TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 17th April 2024

1. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக கலை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 13 ஏப்ரல்

ஆ. 14 ஏப்ரல்

இ. 15 ஏப்ரல்

ஈ. 16 ஏப்ரல்

  • கலையின் உலகளாவிய தாக்கம் மற்றும் லியோனார்டோ டா வின்சியின் பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்.15 அன்று உலக கலை நாள் கொண்டாடப்படுகிறது. 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “A Garden of Expression: Cultivating Community Through Art” என்பதாகும். வகுப்புவாத பிணைப்புகள் மற்றும் புரிதலை வளர்ப்பதில் கலையின் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த வருடாந்திர கடைப்பிடிப்பு, தகவல் தொடர்பு, கலாச்சார அடையாளம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றில் கலையின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது; மேலும் உலகெங்கிலும் உள்ள கலைஞர்களின் பங்களிப்புகளைப் போற்றுகிறது.

2. MSC ARIES கப்பலுடன் தொடர்புடைய நாடு எது?

அ. மாலத்தீவுகள்

ஆ. இந்தியா

இ. இஸ்ரேல்

ஈ. ஈராக்

  • ஈரானிய கடற்படை 17 இந்திய பணியாளர்களுடன் ஹார்முஸ் ஜலசந்தி அருகே இஸ்ரேலிய கப்பலான MSC ஏரிஸ் கப்பலை கைப்பற்றியது. ஈரானிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அக்கப்பலையும் அதில் உள்ளோரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஈரான் வெளியுறவு அமைச்சர் அமிரப்துல்லாஹியன், இந்திய அதிகாரிகளை விரைவில் சந்திக்க தெஹ்ரான் அனுமதிக்கும் என்றார். அவர்கள் நாடு திரும்புவதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடினார்.

3. Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) என்ற ஆயுத அமைப்பை உருவாக்கிய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. CSIR

ஈ. IEA

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்திய ராணுவம் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) என்ற ஆயுத அமைப்பின் கள சோதனைகளை வெற்றிகரமாக நடத்தின. DRDOஆல் வடிவமைக்கப்பட்ட இதில், லாஞ்சர், இலக்கு கையகப்படுத்தும் சாதனம் மற்றும் தீக்கட்டுப்பாட்டு அலகு ஆகியவை உண்டு. இதன் சோதனைகள் 2024 ஏப்ரல்.13 அன்று பொக்ரானில் நடந்தன.

4. ஜியாதால் ஆறானது கீழ்காணும் எந்த ஆற்றின் கிளையாறாகும்?

அ. கங்கை

ஆ. பிரம்மபுத்திரா

இ. காவேரி

ஈ. கோதாவரி

  • பிரம்மபுத்திராவின் வடகரை கிளையாறான ஜியாதால் ஆறு, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இமயமலையில் உற்பத்தியாகிறது. அஸ்ஸாமில் உள்ள தேமாஜி மாவட்டம் வழியாக செல்லும் அவ்வாற்றின் போக்கில் பின்னப்பட்ட கால்வாய்கள் பல உள்ளன. இது செலாமுக் அருகே பிரம்மபுத்திராவில் இணைகிறது; ஆனால் தற்போது அணைக் கட்டு காரணமாக சுபன்சிரி ஆற்றுடன் இணைகிறது. கனமழை பொழியும் இதன் படுகை பகுதியில் (1053.20 சகிமீ) குறிப்பிடத்தக்க அளவுக்கு வண்டல் படிவு ஏற்படுகிறது.

5. அண்மையில், உலகின் முதல் செயற்கைக்கோள் தொடரை (டியான்டாங்-1) உருவாக்கிய நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. இஸ்ரேல்

  • சீன அறிவியலாளர்கள் டியான்டாங்-1 என்ற செயற்கைக்கோள் தொடரை அறிமுகப்படுத்தினர். இது அலைபேசி கோபுரங்கள் (towers) போன்ற தரை உள்கட்டமைப்பு இல்லாமல் செயற்கைக்கோள்-அடிப்படையில் திறன்பேசியில் அழைப்புகளை மேற்கொள்வதற்கான ஒரு முன்னோடி திட்டமாக இருக்கும். டியான்டாங்-1 ஆனது 3 செயற்கைக் கோள்களை புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் ~36000 கிமீ உயரத்தில் னிலை நிறுத்தியுள்ளது; அவை மத்திய கிழக்கு முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலான ஆசிய-பசிபிக் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது.
  • ஹூவாவே நிறுவனம், டியான்டாங் செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைப்பு மேற்கொண்டு, செயற்கைக் கோள் அழைப்புகளை மேற்கொள்ளும் முதல் திறன்பேசியை 2023 செப்டம்பரில் வெளியிட்டது. புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையானது செயற்கைக்கோள்கள் பூமியின் சுழற்சியுடன் பொருந்துவதை உறுதிசெய்கிறது.

6. சிறப்பு ஒலிம்பிக் பாரத் என்பது கீழ்காணும் எந்த அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு ஆகும்?

அ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. மின்சார அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • இந்தியாவின் தேசிய விளையாட்டு கூட்டமைப்பான சிறப்பு ஒலிம்பிக் பாரத், ஏப்.22ஆம் தேதி அன்று தேர்தல்மூலம் தமிழ்நாட்டில் மாவட்ட அலகுகளை நிறுவுகிறது. 2001ஆம் ஆண்டில் இந்திய அறக்கட்டளைச் சட்டம், 1882இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட இது, சிறப்பு ஒலிம்பிக்ஸ் இன்டர்நேஷனலின் அங்கீகாரம் பெற்றதாகும். இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இது, ஒரு முன்னுரிமை வகை தேசிய விளையாட்டு கூட்டமைப்பு, அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறது.

7. நிஷி பழங்குடியினரால் கொண்டாடப்படுகிற லாங்டே திருவிழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. மகாராஷ்டிரா

ஈ. ஒடிஸா

  • லாங்டே திருவிழா என்பது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வாழும் நிஷி பழங்குடியினரால் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். விலங்குகளை பலியிடுவதை தடைசெய்கிறமையால் இது பழங்குடியினரால் கொண்டாடப்படும் திருவிழாக்களிலேயே தனித்துவமானதாக உள்ளது. விலங்குகளுக்கு மாறாக, பலிபீடம் இறகுகள் மற்றும் மூங்கில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பழமையான நிஷி திருவிழாக்களில் ஒன்றான லாங்டே யுல்லோ பல்வேறு நைஷி குலத்தினரிடையே கொண்டாடப்படுகிறது.

8. சமீபத்தில் தனது முதல் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்ற ஜொனாதன் கிறிஸ்டி சார்ந்த நாடு எது?

அ. வியட்நாம்

ஆ. இந்தோனேசியா

இ. தாய்லாந்து

ஈ. சிங்கப்பூர்

  • ஏப்ரல்.14 அன்று நடந்த 2024 – பாட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை லி ஷி ஃபெங்கை தோற்கடித்து இந்தோனேசிய பாட்மிண்டன் வீரர் ஜொனாதன் கிறிஸ்டி தனது முதல் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். ஏப்ரல் 9-14 வரை சீனாவின் நிங்போவில் நடைபெற்ற இந்த நிகழ்வு, BWF ஆகும். சூப்பர் 1000 போட்டியின் வெற்றியாளர்களுக்கு 1000 புள்ளிகள் வழங்கப்படும். இச்சாம்பியன்ஷிப், பாரிஸில் நடைபெறவுள்ள 2024 – கோடைகால ஒலிம்பிக்கிற்கான தகுதிப்போட்டியாகச் செயல்பட்டது.

9. குச்சிப்புடி நடனம் என்பது கீழ்காணும் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. தெலுங்கானா

ஈ. மகாராஷ்டிரா

  • ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து உருவான ஓரிந்திய பாரம்பரிய நடன வடிவமான குச்சிப்புடிக்கு ஆதரவு குறைந்து வருவதால் அது உய்வு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக, 15ஆம் நூற்றாண்டில் சித்தேந்திர யோகியின்கீழ் ஒரு தூய நடன வடிவமாக உருவானதான் இந்தக் குச்சிப்புடி. இது சிக்கலான பாத அசைவுகள் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. வைஷ்ணவத்தில் ஆழமாக வேரூன்றிய குச்சிப்புடி, பெரும்பாலும் கிருஷ்ணரின் கதைகளை விவரிக்கவே ஆடப்படுகிறது.

10. ‘ஆபரேஷன் மேகதூதத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?

அ. லடாக்கில் இராணுவ தளம் அமைப்பது

ஆ. இமயமலையில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கைப்பற்றுவது

இ. அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுவது

ஈ. சியாச்சின் பனிப்பாறையை தக்கவைப்பது

  • வட லடாக்கில் அதன் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த தளத்திற்கு இன்றியமையாத சியாச்சின் பனிப்பாறையைப் பாதுகாப்பதற்காக இந்திய இராணுவம், ‘ஆபரேஷன் மேக்தூதம்’ தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1984இல் தொடங்கப்பட்ட இது, பாகிஸ்தானின் பிராந்திய உரிமைகோரல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, உலகின் மிகவுயத்தில் அமைந்த போர்க்களத்தில் இந்தியாவின் இருப்பை நிறுவியது.
  • லெப்டினன்ட் ஜெனரல்கள் சிப்பர் மற்றும் ஹூன் தலைமையில், மேஜர் ஜெனரல் சர்மாவுடன் இணைந்து, இந்த நடவடிக்கை இராணுவம் மற்றும் வான்படை இடையே குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்பில் செயல்பட்டது. இதன் விளைவாக சியாச்சின் பனிப்பாறையின் கட்டுப்பாட்டை இந்தியா பெற்றது.

11. ‘குத்சியா பாக்’ அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. உத்தர பிரதேசம்

இ. தில்லி

ஈ. ஜம்மு காஷ்மீர்

  • முகலாயப் பேரரசர் முகமது ஷா ரங்கீலாவின் மனைவி குத்சியா பேகத்தால் 1748ஆம் ஆண்டு கட்டப்பட்ட, ‘குத்சியா பாக்’, தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. வடக்கு தில்லியில் அமைந்துள்ள இது, பாரசீக சார்-பாக் பாணியைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இத்தோட்டத்தின் மீதங்களுள் அதன் பிரம்மாண்ட மேற்கு நுழைவாயில், குத்சியா மசூதி மற்றும் சிவப்பு மணற்கற்களால் ஆன அரங்குகள் ஆகியவை அடங்கும். இங்குள்ள மசூதியை ASI பாதுகாத்து வருகிறது.

12. அண்மையில், பன்னிரண்டாவது முறையாக தேசிய மகளிர் கேரம் பட்டத்தை வென்றவர் யார்?

அ. ராஷ்மி குமாரி

ஆ. N நிர்மலா

இ. காஜல் குமாரி

ஈ. ஷர்மிளா சிங்

  • மும்முறை உலக சாம்பியனான ராஷ்மி குமாரி, 51ஆவது தேசிய கேரம் சாம்பியன்ஷிப்பில், K நாகஜோதியை 25-8, 14-20, 25-20 என்ற கணக்கில் தோற்கடித்து தனது 12ஆவது தேசிய மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். ONGCஇல் பணிபுரியும் ராஷ்மி குமாரி, பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றார். ஆண்கள் பிரிவில், K ஸ்ரீனிவாஸ் தனது நான்காவது தேசிய ஒற்றையர் பட்டத்தை S ஆதித்யாவை 25-0, 19-6 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து கைப்பற்றினார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வந்தே பாரத்…

நாட்டில் முதல் வந்தே பாரத் ரெயில் புதுதில்லி – வாரணாசி இடையே கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி.15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 284 மாவட்டங்களை இணைக்கும் வகையில் 100 வழித்தடங்களில் 102 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

2. இராக்கெட் எஞ்சினில் இலகுரக கட்டமைப்பு: வெற்றிகரமாக பரிசோதித்தது ISRO.

இராக்கெட் எஞ்சினில் உந்துவிசைக்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பை (நாசில்) மிகவும் இலகுவான எடையில் உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ISRO தெரிவித்துள்ளது. ராக்கெட் எஞ்சின் தொழில்நுட்பத்தில் புதிய நுட்பத்திலான இந்தக் கட்டமைப்பை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் வடிவமைத்துள்ளது.

PSLV வகை இராக்கெட்டின் நான்காம் நிலையில் (PS-4) தற்போது கொலம்பியம் உலோகக்கலவை மூலக்கூறால் ஆன நாசில்களுடன் கூடிய இரு எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு மாற்றாக மிகவும் இலகுவான எடை கொண்ட நாசில் கார்பன்-கார்பன் மூலக்கூறு நுட்பத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் இராக்கெட்டின் உந்துவிசை திறன், எரிசக்தி ஆற்றல்திறன் உள்ளிட்டவை மேம்படுவதுடன் நாசில் கட்டமைப்பின் எடை ஏறத்தாழ 67% குறையும். இதன்வாயிலாக, தற்போது உள்ள எடையைக் காட்டிலும் கூடுதலாக 15 கிலோகிராம் கொண்ட ஆய்வுக்கருவிகளை PS-4 நிலையின்மூலம் விண்ணுக்குச் செலுத்த முடியும். இதற்கான பரிசோதனைகள் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள ஆய்வுமையத்தில் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!