TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 15th December 2023

1. வரைவு தொற்றுநோய் ஒப்பந்த விவாதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள PABSஇன் முழு வடிவம் என்ன?

அ. Public Awareness and Behavioral Study System

ஆ. Pathogen Access and Benefit Sharing System

இ. Pharmaceutical Advancements and Biomedical Sciences System

ஈ. Pathogenic Analysis and Bio Synthesis System

  • PABS என்பதன் முழு வடிவம் Pathogen Access and Benefit Sharing System ஆகும். இது வரைவு தொற்றுநோய் ஒப்பந்தத்தின் பத்தாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது; இது PABSஇன்கீழ் அணுகல் மற்றும் பலன் பகிர்வுக்கான பல தரப்பு அமைப்பை நிறுவ உறுப்புநாடுகளைக் கோருகிறது. PABS நிலையான பொருட்கள் வழங்குதல் ஒப்பந்தத்தின் மூலம் தொற்றுநோய்க்காலத்தின்போது WHOக்கு மலிவுவிலையில் பத்துச் சதவீதம் தடுப்பூசிகள் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.

2. கேப்டன் பாத்திமா வாசிம் என்பவர் எங்கு பணியமர்த்தப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்?

அ. பன்னாட்டு விண்வெளி நிலையம்

ஆ. அமேசான் மழைக்காட்டின் நடமாடும் மருத்துவப்பிரிவு

இ. சியாச்சின் பனிப்பாறை

ஈ. அண்டார்டிகா பயண நிலையம்

  • உலகின் மிகவுயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையில் செயல்படும் மருத்துவப் பிரிவில் பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் கேப்டன் பாத்திமா வாசிம். சியாச்சின் போர்ப்பள்ளியில் கடுமையான பயிற்சியை நிறைவுசெய்த பிறகு, லடாக் யூனியன் பிரதேசத்தில் 15,200 அடி உயரத்தில் உள்ள பார்தாபூர் பகுதியில் அவர் பணியமர்த்தப்பட்டார்.

3. ITEC அல்லது இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை நிர்வகிக்கும் அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. வணிக அமைச்சகம்

  • இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டம் (ITEC) என்பது இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மையான திறன் மேம்பாட்டு முன்னெடுப்பாகும். கடந்த 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ITEC ஆனது குடிமக்கள் & பாதுகாப்புத்துறைகளில் 160க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த 200,000 அதிகாரிகளுக்குப் பயிற்றுவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், அண்மையில் இந்தியாவும் தைவானும் 5G, செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் பாதுகாப்பு, குறைக்கடத்திகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பப் பகுதிகளில் கூட்டிணைவதில் கவனம் செலுத்தி வருகின்றன. ITEC ஆனது வெளியுறவு அமைச்சகத்தின் மேம்பாட்டுக் கூட்டாண்மை நிர்வாகம்-II பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது.

4. அண்மையில், கீழ்காணும் எந்த மாநிலத்தில் ஒரு புதிய வகை பன்முகக்காலியான, ‘Demaorchestia alanensis’ கண்டுபிடிக்கப்பட்டது?

அ. கர்நாடகா

ஆ. ஒடிசா

இ அஸ்ஸாம்

ஈ. மேற்கு வங்காளம்

  • ஒடிஸா மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சிலிகா ஏரியில் ஒரு புதிய வகை கடல் பன்முகக்காலி இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய உயிரினத்திற்கு புகழ்பெற்ற ஓட்டுடலி வகைபிரித்தல் நிபுணரான பேராசிரியர் ஆலன் மியர்ஸின் நினைவாக, ‘Demaorchestia alanensis’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்பின்மூலம் உலகளவில் அறியப்பட்ட ‘Demaorchestia’ இனங்களின் எண்ணிக்கை ஆறாக மாறியுள்ளது.

5. 1994ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய புகழ்பெற்ற SR பொம்மை தீர்ப்பில் SR பொம்மை என்பவர் யார்?

அ. செய்தித்தாள் உரிமையாளர்

ஆ. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்

இ. ஓர் அரசு ஊழியர்

ஈ. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்

  • SR பொம்மை என்பவர் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார். கடந்த 1989ஆம் ஆண்டில் அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய வகையில் கலைக்கப்பட்டது. மத்திய அரசு 356ஆவது பிரிவைச் செயல்படுத்தி அம்மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவந்தது. இம்முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் SR பொம்மை வழக்கு தொடர்ந்தார்; அவ்வழக்கு 1994ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புக்கு வழிவகுத்தது.
  • இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் நிகழ்வுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. மாநில அரசுகளைக் கலைப்பதில் மத்திய அரசின் உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இ-பேருந்துகளுக்கான கொடுப்பனவு பாதுகாப்பு முறைமை (PSM-Payment Security Mechanism) என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும்?

அ. பிரான்ஸ்

ஆ. ஜெர்மனி

இ. அமெரிக்கா

ஈ. ரஷ்யா

  • இ-பேருந்துகளுக்கான இந்திய-அமெரிக்க Payment Security Mechanism என்பது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ-பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கு உதவும் ஓர் இந்திய-அமெரிக்க அரசாங்கங்களின் ஒரு கூட்டு முயற்சியாகும். இந்தியாவில் அதற்கான மையங்களை அமைக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பது, இ-பேருந்துகளால் ஏற்படும் நிதிசார் சவால்களுக்குத் தீர்வுகாண்பது மற்றும் போக்குவரத்துத் துறையை கரிமமற்றதாக்குவது ஆகியவற்றை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் பழங்குடியின முதலமைச்சர் யார்?

அ. விஷ்ணு தியோ சாய்

ஆ. அஜித் ஜோகி

இ. பூபேஷ் பாகேல்

ஈ. அருண் சாவ்

  • அஜீத் ஜோகிக்குப் பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து முதலமைச்சராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பழங்குடியின தலைவர் விஷ்ணு தியோ சாய் ஆவார். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள குங்குரி தொகுதியிலிருந்து ஐந்தாவது முறையாக இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகினார்.

8. இந்தியாவின் முதல் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RRTS) திட்டமான, “நமோ பாரத்” எவ்விரு இடங்களுக்கு இடையே கட்டமைக்கப்படுகிறது?

அ. சென்னை மற்றும் மதுரை

ஆ. தில்லி மற்றும் மீரட்

இ. மும்பை மற்றும் புனே

ஈ. கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு

  • தில்லி மற்றும் மீரட் இடையே கட்டப்பட்டு வரும் இந்தியாவின் முதல் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு திட்டமானது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரால், ‘நமோ பாரத்’ என மறுபெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக தேசிய தலைநகர மண்டலப் போக்குவரத்துக் கழகம் என்று அழைக்கப்பட்ட அதன் செயல்படுத்தும் நிறுவனம், ‘நமோ பாரத்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘நமோ பாரத்’ தில்லி மற்றும் மீரட் இடையேயான பயண நேரத்தை சுமார் 50 நிமிடங்களாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூடிய கிழக்கு மண்டலக் கவுன்சிலில் உள்ள நான்கு மாநிலங்கள் எவை?

அ. பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

ஆ. அஸ்ஸாம், மேற்கு வங்காளம், சிக்கிம் மற்றும் ஒடிசா

இ. அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா மற்றும் மிசோரம்

ஈ. ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் சிக்கிம்

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டலக் குழுமத்தின் 26ஆவது கூட்டம் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் நடைபெற்றது. கிழக்கு மண்டலக் குழுமம் என்பது பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. கிழக்கு மண்டல குழுமத்தின் 26ஆவது கூட்டத்தில் உறுப்பு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரு அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள்.
  • மாநிலங்கள் முன்மொழியும் பிரச்சினைகள், முதலில் சம்பந்தப்பட்ட மண்டலக் குழுமத்தின் நிலைக்குழுவின் முன் விவாதத்திற்கு முன்வைக்கப்படுகின்றன. பரஸ்பர ஒப்புதலால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் மண்டலக் குழுமத்தின் கூட்டத்தில் விவாதத்திற்கு முன்வைக்கப்படுகின்றன.

10. இந்திய மற்றும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளுக்கு இடையே நடத்தப்பட்ட கூட்டு ராணுவப் பயிற்சியின் பெயரென்ன?

அ. சூர்யா தல்வார்

ஆ. கருடா ஷீல்டு

இ. சக்தி

ஈ. வஜ்ர பிரஹார்

  • இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ சிறப்புப் படைகளுக்கு இடையே நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின் பெயர் “வஜ்ர பிரஹார்”. இந்தப் பயிற்சியின் 14ஆவது பதிப்பு மேகாலயாவின் உம்ரோயில் உள்ள கூட்டுப் பயிற்சி முனையில் 2023 டிசம்பரில் நிறைவடைந்தது. கூட்டுப் பணி திட்டமிடல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற பகுதிகளில் இருபடைகளின் சிறப்புப் படைகளுக்கும் இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய இராணுவ ஒத்துழைப்புகள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளையும் இயங்குதன்மையையும் மேம்படுத்துகிறது.

11. 2023 ஐநா காலநிலை மாற்ற மாநாடான COP28இன் தலைவர் யார்?

அ. அமீன் ஹெச். நாசர்

ஆ. மொஹ்சென் கோஜஸ்தே மெஹர்

இ. சுல்தான் அகமது அல் ஜாபர்

ஈ. ஷேக் நவாஃப் சவுத் அல்-சபா

  • சுல்தான் அகமது அல் ஜாபர் ஓர் அமீரக அரசியல்வாதி ஆவார்; அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிற்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) தலைவராகவும், 2023 ஐநா காலநிலை மாற்ற மாநாடான COP28இன் தலைவராகவும் உள்ளார்.

12. சமீபத்தில், PrEPVacc தடுப்பூசியின் சோதனைகள் பலனளிக்காததால் ஆப்பிரிக்காவில் அவை நிறுத்தப்பட்டன. இந்தத் தடுப்பூசி எந்நோயை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டது?

அ. மலேரியா

ஆ. HIV

இ. COVID-19

ஈ. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

  • PrEPVacc என்பது “Preexposure Prophylaxis Vaccine” சோதனையைக் குறிக்கிறது. இது இரண்டு HIV தடுப்பூசி விதிமுறைகளை பரிசோதிக்கும் ஓர் ஆப்பிரிக்கர் தலைமையிலான மருத்துவப் பரிசோதனையாகும்; இது சமீபத்தில் HIV தொற்றுநோயைத் தடுப்பதில் பயனற்றதாக இருப்பதைக் கண்டறிந்த பின்னர் நிறுத்தப்பட்டது. இது HIV தடுப்பூசி மேம்பாட்டு முயற்சிகளுக்கு பெரும் சரிவாகப் பார்க்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் HIVஉடன் வாழ்கிறார்கள். HIVக்கு எதிராக இதுவரை ஒரு பயனுள்ள தடுப்பூசிகூட கண்டுபிடிக்கப்படவில்லை.

13. ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சமீப காலங்களில் எந்தக் கனிம இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது?

அ. இரும்பு

ஆ. பாக்சைட்

இ. மைக்கா

ஈ. லித்தியம்

  • 2023 பிப்ரவரியில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கணிசமாக 5.9 மில்லியன் டன்கள் லித்தியம் இருப்பு உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வுமையம்மூலம் கண்டறியப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் லித்தியத்தை நம்பியிருப்பதைக் குறைக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இக்கண்டுபிடிப்பு முக்கியமானதாகும். இந்த உள்நாட்டு கண்டுபிடிப்புடன், வெளிநாடுகளிலும் லித்தியம் இருப்புகளை இந்தியா தீவிரமாக தேடிவருகிறது.
  • அரசுக்குச் சொந்தமான கூட்டு நிறுவனமான கானிஜ் பிதேஷ் இந்தியா லிட் (KABIL), அர்ஜென்டினாவில் லித்தியம் தொகுதிகளைப் கையகப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட முயற்சியை நெருங்குகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, 5.9 லட்சம் டன் லித்தியம் இருப்புக்களால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் EV மின்கலங்களுக்கான இந்தியாவின் முழு லித்தியம் தேவையையும் பூர்த்தி செய்யமுடியும். இது தன்னிறைவைச் செயல்படுத்தும் மற்றும் EV சூழலமைப்பு விரிவடையும்போது இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாடு அன்லிமிடெட்.

‘தி இந்து’ வழிகாட்டுதல் மற்றும் தமிழ்நாடு நிறுவனம் இணைந்து சென்னையில் டிச.12இல், ‘தமிழ்நாடு அன்லிமிடெட்’ என்ற ஒருநாள் உச்சிமாநாட்டை நடத்தின. இந்த உச்சிமாநாடு ஆனது தமிழ்நாட்டை ஒரு விருப்பமான வளர்ச்சி இலக்காக வளர்ப்பதில் பல்வேறு துறைகளின் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டும். அடுத்த 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னதாக இந்த, ‘தமிழ்நாடு அன்லிமிடெட்’ என்ற ஒருநாள் உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு.

2022ஆம் ஆண்டின் பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் 30ஆவது இடத்திலிருந்த இந்தியா, 7ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தக் குறியீட்டின் முதல் மூன்று இடங்கள் எந்த நாட்டிற்கும் தரப்படவில்லை. இதில், டென்மார்க் முதலிடத்திலும் (4ஆவது) எஸ்டோனியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பிடித்தன. இந்தியா 70.25 சதவீதப் புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin