Tnpsc Current Affairs in Tamil – 22nd January 2024
1. சந்தகா-தம்பரா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. ஒடிஸா
ஆ. சத்தீஸ்கர்
இ. ஜார்கண்ட்
ஈ. மத்திய பிரதேசம்
- ஒடிஸா மாநில அரசு, கட்டாக்கிலிருந்து கடம்பமான்களையும் காட்டெருதுகளையும் இடமாற்றஞ்செய்து, சந்தகா-தம்பரா வனவிலங்கு சரணாலயத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குர்தா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம் கிழக்குத்தொடர்ச்சிமலையின் வடகிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. கடந்த 1982ஆம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் பல்வேறு அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன.
2. ‘ஓய்வுக்கூடம் – Green Rooms’ என்பதுடன் தொடர்புடைய நாடு எது?
அ. ரஷ்யா
ஆ. இஸ்ரேல்
இ. உக்ரைன்
ஈ. ஈரான்
- ஐநா வளர்ச்சித் திட்டமும் டென்மார்க் அரசாங்கமும் இணைந்து அண்மையில் உக்ரைனில், ‘ஓய்வுக்கூடங்களைத்’ தொடங்கியுள்ளன. ‘ஓய்வுக்கூடங்கள்’ என்பது காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயிர்பிழைத்த குழந்தைகள் மற்றும் குற்றத்தை நேரில் பார்த்த சாட்சிகளுக்கு இடையேயான தொடர்புகளை எளிதாக்கும் பிரத்யேக இடங்களாகும். குழந்தைகள் & இளையோரிடையே சட்ட அமலாக்கத்தின்மீது நம்பிக்கையை வளர்ப்பதே இதன் குறிக்கோளாகும்.
3. இ-மொபிலிட்டி சிமுலேஷன் ஆய்வகத்தை நிறுவ அல்டேர் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ள ஐஐடி எது?
அ. ஐஐடி பம்பாய்
ஆ. ஐஐடி மெட்ராஸ்
இ. ஐஐடி கான்பூர்
ஈ. ஐஐடி ரூர்க்கி
- இ-மொபிலிட்டி சிமுலேஷன் ஆய்வகத்தை நிறுவ அல்டேர் நிறுவனத்துடன் ஐஐடி-மெட்ராஸ் கூட்டுசேர்ந்துள்ளது. அல்டேர் என்பது உருவகப்படுத்துதல், உயர் செயல்திறன் கணித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஓர் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாகும்.
4. சஷஸ்த்ர சீமா பாலின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. தல்ஜித் சிங் சௌத்ரி
ஆ. குமார் இராஜேஷ் சந்திரா
இ. சஞ்சய் அரோரா
ஈ. இரஜினிகாந்த் மிஸ்ரா
- மூத்த இகாப அதிகாரி தல்ஜித் சிங் சௌத்ரி, நேபாளம் மற்றும் பூடானுடனான இந்தியாவின் எல்லைகளைக் காக்கும் மத்திய ஆயுதமேந்திய காவற்படையான சஷஸ்த்ர சீமா பாலின் (SSB) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். எல்லைப் பகுதிகளை நிர்வகிப்பதில் உத்திசார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதை இந்த நியமனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
5. அயோத்தி இராமர் திருக்கோவிலுக்கு, ‘ஓணவில்’ எனப்படும் பாரம்பரிய வில்லை பரிசளித்த திருக்கோவில் எது?
அ. அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்
ஆ. ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில்
இ. ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோவில்
ஈ. அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்
- கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலிலிருந்து ஸ்ரீ இராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பிரதிநிதிகள், ‘ஓணவில்’ என்ற பாரம்பரிய வில்லை பரிசாகப்பெற்றார்கள். ஸ்ரீ விஷ்ணுவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட பத்மநாபசுவாமி திருக்கோவில், இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்தக் திருக்கோவிலுக்கு பலராமன் வருகைதந்து, பத்மதீர்த்தத்தில் நீராடி, காணிக்கை வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. ‘ஓணவில்’ என்பது புராண ஓவியங்களுடன் கூடிய வில்லாகும்.
6. பிதர்கனிகா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
அ. ஒடிஸா
ஆ. குஜராத்
இ. இராஜஸ்தான்
ஈ. கேரளா
- ஒடிஸா மாநிலத்தில் உள்ள பிதர்கனிகா தேசியப்பூங்கா வழியாக முன்மொழியப்பட்ட ஜாஜ்பூர் சாலை-தாம்ரா ரயில் பாதை இணைப்பு அமையாவுள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 672 கிமீ² பரப்பாளவுள்ள இந்தப் பூங்கா, கேந்திரபாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பாகும். இதன் டெல்டா பகுதி பிராமணி, பைதராணி மற்றும் தாம்ரா ஆறுகளால் உருவானது. இது தெஸ்பியா போன்ற பல்வேறு தாவரங்கள் மற்றும் அழிந்துவரும் உவர்நீர் முதலைகள்போன்ற விலங்கினங்களுக்கு வாழிடம் ஆக உள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் ராம்சர் தளமாக விளங்கும் இப்பகுதி, கடல்சார் பல்லுயிர் மற்றும் பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.
7. புலிக்குளம் மாட்டினம் சார்ந்த மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. ஒடிஸா
- ஏறுதழுவுதலுடன் பிணைந்த புலிக்குளம் போன்ற நாட்டு மாட்டினங்களின் மீதான ஆர்வம், குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குறிப்பாக சிவகங்கை மாவட்டம் புலிக்குளம் கிராமத்தைச் சார்ந்த புலிக்குளம் மாடுகள் பஞ்சத்தை தாங்கி வளரக்கூடியவையாகவும் ஏறுதழுவுதலுக்கு உகந்த இனமாகவும் உள்ளது. பளிங்கு மாடு, மணி மாடு, சல்லிக்கட்டு மாடு, கிளாக்காட்டு மாடு எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த மாட்டினம் மந்தைகளாக வளர்க்கப்படுகின்றன.
8. குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. ஆந்திர பிரதேசம்
- 2 நாள் கேரள பயணத்தின்போது குருவாயூர் திருக்கோவிலுக்குச் சென்ற பிரதமர், ஸ்ரீகிருஷ்ணர் திருக்கோவிலில் பிரார்த்தனை செய்தார். ‘தென்னாட்டின் துவாரகை’ என்றழைக்கப்படும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவில், விஷ்ணு மற்றும் கிருஷ்ணரின் பாலவடிவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் குருவாயூரில் அமைந்துள்ள இத்திருக்கோவில் 17ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது ஆகும். துலாபாரம் இந்தக் கோவிலின் சிறப்பான காணிக்கை முறையாகும். கோவிலின் அருகிலுள்ள புன்னத்தூர் கோட்டா யானைகள் சரணாலயத்தின் ஆசிய களிறுகள் இந்தக் கோவிலில் உள்ளன.
9. எந்த ஆற்றுப்படுகை பகுதியில், ‘சோலிகா’ சமூகத்தினர் வசிக்கின்றனர்?
அ. காவிரி ஆற்றுப்படுகை
ஆ. கோதாவரி ஆற்றுப்படுகை
இ. தாமிரபரணி ஆற்றுப்படுகை
ஈ. மகாநதி ஆற்றுப்படுகை
- மலேம்லீமா நிங்கோம்பி மற்றும் ஹரிஷா RP ஆகியோரால் எழுதப்பட்ட, “Forgotten Trails: Foraging Wild Edibles” என்ற நூல் காவிரியாற்றுப்படுகையில் வசிக்கும், ‘சோலிகா’ மற்றும் ‘எரவா’ பழங்குடியினரின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை ஆராய்கிறது. கர்நாடக மாநிலத்தின் பழைமையான பழங்குடி சமூகமான, ‘சோலிகா’க்கள், பெரும்பாலும் தங்களது உணவுகளில் தேனையும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை வகையான பண்ணைக் கீரையும் அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். புலிகள் காப்பகத்தில் வாழ்ந்த சோலிகாஸ் வன உரிமைகளைப் பெற்றார், இது ஒரு முக்கிய சட்ட அங்கீகாரமாகும். ஒரு குளவி இனம் இம்மக்களின் (Soliga ecarinata) பெயரால் அழைக்கப்படுகிறது.
10. அண்மையில், இந்தியப்பிரதமரால் தொடங்கப்பட்ட, ‘போயிங் சுகன்யா’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. இந்தியாவில் போயிங் விமானங்களுக்கான புதிய உற்பத்திப் பிரிவை நிறுவுதல்
ஆ. வான்போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்தல், STEM துறைகள் மற்றும் விமானப் பணிகளில் பெண்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் மேம்படுத்துதல்
இ. அரசுப்பள்ளிகளில் பயிலும் ஒரு இலட்சம் பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்
ஈ. இந்திய சந்தையில் பிரத்தியேகமான ஒரு புதிய விமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்
- ஜனவரி.19 அன்று, பிரதமர் நரேந்திர மோதி, பெங்களூரு அருகே போயிங்கின் உலகளாவிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தைத் திறந்துவைத்தார். இது `1,600 கோடி முதலீட்டில் அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய வசதியாக விளங்கும். போயிங் சுகன்யா திட்டத்தின், விமானத்துறையில் பெண்களின் பங்கேற்பு ஊக்குவிப்படும். இந்த முன்னெடுப்பு STEM துறைகள் மற்றும் விமானத்துறை பணிகளில் பெண்களுக்கு ஆதரவளிக்கிறது மற்றும் அதிகாரமளிக்கிறது.
11. ‘ஆபரேஷன் சர்வசக்தி’ என்பதுடன் தொடர்புடைய ஆயுதப்படை எது?
அ. இந்திய இராணுவம்
ஆ. இந்திய விமானப்படை
இ. இந்திய கடற்படை
ஈ. இந்திய கடலோர காவல்படை
- இந்திய இராணுவம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிர்பாஞ்சல் மலைத்தொடரை மையமாக வைத்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நோக்கில், ‘ஆபரேஷன் சர்வசக்தியைத் தொடங்கியது. ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினர்மீது தாக்குதல் மேற்கொண்டனர். மேற்கு இமயமலையில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க மலைத்தொடரான பிர்பாஞ்சல் மலைத்தொடர், இமாச்சல பிரதேச மாநிலத்தில் பரவி, சர்ச்சைக்குரிய ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் வரை நீண்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு பகுதியில் இருந்து பிரிக்கும் ஓர் இயற்கைத் தடுப்பானாக இந்த மலைத்தொடர் செயல்படுகிறது.
12. ‘நான்தான் ஔரங்கசீப்’ (ஔரங்கசீப்புடனான உரையாடல்கள்) என்ற தமிழ்ப்புதினத்தை எழுதியவர் யார்?
அ. சாரு நிவேதிதா
ஆ. தேவி பாரதி
இ. நந்தினி கிருஷ்ணன்
ஈ. அம்பை
- சாரு நிவேதிதா எழுதிய, ‘நான்தான் ஔரங்கசீப்’ என்ற தமிழ்ப் புதினத்தை, நந்தினி கிருஷ்ணன் ஆங்கிலத்தில் “Conversations with Aurangzeb” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதுவும் நகைச்சுவை கலவையுமானதுமாக படைக்கப்பட்டுள்ளது. மேலும் சமகாலத்தின் வர்ணனையாக இது உள்ளது. இது முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் ஆன்மாவைச் சந்திக்கும் ஓர் எழுத்தாளரின் கதையை சுவைபட விவரிக்கிறது.
13. சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. உத்தர பிரதேசம்
ஆ. ஹரியானா
இ. பஞ்சாப்
ஈ. சிக்கிம்
- சிலிகா ஏரி மற்றும் சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் உட்பட 16 ராம்சார் தளங்களில் இயற்கை சுற்றுலாவை இந்திய அரசாங்கம் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. முன்னர் சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் எனப்பட்ட சுல்தான்பூர் தேசியப்பூங்கா ஹரியானாவின் குர்கான் மாவட்டத்தில் 1.42 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது கடந்த 2021இல் ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்டது. வெப்பமண்டல மற்றும் உலர் இலையுதிர் தாவரங்களைக் கொண்டுள்ள இந்தச் சரணாலயத்தில் 320க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ்நாட்டுக்கு மேலும் இரு தங்கம்.
ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகின்றன். இதில் மகளிர் பாரம்பரிய யோகா பிரிவில் தமிழ்நாட்டின் நவ்யா 64.75 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். வாள்வீச்சில் ஆடவருக்கான சப்ரே இறுதிச்சுற்றில் தமிழ்நாட்டின் அர்லின் 15-14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
2. ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் காலம் தொடக்கம்.
தமிழ்நாட்டின் கடற்கரைகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டையிடும் காலம் தொடங்கியுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் முதல் ஏப்ரல் வரை தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் கடலாமைகள் முட்டையிடுவது வழக்கம். இதில் ஆலிவ் ரிட்லி இன ஆமைகள் குறிப்பிடத்தக்கவை.
3. பசுமை முதன்மையாளர் விருது.
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன் மாதிரியான பங்களிப்பை வழங்கும் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, ‘தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது’ மற்றும் தலா `1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த விருது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்குகிறது.
4. பன்னாட்டு மருத்துவ மாநாடு.
“மருத்துவத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பிலான பன்னாட்டு மருத்துவ மாநாடு சென்னையில் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.