TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 19th & 20th May 2024

1. அண்மையில் தனது ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கூடைப்பந்து

. கால்பந்து

இ. பேஸ்பால்

ஈ. ஹாக்கி

  • இந்தியாவின் மதிப்பிற்குரிய கால்பந்து வீரரான சுனில் சேத்ரி, 2024 ஜூன்.06 அன்று குவைத்துக்கு எதிரான இந்தியாவின் போட்டிக்குப்பிறகு சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வுபெறுகிறார். ப்ளூ டைகர்ஸ் அணியின் அணித் தலைவரான அவர் ஜெர்சி எண்.09 அணிந்ததற்காக அறியப்பட்டவர். செகந்தராபாத்தைச்சேர்ந்த சுனில் சேத்ரி, 2002 ஆம் ஆண்டில் மோகன் பகான் அணிமூலமாக தொழில்ரீதியாக கால்பந்துக்கு அறிமுகமானார். 2005 முதல் சர்வதேச அளவில் விளையாடி வருகிறார்.

2. 2027 – மகளிர் உலகக்கோப்பையை நடத்தும் நாடு எது?

அ. பிரேசில்

ஆ. இந்தியா

இ. ஆஸ்திரேலியா

ஈ. தென்னாப்பிரிக்கா

  • பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியின் கூட்டு ஏலத்தை முறியடித்து, FIFA மாநாட்டில் 2027-மகளிர் உலகக் கோப்பையை நடத்தும் நாடாக பிரேசில் அறிவிக்கப்பட்டது. ஏலத்தின்போது பிரேசில் 119 வாக்குகளைப் பெற்றது. FIFA இன் தொழில்நுட்ப மதிப்பீட்டைத் தொடர்ந்து பிரேசிலுக்கு சாதகமாக முடிவு எட்டப்பட்டது. 2031 – போட்டியை நடத்த கூட்டிணைந்த அமெரிக்காவும் மெக்சிகோவும் தங்கள் இணைவை விலக்கிக்கொண்டன.

3. NOAA வெளியிட்ட ஓர் அண்மைய அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் மட்டும் உலகிலுள்ள பவளப்பாறைகளில் எத்தனை சதவீதம் நிறம் மாறியுள்ளன?

அ. 55%

ஆ. 60%

இ. 70%

ஈ. 80%

  • அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின்படி, உலகின் 60% பவளப்பாறைகள் கடந்த 12 மாதங்களில் நிறம் மாறும் அளவுக்கு கடுமையான வெப்ப அழுத்தத்தை அனுபவித்துள்ளன. 1998 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட மூன்று நிகழ்வுகளுக்குப் பிறகு இது நான்காவது பவளப்பாறைகள் நிறமாற்ற நிகழ்வு ஆகும். நிறமாற்றம் பவளப்பாறைகளை நோய்க்கு ஆளாக்குவதோடு அவற்றின் பல்லுயிர்மைக்கும் தீங்கு விளைவிக்கும்.

4. அண்மையில், ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை’ என்ற மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி

இ. கௌகாத்தி

ஈ. போபால்

  • மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், அஸ்ஸாம் அரசுடன் இணைந்து, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் அண்மைய மாற்றங்கள் குறித்து விவாதிக்க 2024 மே 18-19 அன்று கௌகாத்தியில், ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்குப்பாதை’ என்ற தலைப்பிலான மாநாட்டை ஏற்பாடு செய்தது. காலாவதியான பிரிட்டிஷ் ஆட்சிக்கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களை இந்நிகழ்வு முன்னிலைப்படுத்தியது. இந்தச் சட்டங்கள் 2024 ஜூலை.01 முதல் நடைமுறைக்கு வரும்.

5. 2024 – உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Digital technologies for Older Persons and Healthy Ageing

. Digital Innovation for Sustainable Development

இ. Accelerating digital transformation in challenging times

ஈ. Connect 2030: ICTs for the Sustainable Development Goals (SDGs)

  • உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளானது ஆண்டுதோறும் மே.17 அன்று சமூகங்களில் ICT மற்றும் இணையத்தின் பயன்பாட்டை ஆராயவும் டிஜிட்டல் இடைவெளிகளை குறைப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும், ITU ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கிறது; 2024ஆம் ஆண்டுக்கு, “Digital Innovation for Sustainable Development” என்பது கருப்பொருளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு பிரண்ட்லாண்ட் ஆணையத்தின் அறிக்கையால் வரையறுக்கப்பட்ட ‘நிலையான வளர்ச்சி’, எதிர்கால தலைமுறையினரின் திறனை சமரசம் செய்யாமல் தற்போதைய தேவைகளைப் பூர்த்திசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. அண்மையில், இந்தியா-ஜிம்பாப்வே கூட்டு வர்த்தகக் குழுவின் மூன்றாவது அமர்வு நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. சென்னை

இ. ஹைதராபாத்

ஈ. பெங்களூரு

  • இந்தியா-ஜிம்பாப்வே கூட்டு வர்த்தகக் குழுவின் மூன்றாவது அமர்வு 2024 மே 13-14 வரை புது தில்லியில் நடந்தது. இந்தியாவின் பிரியா பி நாயர் மற்றும் ஜிம்பாப்வேயின் ரூடோ எம் பரானிசி ஆகியோரின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த அமர்வு இருதரப்பு வர்த்தகம், முதலீடு, ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனஞ்செலுத்தியது. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
  • டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்வுகள், தொலைமருத்துவம், கச்சா வைரங்கள், விரைவாகப் பணம் செலுத்தும் முறை மற்றும் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒழுங்குமுறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறித்து ஆராய இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

7. பாதுகாப்பு தொடர்பான 12ஆவது இந்தியா-மங்கோலியா கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. தர்கான்

ஆ. பெங்களூரு

இ. உலான்பதார்

ஈ. புது தில்லி

  • இந்தியா-மங்கோலியா பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையிலான 12ஆவது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் மே.16 அன்று தொடங்கியது. இக்கூட்டத்திற்குப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச்செயலர் அமிதாப் பிரசாத், மங்கோலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலர் பிரிகேடியர் ஜெனரல் கன்குயக் தவக்டோர்ஜ் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். இக்கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தின்போது, இருநாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருதரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். பல்வேறு இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெடுப்புகளின் முன்னேற்றம் குறித்து அவர்கள் ஆய்வுசெய்ததுடன், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.

8. உலக உயர் இரத்த அழுத்த நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 16.மே

ஆ. 17.மே

இ. 18.மே

ஈ. 19.மே

  • உயர் இரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மே.17 அன்று உலக உயர் இரத்த அழுத்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அமைதியான ஆனால் இடர்மிகு உடல்நலப்பிரச்சினையான இது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது. 2005 மே.14ஆம் தேதி உலக உயர் இரத்த அழுத்த கழகத்தால் முதன் முதலில் கடைப்பிடிக்கப்பட்ட இந்நாள், பின்னர் 2006 மே.17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. உயர் இரத்த அழுத்தத்தின் இடர்கள் மற்றும் அதை மேலாண்மை செய்வது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer!” என்பதாகும்.

9. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற அம்பாஜி வெண்பளிங்குக்கல் சார்ந்த மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. குஜராத்

இ. மகாராஷ்டிரா

ஈ. மத்திய பிரதேசம்

  • குஜராத் மாநிலத்தின் அம்பாஜியில் வெட்டியெடுக்கப்படுகிற வெண்பளிங்குக்கல், நடுவண் அரசிடமிருந்து புவிசார் குறியீடு பெற்றுள்ளது. அம்பாஜி வெண்பளிங்குக்கல் என்று அழைக்கப்படும் இது, தனித்துவமான சாம்பல் அல்லது பழுப்புநிற கொடிகளுடன் கூடிய அதன் அழகிய வெண்ணிறத்திற்குப் புகழ்பெற்றதாகும். இந்தப்பளிங்குக்கல் நீடித்த மற்றும் மென்மையான, பளபளப்பான மேற்பரப்பைக் கொண்டுள்ளது.

10. ‘டெடா முறை’ என்றால் என்ன?

அ. வட இந்தியாவில் பின்பற்றப்படும் ஒரு நெல் சாகுபடி முறை

ஆ. முரியா பழங்குடியினரால் பின்பற்றப்படும் விதைகளைப் பாதுகாக்கும் முறை

இ. ஒரு பாரம்பரிய நீர்ப்பாசன நுட்பம்

ஈ. மலேரியாவைக் குணப்படுத்தும் பழங்கால மருத்துவ முறை

  • கோதாவரி பள்ளத்தாக்கில் குடியேறிய சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த முரியா பழங்குடி உழவர்கள், விதைகளைப் பாதுகாக்க பாரம்பரிய, ‘டெடா’ முறையைப் பயன்படுத்துகின்றனர். விதைகள் சியாலி இலைகளில் சுற்றப்பட்டு, மரச் சாம்பல் மற்றும் எலுமிச்சை இலைகளால் அடுக்கப்பட்டு, காற்று புகாவண்ணம் மூடப்பட்டிருக்கும்.
  • ஒவ்வொரு டெடாவும் 5 கிகிராம் விதைகளை தாங்கியிருக்கும்; அவை அவ்விதைகளை பூச்சியிலிருந்து பாதுகாத்து, ஐந்து ஆண்டுகள் வரை அவற்றின் உயிர்ப்புத்தன்மையை பாதுகாக்கின்றது. பச்சைப்பயறு, செம்பருத்தி, உளுந்து, பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளுக்கு இந்த முறை மிகப்பயனுள்ளதாக உள்ளது.

11. அண்மையில், தூய்மை இயக்கத்தை தொடங்கியதன்மூலம் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அமைச்சகம் எது?

அ. வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

  • தூய்மை மற்றும் நீடித்த சுற்றுச்சூழல் நிலைமையை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டமைச்சகம் இருவார தூய்மை இயக்கத்தைத் தொடங்கியது. இந்நிகழ்வு 2024 மே.16 முதல் மே.31 வரை நடைபெறும். 2016 ஏப்ரலில் தொடங்கப்பட்ட இம்முன்னெடுப்பு, நடுவணரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளை பங்கேற்கச் செய்வதன்மூலம் தூய்மை மற்றும் நிலைத்தன்மையில் கவனஞ்செலுத்துகிறது.
  • ‘தூய்மையான அமைச்சகங்கள்’ என அழைக்கப்படும் அமைச்சகங்கள், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை உறுதி செய்வதற்காக, ‘ஸ்வச்சதா சமிக்ஷா’மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

12. PREFIRE போலார் திட்டத்தை உருவாக்கிய விண்வெளி அமைப்பு எது?

அ. JAXA

ஆ. ISRO

இ. NASA

ஈ. ESA

  • மே.22 அன்று நியூசிலாந்தில் இருந்து ஏவப்படும் NASAஇன் PREFIRE துருவத் திட்டமானது, பூமியின் துருவங்களை ஆறு மணிநேர இடைவெளியில் அளவிடும் இரட்டை செயற்கைக்கோள்களை உள்ளடக்கியது. துருவப்பகுதிகளில் இருந்து வெப்ப இழப்பின் முழு நிறமாலையை வெளிப்படுத்தவும், காலநிலை மாதிரிகளை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் நோக்கம் கொண்டுள்ளது. புவியின் வளிமண்டலம் மற்றும் பனியானது ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கின் வெப்பக் கதிர்வீசலை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான புதிய தரவுகளை வழங்குவதன்மூலம், இது காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு பற்றிய கணிப்புகளை மேம்படுத்தும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தங்கள் பயிர் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட வேளாண்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான திட்டமிடலுக்கு ஏதுவாக மாவட்ட வாரியாக வானிலை முன்னறிவிப்பு & வானிலைசார் வேளாண் அறிவுரைகளை ‘உழவன் செயலி’மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தச்செயலிமூலம் தினசரி வானிலை தகவல்களை மண்டல வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆறு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பையும் அறிந்துகொள்ளலாம். மேலும் பயிர் பாதுகாப்பு மற்றும் கால்நடைகளை தற்காத்துக்கொள்ளும் அறிவுரைகளையும் இச்செயலியில் பெறலாம் எனத் தமிழ்நாடு வேளாண் துறை தெரிவித்துள்ளது.

2. கோப்பை வென்றார் இகா ஸ்வியாடெக்.

இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். உலகின் நெ:01 வீராங்கனையான இகா ஸ்வியாடெக், இறுதிச்சுற்றில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில், உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவை எளிதாக சாய்த்தார். இத்துடன் இத்தாலிய ஓபனில் 3ஆவது முறையாக வாகை சூடியிருக்கிறார் இகா ஸ்வியாடெக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!