TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 18th October 2023

1. 2022ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ விருது பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி சார்ந்த மொழி எது?

அ. தமிழ் 🗹

ஆ. மலையாளம்

இ. தெலுங்கு

ஈ. கன்னடம்

  • புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆர்வலருமான சிவசங்கரி தமிழில் ‘சூரிய வம்சம்’ என்ற தனது நினைவுக்குறிப்பிற்காக 2022ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘சரஸ்வதி சம்மான்’ விருது பெற்றார். கேகே பிர்லா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட சரஸ்வதி சம்மான் விருதைப் பெறும் 32ஆவது வெற்றியாளர் சிவசங்கரி ஆவார். சரஸ்வதி சம்மான் விருது என்பது 22 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிற ஒரு மதிப்புமிக்க விருதாகும்.

2. 2023இல் G20 நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் உச்சிமாநாட்டை (P20) நடத்திய நகரம் எது?

அ. புது தில்லி 🗹

ஆ. டாக்கா

இ. ஜகார்த்தா

ஈ. கொழும்பு

  • புதுதில்லியில் 9ஆவது G20 நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் உச்சிமாநாட்டை (P20) பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். இரண்டு நாள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, மிஷன் லைஃப் குறித்த நாடாளுமன்ற மன்றம் நடைபெற்றது. G20 நாடுகளைத் தவிர பிற பத்து நாடுகள் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தன. 9ஆவது P20 உச்சிமாநாட்டின் கருப்பொருள், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றம்’ என்பதாகும்.

3. செப்டம்பர் மாதத்தில் பதிவான இந்தியாவின் சில்லறை பணவீக்கம் என்ன?

அ. 7.02%

ஆ. 6.02%

இ. 5.02% 🗹

ஈ. 4.02%

  • நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) அடிப்படையில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு 5.02%ஆக குறைந்துள்ளது. மேலும், பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் உச்சபட்ச சகிப்புத்தன்மை அளவான 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குக் கீழே வந்துள்ளது. 4 சதவீத பணவீக்கத்தை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், அதன் கடன் விகிதங்களைத் தளர்த்துவதற்கு 6 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கை போதுமானதாக இருக்காது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

4. உடனடி நிதி சந்தையில் மொத்த டிஜிட்டல் ரூபாய்க்கான சோதனைத் திட்டத்தை தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. SEBI

ஆ. RBI 🗹

இ. NITI ஆயோக்

ஈ. NPCI

  • இந்திய ரிசர்வ் வங்கி அதன் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் மொத்த விற்பனைப் பிரிவுக்கான சோதனை திட்டத்தை வங்கிகளுக்கு இடையேயான உடனடி நிதி சந்தையில் (call money market) தொடங்கியுள்ளது. ஊடக அறிக்கையின்படி, 4 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 தனியார் துறை வங்கிகள் உட்பட ஒன்பது வங்கிகள் இ-ரூபாய் உடனடி நிதி சந்தை சோதனைத் திட்டத்தில் பங்கேற்கின்றன. மொத்த விற்பனை மத்திய வங்கி டிஜிட்டல் நாணய சோதனையின் இரண்டாவது பயன்பாடு இதுவாகும். இது கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்கப் பத்திரச் சந்தையாகும்.

5. 8ஆவது BRICS சர்வதேச போட்டி மாநாட்டை நடத்திய நாடு எது?

அ. பிரேசில்

ஆ. இந்தியா 🗹

இ. சீனா

ஈ. தென் ஆப்பிரிக்கா

  • 8ஆவது BRICS சர்வதேச போட்டி மாநாடு (BRICS ICC-2023), புதுதில்லியில் இந்திய போட்டி ஆணையத்தால் (CCI) நடத்தப்பட்டது. BRICS போட்டித்துறை அதிகாரிகளால் கையொப்பமிடப்பட்ட கூட்டறிக்கையானது, போட்டிசார் வளர்ச்சி மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சீரமைப்பு நிகழ்த்த அழைப்பு விடுத்துள்ளது. 2025இல் நடக்கவுள்ள 9ஆவது BRICS சர்வதேச போட்டி மாநாட்டிற்காக CCI தென்னாப்பிரிக்காவிடம் பொறுப்பை ஒப்படைத்தது.

6. ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, எந்த நாட்டுடனான தனது பயணிகள் படகுச் சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது?

அ. நேபாளம்

ஆ. வங்காளதேசம்

இ. இலங்கை 🗹

ஈ. மடகாஸ்கர்

  • தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையே ஒரு சர்வதேச, அதிவேக பயணிகள் படகுச்சேவை சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதிவேகக் கப்பலான செரியபாணி, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 50 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் தனது பயணத்தைத் தொடங்கியது.

7. இந்தியாவில், தேசிய அறிவுசார் சொத்து விருதுகளை வழங்குகிற மத்திய அமைச்சகம் எது?

அ. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 🗹

ஆ. MSME அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புது தில்லியில் நடைபெற்ற தேசிய அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில், 2023ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவுசார் சொத்து விருதுகளை வழங்கினார். உலகப் புத்தாக்கக் குறியீட்டில் 2014ஆம் ஆண்டில் 81ஆவது இடத்திலிருந்த இந்தியா இந்த ஆண்டு 40ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அவர் அப்போது தெரிவித்தார்.

8. 2023ஆம் ஆண்டில் G20 நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் உச்சிமாநாட்டின் (P20) பொறுப்பை கீழ்க்காணும் எந்த நாட்டிடம் இந்தியா ஒப்படைத்தது?

அ. பிரேசில் 🗹

ஆ. இத்தாலி

இ. ஜெர்மனி

ஈ. நார்வே

  • மக்களவை அவைத்தலைவர் ஓம் பிர்லா, ஒன்பதாவது P20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்னர், G20 நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் உச்சிமாநாட்டின் (P20) பொறுப்பை பிரேசிலின் சேம்பர் ஆஃப் டெப்யூடீஸ் தலைவரிடம் ஒப்படைத்தார். ஒன்பதாவது P20 உச்சிமாநாடு, 2023 அக்.13-14 ஆகிய தேதிகளில் புது தில்லியில், இன்டர்-பார்லிமென்டரி யூனியன் ஒத்துழைப்புடன் இந்திய நாடாளுமன்றத்தால் நடத்தப்பட்டது.

9. 2023ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்பை நடத்தும் மாநிலம் எது?

அ. ஜார்கண்ட் 🗹

ஆ. ஒடிசா

இ. தெலுங்கானா

ஈ. கர்நாடகா

  • ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இராஞ்சியில் ஆசிய பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் இலச்சினை-ஜூஹி மற்றும் அதற்கான கோப்பையை வெளியிட்டார். இராஞ்சியில் அக்டோபர்.27 முதல் நவம்பர்.14 வரை நடைபெறும் சர்வதேச ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் சுமார் 13 நாடுகள் பங்கேற்கின்றன.

10. 2028ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் எது?

அ. பாரிஸ்

ஆ. ரோம்

இ. லாஸ் ஏஞ்சல்ஸ் 🗹

ஈ. ஜெனிவா

  • சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் உட்பட ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்படும். கிரிக்கெட், பிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், பேஸ்பால், சாப்ட்பால் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுக்களைச் சேர்ப்பதற்கு LA விளையாட்டு அமைப்பாளர்களால் முன்மொழியப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

11. யாரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் உலக மாணவர் நாள் கொண்டாடப்படுகிறது?

அ. அடல் பிஹாரி வாஜ்பாய்

ஆ. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 🗹

இ. சதீஷ் தவான்

ஈ. காமராஜர்

  • டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் அக்.15ஆம் தேதி உலக மாணவர் நாள் கொண்டாடப்படுகிறது. கல்வித்துறையில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் பங்களிப்பை கௌரவிப்பதே இதன் நோக்கமாகும். இந்தியாவின் ‘ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படும் அவர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சிறந்த அறிவியலாளர் மற்றும் நிர்வாகி ஆவார்.

12. இந்தியாவில் தேசிய விண்வெளி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட் 21

ஆ. ஆகஸ்ட் 23 🗹

இ. ஆகஸ்ட் 25

ஈ. ஆகஸ்ட் 27

  • சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆக.23ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளென அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட்.23ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

13. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, எந்த மாநிலத்தின் முதல் மருத்துவக்கல்லூரியான NIMSR-ஐ திறந்து வைத்தார்?

அ. மணிப்பூர்

ஆ. நாகாலாந்து 🗹

இ. மேகாலயா

ஈ. அஸ்ஸாம்

  • மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாகாலாந்து மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை (NIMSR) அண்மையில் நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரமான கோஹிமாவில் திறந்து வைத்தார். அவ்வடகிழக்கு மாநிலத்தின் முதல் மருத்துவக் கல்லூரி இதுவாகும். NIMSR, கோஹிமா ஆனது நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அரசின் தொழில் வழிகாட்டு நிறுவனத்துக்கு ஐநா விருது.

புதுப்பித்தக்க ஆற்றல்சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐநா அமைப்பின் மதிப்பு மிகு முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023ஐ தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டு நிறுவனம் பெற்றுள்ளது.

2. கோதுமைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு `150 உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு.

2024-25 சந்தை ஆண்டில், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு `150 உயர்த்தப்பட்டு, `2,275ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை `150 உயர்வு என்பது மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014இல் பொறுப்பேற்றதிலிருந்து இதுவே அதிகமாகும்.

குளிர்கால பயிர்களில் முக்கியமான கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை, தற்போதைய 2023-24 (ஏப்ரல்-மார்ச்) சந்தை ஆண்டில் குவிண்டாலுக்கு `2,125ஆக உள்ளது. அக்டோபரில் சாகுபடி தொடங்கி, ஏப்ரலில் அறுவடைப் பணிகள் நடைபெறும். குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) என்பது சம்பந்தப்பட்ட பயிர்க் கொள்முதலுக்கு அரசு முகமைகளால் வழங்கப்படும் குறைந்தபட்ச விலையாகும்.

வேளாண் அமைச்சகம் இலக்கு: 2023-24 பயிர் ஆண்டில் (ஜூலை-ஜூன்) 114 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி என்னும் சாதனை இலக்கை வேளாண் அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் இது 112.6 மில்லியன் டன்னாக இருந்தது.

3. ஒடிஸா, திரிபுராவுக்கு புதிய ஆளுநர்கள்.

ஒடிஸா, திரிபுரா மாநிலங்களின் ஆளுநர்களாக ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் இரகுபார் தாஸ் மற்றும் பாஜக தலைவர் இந்திர சேனா ரெட்டி நல்லு ஆகியோரை நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin