TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 20th October 2023

In the ever-evolving landscape of competitive exams, staying up-to-date with current affairs is crucial for aspirants seeking success in Tamil Nadu Public Service Commission (TNPSC) examinations. And for those who value the latest and most comprehensive information, Winmeen has become a trusted source of knowledge. As of October 20, 2023, we’re thrilled to present our TNPSC Daily Current Affairs PDF – an invaluable resource designed to equip you with the most recent developments and insights. In this blog post, we will guide you on how to access this essential document, packed with essential information to propel your TNPSC exam preparation to new heights. So, without further ado, let’s dive into the world of knowledge and opportunity as we explore the current affairs for the 20th of October, 2023.

Tnpsc Current Affairs in Tamil Pdf – 20th October 2023

1. 2023இல் உலக சுகாதார உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. பெர்லின் 🗹

இ. ரோம்

ஈ. நியூயார்க்

  • உலக சுகாதார உச்சிமாநாடு என்பது ஓர் உலகளாவிய சுகாதார கூட்டமைப்பு மற்றும் வலையமைப்பு ஆகும். இது அரசியல், அறிவியல், தனியார்துறை மற்றும் உள்நாட்டு சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோரை ஒன்று திரட்டி, மேம்பட்ட நலம் மற்றும் நலவாழ்வுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்குவதன்மூலம் நலமிக்கு எதிர்காலத்திற்கான செயல்திட்டத்தை வடிவமைக்கிறது. இந்த ஆண்டு, ஜெர்மனியின் பெர்லினில், ‘A Defining Year for Global Health Action’ என்ற கருப்பொருளின்கீழ் மெய்நிகர் முறையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

2. ‘உழவு மற்றும் உணவுப்பாதுகாப்பில் பேரிடர்களின் தாக்கம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. NABARD

ஆ. IMF

இ. FAO 🗹

ஈ. NITI ஆயோக்

  • “உழவு மற்றும் உணவுப் பாதுகாப்புமீதான பேரிடர்களின் தாக்கம்” என்ற அறிக்கையை சமீபத்தில் உணவு மற்றும் உழவு அமைப்பு வெளியிட்டது. இயற்கைப் பேரிடர்களாவன கடந்த முப்பது ஆண்டுகளில் பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியில் தோராயமாக $3.8 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான இழப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்பொருளாதார இழப்புகளில் பெரும்பான்மையானது ஆசியாவில் நிகழ்ந்துள்ளது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற விழிஞ்ஞம் துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா 🗹

இ. மேற்கு வங்காளம்

ஈ. கர்நாடகா

  • ஆகஸ்ட் மாத இறுதியில் சீனாவின் ஷாங்காய் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தைத்தொடங்கிய ‘ஜென் ஹுவா 15’ என்ற கப்பல் கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தை வந்தடைந்தது. கட்டுமானத்தில் இருக்கும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட முதல் கப்பல் இதுவாகும். `7,600 கோடி மதிப்பிலான இவ்வுட்கட்டமைப்பு திட்டம் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் அதானி துறைமுக நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் பொது தனியார் கூட்டாண்மை மாதிரியில் செயல்படுத்தப்படுகிறது.

4. SAMPRITI-XI என்ற இராணுவப் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறுகிறது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம் 🗹

இ. பிரான்ஸ்

ஈ. ஈரான்

  • இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான SAMPRITI-XI என்ற இருதரப்பு இராணுவப்பயிற்சியின் 11ஆம் பதிப்பு நிறைவடைந்தது. மேகாலயாவில் உள்ள உம்ரோய் என்ற கூட்டுப் பயிற்சி முனையத்தில் இப்பயிற்சி தொடங்கியது. இருநாடுகளாலும் மாறி மாறி நடத்தப்படும் இப்பயிற்சி, வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளைக் குறிக்கிறது.

5. உலக விலங்கு நல அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. பாரிஸ் 🗹

ஆ. ரோம்

இ. கொழும்பு

ஈ. டோக்கியோ

  • இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத்துறை, 26 கோழி வளர்ப்புத்தொகுதிகள் அதிக நோய்க் கிருமித்தன்மை கொண்ட பறவைக் காய்ச்சலிலிருந்து விடுபட்டவை என்பதை உறுதிப்படுத்தும் தன்சாற்றுரையை உலக விலங்கு நல அமைப்பிடம் வழங்கியுள்ளது. உலக முட்டை நாளுடன் இணைந்த அக்டோபர் 13, 2023 அன்று இந்தத் தன்சாற்றுரை உலக விலங்கு நல அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. உலக விலங்கு நல அமைப்பு என்பது கடந்த 1924இல் நிறுவப்பட்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது விலங்கு நோய்க் கட்டுப்பாட்டை ஒருங்கிணைத்து மேம்படுத்துகிறது. இதன் தலைமையகம் பாரிஸில் அமைந்துள்ளது.

6. லீச்சுபாகன் நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. ஒடிஸா

இ. அஸ்ஸாம் 🗹

ஈ. சிக்கிம்

  • தென்மத்திய கௌகாத்தி நீர்வழங்கல் திட்டத்தின் ஓர் அங்கமான லீச்சுபாகன் நீர்த்தேக்கத்தை அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். கௌகாத்தியில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

7. கர்பா என்பது கீழ்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும்?

அ. குஜராத் 🗹

ஆ. ஆந்திரப் பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. அஸ்ஸாம்

  • நவராத்திரியின் இரண்டாவது நாளில், குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் குஜராத்தின் பாரம்பரிய நடன வடிவமான கர்பாவை ஆடினர். இது ஒரு சமூகமாகச் சேர்ந்து வட்ட வடிவில் நின்று ஆடக்கூடிய ஒரு நடனம் ஆகும். நவராத்திரியின்போது, மையத்தில் எரியும் விளக்கு அல்லது கடவுளரின் நிழற்படம் அல்லது சிலையைச் சுற்றி பலர் இணைந்து இந்தப் பாரம்பரிய கர்பா நடனத்தை நிகழ்த்துவர்.

8. “Eat Right Creativity Challenge for Millets” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. FCI

ஆ . NABARD

இ. FSSAI 🗹

ஈ. FICCI

  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையமானது (FSSAI) 2023ஆம் ஆண்டு உலக உணவு நாளை, “Eat Right Creativity Challenge for Millets” என்பதன்மூலம் கொண்டாடியுள்ளது. இந்தத் தேசிய அளவிலான முன்னெடுப்பானது, தினை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும், குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே, பரந்த சமூகத்தினருக்கு பயனளிக்கும் நோக்கத்துடன், அவற்றின் நல ரீதியான நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

9. ‘2023 – உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டை’ நடத்துகிற நகரம் எது?

அ. பனாஜி

ஆ. மும்பை 🗹

இ. புது தில்லி

ஈ. விசாகப்பட்டினம்

  • 2023-உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டின் மூன்றாவது பதிப்பைப் பிரதமர் காணொலிக் காட்சிமூலம் தொடக்கிவைத்தார். இந்திய கடல்சார் நீலப்பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப்பார்வை-2047 என்ற செயல்திட்ட வரைவையும் பிரதமர் வெளியிட்டார். முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2016ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்றது. இரண்டாவது கடல்சார் உச்சிமாநாடு 2021ஆம் ஆண்டில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்தக் குறிப்பிடத்தக்க கடல்சார் நிகழ்வை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

10. அண்மையில் எந்தக் கோளைச்சுற்றி முதன்முறையாக, ‘பாடும் பிளாஸ்மா அலைகள்’ கண்டறியப்பட்டன?

அ. புதன் 🗹

ஆ. வெள்ளி

இ. செவ்வாய்

ஈ. யுரேனஸ்

  • புதன் கோளைச்சுற்றி, ‘பாடும் பிளாஸ்மா அலைகளை’ ஆராய்ச்சியாளர்கள் அடையாளங்கண்டு ஆவணப்படுத்தி உள்ளனர். இதேபோன்ற அலைகள் முன்பு பூமி, வியாழன் மற்றும் சனியைச் சுற்றி கண்டறியப்பட்டிருந்தாலும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் அருகே காணப்பட்டிருந்தாலும், இது புதனின் காந்தப்புலத்திலிருந்து ‘பாடும் பிளாஸ்மா அலைகளாக’ காணப்படுவது இதுவே முதன்முறையாகும்.

11. ‘வழிகாட்டுதல்-Guidance’ என்பது எந்த மாநிலத்தின் முதலீட்டு ஊக்குவிப்புக்கான மைய முகமையாகும்?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. கேரளா

  • தமிழ்நாட்டரசின் முதலீட்டு ஊக்குவிப்புக்கான மைய முகமையான ‘தமிழ்நாடு தொழில் வழிகாட்டு நிறுவனம் – Guidance’, 2023ஆம் ஆண்டுக்கான ஐநாஇன் ஊக்குவிப்பு விருதைப் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் நடந்த 8ஆவது உலக முதலீட்டு கூட்டத்தில், ஆற்றல் மாற்றத்திற்கான முதலீடுகளை அளவிடுவதில் சிறந்து விளங்கியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

12. இந்தியாவின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டு எண்ணை வெளியிடுவது எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 🗹

ஆ. தேசிய புள்ளியியல் அலுவலகம்

இ. NITI ஆயோக்

ஈ. இந்திய ரிசர்வ் வங்கி

  • மொத்த விற்பனை விலைக் குறியீடானது (Wholesale Price Index) வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகரால் வெளியிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த விற்பனை விலைகள் தொடர்ந்து ஆறாவது மாதமாக இந்தச் செப்டம்பரில் -0.26% என்ற அளவில் பணவாட்ட நிலையில் உள்ளது. முந்தைய மாதத்திலிருந்து பணவாட்ட விகிதத்தில் ஏற்பட்ட சரிவு, எரிபொருள் மற்றும் மின்சார விலைகளால் இது இந்நிலையில் உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாகனங்களுக்கான வரிகள் உயர்வு நவம்பர்.01 முதல் அமல்.

வாகனங்களுக்கான வாழ்நாள் வரி உட்பட பல்வேறு வரி வகைகளை உயா்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. உயர்த்தப்பட்ட வரிகளை நவம்பர்.01ஆம் தேதி முதல் அமல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

2. இன்று விண்ணில் ஏவப்படுகிறது ககன்யான் சோதனை விண்கலம்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் ஒருபகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர்.21 அன்று விண்ணில் ஏவப்படுகிறது. அதன்படி, ஆளில்லா மாதிரி விண்கலம் தரையிலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அது பாதுகாப்பாக நீரில் இறக்கி மீட்கப்படவுள்ளது.

‘ககன்யான்’ திட்டத்தின்மூலம் தரையிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதைக்கு விண்கலம் மூலம் மூன்று வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அழைத்து வர ISRO முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை 2025ஆம் ஆண்டில் செயல்படுத்த ISRO திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக மூன்றுகட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

3. கைப்பேசிவழி பேரிடர் தகவல்களைத் தெரிவிக்கும் சோதனை வெற்றி!

பேரிடர் தகவல்களை கைப்பேசிவழியே தெரிவிக்கும் சோதனை முயற்சி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பேரிடர் காலங்களில் ஒரு குறிப்பிட்ட கைப்பேசி கோபுரப் பகுதியில் இருந்து பொதுமக்களுக்கு தகவல்களை அனுப்பும் நடைமுறையை மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை தொடங்கியுள்ளது.

வெள்ள பாதிப்பு, வானிலை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் மக்களின் கைப்பேசிக்கு அனுப்ப ஏற்பாடுகள் தயாராகியுள்ளன. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கைப்பேசி வழியே முன்னெச்சரிக்கைத் தகவல்களை அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக, கைப்பேசி வழியே தகவல்களை அனுப்பும் சோதனை அடிப்படையிலான முயற்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது.

4. மாஷா அமீனிக்கு ஐரோப்பிய யூனியன் விருது.

ஈரானில் கலாசாரக் காவலர்களால் கைதுசெய்யப்பட்டு சர்ச்சைக்குரிய முறையில் கடந்தாண்டு உயிரிழந்த பெண் மாஷா அமீனிக்கு, ஐரோப்பிய யூனியனின் உயரிய மனித உரிமைகள் விருதான ஷகாரொவ் பரிசு மரணத்துக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விருதுக்கு, நிகராகுவாவில் மனித உரிமைகளுக்காகப் போராடிய வில்மா நெட் டே எஸ்கார்சியா, கத்தோலிக்க மதகுரு ரொனால்டோ இவாரெஸ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சோவியத் ரஷியாவின் மனித உரிமைப் போராளியான ஆண்ட்ரேய் ஷகாரொவின் நினைவாக இந்த விருது கடந்த 1988ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

5. தமிழ்நாடு முழுவதும் சேவையை விரிவாக்கும், ‘காவல் கரங்கள்’.

சென்னை காவல்துறையில் செயல்படுத்தப்படும் ‘காவல் கரங்கள்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. சென்னை பெருநகர காவல்துறை, அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பினர் இணைந்து ‘காவல் கரங்கள்’ என்ற அமைப்பை கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தொடங்கின. இவர்கள், ஆதரவில்லாமலும், மனநிலை பாதிக்கப்பட்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டும் சாலைகளில் சுற்றித்திரியும் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை உரிய பாதுகாப்புடன் மீட்டு, தேவைப்படுவோருக்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் அவர்களை தனியார் மற்றும் அரசு ஆதரவில்லங்களில் தங்கவைத்தும், குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தும், பராமரித்தும் கண்காணித்தும் வருகின்றனர்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!