TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 1st and 2nd June 2024

1. 2024 – உலக புகையிலை ஒழிப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Threat to our environment

ஆ. Grow food, not tobacco

இ. Protecting Children From Tobacco Industry Interference

ஈ. Commit to Quit

  • ஆண்டுதோறும் மே.31 அன்று உலக புகையிலை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Protecting Children From Tobacco Industry Interference” என்பதாகும். இந்தக் கருப்பொருள், புகையிலையின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து இளையோரைக் காப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு இளையோரைக் குறிவைப்பதை நிறுத்துமாறு தொழிற்துறைக்கு அழைப்பு விடுக்கிறது.

2. அண்மையில், அலாஸ்காவில் நடைபெற்ற ‘செங்கொடி-24’ பயிற்சியின் முதன்மை நோக்கம் என்ன?

அ. தரை அடிப்படையிலான இராணுவ நடவடிக்கைகளை நடத்துதல்

ஆ. மேம்பட்ட வான்வழி போர் பயிற்சிமூலம் பன்னாட்டு சூழலில் விமானக்குழுவை ஒருங்கிணைப்பது

இ. கடல்சார் பாதுகாப்புக்காக கடற்படைக்கு பயிற்சி அளித்தல்

ஈ. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பயிற்சி வழங்குதல்

  • அலாஸ்காவில் உள்ள எய்ல்சன் விமானப்படை தளத்திற்கு இந்திய விமானப்படையின் (IAF) குழுவொன்று சிவப்புக் கொடி-24 என்ற பயிற்சிக்காக ரஃபேல் போர் விமானங்களுடன் சென்றுள்ளது. ‘Red Flag – 24’ என்பது இரண்டு வார காலம் நீடிக்கும் ஒரு மேம்பட்ட வான்வழி போர் பயிற்சியாகும்; இந்தப் பயிற்சி பன்னாட்டு விமானப்படைகளை ஒருங்கிணைக்கிறது. கூட்டு பசிபிக் அலாஸ்கா ரேஞ்ச் வளாகத்தில் 77,000 ச.மைல் வான்வெளியைப் பயன்படுத்தி சுமார் 3100 சேவை உறுப்பினர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்தப் பயிற்சி 1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

3. அண்மையில், ‘உலகளாவிய உணவுக்கொள்கை அறிக்கை – 2024’ஐ வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. சர்வதேச வன ஆராய்ச்சி மையம் (CIFOR)

இ. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI)

ஈ. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)

  • IFPRIஇன் உலகளாவிய உணவுக்கொள்கை அறிக்கை – 2024 ஆனது 38 சதவீத இந்தியர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதாகவும், அதே வேளையில் 28 சதவீதம் பேர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட 5 உணவுக் குழுக்களையும் சாப்பிடுவதாகவும் வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு 2011இல் 15.4%இல் இருந்து 2021இல் 16.6%ஆக உயர்ந்தது. வயது வந்தோருக்கான அதிக எடை பாதிப்பு 2006இல் 12.9%இல் இருந்து 2016இல் 16.4%ஆக அதிகரித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு அதிகரித்து வருகிறது, வீட்டு வரவு செலவுத் திட்டங்களில் தொகுக்கப்பட்ட உணவுகளின் பங்கு கிட்டத்தட்ட 12%ஆக அதிகரித்துள்ளது.

4. “Hooking the next generation: how the tobacco industry captures young customers” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. UNEP

இ. ILO

ஈ. உலக சுகாதார நிறுவனம் (WHO)

  • உலக புகையிலை ஒழிப்பு நாளான மே.31 அன்று “Hooking the next generation: how the tobacco industry captures young customers” என்ற அறிக்கையை WHO மற்றும் STOP வெளியிட்டது. உலகளவில் 13-15 வயதுடைய 37 மில்லியன் குழந்தைகள் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்; மேலும் 15-30 வயதுடையவர்களில் 85% பேர் இ-சிகரெட் விளம்பரங்களின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இ-சிகரெட்டுகள் நிகோடின் நிறைந்த ஏரோசால் என்ற போதைப்பொருளை உற்பத்தி செய்கின்றன.

5. அண்மையில், மல்டி-மிஷன் கம்யூனிகேஷன் சாட்டிலைட்டை (PAKSAT MM1) ஏவிய நாடு எது?

அ. பாகிஸ்தான்

ஆ. சீனா

இ. ஜப்பான்

ஈ. இந்தியா

  • பாகிஸ்தானின் தேசிய விண்வெளித் திட்டம் 2047இன் ஒருபகுதியாக சீன தேசத்தின் ஸிசாங்க் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து பல-பயன் தொடர்பு செயற்கைக்கோளை (PAKSAT MM1) பாகிஸ்தான் ஏவியது. இச்செயற்கைக் கோள் இணைய இணைப்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, செல்லுலார் போன்கள், பிராட்பேண்ட், இ-காமர்ஸ் போன்ற நிகழ்வுகளுக்கு உதவும். அண்மையில், சீனாவின் சாங்கி-6 நிலவுப்பயணத்துடன் ‘iCube-Qamar’ என்ற மினி செயற்கைக்கோளையும் பாகிஸ்தான் ஏவியது. பாகிஸ்தானின் முந்தைய ஏவுதல்களில் BADR-A, BADR-B, PAKSAT 1-R, PRSS-1, PakTes 1-A மற்றும் iCube-Qamar ஆகியவை அடங்கும்.

6. நிதி தொழில்நுட்பத் துறைக்கான சுய-ஒழுங்குமுறை அமைப்புகளுக்கான கட்டமைப்பை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. SEBI

இ. IRDAI

ஈ. NABARD

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) நிதி தொழில்நுட்பத் துறையில் சுய-ஒழுங்குமுறை நிறுவனங்களை (SRO-FT) அங்கீகரிப்பதற்கான கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. SRO-கள் தொழில்துறையாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு இடையில் இடைத்தரகர்களாக செயல்படுகின்றன; நடத்தைக்கான தரநிலைகளை அமைக்கின்றன மற்றும் நெறிமுறை நடைமுறைகளை மேம்படுத்துகின்றன. கணிசமான உலகளாவிய நிதியுதவியுடன், உலகின் மூன்றாவது பெரிய நிதி தொழில்நுட்பச் சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது.
  • 2021ஆம் ஆண்டில் இந்திய நிதி தொழில்நுட்பத் துறையின் மதிப்பு $50 பில்லியன் ஆகும்; 2025ஆம் ஆண்டில் 150 பில்லியன் டாலர்களை அது எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் உலகளாவிய நிகழ்நேர பரிவர்த்தனைகளில் இந்தியாவுடையது 46% ஆகும்.

7. இந்தியாவின் முதல் மின்சார வாகன (EV) குறியீட்டை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. பாம்பே பங்குச் சந்தை (BSE)

ஆ. தேசிய பங்குச் சந்தை (NSE)

இ. SEBI

ஈ. மெட்ராஸ் பங்குச் சந்தை (MSE)

  • இந்தியாவின் தேசிய பங்குச்சந்தை குறியீடுகள் இந்தியாவின் முதல் மின்சார வாகன குறியீட்டை அறிமுகப்படுத்தி உள்ளது; இது, ‘Nifty EV & New Age Automotive Index’ என்று அழைக்கப்படுகிறது. இது EV சூழலில் காணப்படும் நிறுவனங்களையும், புதிய தலைமுறை வாகனத்தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்களையும் கண்காணிப்பு செய்கிறது. 2018 ஏப்ரல்.02ஐ அடிப்படை தேதியாகவும் 1000 மதிப்புகளுடன் தொடங்கப்பட்ட இது, NIFTY-500இன் பங்குகளை உள்ளடக்கியது.

8. தக்ஷா திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கருந்துளைகள் பற்றிய ஆய்வு

ஆ. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை பகுப்பாய்வு செய்தல்

இ. காமா-கதிர் வெடிப்புகள்போன்ற வெடிக்கும் வானியற்பியல் மூலங்களை ஆய்வு செய்தல்

ஈ. நிலவின் மேற்பரப்பை ஆராய்தல்

  • தக்ஷா திட்டமானது காமா-கதிர் வெடிப்புகள் மற்றும் ஈர்ப்பலைமூலங்களின் மின்காந்த நேரிணைகளைக் குறிவைத்து இரு உயராற்றல் விண்வெளி தொலைநோக்கிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒவ்வொரு தொலைநோக்கியும் 1 keV முதல் 1 MeV வரையிலான ஆற்றலைக் கண்டறியும். பூமியின் எதிரெதிர் பக்கங்களில் நிலைநிறுத்தப்படும் இவை, தற்போதுள்ள பணிகளுடன் ஒப்பிடும்போது சிறந்த செயலெல்லையைக் கொண்டு இருக்கும். இது தனது ஐந்தாண்டு பயணத்தில், ஆயிரக்கணக்கான காமா-கதிர் வெடிப்புகள் மற்றும் டஜன் கணக்கான உயராற்றல் இருமய நியூட்ரான் நட்சத்திர இணைப்புகள் கண்டுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்ற பணிகளில் ஆஸ்ட்ரோசாட், ஃபெர்மி காமா-ரே விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஸ்விஃப்ட் அப்சர்வேட்டரி ஆகியவை அடங்கும்.

9. அண்மையில், WHO வழங்கும் 2024 – நெல்சன் மண்டேலா விருதை சுகாதார மேம்பாட்டிற்காக வென்றுள்ள மருத்துவ நிறுவனம் எது?

அ. நிம்ஹான்ஸ், பெங்களூரு

ஆ. கேஜிஎம்யூ, லக்னோ

இ. எய்ம்ஸ், டெல்லி

ஈ. சி.எம்.சி., வேலூர்

  • பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) WHO வழங்கும் 2024ஆம் ஆண்டுக்கான நெல்சன் மண்டேலா விருதினைப் பெற்றது. 2019இல் நிறுவப்பட்ட இந்த விருது, சுகாதார மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய சுகாதார செயலர் அபூர்வ சந்திரா ஆகியோர் நிம்ஹான்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

10. தேசிய புள்ளியியல் அமைப்பின் (NSO) தற்காலிக மதிப்பீட்டின்படி, 2023-24இல் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் என்ன?

அ. 7.6%

ஆ. 8.2%

இ. 6.6%

ஈ. 5.1%

  • தேசிய புள்ளியியல் அமைப்பின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2023-24 நிதியாண்டில் 8.2% வளர்ச்சியடைந்தது; இது இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டான 7.6%ஐவிட அதிகமாகும். இது 1960-61 முதல் ஒன்பதாவது முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8%ஐத் தாண்டியதைக் குறிக்கின்றது. 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 7.8% அதிகரிப்பு காணப்படுகிறது. நான்காம் காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2024) வலுவான செயல்திறனால் அதிக வளர்ச்சி விகிதம் ஏற்பட்டுள்ளது.

11. அண்மையில், PhD மாணவர்களுக்காக எந்த நிறுவனங்கள் கூட்டாக ‘BIMReN’ முயற்சியை தொடங்கியுள்ளன?

அ. புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம்

ஆ. வெளியுறவு அமைச்சகம் மற்றும் வங்காள விரிகுடா திட்டம்-அரசுகளுக்கிடையேயான அமைப்பு

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் BIMSTEC செயலகம்

ஈ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் சார்க் அமைச்சகம்

  • நீலப்பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்க இந்திய அரசாங்கம் MEA மற்றும் BOBP-IGO உடன் BIMREN (BIMSTEC-இந்திய கடல்சார் ஆராய்ச்சி வலையமைப்பு) தொடங்கியுள்ளது. BIMREN ஆனது BIMSTEC நாடுகளைச் சேர்ந்த PhD மாணவர்களுக்கு ஸ்பிலிட்-சைட் டாக்டோரல் பெல்லோஷிப்கள்மூலம் இந்தியாவில் ஆராய்ச்சி செய்ய உதவுகிறது; இது இந்திய ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொள்ள `1 மில்லியன் வரை நிதியும் 6-12 மாதங்கள் வரை காலமும் வழங்குகிறது. இது 24 மாத பிராந்திய ஒத்துழைப்புக்காக `5 மில்லியன் வரையிலான மானியத்துடன் இரட்டையர் ஆராய்ச்சி திட்டங்களை ஊக்குவிக்கிறது.

12. அண்மையில், 7ஆம் வகுப்பு ICT பாடநூல்களில் செயற்கை நுண்ணறிவு (AI) கற்றலை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கோவா

ஈ. ஒடிசா

  • 7ஆம் வகுப்பு ICT பாடநூல்களில் செயற்கை நுண்ணறிவு (AI) கற்றலை கேரள மாநிலம் அறிமுகப்படுத்துகிறது; இது செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முன்னோடியாக உள்ளது. இந்த முன்முயற்சியானது தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; சிறு வயதிலிருந்தே AI கருத்துகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த முன்னோக்கு நடவடிக்கை கேரள மாநிலத்தின் கல்வி முறையை நவீனமயமாக்குவதற்கும் எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கும் உள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 3 ஆண்டுகளில் மின் உற்பத்தி நிறுவுதிறன் 4 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு தகவல்

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் மின்சார உற்பத்திக்கான நிறுவுதிறன் 4,076 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 3,984 மெகாவாட் சூரியமின் உற்பத்தி நிலையங்கள், தமிழ்நாடு மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், சூரியவொளி மின் உற்பத்தி நிலையங்களின் மொத்த நிறுவு திறன் 8,496 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!