

  • தனேகாஷிமாவில் இருந்து H-IIA ஏவுகலத்தில், 2023 செப்டம்பரில் JAXAஆல் ஏவப்பட்ட SLIM (Smart Lander for Investigating Moon) விண்கலம் 100 மீட்டருக்குள் துல்லியமாக நிலவில் தரையிறங்குவதை நோக்கமாகக்கொண்டது ஆகும். சோனி மற்றும் டோமியின் மினி ரோபோட்டிக் தரையூர்திகளை உளவுக்காக உடன் எடுத்துச்செல்லும் இந்தத் திட்டமானது, ஆழ்ந்த விண்வெளி X-கதிர்களைக் கூர்நோக்கி, அதிநவீன நிறமாலைமானியையைப் பயன்படுத்தி துல்லியத்துடன் அவற்றின் அலைநீளங்களைக் கண்டறிந்து சோதனை மேற்கொள்ளும்.

8. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஹெபடைடிஸ்-A தடுப்பூசியான, ‘Havisure’ஐ அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (IIL)

ஆ. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC)

இ. உலக சுகாதார நிறுவனம் (WHO)

ஈ. தேசிய வைராலஜி நிறுவனம்

  • இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிட் (IIL) ஆனது இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹெபடைடிஸ்-A தடுப்பூசியான ‘ஹாவிஷ்யூரை’ அறிமுகப்படுத்தியது. இது தூய்மையற்ற உணவு அல்லது தண்ணீரின்மூலம் தொற்றும் கல்லீரல் தொற்றுக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது. இதன் ஒரு தவணை விலை `2,150 ஆகும். ஆத்மநிர்பார் பாரதத்தை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக இது பார்க்கப்படுகிறது. ‘Mebella’ மற்றும் ‘TeddyVac’ஐத்தொடர்ந்து, தடுப்பூசிகள் வரிசையில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான IILஇன் ‘Havisure’ இணைகிறது.

9. சோரயா செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ. ஈரான்

ஆ. ஈராக்

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. ரஷ்யா

  • குயேம்-100 ஏவுகலத்தைப்பயன்படுத்தி 750 கிமீ தொலைவிலுள்ள சுற்றுப்பாதையில் சோரயா செயற்கைக்கோளை ஈரான் நிலைநிறுத்தியுள்ளது. இத்தகைய தொழில்நுட்பத்தின் இரட்டைப் பயன்பாட்டுத் தன்மைகுறித்து அமெரிக்க எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஈரான் தனது விண்வெளித் திட்டத்திற்கு இது ஒரு வெற்றி எனக் கூறுகிறது. சுமார் 50 கிகி எடையுள்ள இச்செயற்கைக்கோள், 500 கிமீ-க்கு மேலான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஈரானின் முதல் செயற்கைக்கோள் என்ற பெருமையைப்பெற்றுள்ளது.

10. பீகாரைத் தொடர்ந்து சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் நாட்டின் இரண்டாவது மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. இராஜஸ்தான்

  • 10 நாள் நடைபெறும் விரிவான சாதிவாரிக்கணக்கெடுப்பை ஆந்திர பிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது. இதன்மூலம் பீகாரைத் தொடர்ந்து இவ்வகை முன்னெடுப்பை மேற்கொள்ளும் இரண்டாம் மாநிலமாக ஆந்திர பிரதேசம் ஆனது. தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சாதிகுறித்த விவரங்களைச் சேகரிப்பார்கள்; இது கிராமச் செயலக அமைப்புக்கு அனுப்பப்படும். இது மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பைப் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உதவும்.

11. வடகிழக்குச் சபையின் 71ஆவது முழு அளவிலான அமர்வு நடைபெற்ற இடம் எது?

அ. இம்பால்

ஆ ஷில்லாங்

இ. கௌகாத்தி

ஈ. மணிப்பூர்

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வடகிழக்குக் கவுன்சிலின் 71ஆவது முழு அளவிலான அமர்வுக்குத் தலைமைதாங்கினார். 8 மாநில பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் வடகிழக்குக் கவுன்சில் கவனஞ்செலுத்துகிறது. வடகிழக்குக்கவுன்சிலின் ஐம்பதாண்டுகால தாக்கத்தை அமித் ஷா எடுத்துக்காட்டி, 12,000 கிமீட்டர் சாலைகள், மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் இப்பகுதியில் நிறுவப்பட்ட தேசிய நிறுவனங்கள் மாநிலங்களின் வளர்ச்சியை மேம்படுத்தியதாகக் கூறினார்.

12. Strategic Interventions for Green Hydrogen Transition (SIGHT) திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல்

ஆ. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி

இ. அணுசக்தி முயற்சிகளை ஆதரித்தல்

ஈ. கார்பன் கவர்தல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்

  • தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் ஓர் அங்கமான Strategic Interventions for Green Hydrogen Transition (SIGHT) திட்டம், உள்நாட்டில் மின்னாற்பகுப்பு உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக `17,490 கோடி நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளது.
  • இந்திய சூரியவொளி ஆற்றல் கழகத்தின் (SECI) மூலம் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் இந்தியாவை உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. `19,744 கோடி செலவில், ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்குப் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது, புதைபடிவ எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பது, `8 இலட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் 2030-க்குள் 6 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய பரந்த நோக்கங்களை இந்தத் திட்டம் தனது இலக்காகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜவுளிப் பூங்காக்களுக்கு மானியம்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினாார்.

தமிழ்நாட்டில் ஆறு சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களைத் தொடங்க அளிக்கப்படும் மானியத்துக்கான ஒப்புதல் அரசாணைகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் திட்டத்தின் கீழ், திருவள்ளூர், தருமபுரி, திருப்பூர் ஆகிய இடங்களில் தலா ஒரு நிறுவனமும், கரூரில் மூன்று நிறுவனங்களும் என மொத்தம் ஆறு நிறுவனங்கள் தொடங்கப்படவுள்ளன.

2. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி.

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களைவிட பெண்வாக்காளர்களே அதிகமுள்ளனர். மாநிலத்தில் 4 இலட்சத்து 32 ஆயிரத்து 805 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக்கொண்ட தொகுதியாக சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி உள்ளது. குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் உள்ளது.

அதிக வாக்காளர்கள் தொகுதிகள்:

சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு) – 6,60,419.

கவுண்டம்பாளையம் (கோயம்புத்தூர்) – 4,62,612.

மாதவரம் (திருவள்ளூர்) – 4,60,935.

குறைந்த வாக்காளர்கள் தொகுதிகள்:

கீழ்வேளூர் (நாகப்பட்டினம்) – 1,72,140.

துறைமுகம் (சென்னை) – 1,72,624.

நாகப்பட்டினம் – 1,86,958.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin