TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 15th January 2024

1. அண்மையில், கீழ்காணும் எந்த நகரத்தில் சர்வதேச ஒட்டக திருவிழா தொடங்கியது?

அ. ஜெய்சல்மர், இராஜஸ்தான்

ஆ. கட்ச், குஜராத்

இ. இந்தூர், மத்திய பிரதேசம்

ஈ. பிகானேர், இராஜஸ்தான்

  • அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள், பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்களோடு இராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள இராம்புரியா ஹவேலியில் சர்வதேச ஒட்டகத் திருவிழா தொடங்கியது. சுற்றுலாத் துறையால் பிகாஜி கி டெக்ரியில் இரங்கோலி, மெஹந்தி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்றோர்க்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

2. கும்பமேளாவிற்குப்பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய மேளாவான கங்கா சாகர் மேளா, இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

அ. மிசோரம்

ஆ. மேற்கு வங்காளம்

இ. கோவா

ஈ. கர்நாடகா

  • கங்காசாகர் மேளாவனது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.14 அல்லது 15 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழா மகர சங்கராந்தி நாளன்று நடைபெறும். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் திருவிழாவில் சுமார் 51 இலட்சம் பேர் கலந்துகொண்டனர். மேற்கு வங்கத்தின் தெற்கு பர்கானா மாவட்டத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. வங்காளக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள சாகர்தீவில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சாகர்தீவு என்பது கங்கை நதி வங்காள விரிகுடாவை சந்திக்கும் இடமாகும். கும்பமேளாவுக்குப் பிறகு இந்துக்களின் மிகப்பெரிய திருவிழா கங்காசாகர் மேளா ஆகும். இங்கு நீராடினால் முக்தி அடைவதுடன் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

3. PM-eBus சேவா திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் PM-eBus சேவா திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்துள்ளார். இத்திட்டம் இந்திய நகரங்கள் முழுவதும் 10,000 இ-பஸ்களை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத்திட்டம் பத்தாண்டு பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின்கீழ் செயல்படுகிறது. இதில் மாநிலங்கள் /நகரங்கள் சேவைகளை நிர்வகிக்கின்றன. இதற்கு மத்திய அரசு `57,613 கோடி நிதி மானியத்தை வழங்குகிறது. 300,000க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

4. Zero Effect, Zero Defect Scheme (ZED) என்ற முன்னெடுப்புடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. குறு, சிறு & நடுத்தர தொழிற்துறைகள் அமைச்சகம்

ஈ. விவசாய அமைச்சகம்

  • 2016 அக்டோபரில் தொடங்கப்பட்ட Zero Effect, Zero Defect Scheme (ZED) திட்டம் கடந்த 2022 ஏப்ரலில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அண்மையில் 1 இலட்சம் சான்றளிப்புகளை இந்தத்திட்டம் தாண்டியது. இது 20 அளவுருக்களின் அடிப்படையில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என்ற அளவுகளின்கீழ் தயாரிப்புகளுக்குச் சான்றளிக்கிறது. ‘Zero Defect’ என்பது உற்பத்தியை ஊக்குவித்தல், தரத்தை மேம்படுத்துதல் மற்றும் “இந்தியாவில் தயாரிப்பதை” ஆதரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்குகந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் MSMEகளை ஊக்குவிப்பதர்காக, 75% வரை மானியத்துடன் நிதியுதவியை இந்தத்திட்டம் வழங்குகிறது.

5. அண்மையில், நிலவுக்கு, ‘VIPER தரையூர்தி’ என்ற அதன் முதல் நடமாடும் ரோபோ திட்டத்தைத் தொடங்கிய விண்வெளி முகமை எது?

அ. NASA

ஆ. ISRO

இ. ROSCOSMOS

ஈ. JAXA

  • NASAஇன் VIPER (Volatiles Investigating Polar Exploration Rover) தரையூர்தி (rover) என்பது அதன் நிலவுக்கான ரோபோட்டிக் திட்டத்தைக் குறிக்கிறது. 2024இன் பிற்பகுதியில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கவுள்ளது. VIPER, இந்தப் பிராந்தியத்தில் பனி மற்றும் பிற வளங்களின் இருப்பு மற்றும் நிரவலை நெருக்கமாக ஆய்வுசெய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. NASAஇன் இந்த VIPER, நான்கு வெவ்வேறு மண் சூழல்களில் மாறுபட்ட ஆழம் மற்றும் வெப்பநிலைகளில் மேற்பரப்புப் பனியை பகுப்பாய்வு செய்யும்.

6. குஜராத்தின் சனந்தில் குறைக்கடத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ள பன்னாட்டு நிறுவனம் எது?

அ. குவால்காம்

ஆ. சிம்டெக் (Simmtech)

இ. மைக்ரோன் டெக்னாலஜி

ஈ. இன்டெல்

  • தென்கொரிய நிறுவனமான சிம்டெக் இந்தியாவில் குறைக்கடத்தி தொழிற்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் ஒருபகுதியாக, குஜராத்தின் சனந்தில் குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை அமைக்க `1,250 கோடி முதலீடுசெய்யும் திட்டத்தை வெளியிட்டது. உலகின் மிகப்பெரிய குறைக்கடத்தி அடிமூலக்கூறுகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட சிம்டெக் இம்முயற்சிக்காக குஜராத் அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பிட்டுள்ளது.

7. 2024ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வேலையின்மை வீதம் என்னவாக இருக்கும்?

அ. 5.2%

ஆ. 4.1%

இ. 6.2%

ஈ. 5.5%

  • பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் (ILO) கூற்றுப்படி, உலகளாவிய வேலையின்மை விகிதம் 2024இல் 5.2%ஆக இருக்கும். 2023இல் இது 5.1%ஆக இருந்தது. ILOஇன், “உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக்கண்ணோட்டம்” என்ற அறிக்கை, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாக அதிகரிக்கும் எனக் கணித்துள்ளது. முன்னேறிய பொருளாதாரங்களில் அதிகமான மக்கள் வேலையில்லாமல் இருப்பதே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்று ILO தெரிவித்துள்ளது.

8. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி அதனை நிர்வகிப்பதற்கான உரிமையைக் கூறுகிற இந்திய அரசியலமைப்பின் பிரிவு எது?

அ. பிரிவு 30

ஆ. பிரிவு 14

இ. பிரிவு 19

ஈ. பிரிவு 61

  • கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்று கூறி அவர்களை ஓரங்கட்டுவது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 30இன் நோக்கம் அல்ல என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் வலியுறுத்தியது. பிரிவு 30 ஆனது சிறுபான்மையினர் (மதம் மற்றும் மொழியியல்) அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவ மற்றும் நிர்வகிப்பதற்கான உரிமைகளைப் பாதுகாக்கிறது. இந்தப் பிரிவு சமத்துவத்தை ஊக்குவிப்பதோடு உதவி வழங்கும் போது சிறுபான்மையினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் பாகுபாடு காட்டக்கூடாது என கூறி பாகுபாட்டையும் தடுக்கிறது. கூடுதலாக, பிரிவு 30 (1A) சிறுபான்மை குழுக்களால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங் -களின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான தொகையையும் நிர்ணயிக்கிறது; இது நாட்டில் சிறுபான்மை உரிமைகளை மேலும் வலுப்படுத்துகிறது.

9. உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. செந்தில் பாண்டியன் C

ஆ. பிரஜேந்திர நவநீத்

இ. ஸ்மிதா புருஷோத்தம்

ஈ. அஞ்சலி பிரசாத்

  • ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பின் (WTO) தூதராக 2002ஆம் ஆண்டு உத்தர பிரதேச பிரிவைச் சேர்ந்த இஆப அதிகாரியான செந்தில் பாண்டியன் C என்பவரை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த முடிவு, அமைச்சரவையின் நியமனக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2024 மார்ச்.31 அன்று WTO-க்கான இந்தியத் தூதராக இருந்துவரும் பிரஜேந்திர நவ்நீத்தின் பதவிக்காலம் முடிவடையும். தற்போது உத்தர பிரதேசத்தில் கலால் ஆணையராக செந்தில் பாண்டியன் C பணியாற்றி வருகிறார்.

10. ‘அமேதராசு’ என்பது எந்த நாட்டு அறிவியலாளர்களால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உயர்-ஆற்றல் கொண்ட காஸ்மிக்-ரே நிகழ்வாகும்?

அ. ஜப்பான்

ஆ. சீனா

இ. ஆஸ்திரேலியா

ஈ. இந்தியா

  • ஜப்பானிய அறிவியலாளர்கள், ‘அமேதராசு – Amaterasu’ எனப்படும் உயராற்றல்கொண்ட காஸ்மிக்-கதிர் நிகழ்வை கண்டுபிடித்துள்ளனர்; இது இதுவரை பதிவுசெய்யப்பட்ட 2ஆவது அதிக ஆற்றல்கொண்ட காஸ்மிக் கதிர்களாகும். அமேதராசுவின் ஆற்றல் மட்டமானது லார்ஜ் ஹாட்ரான் மோதலைவிட தோராயமாக நாற்பது மில்லியன் மடங்கு அதிகமாகும். இத்தகைய அதி-உயர்-ஆற்றல்கொண்ட காஸ்மிக் கதிர்கள் (UHECRs) கண்டறிதல், அண்ட நிகழ்வுகள் மற்றும் துணை அணுத்துகள்கள்பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

11. 2024இல் அணிசேரா இயக்கத்தின் 19ஆவது உச்சிமாநாடு நடத்தப்படுகிற நாடு எது?

அ. இந்தியா

ஆ. உகாண்டா

இ. அஜர்பைஜான்

ஈ. தென்னாப்பிரிக்கா

  • அணிசேரா இயக்கத்தின் 19ஆவது உச்சிமாநாடு ஜனவரி.17 முதல் 20 வரை உகாண்டாவில் உள்ள கம்பாலாவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜனவரி.15 அன்று நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாடு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கருக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஏனெனில் அவர் இதில் உலகளாவிய தெற்கிற்கான முன்னுரிமைகளில் தனது கவனத்தைச் செலுத்துவார்.
  • பல்வேறு கண்டங்களைச் சார்ந்த பல்வேறு உறுப்பினர்களைக்கொண்ட NAM, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமைக்கான ஒரு முக்கியமான தளமாக உள்ளது. 2024-2027 காலகட்டத்தில் அணிசேரா இயக்கத்தின் (NAM) தலைவராக உகாண்டா உள்ளது.

12. 30 மீ தொலைநோக்கி திட்டமானது பின்வரும் எந்தெந்த நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பால் விளைந்ததாகும்?

அ. இங்கிலாந்து, மியான்மர் மற்றும் வங்காளதேசம்

ஆ. அமெரிக்கா, ஜப்பான், சீனா, கனடா மற்றும் இந்தியா

இ. ஈராக், ஸ்வீடன், கனடா மற்றும் இந்தியா

ஈ. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மாலத்தீவுகள் மற்றும் ஈரான்

  • முப்பது மீட்டர் தொலைநோக்கி (Thirty Meter Telescope – TMT) திட்டம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் பிரதிநிதிகள் குழு சமீபத்தில் மௌன கீவுக்குச்சென்றது. USA, ஜப்பான், சீனா, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விளைந்த TMT, உலகின் மிகவும் மேம்பட்ட தரை-அடிப்படையிலான கண்காணிப்பு மையமாக நிறுவப்பட்டுள்ளது. ஹவாயில் செயலற்ற எரிமலையான உள்ள மௌனா கீயில் நிறுவப்பட்டுள்ள இத்தொலைநோக்கி அதன் மையத்தில் 30 மீ துண்டிக்கப்பட்ட ஆடியுடன் உள்ளது. இது விண்வெளியில் நிகழும் அகச்சிவப்பு மற்றும் மத்திய அகச்சிவப்பு கண்காணிப்புகளை மேற்கொள்ளும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

தமிழ்நாடு அரசு சார்பில் குடியரசுநாள் விழாவில் மதுரை யா. கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணத்திற்கு சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப்பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார்.

2. தேசிய காற்று தர அளவீடுகள்.

மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய காற்று தர அளவின்படி 0-50 வரை சுகாதாரமான காற்று, 51-100 வரை இயல்பான மாசுக்காற்று, 101-200 வரை மிதமான மாசுக்காற்று, 201-300 வரை அதிக மாசுக்காற்று, 301-400 வரை மிக அதிக மாசடைந்து காற்று மற்றும் 401-500 வரை அபாயாகரமான மாசுக்காற்று என காற்றின் தரம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

3. மேற்குத்தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்ட புதிய வண்ணத்துப்பூச்சி இனம்!

திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேகமலை கோட்டத்தில், ‘Cloud Forest Silverline’ என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு காணப்பட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த, ‘வனம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் Dr காலேஷ் சதாசிவம், S இராமசாமி காமையா, Dr சி. பி. இராஜ்குமார் ஆகியோர் இந்த வகை வண்ணத்துப்பூச்சி இனத்தை கண்டறிந்தனர். இது ‘என்டோமான்’ என்னும் அறிவியல் ஆய்விதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய வண்ணத்துப்பூச்சி மூலம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் வகை எண்ணிக்கை மொத்தம் 337ஆக உயர்ந்துள்ளது. இதில், மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படும் நாற்பது வகையும் அடங்கும்.

4. தூய்மை நகரங்களின் பட்டியலில் திருச்சிராப்பள்ளிக்கு 112ஆவது இடம்! தமிழ்நாட்டில் முதலிடம்.

மத்திய அரசின் தூய்மை நகரங்களின் பட்டியலில் திருச்சிராப்பள்ளிக்கு 112ஆவது இடம்கிடைத்துள்ளது. கடந்தாண்டு 262ஆவது இடத்தில் அது இருந்தது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் திருச்சிராப்பள்ளிக்கு நடப்பாண்டு முதலிடம் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டளவில் கோயம்புத்தூருக்கு 2ஆம் இடமும், தூத்துக்குடிக்கு 3ஆம் இடமும், சென்னைக்கு 5ஆம் இடமும் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin