TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 1st December 2023

1. காங்லா அரண்மனை என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் தலமாகும்?

அ. அஸ்ஸாம்

ஆ. ஒடிசா

இ. மணிப்பூர் 🗹

ஈ. மேகாலயா

  • இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, மும்பையின் மசாகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனம் வடிவமைக்கப்பட்டு, 15B நான்கு திட்டத்தில் 3ஆவது கப்பலான எறிகணை அழிப்பு போர்க்கப்பல் 12706 இம்பால் தனது சேவையைத் தொடங்கியது.
  • இந்தக் கப்பலின் முகடு வடிவமைப்பு இடதுபுறத்தில் காங்லா அரண்மனையையும், வலதுபுறத்தில் ‘காங்லா-சா’வையும் சித்தரிக்கிறது. காங்லா அரண்மனை மணிப்பூரின் ஒரு முக்கியமான வரலாற்று, தொல்லியல் தளமாகும். டிராகன் தலை மற்றும் சிங்கத்தின் உடலுடனான, ‘காங்லா-சா’ மணிப்பூர் வரலாற்றின் ஒரு புராண உயிரினமாகும். மேலும் இது அதன் மக்களின் பாதுகாவலராக அடையாளப்படுத்தப்படுகிறது. ‘காங்லா-சா’ மணிப்பூரின் மாநிலச் சின்னமாகும். இந்தக் கப்பல், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தின் அடையாளமாகும்.

2. மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உதவுவதற்காக அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் தேசிய நெறிமுறையைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 🗹

இ. MSME அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • மாற்றுத்திறன் குழந்தைகளைக் கண்காணித்து அவர்களுக்கு உதவுவதற்காக அங்கன்வாடிப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு தேசிய நெறிமுறையை அறிமுகப்படுத்தியது. அங்கன்வாடி சூழலமைப்பு தினசரி அடிப்படையில் எட்டுக்கோடிக்கும் அதிகமான குழந்தைகளை நேரடியாகச் சென்றடைவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கொள்கை வரைவு, 2021இன்படி, இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊனங்களில் 1/3 பங்கு முன்கூட்டியே கண்டறியப்பட்டு, போதுமான சிகிச்சை அளிக்கப்படும்போது, தடுக்கக்கூடியதாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

3. ASEAN India Grassroots Innovation Forum (AIGIF) தொடங்கப்பட்டுள்ள நாடு எது?

அ. தாய்லாந்து

ஆ. வியட்நாம்

இ. மலேசியா 🗹

ஈ. சிங்கப்பூர்

  • மலேசியாவின் இலங்காவியில் தொடங்கப்பட்ட வருடாந்திர ஆசியான் இந்தியா வேரடி புத்தாக்க மன்றத்தின் 4ஆம் பதிப்பில், 10 ASEAN உறுப்புநாடுகளுடன் இந்தியாவும் 200 பங்கேற்பாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. AIGIF என்பது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்திய நாட்டிற்கும் 10 ASEAN உறுப்புநாடுகளுக்கும் இடையே பலப்படுத்தப்பட்ட உறவை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் வருடாந்திர திட்டமாகும். அறிவியல் & தொழில்நுட்பத்துறை மற்றும் இந்தியாவின் தேசிய புத்தாக்க அறக்கட்டளை மற்றும் நிகழ்வை நடத்தும் நாடான மலேசியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இந்த நிகழ்வை கூட்டிணைந்து நடத்தின.

4. பொது சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, ஐக்கிய நாடுகள் அவையால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஆண்டு எது?

அ. 2025

ஆ. 2027

இ. 2030 🗹

ஈ. 2035

  • ஐநா அவை முதன்முதலில் கடந்த 2015ஆம் ஆண்டில், 2030ஆம் ஆண்டளவில் எய்ட்ஸ் நோயை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இலக்கை நிர்ணயித்தது. உலகம் முழுவதும் 39 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸான HIVஉடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 20.8 மில்லியன் பேர் கிழக்கு நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ளனர். 6.5 மில்லியன் பேர் ஆசிய-பசிபிக் நாடுகளில் உள்ளனர்.

5. ‘கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம்’ விழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. ஆந்திர பிரதேசம் 🗹

இ. சிக்கிம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

  • மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், சங்கீத நாடக அகாடமி, ஆந்திர மாநில அரசு ஆகியவற்றுடன் இணைந்து பாரம்பரிய இசையின் வளமான பாரம்பரியத்தை கொண்டாடுவதற்கு, கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனத்தின் முன்னோட்ட நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது. 2023 நவம்பர்.27 அன்று மாநிலம் முழுவதும் ஆறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னோட்ட நிகழ்வுகள் மகத்தான வெற்றிபெற்றன.
  • கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் டிசம்பர் 10 முதல் 12 வரை விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிராந்திய உணவு வகைகள், உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறிகளின் கண்கவர் காட்சி மற்றும் விற்பனையும் இடம்பெறும். ஆன்மீக, பாரம்பரிய மற்றும் சுற்றுச்சூழல் இடங்கள் உட்பட பிராந்தியத்தின் அறிந்திராத இரத்தினங்களை மேம்படுத்துவதையும் இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. கரும்பாலைக் கழிவு என்பது எந்தத் தொழிற்துறையிலிருந்து பெறப்படும் எஞ்சிய துணைப் பொருளாகும்?

அ. ஆட்டோமொபைல்

ஆ. சர்க்கரை 🗹

இ. நிலக்கரி

ஈ. எஃகு

  • கரும்பாலைக் கழிவு என்பது சர்க்கரைத் தொழிற்துறையிலிருந்து பெறப்படும் எஞ்சிய துணைப்பொருளாகும்; இது பெரும்பாலும் வடிப்பு எச்சக்கட்டி (filter cake) என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை ஆற்றல் உற்பத்திக்கான மதிப்பு மிக்க ஒரு வளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் துணைப்பொருள், இந்திய சர்க்கரை ஆலைகளுக்கு காற்றில்லா செரிப்பு & சுருக்கப்பட்ட உயிரிவாயுவை உருவாக்குவதற்கான மூலப்பொருளாக இதை பயன்படுத்துவதன்மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட உதவும்.

7. ‘இராஜ மகோத்சவம் அல்லது இராஜ லீலா விழா’ கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. கோவா

ஆ. அஸ்ஸாம் 🗹

இ. மேகாலயா

ஈ. கேரளா

  • உலகின் மிகப்பெரிய, மக்கள் வசிக்கும் ஆற்றுத் தீவான அஸ்ஸாமின் மஜூலியில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ராஜ மகோத்சவம் அல்லது இராஜ லீலா’ தொடங்கியுள்ளது. மஜூலி என்பது அசாமிய நவ-வைஷ்ணவத்தின் மையமாகும். பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்துள்ள இந்த ஆற்றுத்தீவில் டஜன் கணக்கான வைஷ்ணவ மடங்கள் உள்ளன; அவை அங்கு சத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உள்ளூர்வாசிகள் பாயோனாவை நிகழ்த்துகிறார்கள்; இது ஒரு பாரம்பரிய நாடக வடிவமாகும். பயோனா என்பது அஸ்ஸாமின் கலாச்சார மற்றும் மத வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபரான ஸ்ரீமந்தா சங்கர்தேவாவால் தொடங்கப்பட்டதாகும்.

8. ‘ஆஸ்ட்ரோசாட்’ என்பது எந்த நாட்டால் ஏவப்பட்ட விண்வெளி தொலைநோக்கியாகும்?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா

இ. இந்தியா 🗹

ஈ. சீனா

  • இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் விண்வெளி தொலைநோக்கியானது 600ஆவது காமா-கதிர் வெடிப்பை (Gamma-Ray Burst) கண்டறிந்ததன்மூலம் சாதனை படைத்தது. காமா கதிர் வெடிப்புகள் என்பது நியூட்ரான் விண்மீன்களின் இறப்பை அல்லது ஒன்றிணைப்பைக் குறிக்கின்றன. ஆஸ்ட்ரோசாட் விண்வெளி தொலைநோக்கியானது 2015ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (ISRO) ஏவப்பட்டது. இது ஐந்து ஆண்டுகள் உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அது அதன் ஆயுட்காலத்தை தாண்டியும் சிறப்பாக ஆய்வு செய்து வருகிறது.

9. மிகவும் அருகிவிட்ட உயிரினமான சௌரௌயா பூண்டுவானா தாவரம், இந்தியாவிலேயே முதன்முறையாக கீழ்காணும் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது?

அ. கோவா

ஆ. மணிப்பூர் 🗹

இ. மேற்கு வங்காளம்

ஈ. கர்நாடகா

  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) சிவப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகவும் அருகிவிட்ட உயிரினமான Saurauia Punduana மணிப்பூர் மாநிலத்தின் தமெங்லாங் மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. Saurauia Punduana தாவரம் சமீபத்திய பல்லுயிர் மதிப்பீட்டிற்கான கள ஆய்வின் போது பதிவுசெய்யப்பட்டது. லாங்கு காடுகளின் முதன்மை பகுதிகளை இந்த ஆய்வு உள்ளடக்கியது. அங்குள்ள உள்ளூர் மக்கள் இந்தத் தாவரத்தை, ‘அனோய்பாங்’ என்று அழைக்கிறார்கள்.

10. 2030 – உலக கண்காட்சியை நடத்தும் நகரம் எது?

அ. ரியாத் 🗹

ஆ. ரோம்

இ. புது தில்லி

ஈ. ஜெனீவா

  • சவூதி அரேபிய தலைநகரம் ரியாத், கால்பந்து உலகக் கோப்பையை நடத்துவதோடு 2030 உலக கண்காட்சியை நடத்துவதற்கான உரிமையையும் வென்றுள்ளது. தென்கொரியாவின் துறைமுக நகரமான புசானும் இத்தாலியில் உள்ள ரோம் ஆகிய நகரங்களும் இந்தப் போட்டியில் இருந்தன. ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்வு, இலட்சக்கணக்கான பார்வையாளர்களையும் கோடிக்கணக்கான டாலர்கள் முதலீட்டையும் ஈர்க்கும் ஒரு மிகப் பெரிய நிகழ்வாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. HIV தொற்றில்லாத நிலையை உருவாக்குவோம்.

டிசம்பர்.01 அன்று உலக எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழாண்டுக்கான உலக எய்ட்ஸ் தடுப்பு நாளின் கருப்பொருள், “சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு HIV, AIDS தொற்றைக் குறைக்கும் செயலை முன்னெடுப்போம்” என்பதாகும். தமிழ்நாட்டில் HIV தொற்றின் அளவு 0.17%ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 0.22 சதவீதத்தைவிடக் குறைவாகும். இந்தத் தொற்றை 2030ஆம் ஆண்டுக்குள் முடிவுக்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2. 10,000ஆவது மக்கள் மருந்தகம்.

தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000ஆவது மக்கள் மருந்தகத்தை பிரதமர் திறந்து வைத்தார். நாட்டிலுள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000த்திலிருந்து 25,000ஆக உயர்த்தும் திட்டம் ஒன்றையும் பிரதமர் தொடக்கிவைத்தார். தரமான பொது மருந்துகள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த மக்கள் மருந்தகங்கள், வேதி மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறையால் தொடங்கப்பட்டது.

3. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS நோய்க்கு முடிவுரை – உலக சுகாதார அமைப்பு.

2030ஆம் ஆண்டுக்குள் AIDS நோயை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, கண்முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு உலகம் முழுவதும், குறிப்பாக தென்கிழக்காசிய பிராந்தியத்திலுள்ள உறுப்பினர் நாடுகளும், சமூகங்களும் தொடர்ந்து ஒத்துழைப்பை வளர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் 3.90 கோடி மக்கள், HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு மட்டும், சுமார் 13 லட்சம் பேர் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

4. டிச.3இல் உருவாகும் ‘மிக்ஜம்’ புயல்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் டிச.3இல் உருவாகும், ‘மிக்ஜம்’ புயல் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘மிக்ஜம்’ என்ற பெயரை மியான்மர் வழங்கியுள்ளது. ‘மிக்ஜம்’ என்றால் ‘வலிமை’ எனப் பொருள்.

5. இந்தியப் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 7.6% வளர்ச்சி.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாவது காலாண்டில் அதாவது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.6% வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை `8.03 இலட்சம் கோடியாக உள்ளது. நிதிப்பற்றாக்குறை என்பது மத்திய அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையே உள்ள வித்தியாசமாகும். அக்டோபர் மாதத்தின் இறுதி நிலவரத்தின் படி நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 45 சதவீதத்தைத் தொட்டது என அறிவித்துள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin