TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 20th and 21st June 2024

1. நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. குஜராத்

இ. பீகார்

ஈ. இராஜஸ்தான்

  • பீகார் மாநிலம் ராஜகிருகத்தில் பழங்கால இடிபாடுகள் அருகே புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். ஐந்தாம் நூற்றாண்டில் குமாரகுப்தாவால் நிறுவப்பட்ட நாளந்தா, ஹர்ஷவர்தனர் மற்றும் பால மன்னர்களின்கீழ் 600 ஆண்டுகளாக ஒரு புகழ்பெற்ற துறவற பல்கலைக்கழகமாக இருந்தது. பௌத்தம், மருத்துவம் மற்றும் வானியல்போன்ற பாடங்களைக் கற்பிக்கும் பல்கலைக்கழகமான இது ஆசிய கண்டத்திலிருந்து மாணவர்களை ஈர்த்தது. 1193இல் பக்தியார் கில்ஜியால் சூறையாடப்பட்ட இது, 1812இல் மீண்டும் கண்டறியப்பட்டது. இப்போது UNESCOஇன் உலக பாரம்பரிய தளமாக இது உள்ளது.

2. அண்மையில், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் தென்கிழக்காசிய நாடு எது?

அ. தாய்லாந்து

ஆ. வியட்நாம்

இ. மலேசியா

ஈ. சிங்கப்பூர்

  • ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் தென்கிழக்காசிய நாடாக ஆனது தாய்லாந்து. உள்ளடக்கிய நற்பெயர் இருந்தபோதிலும், பழமைவாத சமூகம் மற்றும் அரசாங்கத்தின் மதிப்புகள் காரணமாக தாய்லாந்து இந்தச் சட்டத்தை நிறைவேற்ற பல தசாப்தங்களாக சவால்களை எதிர்கொண்டது. இந்த மசோதா எந்தவொரு பாலினத்தின் திருமண பங்காளிகளுக்கும் முழு சட்ட, நிதி மற்றும் மருத்துவ ரீதியிலான உரிமைகளை வழங்குகிறது. இது மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் முறையான ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 120 நாட்களுக்குள் இது நடைமுறைக்கு வரும்.

3. ‘Ophicthus Suryai’ என்றால் என்ன?

அ. மேற்கு வங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அரிய வகை மீன்

ஆ. வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் ஆக்கிரமிப்பு களை

இ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு விலாங்கு மீனினம்

ஈ. இராணுவ ஆயுதம்

  • இந்தியாவின் விலங்கியல் ஆய்வுமையத்தின் கோபால்பூர் மையத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஒடிஸாவில், ‘Ophicthus Suryai’ என்ற புதிய பாம்பு விலாங்கு மீனினத்தை கண்டுபிடித்துள்ளனர். செவுள் திறப்புக்கு அருகிலுள்ள முதுகுத் துடுப்பு தோற்றம், தனித்துவமான முதுகெலும்பு எண்ணிக்கை மற்றும் இருதாடைகளிலும் உள்ள பற்களின் வரிசை ஆகியவற்றால் இந்த மீனினம் அதன் கூட்டாளர்களிடமிருந்து வேறுபடுகிறது. ‘Ophichthidae’ குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு விலாங்கு மீன்கள் சூடான, வெப்பமண்டல நீரில் வாழ்கின்றன. பெரும்பாலும் கடலின் அடிப்பகுதியில் ஒளிந்து கொள்ளும் இவை 10 அடி வரை வளருகின்றன.

4. அண்மையில், இந்தியாவின் எந்தப் பகுதியில், “இரட்டை சூரிய ஒளிவட்டம்” என்று அழைக்கப்படும் ஓர் அரிய வானியல் நிகழ்வு காணப்பட்டது?

அ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஆ. லடாக்

இ. அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஈ. தார் பாலைவனம்

  • அண்மையில், லடாக்கில் ஓர் அரிய, ‘இரட்டை சூரிய ஒளிவட்டம்’ தென்பட்டது. இந்த ஒளியியல் நிகழ்வு சூரியனைச் சுற்றி இரண்டு செறிவான வளையங்களைக் கொண்டுள்ளது. இது கீற்று மேகங்களில் உள்ள பனிப்படிகங்களின் வழியாக சூரியவொளி ஒளிவிலகுவதால் ஏற்படுகிறது. உள் ஒளிவட்டம் 22° ஆரமும் வெளிப்புற ஒளிவட்டம் 46° வரையும் பரவியுள்ளது. மேகங்களில் உள்ள அறுங்கோண பனிப்படிகங்களின் தனித்துவமான சீரமைப்பு இந்த திகைப்பூட்டும் விளைவை உருவாக்குகிறது.

5. அண்மையில், யாருக்கு தெலுங்கிற்கான சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் வழங்கப்பட்டது?

அ. இரமேஷ் கார்த்திக் நாயக்

ஆ. நீலம் சரண்

இ. விக்ரம் சிங்

ஈ. ஜோதி குப்தா

  • நிஜாமாபாத் மாவட்டம் விவேக் நகரத்தைச் சேர்ந்த ரமேஷ் கார்த்திக் நாயக் என்ற 26 வயது எழுத்தாளர் தெலுங்கு இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருதைப்பெற்றார். 2011இல் நிறுவப்பட்ட இந்த விருது, 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை தங்கள் படைப்புகளுக்காகக் கெளரவிக்கிறது. இவ்விருதில் ஒரு செப்புத் தகடு, சால்வை, சான்று மற்றும் `50,000 காசோலை ஆகியவை அடங்கும். 1954இல் நிறுவப்பட்ட சாகித்திய அகாதெமி, இந்திய அரசாங்கத்தின்கீழ் தன்னாட்சி முறையில் இந்திய மொழிகளின் இலக்கியத்தை ஊக்குவிக்கிறது, இலக்கிய சொற்பொழிவு மற்றும் வெளியீட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

6. ’Truenat’ பணித்தளத்துடன் தொடர்புடைய நோய் எது?

அ. டெங்கு

ஆ. புற்றுநோய்

இ. காசநோய்

ஈ. மலேரியா

  • மோல்பியோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின், ‘Truenat’ என்ற காசநோய் அறிதல் முறைமை உலக சுகாதார அவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட இது, மருந்து-எதிர்ப்பு திரிபுகள் உட்பட காசநோய் வகைகளை விரைவாகக் கண்டறியும் ஒரு சிறிய மைக்ரோ-PCR அமைப்பாகும். ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்கும் இது, இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. காசநோய் இறப்பு அதிகமுள்ள நாட்டில் ஆரம்பகால சிகிச்சைக்கு இது உதவுகிறது. உலகளாவிய காசநோயாளர்களில் 27% பேர் உள்ள இந்தியா, அதன் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின்கீழ், ‘Truenat’ஐப் பயன்படுத்துகிறது.

7. அண்மையில், எந்த நாட்டு அறிவியலாளர்கள் மலிவான பயோடீசலை உற்பத்தி செய்வதற்கான ஊக்கியை உருவாக்கியுள்ளனர்?

அ. பிரேசில், மலேசியா மற்றும் இந்தோனேசியா

ஆ. ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்

இ. இந்தியா, சீனா மற்றும் இங்கிலாந்து

ஈ. ஜப்பான், கனடா மற்றும் இஸ்ரேல்

  • அஸ்ஸாம், ஒடிசா (இந்தியா), சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பயோடீசல் உற்பத்திசெலவைக் கணிசமாக குறைப்பதற்காக நீரெதிர்க்கும் வினையூக்கியை உருவாக்கியுள்ளனர். மெதுவான புதைபடிவ எரிபொருள் உருவாவதைப் போலல்லாமல், உயிரி-எரிபொருள்கள் விரைவாக உயிரியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. முதன்மையாக திரவம் (அ) வாயு வடிவில் உள்ள இவை பொதுவாக போக்குவரத்துக்காக பெட்ரோலிய பொருட்களுடன் கலக்கப்படுகின்றன.

8. அண்மையில், மாநிலத்தில் உள்ள 1.91 லட்சம் உழவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக `2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்த மாநில அரசு எது?

அ. பீகார்

ஆ. ஜார்கண்ட்

இ. ஹரியானா

ஈ. பஞ்சாப்

  • ஜார்கண்ட் மாநில அரசு 1.91 லட்சத்துக்கும் மேற்பட்ட உழவர்களுக்கு `2 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. 2020 மார்ச் 31 வரை `50,000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை உழவர்கள் பெற்ற கடன்கள் ஒருமுறை தீர்வுமூலம் தள்ளுபடி செய்யப்படும். 2021-22 நிதியாண்டில் `50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. SIPRI அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது எத்தனை அணு வெடியுளைகள் உள்ளன?

அ. 150

ஆ. 105

இ. 172

ஈ. 127

  • அண்மையில் வெளியிடப்பட்ட SIPRI அணு ஆயுதங்கள் பற்றிய அறிக்கையின்படி, சீன ஆயுதக்கிடங்கில் 500 அணு வெடியுளைகளும், இந்தியாவின் ஆயுதக்கிடங்கில் 172 அணு வெடியுளைகளும், பாகிஸ்தானின் ஆயுதக்கிடங்கில் 170 அணு வெடியுளைகளும் உள்ளன. மேம்பட்ட நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் நீண்டதூரம் செல்லும் ஏவுகணைகள் மூலம் இந்தியா தனது அணுவாற்றல் திறனை விரிவுபடுத்துகிறது.

10. காசி விஸ்வநாதர் திருக்கோவில் நடைபாதை திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. ஒடிசா

ஆ. அஸ்ஸாம்

இ. பஞ்சாப்

ஈ. உத்தர பிரதேசம்

  • மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு இந்தியப் பிரதமரின் அண்மைய வாரணாசி பயணம் அவரது முதல் பயணமாக அமைந்தது. காசி விஸ்வநாதர் திருக்கோவில் நடைபாதையின் முதல் கட்டத்தை அவர் திறந்து வைத்தார். அதை கங்கைக்கரையுடன் இணைத்து, இந்தியாவின் சனாதன கலாச்சாரத்தை எடுத்துரைத்தார். வாரணாசியின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் கலாசார செழுமையை பிரதமர் நரேந்தி மோதி புகழ்ந்தார். கால பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்த அவர் கங்கை ஆரத்தியைக் கண்டார்.

11. அண்மையில், புனிதத்தலங்களின் கொள்ளளவைவிட அதிகமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது எச்சரிக்கைகளை அனுப்பக்கூடிய, ‘Crowd Eye’ என்ற கருவியை உருவாக்கியுள்ள ஐஐடி எது?

அ. ஐஐடி ஆமதாபாத்

ஆ. ஐஐடி ரூர்க்கி

இ. ஐஐடி கான்பூர்

ஈ. ஐஐடி பம்பாய்

  • யமுனோத்ரியில் தொடங்கி, சார் தாம் புனிதத்தலங்களில் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை நிர்வகிக்க, ‘Crowd Eye’ என்ற சாதனத்தை ஐஐடி ரூர்க்கி உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் நிகழ்நேர கூட்ட கண்காணிப்பை வழங்குகிறது. நிறுவலுக்காக UCOST-க்கு நிதிக்கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. `60,000-70,000 செலவில் உள்ள இத்திட்டம், காப்புரிமைக்காக காத்திருக்கிறது. எதிர்கால புதுப்பிப்புகளில் கூட்டத்தரவுகளில் பாலின வேறுபாட்டை அறிவதும் உள்ளடக்கும்.

12. அண்மையில், மக்களவையின் தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. டக்குபதி புரந்தேஸ்வரி

ஆ. பர்த்ருஹரி மதாப்

இ. K சுரேஷ்

ஈ. மோகன் சிங்

  • மக்களவையின் இடைக்கால அவைத்தலைவராக பாஜக தலைவரும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினருமான பர்த்ருஹரி மதாப் நியமிக்கப்பட்டுள்ளார். 18ஆவது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பதும், அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவைக்கு தலைமைதாங்குவதும் அவரது கடமைகளில் அடங்கும். தற்காலிக சபாநாயகர் பதவி என்பது புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவையின் ஆரம்பக்கால செயல்பாட்டிற்கு அவசியமான ஒரு தற்காலிக பதவியாகும்.

13. 2024ஆம் ஆண்டில், எந்த மாநிலத்திலிருந்து தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிக புகார்கள் சென்றுள்ளன?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. பீகார்

ஈ. ஹரியானா

  • 2024ஆம் ஆண்டில், தேசிய மகளிர் ஆணையம் உத்தர பிரதேசத்திலிருந்து அதிக புகார்களைப் (6,492) பெற்றது. அதைத்தொடர்ந்த இடங்களில் தில்லி (1,119) மற்றும் மகாராஷ்டிரா (764) உள்ளன. மொத்தம் பெறப்பட்ட 12,648 புகார்களில், 3,567 புகார்கள் ‘தனமான உரிமை’ தொடர்பானவை, 3,213 புகார்கள் குடும்ப வன்முறை மற்றும் 1,963 வரதட்சணை துன்புறுத்தலாகும். குறிப்பிடத்தக்க வன்முறைகள் இருந்தபோதிலும், 6 புகார்கள் மட்டுமே மணிப்பூரில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

14. அண்மையில், பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

அ. நீரஜ் சோப்ரா

ஆ. டோனி கெரானென்

இ. ஆலிவர் ஹெலாண்டர்

ஈ. ஆண்டர்சன் பீட்டர்ஸ்

  • ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஜூன்.18 அன்று பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி கேம்ஸ்-2024 இல் 85.97 மீ எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். காயம் காரணமாக ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சந்திப்பைத் தவறவிட்ட பிறகு, இது இவர் பங்குபெறும் மூன்றாவது நிகழ்வாகும். அடுத்த மாதம் பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நீரஜ் சோப்ராவின் செயல்திறனை இவ்வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

15. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக அகதிகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 19 ஜூன்

ஆ. 20 ஜூன்

இ. 21 ஜூன்

ஈ. 22 ஜூன்

  • அகதிகளின் அவலநிலைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களை ஒன்றுசேர்ப்பதை ஊக்குவிக்கவுமாக ஆண்டுதோறும் ஜூன்.20 அன்று உலக அகதிகள் நாள் கொண்டாடப்படுகிறது. 2024ஆம் ஆண்டின் கருப்பொருள், “For a World Where Refugees Are Welcomed” என்பதாகும். 1951 அகதிகள் மாநாட்டின் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2001இல் நிறுவப்பட்ட இது, சர்வதேச ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மோதல், துன்புறுத்தல் மற்றும் வன்முறை காரணமாக அகதிகள் உருவாகிறார்கள்.

16. அண்மையில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன?

அ. சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்

ஆ. குற்றவியல் தடயவியல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்

இ. கல்வி வசதிகளை மேம்படுத்துதல்

ஈ. போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துதல்

  • குற்றவியல் நீதி அமைப்புக்கு உதவும் தடயவியல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை (NFIES) இந்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. 2024 ஜூன்.19 அன்று, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவண் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட NFIES, உள்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. 2024 ஜூலை.01 முதல் அமலுக்கு வரும் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு கட்டாய தடயவியல் விசாரணை தேவைப்படுகிறது. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கூடுதல் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களுக்கான புதிய வளாகங்களை NFIES உள்ளடக்கியுள்ளது.

17. அண்மையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், ஸ்வியாசாவுடன் இணைந்து, “விண்வெளிக்கான யோகா” என்ற மாநாட்டை எந்த இடத்தில் ஏற்பாடு செய்தது?

அ. புது தில்லி

ஆ. ஹைதராபாத்

இ. சென்னை

ஈ. பெங்களூரு

  • யோகா & இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலும் ஸ்வியாசா பல்கலைக்கழகமும் இணைந்து பெங்களூருவில் உள்ள எஸ்-வியாசா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா நாளிற்காக “விண்வெளிக்கான யோகா” மாநாட்டை “தன் மற்றும் சமூகத்திற்கான யோகா” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்தன. இந்நிகழ்வில் இந்திய நிறுவனங்களின் முக்கிய உரைகள் இடம்பெற்றது மற்றும் உலகளாவிய போட்டிகள் & புதுமையான சவால்கள் உட்பட யோகாவை ஊக்குவிக்கும் பல்வேறு செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தியது. நலமான சமுதாயத்தை வளர்ப்பதில் யோகாவின் பங்கு மற்றும் விண்வெளி வீரர்களுக்கான அதன் சாத்தியமான பயன்பாடுகளை இம்மாநாடு வலியுறுத்தியது.

18. அண்மையில், ‘நிலையான வளர்ச்சி அறிக்கை – 2024’ அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வானிலை அமைப்பு (WMO)

ஆ. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN)

இ. உலக வங்கி

ஈ. நிலையான வளர்ச்சிக்கானத் தீர்வுகள் வழங்கும் வலையமைப்பு (SDSN)

  • 2024 – நிலையான வளர்ச்சி அறிக்கையானது வறுமை மற்றும் பட்டினி நிலையைக் குறைத்தல்போன்ற 2015 SDG இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் காணப்படுவதாக வெளிப்படுத்துகிறது. நிலையான வளர்ச்சிக்கானத் தீர்வுகள் வழங்கும் வலையமைப்பில் வெளியிடப்பட்ட, 2030ஆம் ஆண்டிற்கான இலக்குகளில் 16% மட்டுமே நிறைவேறியுள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
  • எதிர்கால ஐநா உச்சிமாநாட்டிற்கு முன் வெளியிடப்பட்டுள்ள இது, முக்கிய ஐநா சீர்திருத்தங்களை முன்மொழிகிறது மற்றும் ஐநா அடிப்படையிலான பன்முகத்தன்மைக்கான குறியீட்டை வெளியிட்டுள்ளது. பின்லாந்து, சுவீடன் மற்றும் டென்மார்க் ஆகியவை இத்தரவரிசையில் முன்னணியில் உள்ளன.

19. ‘2024 – ஆற்றல் மாற்றக் குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 63ஆவது

ஆ. 65ஆவது

இ. 73ஆவது

ஈ. 75ஆவது

  • உலக பொருளாதார மன்றத்தின் 2024 – உலகளாவிய ஆற்றல் மாற்றக் குறியீட்டில் இந்தியா 63ஆவது இடத்தில் உள்ளது. நிலையான, பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய ஆற்றல் அமைப்புகளை நோக்கிய உலகளாவிய மாற்றத்தை இந்தக் குறியீடு கண்காணிக்கிறது. தரவரிசையில் சுவீடன் முதலிடத்திலும், டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. பிரேசில் மற்றும் சீனாபோன்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்களின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும், 83% நாடுகள் பாதுகாப்பு, சமபங்கு அல்லது நிலைத்தன்மையில் பின்வாங்கியுள்ளன. ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், முன்னேறிய மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்துள்ளது.

20. ‘5G நுண்ணறிவு கிராமம்’ என்ற முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?

அ. நகர்ப்புற இணைப்பை மேம்படுத்துதல்

ஆ. செயற்கைக்கோள் தொடர்புகளை மேம்படுத்துதல்

இ. 5G தொழில்நுட்பம்மூலம் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துதல்

ஈ. புதிய சமூக ஊடக தளங்களை உருவாக்குதல்

  • தொலைத்தொடர்புத்துறையானது தொலைத்தொடர்பு துறையில் புதுமைகளை உருவாக்கும் நோக்கோடு இரண்டு முன்முயற்சிகளை அறிவித்துள்ளது. அவை 5G நுண்ணறிவு கிராமம் மற்றும் குவாண்டம் என்க்ரிப்ஷன் அல்காரிதம் ஆகும் . இந்தத் திட்டங்கள் சமமான தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக 5G தொழில்நுட்பத்தைப் (Ultra-Reliable Low-Latency Communication (URLLC) மற்றும் massive Machine Type Communication (mMTC)) பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • massive Machine Type Communication (mMTC)மூலம் கிராமப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகின்றது. இந்த முயற்சிகள் விவசாயம், கல்வி, சுகாதாரம், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மைபோன்ற முக்கியமான பகுதிகளை குறிவைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 5G இணைப்பின் நன்மைகளை சென்றடையச் செய்கிறது.

21. இ-ஷ்ரம் வலைத்தளத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஆ. வேளாண்மை அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • ஜெனீவாவில் நடைபெற்ற 112ஆவது பன்னாட்டு தொழிலாளர் மாநாட்டில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலர் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் இ-ஷ்ரம் வலைத்தளத்தை சிறப்பித்துப் பேசினார். 2021இல் தொடங்கப்பட்ட இந்த வலைத்தளம், நானூறு தொழில்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களைப் பதிவுசெய்து, விரிவான தேசிய தரவுத்தளத்தை வழங்குகிறது. முழுமையாக ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட இது, சமூக பாதுகாப்புத் திட்டங்களை அணுகுவதை எளிதாக்குகிறது.

22. INS சுனைனா சார்ந்த வகை எது?

அ. கல்வாரி வகுப்பு

ஆ. சரயு வகுப்பு

இ. அரிஹந்த் வகுப்பு

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • கொச்சியில் பணியில் சேர்க்கப்பட்ட மற்றும் தெற்குக் கடற்படைக் கட்டளையின்கீழ் இயங்கும் சரயு-வகுப்பு கடல்சார் ரோந்துக்கப்பலான INS சுனைனா, 2024 ஜூன்.15 அன்று சீஷெல்ஸின் விக்டோரியா துறைமுகத்துக்குச் சென்றது. இந்த விஜயம், இந்திய கடற்படைக்கும் சீஷெல்ஸ் கூட்டுறவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட INS சுனைனா கடலோர ரோந்துகள், கடல்சார் கண்காணிப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது.

23. வாதவன் துறைமுகம் கட்டப்படவுள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. ஒடிஸா

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகாராஷ்டிர மாநிலத்தின் தகானு அருகே வாதவனில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் கடல்சார் வாரியம் இணைந்து இந்தத் துறைமுகத்தை அமைக்கவுள்ளன. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு `76,220 கோடியாகும். இந்தத் துறைமுகத்தில் 1000 மீட்டர் நீளமுள்ள ஒன்பது சரக்குப் பெட்டக முனையங்கள், கடலோர பெட்டக முனையம் உட்பட நான்கு பல்நோக்கு முனையங்கள் அமைக்கப்படும்.
  • இந்தத் துறைமுகத்தில் திட்டம் ஆண்டுக்கு 298 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கைக் கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது. பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்ட நோக்கத்துடன் இணைந்த இத்திட்டம், பொருளாதார நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும். இந்தத் துறைமுகம்மூலம் சுமார் 12 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

24. Mars Atmosphere and Volatile EvolutioN (MAVEN) திட்டத்தைத் தொடங்கிய விண்வெளி அமைப்பு எது?

அ. NASA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. CNSA

  • கடந்த 2013இல் ஏவப்பட்ட NASAஇன் MAVEN சுற்றுக்கலன், அண்மையில் செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில் திகைப்பூட்டும் ஊதா நிற துருவ மின்னொளிகளை கண்டறிந்தது. MAVENஇன் முதன்மை நோக்கம் செவ்வாய் கோளின் மேல் வளிமண்டலத்தை ஆராய்வது மற்றும் சூரிய செயல்பாடு அதன் வளிமண்டலத்தின் பெரும்பகுதியை எவ்வாறு அகற்றியது என்பதைப் புரிந்துகொள்வது ஆகும். நுண்ணுயிர் வாழ்விற்கான அதன் கடந்தகால ஆற்றலைப் புரிந்துகொள்வதில் இது முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்கிறது. வாழக்கூடிய நிலையிலிருந்து செவ்வாய் அதன் தற்போதைய நிலைக்கு எவ்வாறு மாறியது என்ற மாற்றத்தை வெளிப்படுத்துவதை இந்த ஆராய்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2021இல் காற்று மாசால் 81 லட்சம் பேர் உயிரிழப்பு: இந்தியாவில் மட்டும் 21 லட்சம்.

உலக அளவில் கடந்த 2021ஆம் ஆண்டின் மொத்த உயிரிழப்பில் 12%ஆன 81 லட்சம் பேர் காற்று மாசால் உயிரிழந்து இருப்பது ஐநாஇன் ‘UNICEF’ அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கொண்ட இந்தியாவில் 21 லட்சம் பேரும், சீனாவில் 23 லட்சம் பேரும் காற்று மாசால் உயிரிழந்துள்ளனர்.

2. வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் உருவ பொம்மை.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்காட்டில் நடைபெற்ற அகழாய்வின்போது, சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கண்டு எடுக்கப்பட்டன. வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மூன்று குழிகள் தோண்டப்பட்டு, அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இரண்டாம் நாள் அகழாய்வின்போது, உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, இருபதுக்கும் மேற்பட்ட கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!