Tnpsc Current Affairs in Tamil – 18th May 2024
1. அண்மையில், புவனேசுவரத்தில் நடந்த 27ஆவது பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய போட்டியில், ஆடவர் ஈட்டியெறிதலில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?
அ. நீரஜ் சோப்ரா
ஆ. கிஷோர் ஜெனா
இ. விகாஸ் யாதவ்
ஈ. மஞ்சிந்தர் சிங்
- மே.15 அன்று புவனேசுவரத்தில் நடந்த 27ஆவது பெடரேஷன் கோப்பையில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, மூன்றாண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றார். ஒடிஸாவில் பிரம்மாண்ட வரவேற்பு தந்தபோதிலும், ஆடவருக்கான ஈட்டியெறிதல் இறுதிப்போட்டியில் முதலிடம் பெற்றபோதிலும், அவர் தான் சரியாக விளையாடவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
2. உலகின் முதல் 6G சாதனத்தை வெளியிட்ட நாடு எது?
அ. ஜப்பான்
ஆ. சீனா
இ. ரஷ்யா
ஈ. இந்தியா
- ஜப்பானிய கூட்டமைப்பு உலகின் முதல் அதிவேக 6G முன்மாதிரி சாதனத்தை வெளியிட்டது. இது 5Gஐவிட 20 மடங்கு வேகமாக உள்ளது. DOCOMO, NTT, NEC மற்றும் Fujitsu ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இதில், 100 Gbps வேகத்தில் 300 அடி வரம்புக்குள் தரவை அனுப்ப முடியும். இருப்பினும், 6G இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளது மற்றும் வணிக பயன்பாட்டிற்கு அது தயாராக இல்லை. ஈர்க்கக்கூடிய வேகம் இருந்தபோதிலும் அதன் நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் உள்ளார்ந்த குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன.
3. ‘Ligdus garvale’ என்றால் என்ன?
அ. விமானந்தாங்கி
ஆ. புதிய வகை குதிக்கும் சிலந்தி
இ. புதிய வகை தவளை
ஈ. ஆக்கிரமிப்புக் களை
- ஓர் இயற்கை ஆர்வலர்கள் குழு, கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள கர்வாலே கிராமத்தில், ‘Ligdus garvale’ என்ற புதிய குதிக்கும் சிலந்தி இனத்தைக் கண்டுபிடித்துள்ளது. வேளாண் காடுகளால் சூழப்பட்ட இந்தக் கிராமம் காபி, மிளகு மற்றும் நெல் வயல்களைக்கொண்டுள்ளது. 129 ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது ‘Ligdus’ இனம் இந்த ‘Ligdus Garvale’. முதலாவது ‘Ligdus’ இனம் கடந்த 1895இல் மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘Ligdus Chelifer’ இனமாகும்.
4. இந்தியாவின் எந்தப்பகுதியில், ‘காடர் பழங்குடியினர்’ முதன்மையாக வசிக்கின்றனர்?
அ. வடகிழக்கு இந்தியா
ஆ. தென்னிந்தியா
இ. மேற்குத் தொடர்ச்சி மலைகள்
ஈ. வட இந்தியா
- தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அண்மையில் காடர் இனத்தவர் ஒருவர் யானைதாக்கி உயிரிழந்த சம்பவம் பழங்குடியின சமூகத்தினர் மற்றும் பாதுகாவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள சிறிய பழங்குடியினமான காடர்கள், வரலாற்று ரீதியாக காட்டு யானைகளுடன் இணைந்து வாழ்ந்துள்ளனர். பாரம்பரிய காட்டுவாசிகளான அவர்கள், கேரளத்தின் கொச்சின் மற்றும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் எல்லையில் வசிக்கின்றனர். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக வனவளங்களையே நம்பியுள்ளனர். வணிக நோக்கத்திற்காக தேன் சேகரிப்புபோன்ற சிறப்பு வணிக நோக்குப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
5. ‘TAK-003’ என்ற நேரடி வீரியம் நீக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியை உருவாக்கிய நாடு எது?
அ. ஜப்பான்
ஆ. கிரேக்கம்
இ. மெக்ஸிகோ
ஈ. இந்தோனேசியா
- ஜப்பானின் டேகேடாவால் உருவாக்கப்பட்ட, ‘TAK-003’, 4 தீநுண்ம குருதி நுண்ணுயிர் வகைகளின் பலவீனமான திரிபுகளைக்கொண்ட ஒரு வீரியம் நீக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியாகும். இது CYD-TDV என்ற தடுப்பூசிக்குப்பிறகு WHOஇன் முன்தகுதிபெற்ற 2ஆவது டெங்கு தடுப்பூசியாகும். டெங்குவை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இது பரவல் அதிகமுள்ள பகுதிகளில் 6-16 வயதுடைய குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
6. ‘புலவா’ என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் எறிகணையை உருவாக்கிய நாடு எது?
அ. சீனா
ஆ. ஜப்பான்
இ. ரஷ்யா
ஈ. இந்தியா
- ‘புலவா’ என்ற புதிய அணுவாற்றல் திறன்கொண்ட எறிகணையை ஆயுதக்கிடங்கில் இணைத்து ரஷ்ய நாட்டின் இராணுவத்தை பலப்படுத்தியுள்ளார் அந்நாட்டின் அதிபர். மாஸ்கோ வெப்ப தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்த, ‘RSM-56 Bulava’, முந்நிலை திட-உந்துசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் கண்டம்விட்டு கண்டம் பாயும் எறிகணையாகும். இது 12.1 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 36.8 டன் எடையும் கொண்டது. பத்து MIRV-களை எடுத்துச்செல்லும் திறன்கொண்ட இது, 8300 கிமீ தொலைவு வரை சென்று இலக்குகளைத் தாக்கும்.
7. சமீபத்தில், 2024 – உள்ளக இடப்பெயர்ச்சிக்கான உலகளாவிய அறிக்கையை (GRID) வெளியிட்ட அமைப்பு எது?
அ. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு
ஆ. உள்ளக இடப்பெயர்ச்சி கண்காணிப்பு மையம், ஜெனீவா
இ. உலக வானிலை அமைப்பு
ஈ. உலக வங்கி
- ஜெனிவாவைச் சார்ந்த IDMCஇன் 2024 – உள்ளக இடப்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கையின்படி (GRID), உலகளாவிய உள்ளக இடப்பெயர்வு 71.1 மில்லியனில் இருந்து 75.9 மில்லியனாக உயர்ந்துள்ளது. பேரிடர்களால் இடம்பெயர்ந்த 7.7 மில்லியன் பேருள், நிலநடுக்கங்களால் நான்கில் ஒரு பங்கினரும், மோதலால் 68.3 மில்லியன் பேரும் இடம்பெயர்ந்ததாக அறிக்கை கூறியுள்ளது. சூடான், சிரியா, DRC, கொலம்பியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் இடம்பெயர்ந்தோருள் சரிபாதி பேர் வசிக்கின்றனர்.
8. அண்மையில், “பொதுக்கொள்கை: தொழில் வளர்ச்சியை செயல்படுத்துதல்” என்ற தலைப்பின் கீழ், மதிப்புமிக்க ஜியோஸ்பேஷியல் வேர்ல்ட் ஃபோரம் லீடர்ஷிப் விருதைப் பெற்ற அமைப்பு எது?
அ. BHEL
ஆ. BARC
இ. DRDO
ஈ. IN-SPACe
- இந்தியாவின் தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான IN-SPACe, ரோட்டர்டாமில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான நிகழ்வில், “பொதுக்கொள்கை: தொழில் வளர்ச்சியை செயல்படுத்துதல்” என்ற தலைப்பின் கீழ், இடஞ்சார் உலக மன்றத்தின் தலைமைத்துவ விருதைப் பெற்றது. IN-SPACe சார்பாக இராஜீவ் ஜோதி மற்றும் கிருத்தி காத்ரி ஆகியோர் இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர். இந்திய விண்வெளித்துறையை முன்னேற்றுதற்கும், அரசுசாரா நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்குமன IN-SPACeஇன் முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
9. இக்லா-S பாதுகாப்பு அமைப்பினை உருவாக்கிய நாடு எது?
அ. இரஷ்யா
ஆ. சீனா
இ. இஸ்ரேல்
ஈ. ஜப்பான்
- இந்திய இராணுவம் மேமாத இறுதிக்குள் புதிய ரஷ்ய இக்லா-S VSHORAD அமைப்புகளைப்பெறும். இரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இது, தனிநபர் (அ) குழு பயன்பாட்டிற்கான கையடக்க எறிகணையாகும். இவ்வகை எறிகணைகள் தாழ்நிலை பறக்கும் விமானங்கள், கப்பல் எறிகணைகள் மற்றும் டிரோன்களை குறிவைக்கிறது. இதன் கூறுகளில் 9M342 ஏவுகணை, 9P522 ஏவுதல் பொறிமுறை மற்றும் பிற அடங்கும். 500 மீ முதல் 6 கிமீ தூரம் வரை தொலைவு வரம்பு கொண்ட இது 3.5 கிமீ உயரம் வரை செல்லும் திறன்கொண்டுள்ளது.
10. Tele-MANAS என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?
அ. ஆயுஷ் அமைச்சகம்
ஆ. வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
இ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்
ஈ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முன்னெடுப்பான, ‘Tele-MANAS’, நாடு முழுவதும் 23 சிறப்பு மையங்களுடன் இலவச தொலைநிலை-மனநல சேவைகளை வழங்கி வருகிறது. 15 முதல் 30 வயதிற்குட்பட்ட நபர்களிடமிருந்து தூக்கம் சார்ந்த பிரச்சினைகள், மன அழுத்தம், பலவீனமான மனநிலை மற்றும் தோல்வி பயம் போன்ற காரணங்களுக்கான அழைப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மைய முகமை (தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS)) பெங்களூருவில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் இயங்கி வருகிறது.
11. கேதார்நாத் யாத்திரையை சுமூகமாக நடத்துவதற்காக, உத்தரகாண்ட் மாநிலத்தின் காவல்துறை தொடங்கிய நடவடிக்கையின் பெயர் என்ன?
அ. ஆபரேஷன் சம்ரித்தி
ஆ. ஆபரேஷன் விகாஸ்
இ. ஆபரேஷன் மரியாதை
ஈ. ஆபரேஷன் சக்தி
- கேதார்நாத்தில் சர்-தாம் யாத்திரைக்கு பக்தர்கள் குவிந்துவரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்து காவல்துறை ‘ஆபரேஷன் மரியாதை’யைத் தொடங்கியது. தவறான நடத்தை மற்றும் பொருள்நுகர்வு ஆகியவற்றைக் கண்டிப்பது, பயணத்தின்போது கண்ணியத்தையும் தூய்மையையும் நிலைநிறுத்துவது இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது. இந்த நடவடிக்கை, யாத்திரையில் புனிதம் & ஒழுங்கை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
12. 2024 – தேசிய டெங்கு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Dengue Prevention: Our Responsibility for a Safer Tomorrow
ஆ. Fight Dengue, Save Lives
இ. Effective Community Engagement: Key to Dengue Control
ஈ. Fight Against Dengue
- தேசிய டெங்கு நாளானது ஆண்டுதோறும் மே.16 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது டெங்குக்காய்ச்சலின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. டெங்கு என்பது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் அபாயகரமான கொசுக்களால் பரவும் ஒரு நோயாகும். 2024ஆம் ஆண்டில் வரும் தேசிய டெங்கு நாளுக்கானக் கருப்பொருள், “Dengue Prevention: Our Responsibility for a Safer Tomorrow” என்பதாகும். இந்தக்கருப்பொருள், நோயை எதிர்த்துப் போராடுவதில் சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
- பொதுச்சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான கூட்டுப்பொறுப்பை வலியுறுத்தி, டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊக்குவிப்பது இந்த நாளின் முதன்மை நோக்கமாகும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதிசெய்க!
உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யவேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து அரசு மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க, 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் 32ஆவது பிரிவு வழிசெய்கிறது. பார்வை மாற்றுத்திறன், பார்வை குறைவு, காதுகேளாமை, அமில வீச்சால் பாதிப்பு, தசைச்சிதைவு, பார்க்கின்சன் நோய் என 21 வகை மாற்றுத்திறன்களைக் கொண்டவர்களுக்கு சலுகைகளை வழங்க சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், 40%க்கு குறையாத மாற்றுத்திறன் உடையோர்க்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க சட்டப்பிரிவு வகை செய்துள்ளது.
2. இனி ‘வாட்ஸ்ஆப்’மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்.
‘வாட்ஸ்ஆப்’மூலம் மின்கட்டணம் செலுத்தும் புதிய வசதியை தமிழ்நாடு மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 500 அலகுக்கு மேல் மின் பயன்பாடுள்ள நுகர்வோர், ‘வாட்ஸ்ஆப்’மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்.