TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 22nd November 2023

1. ‘உலகளாவிய மீன்வள மாநாடு இந்தியா – 2023’ நடத்தப்படுகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத் 🗹

இ. மகாராஷ்டிரா

ஈ. ஆந்திரப்பிரதேசம்

  • குஜராத் மாநிலம் ஆமதாபாதில், ‘உலகளாவிய மீன்வள இந்தியா மாநாடு-2023’ என்ற இரண்டு நாள் நடைபெறும் நிகழ்வு நடைபெறவுள்ளது. “மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளத்தைக்கொண்டாடுதல்” என்ற கருப்பொருளின் கீழ், பயனுள்ள விவாதங்கள், சந்தை நுண்ணறிவுகள், கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கிய பங்கேற்பாளர்களை ஒரே மேடையில் ஒன்றிணைப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

2. ‘LUPEx’ என்பது இந்திய விண்வெளி ஆய்வுமையத்துக்கும் (ISRO) கீழ்காணும் எந்த முகமைக்கும் இடையேயான கூட்டு முயற்சியாகும்?

அ. NASA

ஆ. ESA

இ. JAXA 🗹

ஈ. CNA

  • ‘LUPEx’ என்பது 350 கிலோ ஊர்தியுடன் 90° கோணத்தில் தரையிறங்க முயற்சிக்கும், நிலவுக்கான நான்காவது பயணமாகும். இது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மற்றும் ஜப்பானிய விண்வெளி முகமை (JAXA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். ‘LuPEx’ நிலவின் இருண்ட புறத்தில் தரையூர்தியைத் தரையிறக்கும். இந்த தரையூர்தி 1 கிமீ x 1 கிமீ பரப்பளவில் சுமார் 100 பூமி நாட்களுக்கு நிலவிலிருந்து ஆய்வுசெய்யும். சந்திரயான்-3 ஆனது 30 கிகி எடையுள்ள தரையூர்தியை கொண்டிருந்தது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தில்லோ திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஒடிசா

ஆ. கோவா 🗹

இ. தெலுங்கானா

ஈ. சிக்கிம்

  • ‘தில்லோ’ என்பது கோவாவின் மேற்குத்தொடர்ச்சிமலையில் கொண்டாடப்படும் ஒரு சூழல்பெண்ணிய விழாவாகும். கர்நாடகாவின் ஜோய்டாவில் உள்ள வனப்பகுதி கிராமங்களிலும் இத்திருவிழாவின் தாக்கம் காணப்படுகிறது. இக் கிராமங்களில் கோவான் குன்பி சமூகத்தினர்கள் அதிகம் வாழுகின்றனர். அவர்தம் முன்னோர்கள் போர்த்துகீசிய காலத்தில் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கும் நோக்கோடு ஜோய்டாவிற்கு குடிபெயர்ந்தனர்.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற சரத்து 163 மற்றும் சரத்து 200 ஆகியவற்றுடன் தொடர்புடைய அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு எது?

அ. ஆளுநர் 🗹

ஆ. குடியரசுத்தலைவர்

இ. குடியரசுத்துணைத்தலைவர்

ஈ. தேர்தல் ஆணையர்

  • அரசியலமைப்பின் 163ஆவது சரத்து ஆளுநரின் பொது அதிகாரங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதேசமயம் சரத்து 200 குறிப்பாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதுபற்றிக் குறிப்பிடுகிறது. நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். இரவி ஒப்புதல் அளிப்பதைத் தடுத்து நிறுத்தும் ஆளுநரின் அதிகாரம் குறித்த புதிய சட்ட விசாரணைகளைத் தூண்டியுள்ளது. தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் குறைந்தபட்சம் நான்கு மாநிலங்கள், சட்டமன்றச் செயல்பாட்டில் ஆளுநரின் அதிகாரத்தின் அளவுருக்களை தெளிவுபடுத்துவதில் தலையிடக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கங்காரு பராமரிப்பு’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. பாதுகாப்பு

ஆ. குழந்தை பராமரிப்பு 🗹

இ. அரசியல்

ஈ. விலங்கு நலம்

  • ‘கங்காரு பராமரிப்பு’ என்பது தோலோடு தோல் தொடர்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது முன்கூட்டிய அல்லது குறைந்த எடைகொண்ட குழந்தையை பெற்றோரின் மார்புடன் அணைத்து வைத்திருப்பதை குறிக்கின்றது. இந்த நடைமுறை உடல் வளர்ச்சி, தாய்ப்பால் வழங்கலை எளிதாக்குதல் மற்றும் உணர்வு ரீதியான இணைப்புபோன்ற பல நன்மைகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் நிகழும் குறைப்பிரசவம் மற்றும் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் கவலைகள்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.17 அன்று உலக குறைப்பிரசவ நாள் அனுசரிக்கப்படுகிறது.

6. 2022ஆம் ஆண்டுக்கான ‘இந்திரா காந்தி அமைதிப் பரிசு’ பெற்றவர்கள் யார்?

அ. IMA மற்றும் பயிற்சிபெற்ற செவிலியர்கள் சங்கம் 🗹

ஆ. AIIMS மற்றும் IMA

இ. மருத்துவர் M ஸ்ரீனிவாஸ்

ஈ. மருத்துவர் V சாந்தா

  • அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 2022ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி பரிசானது இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் பயிற்சிபெற்ற செவிலியர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு கூட்டாக வழங்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி இவ்விருதுகளை வழங்கினார். இந்திரா காந்தி நினைவு அறக் கட்டளைக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி தலைமைதாங்குகிறார்.

7. எந்த மாநிலம் தனது பாம்புகள் பற்றிய பிரத்யேக நூலை வெளியிட்டுள்ளது?

அ. ஹிமாச்சல பிரதேசம் 🗹

ஆ. மத்திய பிரதேசம்

இ. அஸ்ஸாம்

ஈ. கேரளா

  • ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, ‘ஹிமாச்சல பிரதேசத்தின் பாம்புகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநல நிறுவனத்தின் முதல்வரால் தொகுக்கப்பட்டு திருத்தப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காணப்படும் பாம்புகளின் நிழற்படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வனத் துறையின் வனவிலங்குப் பிரிவின் அனுமதியுடன் காடுகளில் பாம்புகளைப் பிடித்த குழு, அவற்றின் நஞ்சு மற்றும் மரபணு மாதிரிகளை எடுத்து மீண்டும் அதே வாழ்விடத்தில் அவற்றை விட்டுச்சென்றது.

8. 11ஆவது சர்வதேச சுற்றுலா அங்காடியை நடத்துகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்காளம்

ஈ. மேகாலயா 🗹

  • 11ஆவது சர்வதேச சுற்றுலா அங்காடியை இந்திய மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடுசெய்துள்ளது. மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் உள்ளூர் வடகிழக்கு பங்கேற்பாளர்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வாங்குபவர்களுக்கு இடையிலான வணிக சந்திப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரத்யேக அமர்வும் அடங்கும். எட்டு வடகிழக்கு மாநிலங்களும் இதில் பங்கேற்கும்.

9. IFFI விழாவில், ‘பாரதிய சினிமாவின் பங்களிப்புக்கான சிறப்பு அங்கீகாரம்’ பெற்ற நடிகர் / நடிகை யார்?

அ. மாதுரி தீட்சித் 🗹

ஆ. கமல்ஹாசன்

இ. ரேகா

ஈ. ரஜினிகாந்த்

  • இந்தியாவின் 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித்துக்கு, ‘பாரதிய சினிமாவின் பங்களிப்புக்கான சிறப்பு அங்கீகாரம்’ என்ற விருது வழங்கப்பட்டது. நாற்பதாண்டுகளாக நீடித்த அவரது திரைத்துறை வாழ்வில், அவர் எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

10. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, கீழ்காணும் எந்த நாடு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை பட்டத்தை அதிக முறை வென்றுள்ளது?

அ. மேற்கிந்திய தீவுகள்

ஆ. ஆஸ்திரேலியா 🗹

இ. இந்தியா

ஈ. இங்கிலாந்து

  • குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது. இந்தப்போட்டியில் இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளைப்பெற்றதுடன், விராட் கோலி, ‘ஆட்டநாயகன்’ விருதையும் வென்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ATP இறுதிப்போட்டியில் 7ஆவது பட்டம்: பெடரர் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்.

இத்தாலியில் நடைபெற்ற ATP பைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம்வென்று சாதனைபடைத்தார். முன்னதாக இப்போட்டியில், சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் ஆறு முறை கோப்பையை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜோகோவிச் அதை முறியடித்திருக்கிறார்.

2. 3 டிகிரியை நோக்கி உலக வெப்பமேற்றம்.

புவியின் வெப்பம் தொழிற்புரட்சிக்கு முந்தைய வெப்பத்தைவிட 2.9° செல்சியஸ் (5.2° பாரன்ஹீட்) அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக ஐநா எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த ஐநாவின் மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த வருடாந்திர ஐநா மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலகின் வெப்பநிலை உயராமல் கட்டுப்படுத்தவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை படிப்படியாகக் குறைக்கவும் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புக்கொண்டன. இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், புவியின் வெப்பமேற்றம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக, கரிமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பதால் மேலும் உயர்ந்து வருவதாகவும், 2030க்குள் அது 2.9 செல்சிஷயைத் தொடும் ஆபத்து உள்ளதாகவும் ஐநா தற்போது எச்சரித்துள்ளது.

3. மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முதலிடம்.

இந்தியாவிலேயே மக்கள்தொகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

குடும்பநலத்துறை சார்பாக மாநில அளவில் மிகச்சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு சிறந்த விருது வழங்கும் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி கருவள விகிதம் (ஒரு பெண்ணுக்கு கரு உருவாகும் விகிதம்) என்பது 2.1 சதவீதமாக இருந்தது. தற்போது அது 1.4 என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

4. உணவுப் பதப்படுத்தும் திட்டம்: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விருது.

பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதற்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. இதனை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

5. ஆர்ஜென்டீனா அதிபராகிறார் ஜேவியர் மிலேய்.

ஆர்ஜென்டீனாவின் புதிய அதிபராக வலதுசாரி சிந்தனையாளரும், பொருளாதார நிபுணருமான ஜேவியர் மிலேய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin