Tnpsc Current Affairs in Tamil – 21st March 2024
1. அண்மையில், இந்திய திட்ட நேரத்தை (IST) பரப்புவதற்கான தேசிய நேர நெறிமுறை தொடங்கப்பட்ட இடம் எது?
அ. சென்னை
ஆ. அலகாபாத்
இ. மும்பை
ஈ. நாக்பூர்
- இந்திய திட்ட நேரத்தை (IST) பரப்புவதற்கான தேசிய நேர நெறிமுறை 2024 மார்ச் 15 அன்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் பியூஷ் கோயலால் மும்பையில் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் தேசிய நெறிமுறையானது மில்லி விநாடிகளில் துல்லியமான நேரத்தகவலை வழங்கும்; மேலும் இணையப் பாதுகாப்பையும் இது மேம்படுத்தும்.
2. ‘உடல்நலம் மற்றும் பராமரிப்புக்கான நியாயமான பங்கு’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
அ. WHO
ஆ. UNEP
இ. UNICEF
ஈ. UNDP
- WHOஇன், “உடல்நலம் மற்றும் பராமரிப்புக்கான நியாயமான பங்கு” அறிக்கை உலகளாவிய சுகாதாரத்தில் பாலின இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது. பெண்கள், 67% சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பணியாளர்களாக உள்ளனர்; ஆனால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் 24% ஊதிய இடைவெளியை எதிர்கொள்கின்றனர். உலகளவில், பெண்களின் வருவாயில் 90% குடும்ப நல்வாழ்வை ஆதரிக்கிறது; அதே வேளையில் ஆண்கள் 30-40% மட்டுமே குடும்ப நல்வாழ்விற்கு பங்களிப்பு செய்கிறார்கள். 25-60% மருத்துவர்களைக் கொண்டிருந்தாலும், 35 நாடுகளில் உள்ள செவிலியர்களில் 30-100% பெண்களே உள்ளனர். இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளுடன், உலகளவில் 76% ஊதியம் பெறாத பராமரிப்பு நடவடிக்கைகளில் பெண்களே உள்ளனர்.
3. அண்மையில், பிரசார் பாரதியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. கௌரவ் திவேதி
ஆ. நவ்நீத் குமார் சேகல்
இ. சசி சேகர் வேம்பதி
ஈ. ஜகத் சிங் சௌகான்
- நாட்டின் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற இஆப அதிகாரி நவ்நீத் குமார் சேகலை இந்திய அரசு நியமித்தது. அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகளுக்கோ அல்லது 70 வயதை எட்டும் வரையோ இருக்கும். இதற்கு முன் தலைவராக இருந்த சூர்ய பிரகாஷின் (70) பதவிக்காலம் 2020 பிப்ரவரி மாதத்தோடு முடிவடைந்தது.
4. அண்மையில், அவரது தொண்டுப்பணிக்காக P V நரசிம்மராவ் நினைவு விருது பெற்றவர் யார்?
அ. ரத்தன் டாடா
ஆ. முகேஷ் அம்பானி
இ. கௌதம் அதானி
ஈ. ஷிவ் நாடார்
- டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, 2024ஆம் ஆண்டுக்கான் PV நரசிம்மராவ் நினைவு விருதினைப் பெற்றுள்ளார். இவ்விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. நாடு முழுவதும் உள்ள பல சமூகங்களுக்குப் பயனளிக்கும் அவரது விதிவிலக்கான பங்களிப்புகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
5. ஹீமோகுளோபின் A1C சோதனையானது பின்வரும் எந்த நோயை கண்டறிவதற்குப் பயன்படுகிறது?
அ. நீரிழிவு நோய்
ஆ. டெங்கு
இ காசநோய்
ஈ. இரத்த சோகை
- 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடு தழுவிய ஆய்வின்படி, இந்தியாவில் 10.13 கோடி நபர்கள் நீரிழிவு நோயுடனும், 13.6 கோடி பேர் நீரிழிவு நோய்க்கான முந்தைய அறிகுறியுடனும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிளைகேட்டட் ஹீமோகுளோபின் (HbA1c) சோதனையானது பொதுவாக வகை-1 மற்றும் வகை-2 நீரிழிவு நோயைக் கண்டறிந்து நிர்வகிக்கப் பயன்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை அளவிடுகிறது. இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஹீமோகுளோபின், உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இந்த முக்கியமான இரத்தப் பரிசோதனையானது நீரிழிவு மேலாண்மை செயல்திறனைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
6. அண்மையில், எந்த வங்கிக்கு `1.40 கோடி அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்தது?
அ. பேங்க் ஆஃப் இந்தியா
ஆ. PayTM கொடுப்பனவு வங்கி (வரை)
இ. பரோடா வங்கி
ஈ. கனரா வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கியானது வைப்புகள், வாடிக்கையாளர் சேவை மற்றும் பிற அலகுகள் மீதான வட்டி விகிதங்கள் குறித்த சில ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக, பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு (BoI) மீது `1,40,76,000 தொகையை அபராதமாக விதித்துள்ளது. வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான எந்தவொரு பரிவர்த்தனைகளையும் அல்லது ஒப்பந்தங்களின் செல்லுபடியையும் குறிப்பிடாமல் இருந்ததற்காகவும் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளுக்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
7. ‘LAMITIYE’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இருநாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?
அ. இந்தியா மற்றும் ஜப்பான்
ஆ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
இ. இந்தியா மற்றும் எகிப்து
ஈ. இந்தியா மற்றும் சீஷெல்ஸ்
- இந்திய இராணுவம் மற்றும் சீஷல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான ‘LAMITIYE-2024’இன் பத்தாவது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவக் குழு சீஷல்ஸுக்குப் புறப்பட்டது. இந்தக் கூட்டுப் பயிற்சி 2024 மார்ச்.18 முதல் 27 வரை சீஷல்ஸில் நடத்தப்படும். கிரியோல் மொழியில் ‘நட்பு’ என்று பொருள்படும், ‘LAMITIYE’ என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பயிற்சி நிகழ்வாகும்; இது 2001 முதல் சீஷெல்ஸில் நடத்தப்படுகிறது. இந்திய இராணுவம் மற்றும் சீஷல்ஸ் பாதுகாப்புப் படைகளின் கோர்கா ரைபிள்ஸ் பிரிவில் இருந்து தலா 45 வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.
- அமைதிகாக்கும் நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின்கீழ், துணை-நகர்ப்புற சூழலில் மரபுசார் செயல்பாடுகளில் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். அமைதிகாக்கும் நடவடிக்கைகளின்போது இருதரப்புக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர செயல்பாட்டை இந்தப் பயிற்சி மேம்படுத்தும். இரு இராணுவங்களுக்கும் இடையே திறன்கள், அனுபவங்கள் மற்றும் நன்னடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும்.
8. அண்மையில், கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ‘PM SHRI பள்ளிகள்’ திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக்கொண்ட மாநில அரசு எது?
அ. தமிழ்நாடு
ஆ. மகாராஷ்டிரா
இ. உத்தர பிரதேசம்
ஈ. குஜராத்
- 2024 மார்ச்சில், கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன்மூலம், ‘PM SHRI (Prime Minister Schools for Rising India) திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும், தற்போதுள்ள அரசுப்பள்ளிகளை தேசியக் கல்விக்கொள்கை -2020-க்கான மாதிரிப்பள்ளிகளாக மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
9. அண்மையில் பதவி விலகுவதாக அறிவித்த தமிழிசை சௌந்தரராஜன், எந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்?
அ. கர்நாடகா
ஆ. கேரளா
இ. தெலுங்கானா
ஈ. ஒடிசா
- வரும் 2024 – மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்யவேண்டும் என்ற அவாவில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியிலிருந்து விலகினார். புதுச்சேரியின் துணை-நிலை ஆளுநரான அவர், தனது இருபதவிகளிலிருந்தும் விலகுவதற்கான பதவிவிலகல் கடிதத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார்.
10. அண்மையில், ‘ஸ்டார்ட்அப் மகாகும்பமேளா’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
அ. புது தில்லி
ஆ. சென்னை
இ. பிரயாக்ராஜ்
ஈ. லக்னோ
- ‘ஸ்டார்ட்அப் மகாகும்பமேளா’ நிகழ்வானது 2024 மார்ச் 18-20 வரை, புது தில்லியில் உள்ள பாரத மண்டபம் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் நடத்தப்பட்டது. தொழிற்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் இராஜேஷ் குமார் சிங், இந்த நிகழ்வு புத்தாக்க தரவரிசையை உயர்த்தும் என்று நம்புகிறார். மூன்று நாள் நிகழ்வின்போது 34க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் நாஸ்காம் அரங்கத்தில் தங்களின் புத்தாக்கங்களைக் காட்சிப்படுத்தும்.
11. அண்மையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளர் அடையாளமாக அறிவிக்கப்பட்ட பாரா -வில்வித்தையாளர் யார்?
அ. இராகேஷ் குமார்
ஆ. ஷீத்தல் தேவி
இ. அதிதி சுவாமி
ஈ. பூஜா ஜத்யன்
- இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேசிய மாற்றுத்திறனாளர் அடையாளமாக ஷீத்தல் தேவி அறிவிக்கப்பட்டுள்ளார். பாரா-வில்வித்தை வீராங்கனையான அவர் அர்ஜுனா விருதாளரும் ஆவார். IDCA மற்றும் DDCA இடையேயான கிரிக்கெட் போட்டி புது தில்லியில் உள்ள கர்னைல் சிங் மைதானத்தில் BCCIஉடன் இணைந்து நடத்தப்பட்டது. அதில் DDCA 69 இரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. “There is nothing like voting, I definitely vote” என்ற செய்தியை பரப்பும் வகையில் இந்தப் போட்டி நடைபெற்றது.
12. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமானது கீழ்காணும் எந்த மாநிலத்தில், ‘பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான மையத்திற்கான’ அடிக்கல்லை நாட்டியது?
அ. ஒடிசா
ஆ. சத்தீஸ்கர்
இ. ஜார்கண்ட்
ஈ. பீகார்
- மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா ஜார்கண்ட் மாநிலம் கர்சவான் மாவட்டம் பதம்பூரில் பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான மையத்துக்கு காணொலிக்காட்சிமூலம் அடிக்கல் நாட்டினார். இந்த மையம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடி சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை சித்தரித்து அவர்களது கலாச்சாரத்தைக் காட்சிப்படுத்தும்.
- இந்த மையத்தை அமைப்பதற்காக `10 கோடியை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மையம் நேரடி கலாச்சார மையமாகவும் சுற்றுலாத்தலமாகவும் செயல்படும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ‘இந்திராவதி’ நடவடிக்கை.
உள்நாட்டுக் கலவரத்தால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ள கரீபியன் நாடான ஹைதியிலிருந்து இந்திய மக்களை மீட்க, ‘இந்திராவதி’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. உங்கள் வேட்பாளரை அறியும் செயலி
இந்தியத் தேர்தலாணையத்தின் சார்பில், உங்கள் வேட்பாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (Know Your Candidate) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக அதிக புத்தாக்க நிறுவனங்களைக் கொண்ட 3ஆவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.