TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 19th October 2023

1. UK அரசாங்கம் அதன் ‘ஸ்மார்ட் மாவட்டம்’ திட்டத்திற்காக எந்த இந்திய மாநிலத்துடன் கூட்டினைந்துள்ளது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. கேரளா

இ. குஜராத்

ஈ. ஒடிசா

  • நிலையான நீர், கழிவுகள் மற்றும் வளமேலாண்மைக்கான திறன்மிகு தொழில்நுட்பத் திட்டத்தில் இங்கிலாந்தும் தமிழ்நாடும் இணைந்து செயல்படுகின்றன. UK-ஆதரவிலான ‘ஸ்மார்ட் மாவட்டம்’ திட்டம், மாவட்டம் முழுவதும் உணரிகளை நிலைநிறுத்துவதன்மூலம், நீர் மற்றும் கழிவு மேலாண்மை மற்றும் மாநிலத்தில் சுற்றுச்சூழல் தரம் குறித்த நிகழ்நேர தரவுகளை சேகரித்து உலகளாவிய நிலைத்தன்மை சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. உலக உணவு நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர் 2

ஆ. அக்டோபர் 5

இ. அக்டோபர் 12

ஈ. அக்டோபர் 16 🗹

  • ஆண்டுதோறும் அக்டோபர்.16ஆம் தேதி உலக உணவு நாளெனக் கடைபிடிக்கப்படுகிறது. பசியைப்போக்குவதற்கும் உணவுப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஈடுபட்டுள்ள அமைப்புகளால் இது கொண்டாடப்படுகிறது. உலக உணவு நாள், 1945இல் உணவு மற்றும் உழவு அமைப்பால் (FAO) நிறுவப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான, உலக உணவு நாளின் கருப்பொருள், “Water is life, water is food. Leave no one behind” என்பதாகும்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. கேரளா

இ. மேற்கு வங்காளம்

ஈ. கர்நாடகா

  • தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், புலம்பெயர்ந்த பறவைகளின் முதல் தொகுப்பை வரவேற்கத் தொடங்கியுள்ளது. நீலச்சிறகுவாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், கிளுவை, மஞ்சள் வாலாட்டி, சாம்பல்தலை ஆட்காட்டி, சாதா உள்ளான் மற்றும் மர உள்ளான் தற்போது வலசை வந்துள்ளன. சிவப்புக் கழுத்து வல்லூறு, விராலடிப்பான் மற்றும் பெரும்புள்ளிகள்கொண்ட கழுகு போன்ற இரைவாரிகளும் காணப்பட்டன.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, NexCAR19 என்பது எந்த நோய்க்கான சிகிச்சையுடன் தொடர்புடையது?

அ. புற்றுநோய் 🗹

ஆ. COVID-19

இ. காசநோய்

ஈ. HIV

  • IIT பாம்பேயில் அடைவு செய்யப்பட்ட மற்றும் லாரஸ் ஆய்வகத்தால் ஆதரிக்கப்படும் ஒரு நிறுவனமான ImmunoACT, அதன் NexCAR19 (actalycabtagene autoleucel) எனப்படும் CAR-T செல் சிகிச்சைக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பிலிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
  • இந்த அங்கீகாரம் குறிப்பிட்ட வகை இரத்தப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க வழிவகை செய்கிறது. ‘NexCAR19’ என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்டு அனுமதி பெற்ற முதல் மனிதமயமாக்கப்பட்ட CD19-இலக்குகொண்ட Chimeric Antigen Receptor T cell (CAR-T) சிகிச்சையாகும்.

5. உலகளாவிய ஓய்வூதியக் குறியீடு-2023இல் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 35

ஆ. 45 🗹

இ. 55

ஈ. 85

  • 15ஆவது வருடாந்திர மெர்சர் CFA நிறுவன உலகளாவிய ஓய்வூதியக் குறியீட்டின்படி, இந்தியா 47 நாடுகளில் 45ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பு 2022இல் இருந்த 44.4இலிருந்து 2023 ஆம் ஆண்டில் 45.9ஆக அதிகரித்தது. இம்முன்னேற்றமானது போதுமான அளவு மற்றும் நிலைத்தன்மை துணை குறியீடுகளின் மேம்பாடுகள் காரணமாக நிகழ்ந்துள்ளது. 2022இல் இந்தியா 44இல் 41ஆவது இடத்தைப் பிடித்தது. நெதர்லாந்து இந்தக் குறியீட்டில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐஸ்லாந்து மற்றும் டென்மார்க் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

6. ‘IndiaAI’ அறிக்கையுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 🗹

இ. நிதி அமைச்சகம்

ஈ. கார்ப்பரேட் விவகார அமைச்சகம்

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் உள்ள 7 வெவ்வேறு AI பணிக்குழுக்கள் தொடக்கநிலை ‘IndiaAI’ அறிக்கையை வழங்கியுள்ளன. இந்த ஆவணம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு களத்தின் வளர்ச்சி மற்றும் பரிணாமத்தை வழிநடத்தும் செயல்திட்டமாகச் செயல்படும். குளோபல் இந்தியா AI உச்சிமாநாடானது 2023 டிசம்பர்.10 அன்று நடைபெறவுள்ளது.

7. சமீபத்தில், கிரிப்டோ சொத்துக்களை ஒழுங்குபடுத்துவது குறித்த செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு எது?

அ. EU

ஆ. G20 🗹

இ. ASEAN

ஈ. G7

  • G20 நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மொராக்கோவில் உள்ள மராகேஷில் நடந்த கூட்டத்தில் கிரிப்டோ சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். இது பன்னாட்டு செலவாணி நிதியம் மற்றும் நிதி நிலைப்புத்தன்மை வாரியத்தால் தயாரிக்கப்பட்ட தொகுப்பறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

8. அண்மையில் காலமான லூயிஸ் க்ளக் என்பாருடன் தொடர்புடைய துறை எது?

அ. கலை

. இலக்கியம் 🗹

இ. வணிகம்

ஈ. அரசியல்

  • புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞரும், 2020ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்றவருமான லூயிஸ் க்ளக், தனது 80ஆவது வயதில் காலமானார். இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற 16ஆவது பெண்மணியும், TS எலியட்டிற்குப் பிறகு இந்த விருதைப் பெற்ற முதல் அமெரிக்கக் கவிஞரும் இவராவார். 70 ஆண்டுகளுக்கு முன்பு தி வைல்ட் ஐரிஸ் என்ற தொகுப்பிற்காக 1993இல் புலிட்சர் பரிசு உட்பட பல விருதுகளை இவர் வென்றுள்ளார்.

9. இந்தியாவின், ‘சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதை’ வென்ற நடிகர் யார்?

அ. மைக்கேல் டக்ளஸ் 🗹

ஆ. மார்கன் ஃப்ரீமேன்

இ. டாம் ஹாங்க்ஸ்

ஈ. வில் ஸ்மித்

  • கோவா-இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2023இல், ஹாலிவுட் மூத்த நடிகரான மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா-2023 நடைபெறவுள்ளது.

10. பன்னாட்டு இராணுவப் பயிற்சியான, ‘கேம்ப்ரியன் ரோந்துப் போட்டி-2023’ஐ நடத்தும் நாடு எது?

அ. பாரிஸ்

ஆ. ரோம்

இ. இங்கிலாந்து 🗹

ஈ. ஜெனிவா

  • இங்கிலாந்தின் வேல்ஸில் நடைபெற்ற சர்வதேச இராணுவப் பயிற்சியான 2023-கேம்ப்ரியன் ரோந்துப் போட்டியில் இந்திய இராணுவம் தங்கப்பதக்கம் வென்று குறிப்பிடத்தக்க சாதனையை படைத்தது. இந்த மதிப்புமிக்க நிகழ்வில் 3/5 கோர்க்கா ரைபிள்ஸின் (எல்லைப்படை) ஒரு குழு இந்திய இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. இந்தப் போட்டியில் 111 அணிகள் பங்கேற்றன, சவாலான 60 கிமீ ஓட்டத்தை 48 மணி நேரத்திற்குள் அப்படை முடித்தது.

11. கீழ்காணும் எந்த நாட்டின் பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

அ. ஆஸ்திரேலியா

ஆ. நியூசிலாந்து 🗹

இ. பப்புவா நியூ கினி

ஈ. இந்தோனேசியா

  • நியூசிலாந்தின் அடுத்த பிரதமராக முன்னாள் விமான நிறுவன அதிகாரி கிறிஸ்டோபர் லக்சன் பதவியேற்கவுள்ளார். அவரது மத்திய-வலதுசாரி தேசியக்கட்சியானது வலதுசாரி ACT கட்சியுடன் இணைந்து பொதுத்தேர்தலில் புதிய அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றது. நியூசிலாந்தில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் முப்பதாண்டுகால உயர் பணவீக்கத்திற்கு மத்தியில் லக்சன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2035-க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையம்.

வரும் 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையத்தை அமைப்பது, 2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவது ஆகியவற்றை இலட்சிய இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என்று ISRO-க்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

2. இருவாச்சி பறவைகள்.

தமிழ்நாட்டில் அழிந்து வரும் இருவாச்சி (ஹார்ன்பில்) பறவையினத்தைப் பாதுகாக்க வேண்டும் என வனத்துறை தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வால்பாறை பகுதியில் மலை இருவாச்சி பறவைகள் அதிக அளவில் கூடுகின்ற காலமிது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகளாவிய 200 மிக முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களில் ஒன்றாகும்.

உலகில் அறியப்பட்ட 54 வகை இருவாச்சி பறவைகளில் 9 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. குறிப்பாக, இந்த 9 இனங்களில் மலபார் கருப்பு வெள்ளை இருவாச்சி, இந்திய சாம்பல் இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, மலை இருவாச்சி ஆகிய 4 இனங்கள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இதில், மலை இருவாச்சி இனப்பறவைகள் கூடுகள் கட்டுவதில்லை. மாறாக, அவை பெரிய மரங்களில் உள்ள பொந்துக்களை கூடுகளாக பயன்படுத்துகின்றன. இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972 அட்டவணை 1இல் மலை இருவாச்சி பறவைகள் அழிந்துவரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை காப்பது நமது கடமையாகும்.

3. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 446 பேருடன் தமிழ்நாட்டு அணி பங்கேற்பு.

கோவாவில் வரும் 25ஆம் தேதி தொடங்கும் 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் 446 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் போட்டியின் 36 பிரிவுகளில் களம் காணவுள்ளனர்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin