Tnpsc Current Affairs in Tamil – 19th March 2024
1. ‘ஆக்ரே’ மற்றும் ‘அக்ஷய்’ என்றால் என்ன?
அ. நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள்
ஆ. காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்
இ. முக்கியமாக தென்னிந்தியாவில் காணப்படும் மருத்துவத் தாவரங்கள்
ஈ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்கள்
- நீர்மூழ்கி எதிர்ப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்திய கடற்படை, ‘ஆக்ரே’ மற்றும் ‘அக்ஷய்’ ஆகிய கப்பல்களை அறிமுகப்படுத்தியது. பாதுகாப்பு அமைச்சகம் கொல்கத்தாவைச் சேர்ந்த GRSEஉடன் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்களை உருவாக்குவாதற்காக ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தம் கையெழுத்தாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு GRSE இந்தக் கப்பல்களை உருவாக்கியுள்ளது.
2. PM-SURAJ வலைத்தளத்தை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?
அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
ஈ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் மேற்பார்வையிடப்படும் பிரதம மந்திரி சமாஜிக் உத்தன் ஏவம் ரோஸ்கர் ஆதாரித் ஜன்கல்யான் (PM-SURAJ) வலைத்தளத்தை பிரதமர் தொடக்கி வைத்தார். பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்போன்ற விளிம்புநிலைக் குழுக்களைக் குறிவைத்து, நாடுமுழுவதும் கடனுதவி வழங்கப்படும். தகுதியான நபர்கள் வங்கிகள், NBFC-MFIகள் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் கடன் பெறலாம். இது சமூக-பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
3. அண்மையில், உணவு சுகாதாரத்திற்கான கோடெக்ஸ் குழுமத்தின் 54ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?
அ. சென்னை, இந்தியா
ஆ. நைரோபி, கென்யா
இ. மெல்போர்ன், ஆஸ்திரேலியா
ஈ. பாரிஸ், பிரான்ஸ்
- உணவு சுகாதாரத்திற்கான கோடெக்ஸ் குழுமத்தின் (CCFH) 54ஆவது அமர்வு 2024 மார்ச்.11-15 வரை கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது. கென்யாவில் நடந்த முதல் CCFH கூட்டமான இந்த நிகழ்வை அமெரிக்க அரசாங்கம் நடத்தியது. இந்த அமர்வில், இந்தியா அண்மையில் வெளியிட்ட உணவு வீதிகளை நவீனமயமாக்குவதற்கான தர செயல்பாட்டு நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டது. 54ஆவது அமர்வின் முக்கிய நிகழ்ச்சி நிரலில் ஒன்றான உணவுக்கான பாரம்பரிய சந்தைகளில் உணவு சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான முன்மொழியப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த விவாதம் நடைபெற்றது.
4. சூரியா திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?
அ. ISRO
ஆ. DRDO
இ. WHO
ஈ. UNEP
- ISROஇன் ‘சூரியா திட்டம்’ என்பது அதன் அடுத்த தலைமுறை ஏவுகலத் (NGLV) திட்டத்தின் பெயராகும். இது நாட்டின் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி இந்தியர்களை நிலவுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது. இத்திட்டத்தின் ஆரம்ப கட்டப் பொறுப்புகள் S சிவகுமார் தலைமையில் உள்ளது. NGLVஇன் முதல் ஏவுதல், ‘சூரியா’ என்ற குறியீட்டுப்பெயரில், 2034-35 வாக்கில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கப்படும் என எண்ணப்படுகிறது.
5. ‘ரைசிங் சன்’ நடவடிக்கையுடன் தொடர்புடையது எது?
அ. வெளிநாட்டு தங்கம் கடத்தல்
ஆ. போதைப்பொருள் கடத்தல்
இ புலித்தோல் கடத்தல்
ஈ. செஞ்சந்தனக் கடத்தல்
- நடப்பு 2024 மார்ச்சில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஒரு மிகப்பெரிய தங்கக்கடத்தல் கும்பலின் திட்டத்தை முறியடிப்பதற்காக, ‘ரைசிங் சன்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. 2024 மார்ச்.12 & 13 ஆகிய தேதிகளில் நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக சுமார் `40 கோடி மதிப்பிலான 61.08 கிகி தங்கம் மற்றும் 19 வாகனங்கள், பணம் மற்றும் பிற மின்னணுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கௌகாத்தி, பர்பேட்டா, தர்பங்கா, கோரக்பூர் மற்றும் அராரியா ஆகிய இடங்களில் இருந்து தங்கம் மீட்கப்பட்டது.
6. ஒவ்வோர் ஆண்டும் உலக கணித நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
அ. 13 மார்ச்
ஆ. 14 மார்ச்
இ. 15 மார்ச்
ஈ. 16 மார்ச்
- பை (𝝿) நாள் என்றும் அழைக்கப்படுகிற உலக கணித நாள், கணித மாறிலியான பை மதிப்பை (தோராயமாக 3.14) கௌரவிப்பதற்காக ஆண்டுதோறும் மார்ச்.14 அன்று கொண்டாடப்படுகிறது. 1988இல் இயற்பியலாளர் லாரி ஷாவால் தோற்றுவிக்கப்பட்ட இந்நாள், 2009இல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையிடத்தும் கடந்த 2019இல் UNESCOஇடத்தும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப்பெற்றது.
7. ‘Vocal for Local’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கிய அமைப்பு எது?
அ. ஐஐடி சென்னை
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இ. NITI ஆயோக்
ஈ. UGC
- NITI ஆயோக் ஆனது தன்னம்பிக்கை மற்றும் நீடித்த வளர்ச்சியை வளர்ப்பதற்காக, ‘Vocal for Local’ முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியது. முன்னேற விழையும் தொகுதிகள் திட்டத்தின்கீழ், ‘ஆகாங்ஷா’ என்ற விளம்பரப்பெயர்மூலம் 500 தொகுதிகளைச் சார்ந்த உள்ளூர் தயாரிப்புகள் விளம்பரப்படுத்தப்படும். ‘ஆகாங்ஷா’ பிராண்டானது பன்னாட்டு சந்தை அணுகலை எளிதாக்குகிறது. இந்த முன்னெடுப்பில் இந்தத்தயாரிப்புகளுக்கான அரசாங்க இ-சந்தை (GeM) தளத்தில் ஒரு பிரத்யேக சாளரமும் உருவாக்கப்பட்டுள்ளது.
8. டெவின் AI என்றால் என்ன?
அ. இந்தியாவின் முதல் அரசுக்குச் சொந்தமான OTT இயங்குதளம்
ஆ. அதிக ஒமேகா 3 செறிவுடைய மீன் வகைகள்
இ. உலகின் முதல் முழு தன்னாட்சிமிக்க AI மென்பொருள் பொறியாளர்
ஈ. டிரோன் எதிர்ப்பு அமைப்பு
- அமெரிக்காவைச் சார்ந்த காக்னிஷன் நிறுவனம், உலகின் முதல் முழு தன்னாட்சி AI மென்பொருள் பொறியாளரான டெவினை அறிமுகப்படுத்தியது. மென்பொருள் உருவாக்கத்தில் சிறந்து விளங்குகின்ற டெவின் AI, குறியீட்டு முறை, பிழைத்திருத்தம் மற்றும் சிக்கலைத்தீர்ப்பது போன்ற மேம்பட்ட திறன்களைக் கொண்டுள்ளது. இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தி, அதன் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்துகிறது. சூழலை நினைவில் கொள்ளும் டெவின், சுயமாக கற்றுக்கொண்டு பிழைகளை சரிசெய்கிறது.
9. ஐநா வளர்ச்சித் திட்டத்தால் வெளியிடப்பட்ட 2022-பாலின சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
அ. 106
ஆ. 107
இ. 108
ஈ. 110
- ஐநா வளர்ச்சித் திட்டமானது (UNDP) அதன் மனித வளர்ச்சி அறிக்கையில் பாலின சமத்துவமின்மை குறியீட்டை (GII) வெளியிடுகிறது. 2022-GII, 2024 மார்ச்.13 அன்று வெளியிடப்பட்டது. 2021-GIIஐ ஒப்பிடும்போது 2022-GIIஇல் இந்தியா 14 இடங்கள் முன்னேறியுள்ளது. 193 நாடுகளில் 0.437 மதிப்பெண்களுடன் இந்தியா 108ஆவது இடத்தில் உள்ளது. GII ஆனது இனப்பெருக்க நலம் உட்பட மனித வளர்ச்சியின் மூன்று அம்சங்களின் அடிப்படையில் பாலின ஏற்றத்தாழ்வுகளை அளவிடுகிறது. 0 (அதிக சமத்துவமின்மை) முதல் 1 (குறைந்த சமத்துவமின்மை) வரை இந்தக் குறியீடு மதிப்புகளைக் கொண்டுள்ளது.
10. அண்மையில், இந்தியப் பிரதமரால் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் முதல் பனையெண்ணெய் பதப்படுத்தும் ஆலை திறக்கப்பட்ட மாநிலம் எது?
அ. அருணாச்சல பிரதேசம்
ஆ. அஸ்ஸாம்
இ. கர்நாடகா
ஈ. மகாராஷ்டிரா
- அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் முதலாவது பனையெண்ணெய் பதப்படுத்தும் ஆலையை பிரதமர் நரேந்திர மோதி தொடக்கி வைத்தார். மத்திய அரசு கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் சமையல் எண்ணெய்களுக்கான தேசிய இயக்கத்தை தொடக்கியது. பனையெண்ணெய் சாகுபடியை அதிகரிக்கவும், 2025-26ஆம் ஆண்டுக்குள் கச்சா பனையெண்ணெய் உற்பத்தியை 11.20 இலட்சம் டன்களாக உயர்த்துவதற்கும் இந்த இயக்கம் உறுதிபூண்டுள்ளது.
11. அண்மையில், கீழ்க்கண்டவர்களில் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
அ. ஞானேஷ் குமார் & சுக்பீர் சிங் சந்து
ஆ. அருண் கோயல் & அனுப் சந்திர பாண்டே
இ. சுகுமார் சென் & R K திரிவேதி
ஈ. K V K சுந்தரம் & S L ஷக்தர்
- பிரதமர் நரேந்திர மோதியின் மூன்று பேர்கொண்ட தேர்வுக்குழு, இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை நியமித்துள்ளது. இருப்பினும், குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினரான காங்கிரசு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, அவர்களின் நியமன செயல்முறை குறித்து கேள்வி எழுப்பியதில் இருந்து கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிகிறது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023இன்கீழ் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
12. UNDPஇன் அண்மைய அறிக்கையின்படி, உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
அ. 133
ஆ. 134
இ. 145
ஈ. 140
- UNDPஇன் 2023/24 உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் (HDI) இந்தியா 134ஆவது இடத்திற்கு உயர்ந்தது. முதன்முதலில் 1990இல் வெளியிடப்பட்ட HDI சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தை மதிப்பிடுகிறது. இது வெறும் பொருளாதார அளவீடுகளுக்கு மேல் மக்களின் நல்வாழ்வை எடுத்துக்காட்டுகிறது. மதிப்பெண்கள் 0 முதல் 1 வரை இருக்கும்; 1 என்பது உயர் மனித வளர்ச்சியைக் குறிக்கிறது. வகைகளில் மிகவுயர்ந்த, உயர், நடுத்தர மற்றும் குறைந்த மனித வளர்ச்சி ஆகியவை அடங்கும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. சென்னை மியூசிக் அகாதெமியின் 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள்:
சங்கீத கலாநிதி: கருநாடக இசைப்பாடகர் TM கிருஷ்ணா.
TTK விருது: ‘திருவையாறு சகோதரர்கள்’ S நரசிம்மன், S வெங்கடேசன், வயலின் வித்வான் H K நரசிம்மமூர்த்தி.
நிருத்ய கலாநிதி விருது: நீனா பிரசாத் (மோகினியாட்டம்).