Tnpsc Current Affairs in Tamil – 15th May 2024
1. 2024 – உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Insects
ஆ. Water
இ. Light pollution
ஈ. Protect birds
- மே.11 மற்றும் அக்.12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளானது புலம்பெயர்ந்த பறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்துகிறது. 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Insects – பூச்சிகள்” என்பதாகும். இந்தக் கருப்பொருள் பறவைகளுக்கான பூச்சிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; மேலும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் இது எடுத்துக்கூறுகிறது. உலக புலம்பெயர் பறவைகள் நாளானது புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
2. சமீபத்தில், ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் டிரோன்-ஆஸ்-எ-சர்வீஸ் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு, மாருட் டிரோன்டெக் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள கூட்டுறவு சங்கம் எது?
அ. இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO)
ஆ. அமுல்
இ. அன்யோன்யா கூட்டுறவு வங்கி லிட்
ஈ. கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (KCMMF)
- கிராமப்புற தொழில்முனைவு மற்றும் இளையோரின் ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு ஆந்திர பிரதேசம் & தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் டிரோன்-ஆஸ்-ஏ-சர்வீஸ் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு மாருட் டிரோன்டெக் உடன் IFFCO ஒப்பந்தம் செய்துள்ளது. ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு வேளாண் இடுபொருள் தெளிப்பை மேற்கொள்ள இந்த ஒத்துழைப்பு இலக்கு கொண்டுள்ளது. மாருட் டிரோன்டெக் IFFCOஇன் வேளாண் இடுபொருட்களை தெளிக்க டிரோன்களை வழங்கும். கிராமப்புற தொழில்முனைவோர்மூலம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் டிரோன்கள் வழங்கப்படும்.
3. 2024 – தேசிய மகளிர் ஹாக்கி லீக்கிற்காக ஹாக்கி இந்தியாவுடன் முதன்முறையாக கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?
அ. பெப்சிகோ
ஆ. கோகோ கோலா
இ. நெஸ்லே
ஈ. பார்லே அக்ரோ
- 2024 – தேசிய மகளிர் ஹாக்கி லீக் போட்டிக்காக ஹாக்கி இந்தியாவுடன் கோகோ-கோலா கூட்டிணைந்துள்ளது. இவ்வாறு இந்நிறுவனம் இணைவது இது முதன்முறையாகும். கோகோ-கோலா இந்தியாவின் #SheTheDifference பரப்புரையுடன் இணைந்து, ஹாக்கியில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை இந்தக் கூட்டாண்மை நோக்கமெனக் கொண்டுள்ளது. இக்கூட்டாண்மையின்கீழ், அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு போட்டிக்கான பயிற்சி, உபகரணங்கள், ஊட்டச்சத்து ஆகியவற்றை அந்நிறுவனம் வழங்குவதோடு ஸ்போர்ட்டிங் எத்தோசின் ஆதரவுடன் முகாம்கள் மற்றும் போட்டிகளையும் ஏற்பாடு செய்யும்.
4. அரபிக்கடலில் உள்ள சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களை ஆய்வுசெய்வதற்கும் பாதுகாப்பதற்குமாக இந்தியா அண்மையில் எந்த நாட்டுடன் கூட்டிணைந்தது?
அ. மாலத்தீவுகள்
ஆ. சோமாலியா
இ. ஓமன்
ஈ. ஈரான்
- அரபிக்கடலில் உள்ள சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியை இந்தியாவும் ஓமனும் தொடங்கவுள்ளன; இது ICAR-CMFRIஇல் நடக்கவுள்ள பயிலரங்கின்போது அறிவிக்கப்படும். CMFRI மற்றும் ஓமனின் மீன்வள ஆராய்ச்சி பொது இயக்குநரகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பயிலரங்கு, அடுக்கச் செவுள் மீன்கள் குறித்த ஆய்வுகளில் ஆராய்ச்சி மற்றும் திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இருதரப்பு கடல்சார் ஆராய்ச்சியில் ஒரு சாதனை அடைவைக் குறிக்கிறது.
5. 2023-24 நிதியாண்டில் அமெரிக்காவை விஞ்சி இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளராக ஆன நாடு எது?
அ. ஐக்கிய அரபு அமீரகம்
ஆ. சீனா
இ. ரஷ்யா
ஈ. ஜப்பான்
- உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பின் அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில், $118.4 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முதன்மை வர்த்தகப்பங்காளராக அமெரிக்காவை சீனா விஞ்சியுள்ளது. குறிப்பாக தொலைத்தொடர்பு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் மருந்துத்துறைகள் போன்ற முக்கியமான துறைகளில் சீனாவை இந்தியா நம்பியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன் பாகங்கள் இறக்குமதியில் 44% சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான லித்தியம்-அயன் மின்கலங்களில் 75% சீனாவிலிருந்து பெறப்படுகிறது.
- இந்த மாற்றம் இந்தியாவில் சீனாவின் அதிகரித்துவரும் பொருளாதார செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது மற்றும் பல்வகைப்பட்ட வர்த்தக உத்திகளின் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
6. அண்மையில், AITIGA (ASEAN-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம்) மதிப்பாய்வுக்கான நான்காவது கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. புது தில்லி, இந்தியா
ஆ. ஜூரோங், சிங்கப்பூர்
இ. ஜகார்த்தா, இந்தோனேசியா
ஈ. புத்ராஜெயா, மலேசியா
- ASEAN-இந்தியா சரக்கு ஒப்பந்தத்தில் வர்த்தகம் பற்றிய மதிப்பாய்வுக்கான 4ஆவது கூட்டுக்குழுக் கூட்டம் 2024 மே.07-09 தேதிகளில் மலேசியாவின் புத்ராஜெயாவில் நடைபெற்றது. கடந்த 2009இல் கையெழுத்தான AITIGA, 2010ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள ASEAN-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்று பொதுவாக அறியப்படும் ASEAN மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தமாகும். தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த 7ஆவது ASEAN பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனையின்போது, 2014இல் நிறுவப்பட்ட, ‘ASEAN-India Trade in Services Agreement’ ஆனது சேவைகளைத் தவிர்த்து சரக்குகளில் மட்டும் கவனம் செலுத்துகிறது.
7. சமீபத்தில், அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்தின்கீழ், 113 சாலைகளை அமைக்க அனுமதி தந்த அமைச்சகம் எது?
அ. பாதுகாப்பு அமைச்சகம்
ஆ. உள்துறை அமைச்சகம்
இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஈ. வேளாண் அமைச்சகம்
- எல்லைப்புறங்களில் இணைப்பை மேம்படுத்துவதற்காக அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்தின்கீழ் 113 சாலைகள் போடுவதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டம், 2022-23 முதல் 2025-26 வரை செயலில் இருக்கும்; வடக்கு எல்லையில் உள்ள கிராமங்களை மேம்படுத்துவதையும், குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதையும், பாதுகாப்பை பலப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 19 மாவட்டங்களில் உள்ள 2967 கிராமங்களையும், 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தின் 46 எல்லைத் தொகுதிகளையும் குறிவைக்கிறது.
8. எவரெஸ்ட் சிகரத்தில் 29 முறை ஏறிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை பெற்ற கமி ரீட்டா சார்ந்த நாடு எது?
அ. இந்தியா
ஆ. பூடான்
இ. நேபாளம்
ஈ. மியான்மர்
- புகழ்பெற்ற நேபாள மலையேறியான கமி ரீட்டா, எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை 29 முறை ஏறி தனது சொந்த உலக சாதனையை அண்மையில் முறியடித்தார். மே.12இல் அவரது இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. 1970இல் பிறந்த கமி ரீட்டா, 1992இல் தனது இந்த மலையேறும் வாழ்வைத் தொடங்கினார்; 1994இல் எவரெஸ்ட்டை முதன்முதலில் ஏறினார். அவர் ‘எவரெஸ்ட் மனிதன்’ என்று அழைக்கப்படுகிறார். இவருடைய போட்டியாளரான பசாங் தாவா 27 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் அல்லது 29,031.69 அடியாகும்.
9. இந்திய கடற்படையின் செயல்பாட்டு வரிசைப்படுத்தலின் ஒருபகுதியாக வியட்நாம் இந்திய கடற்படை கப்பல் எது?
அ. INS காவேரி
ஆ. INS விக்ரம்
இ. INS கில்டான்
ஈ. INS வீர்
- இந்திய கடற்படையின் கிழக்குக் கடற்படையின் செயல்பாட்டு வரிசைப்படுத்தலின் ஒருபகுதியாக மே.12 அன்று வியட்நாமின் கேம் ரான் விரிகுடாவுக்கு INS கில்டான் கப்பல் சென்றது. இரு கடல்சார் நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தப்பயணம் ஆயத்தமாக உள்ளது.
- INS கில்டனின் வருகை, தொழிற்முறை கலந்துரையாடல்கள், விளையாட்டு, சமூக பரிமாற்றங்கள் மற்றும் இரு கடற்படைகளின் பகிரப்பட்ட மதிப்புகளை பிரதிபலிக்கும் சமூக அணுகல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. இந்திய கடற்படை மற்றும் வியட்நாம் கடற்படை இடையேயான கடல்சார் கூட்டாண்மை பயிற்சியுடன் இந்தப் பயணம் நிறைவடையும். இந்தப் பயிற்சி, சிறந்த நடைமுறைகளின் பரஸ்பர செயல்பாட்டு மற்றும் பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்தும். INS கில்டன் என்பது ஓர் உள்நாட்டு ASW வகை கலமாகும்.
10. டிரோன் தீதி யோஜனாவின்கீழ் 2 முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, அண்மையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சகம் எது?
அ. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
ஆ. திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இ. MSME அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- டிரோன் சகோதரி திட்டத்தின்கீழ் இரண்டு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்த மஹிந்திரா & மஹிந்திரா லிட் நிறுவனத்துடன் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பயிர் உரமிடுதல், பயிர் வளர்ச்சியைக் கண்காணித்தல், விதைகளை நடவுசெய்தல் போன்ற விவசாயப் பணிகளுக்காக டிரோன்களை இயக்க 15,000 பெண்களுக்குப் பயிற்சியளிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது, புதிய தொழில்நுட்பப்பகுதிகளில் திறன்களை வழங்குவதன்மூலம் பெண்களுக்குப் புதிய வாழ்வாதார வாய்ப்புகள் உருவாகின்றன.
- இந்தக்கூட்டணியின்கீழ், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை ஐதராபாத் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் தலா 20 பெண்கள் கொண்ட சிறப்பு குழுக்களில் 500 பெண்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் இரண்டு முன்னோடித் திட்டங்களை நடத்தும். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்த 15 நாள் பாடத்திட்டம், இந்த மையங்களில் தொலைதூர பைலட் பயிற்சி அமைப்பு பயிற்றுவிப்பாளர்கள்மூலம் வழங்கப்படும்.
11. அண்மையில், ஆசிய டிராம்போலைன் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் யார்?
அ. தீபா கர்மாகர்
ஆ. கல்பனா தேப்நாத்
இ. சிருஷ்டி கண்டகலே
ஈ. ருச்சா திவேகர்
- ஹாங்காங்கில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசிய டிராம்போலைன் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தனிநபர் வயது பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக சிருஷ்டி கண்டகலே ஆனார். இருந்தபோதிலும் அவர் தனது வயது காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். கஜகஸ்தானின் டோல்கோபோலோவா தங்கமும், ஹாங்காங்கின் எஸ் ஹங் வெண்கலமும் வென்றனர்.
12. அண்மையில், ஐக்கிய நாடுகள் அவையால் உலக கால்பந்து நாளென அறிவிக்கப்பட்ட தேதி எது?
அ. 23.மே
ஆ. 24.மே
இ. 25.மே
ஈ. 26.மே
- 2024 மே.07 அன்று 193 உறுப்பினர்களைக்கொண்ட ஐநா பொது அவை, ஆண்டுதோறும் மே.25ஆம் தேதியை உலக கால்பந்து நாளாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றியது. ஐநா பொது அவைக்கான லிபிய தூதர் தாகெர் எல்-சோனி அத்தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்; இது ஒருமித்த ஆதரவைப் பெற்றது மற்றும் 160 உறுப்புநாடுகளின் இணை அனுசரணையைப்பெற்றது. கால்பந்தின் உலகளாவிய பிரபலத்தை எடுத்துக்காட்டி, உலகெங்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் அது எங்கும் பரவவேண்டும் என்பதை தூதர் வலியுறுத்தினார்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: ISRO
சூரியனின் ‘AR13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப்புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா L1 விண்கலம் பதிவுசெய்ததாகவும் ISRO தெரிவித்தது. சூரியனின் AR13664 பகுதியிலிருந்து ‘X ரக கதிர்கள்’ மற்றும் சூரியனின் வெளிப்புறத்தில் உள்ள ‘கொரோனாவிலிருந்து வெளியான அதிகளவிலான கதிர்கள்’ ஆகியவை பூமியை தாக்கியது.
இதுகுறித்து ISRO வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சூரியனில் ஏற்பட்ட மிகவலிமையான புவிகாந்தப்புயலாக இது கருதப்படுகிறது. கடந்த 1859ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த சூரியப்புயலைத் (காரிங்டன் நிகழ்வு) தொடர்ந்து காந்தக்கதிர்வீச்சை குறுகிய நேரத்தில் அதிக அளவில் வெளியிடும் சூரியனின் பகுதிகள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. பல்வேறு X இரக கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புறத்தில் உள்ள கொரோனாவிலிருந்து அதிகளவில் வெளியிடப்படும் கதிர்களும் கடந்த சில நாள்களாக பூமியைத்தாக்கியது. இக்கதிர்களால் உயர்ந்த அட்சரேகை பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளானது. இப் புயலின் தீவிரம் அதிகம் உணரப்பட்ட மே.11ஆம் தேதியில் பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள, ‘அயன மண்டலம்’ முழுமையான வளர்ச்சியை எட்டாததால் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாகவே இருந்தது.