TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 16th November 2023

1. ஐநா அவையின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, நீர் பற்றாக்குறையில் உலகின் மிகமோசமான நிலையில் உள்ள பகுதி எது?

அ. ஆப்பிரிக்கா

ஆ. தென்னமெரிக்கா

இ. தெற்காசியா 🗹

ஈ. ஐரோப்பா

  • அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை, உலகளவில் மற்ற எந்தப் பகுதியையும்விட, தட்பவெப்பநிலைமாற்றத்தால் அதிகரித்துள்ள கடுமையான நீர் பற்றாக்குறையால், தெற்காசியா அதிக இடர்களை எதிர்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது. ஐநா குழந்தைகள் அமைப்பின் அறிக்கையின்படி, தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட 347 மில்லியன் குழந்தைகள் அதிகம் அல்லது மிக அதிகமான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2. இணையவெளிப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைமைகளின் விதிமுறைகளை நிறுவவுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 🗹

ஆ. MSME அமைச்சகம்

இ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமானது பயணிகள் மற்றும் வணிக ரீதியில் இயக்கப்படும் நான்கு சக்கர வாகனங்களின் குறிப்பிட்ட வகைகளுக்கு இணையவெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்கள் செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்காக நிலையான இணையவெளிப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைமைகளை நிறுவ முன்மொழிந்துள்ளது. ‘இணையவெளிப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைமைகள் தொடர்பான வாகனங்களின் ஒப்புதல்’ என்ற தலைப்பிலான வரைவு ஆவணத்தில், வாகன உற்பத்தியாளரோ அல்லது அவருக்கு இணையானவரோ இணையவெளிப் பாதுகாப்பு தொடர்பான வாகன வகை ஒப்புதலைப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கவேண்டும் என்று அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

3. OBI உள்ளடக்கிய குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை யாது?

அ. 107

ஆ. 117 🗹

இ. 123

ஈ. 128

  • அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள அதரரிங் அண்ட் பெலோங்கிங் இன்ஸ்டிட்யூட் (OBI) வெளியிட்ட உள்ளடக்கிய குறியீட்டில், உலகின் 129 நாடுகளின் பட்டியலில் இந்தியா 117ஆவது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் (106) மற்றும் இஸ்ரேல் (115) போன்ற சிறிய நாடுகள் இந்தியாவைவிட சிறந்த இடத்தில் உள்ளன. இனம், மதம், பாலினம், பாலின நோக்குநிலை, இயலாமை மற்றும் பொது மக்களைப் பல நடவடிக்கைகளைப் பயன்படுத்தி உள்ளடக்கியதை இந்தக் குறியீடு ஆராய்கிறது.
  • மதம் உள்ளடக்கியதில் இந்தியா கடைசி இடமான 129ஆவது இடத்திலும், பாலினத்தில் 121ஆவது இடத்திலும், மாற்றுத் திறனில் 108ஆவது இடத்திலும், இனத்தில் 87ஆவது இடத்திலும், பொதுமக்கள்தொகையில் 40ஆவது இடத்திலும், LGBTQஇல் 39ஆவது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக குறியீட்டில் முதலிடம் பிடித்தது.

4. காலநிலை நெகிழ்திறன்மிக்க மற்றும் குறைந்த கரிமங்கொண்ட சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்பாட்டு கட்டமைப்பை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNEP

ஆ. FAO

இ. WHO 🗹

ஈ. NITI ஆயோக்

  • உலக சுகாதார அமைப்பானது (WHO) காலநிலை நெகிழ்திறன்மிக்க மற்றும் குறைந்த கரிமங்கொண்ட சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கான புதிய செயல்பாட்டு கட்டமைப்பை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் ஐநா காலநிலை தொடர்பான மாநாட்டிற்கு (COP28) முன்னதாக வெளியிடப்பட்ட இந்த விரிவான கட்டமைப்பு, உலகம் எங்கிலும் உள்ள சமூகங்களின் நலத்தைப் பாதுகாக்க உதவும் பைங்குடில் வாயு உமிழ்வை ஒரே நேரத்தில் குறைக்கும் அதே வேளையில், சுகாதார அமைப்புகளின் நெகிழ்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. ஓர் அண்மைய தரவுகளின்படி, சீர்மிகு நகரங்கள் திட்டத்தின்கீழ் திட்டங்கள், நிதிப் பயன்பாடு மற்றும் பிற அளவுகோல்களை நிறைவு செய்ததில் முதலிடம் வகிக்கிற நகரம் எது?

அ. சூரத் 🗹

ஆ. மதுரை

இ. திருச்சிராப்பள்ளி

ஈ. மைசூரு

  • சீர்மிகு நகரங்கள் திட்டம் அதன் 2024 ஜூன் காலக்கெடுவை நெருங்குகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, மொத்த திட்டங்களில் 22%த்தின் (7,947இல் 1,745) மொத்த செலவு 33% ஆகும். நவம்பர்.10 நிலவரப்படி, திட்டங்கள் நிறைவு, நிதிப் பயன்பாடு மற்றும் பிற அளவுகோல்களின் அடிப்படையில் சூரத் (குஜராத்) முதலிடத்திலும், ஆக்ரா (உபி), அகமதாபாத் (குஜராத்), வாரணாசி (உபி) மற்றும் போபால் (மபி) ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள 100 நகரங்களில் மிகக்குறைந்த 10 செயல்திறன் கொண்ட நகரங்களில் உள்ளன.

6. IQAirஇன் AQI தரவுகளின்படி, 287 என்ற காற்றுத்தரக்குறியீட்டுடன் உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது?

அ. டாக்கா

ஆ. புது தில்லி 🗹

இ. டோக்கியோ

ஈ. வாஷிங்டன்

  • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளி கொண்டாடப்பட்ட மறு நாளில், சுவிட்சர்லாந்தின் காற்று சுத்திகரிப்பு நிறுவனமான IQAirஇன் தரவரிசைப்படி, உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் மூன்று இந்திய பெரு நகரங்கள் இடம்பெற்றுள்ளன. நவம்பர்.13 அன்று, காற்றுத் தரக் குறியீடு (AQI) 287 உடன் தில்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்தது, அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர் 195 உடன் இருந்தது. மும்பை 153இலும் மற்றும் கொல்கத்தா 166இலும் என முதல் 10 இடங்களில் இருந்தன. IQAirஇன் AQI உலகின் 109 நாடுகளின் காற்றின் தரத்தை அளவிடுகிறது.

7. QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2024இல் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்த நிறுவனம் எது?

அ. IISc பெங்களூரு

ஆ. ஐஐடி மெட்ராஸ்

இ. ஐஐடி பம்பாய் 🗹

ஈ. டெல்லி எய்ம்ஸ்

  • குவாக்ரெல்லி சைமன்ஸ் QS ஆனது 2024ஆம் ஆண்டுக்கான ஆசிய பல்கலைக்கழக தரவரிசையை வெளியிட்டது. IIT பம்பாய் இந்தியாவில் முதல் இடத்தையும், ஒட்டுமொத்த ஆசியாவில் 40ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. இதேபோல், ஐஐடி தில்லி இந்திய கல்வி நிறுவனங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது மற்றும் ஒட்டுமொத்தமாக 46ஆவது இடத்தைப் பிடித்தது. ஆசிய தரவரிசைப் பட்டியலில் சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும் பிடித்தன. QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை-2024இல் 148 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளன.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘சக்தி கொள்கை’யுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. நிலக்கரி அமைச்சகம் 🗹

ஆ. MSME அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • நிலக்கரி அமைச்சகம், ‘சக்தி கொள்கை’யில் (இந்தியாவில் நிலக்கரியை வெளிப்படையாகப் பயன்படுத்துவதற்கான திட்டம்) திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் இல்லாத தனியார் மின்னியற்றி உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் அதிகபட்சம் ஓர் ஆண்டு வரை நிலக்கரி இணைப்பு வழங்க இது அனுமதிக்கிறது.

9. இந்தியாவில் மொத்த விலையின் குறியீட்டு எண்ணை மாதாந்திர அடிப்படையில் வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. RBI

ஆ. NSO

இ. DPIIT 🗹

ஈ. நிதி அமைச்சகம்

  • DPIIT இந்தியாவில் மொத்த விலையின் குறியீட்டு எண்ணை மாதாந்திர அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடுகிறது. அனைத்திந்திய மொத்த விலைக் குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 2023 அக்டோபர்இல் (2022 அக்டோபருக்கு மேல்) (-) 0.52%ஆக (தற்காலிகமானது) இருந்தது. இது 2023 செப்டம்பரில் (-) 0.26%ஆக பதிவாகியிருந்தது. 2023 அக்டோபரில் பணவீக்கத்தின் எதிர்மறை விகிதம், முந்தைய ஆண்டின் தொடர்புடைய மாதத்துடன் ஒப்பிடும்போது, வேதிகள் மற்றும் வேதிப்பொருட்கள், மின்சாரம், அடிப்படை உலோகங்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றின் விலைகள் வீழ்ச்சியடைவதே முதன்மையாகக் காரணமாகும்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற டயானா எடுல்ஜியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஹாக்கி

ஆ. சதுரங்கம்

இ. கிரிக்கெட் 🗹

ஈ. தடகளம்

  • முன்னாள் அணித்தலைவி டயானா எடுல்ஜி, ICC வாழ்த்தரங்கில் இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் இலங்கை உலகக் கோப்பை வென்ற அரவிந்த டி சில்வா ஆகியோரும் ICC வாழ்த்தரங்கில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. போர்விமானங்களைத் தாக்கியழிக்கும், ‘இக்லா-எஸ்’ ஏவுகணைகள் கொள்முதல்

எதிரிநாட்டு போர்விமானங்களைத் தாக்கியழிக்கும் ‘இக்லா-எஸ்’ ஏவுகணைகளை ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யவற்தான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. படைவீரர்களால் எடுத்துச் செல்லும் வகையிலான ‘இக்லா’ ஏவுகணைகள், 5-6 கிமீ தொலைவில் உள்ள எதிரிநாட்டு போர்விமானங்கள், ஹெலிகாப்டர்களைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்டவை. இந்த ஏவுகணைகள் ஏற்கெனவே முப்படைகளிலும் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, இந்த ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட இரகமான ‘இக்லா-எஸ்’ ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இந்தியா-ரஷியா இடையே கையொப்பமானது.

ரஷியாவிடமிருந்து ராணுவ தளவாடங்களை பெருமளவில் இந்தியா கொள்முதல் செய்துவருகிறது. தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கியழிக்கும் 5 ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்புகளை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்ய கடந்த 2018இல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தியாவிடம் விநியோகிக்கப்பட்ட முதல் ஏவுகணை அமைப்புகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin