TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 19th & 20th November 2023

1. மித்ரா சக்தி-2023 என்ற பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறுகிறது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. இலங்கை 🗹

இ. ஈரான்

ஈ. வங்காளதேசம்

  • இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ராணுவப்பயிற்சியான, “மித்ரா சக்தி” பயிற்சியின் ஒன்பதாவது பதிப்பு புனேவில் தொடங்கியது. இந்தியா சார்பில் மராத்தா லைட் காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த 120 வீரர்கள் பங்கேற்கின்றனர். இலங்கை தரப்பில், காலாட்படை பிரிவைச் சேர்ந்த 53 வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இந்திய வான்படையைச் சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை வான்படையைச் சேர்ந்த 5 பேரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

2. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய மாசுபடுத்தும் நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இந்தியா

இ. சீனா 🗹

ஈ. ரஷ்யா

  • அண்மையில், அமெரிக்காவும் சீனாவும் தூய ஆற்றலை அதிகரிப்பது, புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதைக் குறைப்பது மற்றும் புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கும் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஒப்பந்தத்தை வெளியிட்டன. இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது காலநிலை மாசுபாட்டின் மிகப்பெரிய பங்களிப்பாளர்களாக இருக்கும் அமெரிக்காவையும், தற்போது உலகின் மிகப்பெரும் மாசுபடுத்தியாக இருக்கும் சீனாவையும் உள்ளடக்கியுள்ளது. மொத்தத்தில், இந்த இரண்டு நாடுகளும் உலகளாவிய பைங்குடில் வாயு வெளியேற்றத்தில் தோராயமாக 38%த்தைக் கொண்டுள்ளன.

3. “Sand and Dust Storms: A Guide to Mitigation, Adaptation, Policy, and Risk Management Measures in Agriculture” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. FAO 🗹

இ. WMO

ஈ. CPCB

  • ஐநாவின் உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO), “மணல் மற்றும் புழுதிப்புயல்கள்: வேளாண்மையில் அவற்றை மட்டுப்படுத்துதல், தகவமைத்துக்கொள்ளல், கொள்கை ரீதியில் மற்றும் இடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கான வழிகாட்டி” என்ற அறிக்கையின்படி, மணல் மற்றும் புழுதிப்புயல்கள் 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளில் 11ஐ அடைய குறிப்பிடத்தக்க தடையை ஏற்படுத்துகின்றன.
  • புழுதிப்புயல் எனப்படுவது வறண்ட அல்லது பகுதி-வறண்ட பகுதிகளில் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது வளிமண்டலத்தின் வேகம் ஒரு குறிப்பிட்ட வேகத்தைவிட அதிகரிக்கும்போது மணல் மற்றும் தூசிகளை வறண்ட நிலங்களிலிருந்து அகற்றி தன்னுடன் எடுத்துச்செல்வதால் ஏற்படுகிறது.

4. உலக சுகாதார அமைப்பானது கீழ்காணும் எந்த நிலையை உலக சுகாதார அச்சுறுத்தலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது?

அ. தனிமை 🗹

ஆ. சமூக விலக்கு

இ. இனவெறி

ஈ. சாதிவெறி

  • உலக சுகாதார அமைப்பு (WHO) தனிமையில் இருக்கும் நிலையை ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. மேலும் இச்சிக்கலை எதிர்த்துப்போராட பல முயற்சிகளைத் அது தொடங்கியுள்ளது. WHO, இப்பிரச்னையைத் தீர்ப்பதற்காக ஒரு சர்வதேச ஆணையத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் இளையோர் தூதரான சிடோ எம்பெம்பா ஆகியோர் அவ்வாணையத்தின் தலைமைப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.

5. இந்திய பாதுகாப்புத் துறையைப் பொருத்தவரை, ‘அமினி’ என்றால் என்ன?

அ. நீர்மூழ்கிக்கப்பலை எதிர்க்கும் போர்க்கப்பல் 🗹

ஆ. கப்பலை எதிர்க்கும் எறிகணை

இ. ஹெலிகாப்டர்கள்

ஈ. ரோந்துக்கப்பல்

  • எட்டுக்கப்பல்களை உள்ளடக்கிய குறைந்த ஆழத்தில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை எதிர்க்கும் போர்க்கப்பல்கள் உற்பத்தி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட நான்காவது கப்பலான, ‘அமினி’, காட்டுப்பள்ளி லார்சன் மற்றும் டூப்ரோ கப்பல் கட்டுந்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 8 கப்பல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்துக்கு இடையே கொல்கத்தாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் கையெழுத்தானது.

6. ‘அன்பாக்சிங் BLR ஹப்பா’ என்ற திருவிழாவை நடத்துகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா 🗹

இ. கேரளா

ஈ. ஆந்திரப் பிரதேசம்

  • கர்நாடக மாநில துணை முதலமைச்சர் T K சிவகுமார், ‘அன்பாக்சிங் BLR ஹப்பா’ என்ற திருவிழாவை அறிவித்தார். இந்த விழா, பெங்களூருவில் டிச.01 முதல் நடத்தப்படவுள்ளது. வருடந்தோறும் நகர அளவில் நடத்தப்படவுள்ள இந்தத் திருவிழாவின் தொடக்க பதிப்பில் பல்வேறு வகையான நிகழ்வுகள், பரவலான கலைநிகழ்வுகள் இடம்பெறும். கலாசாரம், இலக்கியம், பாரம்பரியம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வடிவமைப்பு, நடனம், இசை, நாடகம், கண்கவர் கண்காட்சிகள் மற்றும் பல இதிலடங்கும்.

7. புலிகள் காப்பகங்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கான ஏழுமாதகால சூழல் சுற்றுலா அமர்வை ஏற்பாடு செய்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம் 🗹

ஆ. மத்திய பிரதேசம்

இ. குஜராத்

ஈ. பஞ்சாப்

  • 2023-24ஆம் ஆண்டிற்கான புலிகள் காப்பகங்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கான ஏழுமாதகால சூழல் சுற்றுலா அமர்வை உத்தர பிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் சூழல் சுற்றுலாவை நிர்வகிக்கும் பொறுப்புள்ள உத்தர பிரதேச வனக்கழகம், அதிக மக்களை ஈர்க்கும் நோக்கோடு, வனப்பயணங்கள் மற்றும் துறை சார்ந்த விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்களை கணிசமாகக் குறைக்க ஏற்பாடு செய்துள்ளது.

8. கடந்த 2022ஆம் ஆண்டில், வழக்குகளுக்குத் தீர்வு காண்பதில் 114% அளவுக்கு சாதனைபடைத்த உயர்நீதி மன்றம் எது?

அ. தில்லி உயர்நீதிமன்றம்

. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 🗹

இ. அலகாபாத் உயர்நீதிமன்றம்

ஈ. கல்கத்தா உயர்நீதிமன்றம்

  • கடந்த 2021ஆம் ஆண்டில் 109%ஆக இருந்த வழக்குகளுக்குத் தீர்வுகாணும் சதவீதம் 2022இல் 114%ஆக உயர்ந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றமானது கடந்த 2018ஆம் ஆண்டில் வழக்குகளுக்குத் தீர்வுகாணும் சதவீதத்தை 106.21%ஆக பதிவுசெய்துள்ளது. 2019இல் 112.77%ஆகவும் 2020இல் 103.23%ஆகவும் பதிவு செய்துள்ளது. COVID-19 பெருந்தொற்று காலத்திலும், நீதிமன்ற விசாரணைகள் மெய்நிகர் பயன்முறையில் நடத்தப்பட்டன. இதன் காரணமாக 2021இல் 109%ஆக உயர்ந்தது, அது 2022ஆம் ஆண்டில் 114% ஆக உயர்ந்தது.

9. முகமது முய்சு என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் அதிபராவார்?

அ. மாலத்தீவுகள் 🗹

ஆ. மொரிஷியஸ்

இ. சிங்கப்பூர்

ஈ. மலேசியா

  • மாலேயில் நடைபெற்ற விழாவில் மாலத்தீவு குடியரசின் எட்டாவது அதிபராக டாக்டர் முகமது முய்சு பதவியேற்றார். அந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார். செப்டம்பரில் நடைபெற்ற இரண்டாம்கட்ட தேர்தலில் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்வை முகமது முய்சு தோற்கடித்தார்.

10. தென்னிந்தியாவின் முதல் உயிரி வங்கி (Bio-bank) தொடங்கப்பட்டுள்ள நகரம் எது?

அ. சென்னை

ஆ. ஹைதராபாத் 🗹

இ. கொச்சி

ஈ. மைசூரு

  • தென்னிந்தியாவின் முதலும் நாட்டிலேயே 3ஆவதுமான உயிரி வங்கியானது ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. `20 கோடி மதிப்பிலான இந்த உயிரிவங்கி, 1 இலட்சம் நலமான மக்களின் திசுமாதிரிகளை கொண்டுள்ளது; இது ஆராய்ச்சியாளர்களுக்கு நோய்களின் மூலம் மற்றும் முன்னேற்றத்தை ஆய்வுசெய்ய உதவும். நோய்களின் மூலம் மற்றும் முன்னேற்றம், தடுப்பு மற்றும் தலைகீழ் மாற்றத்தை வரைபடமாக்குவதற்கு எதிர்கால கூட்டு ஆராய்ச்சிக்கான களஞ்சியமாக இது செயல்படும்.

11. ஆயுஷ் அமைச்சகமானது எந்த அமைப்புடனான பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ ‘திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டுள்ளது?

அ. UNICEF

ஆ. WHO 🗹

இ. FAO

ஈ. உலக வங்கி

  • ஆயுஷ் அமைச்சகமும் உலக சுகாதார நிறுவனமும் (WHO) பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ ‘திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டுள்ளன. பாரம்பரிய மற்றும் துணைமருத்துவ முறைகளைத் தரப்படுத்துவதும், அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை தேசிய சுகாதார அமைப்பில் ஒருங்கிணைப்பதும், அவற்றை சர்வதேச அளவில் பரப்புவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே இரண்டு ‘திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில்’ கையெழுத்திட்டுள்ளது. யோகா, ஆயுர்வேதம், யுனானி, பஞ்சகர்மா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை உலக அளவில் கொண்டு செல்ல 2016இல் முதல் ஒப்பந்தமும் ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ முறைகளை வலுப்படுத்த 2017ஆம் ஆண்டில் இரண்டாவது ஒப்பந்தமும் கையெழுத்தானது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 6ஆவது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற நிலையில், தற்போது 6-ஆவது முறையாக வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதும் விராட் கோலி தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

2. உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கத்தின் பன்னாட்டு மாநாடு.

சென்னையில் உலகச்செம்மொழித் தமிழ்ச்சங்கம் சார்பில், ‘உலகக் கல்வித்திறன் மேம்பாட்டில் தமிழ்மொழியின் பங்கு’ என்னும் தலைப்பில் பன்னாட்டு மாநாடு நடைபெறவுள்ளது.

3. எல்-நினோ தாக்கம் எதிரொலி: உலகளவில் சர்க்கரை விலை உயர்வு

‘எல்-நினோ’ தாக்கத்தால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக ஆசியாவில் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டதால் உலகளவில் சர்க்கரை விலையேற்றம் கண்டுள்ளது. ‘எல்-நினோ’ தாக்கம் காரணமாக இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளில் நிலவும் ‘வட வானிலை’ மூலப்பொருளான கரும்புபயிர்களைப் பாதித்த காரணத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சர்க்கரையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

4. பிரபஞ்ச அழகியாக ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்வு.

நடப்பாண்டுக்கான (2023) பிரபஞ்ச அழகியாக மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் (23) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த அன்டோனியா பார்சில்ட் இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மொரயா வில்சன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin