TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 15th 16th and 17th June 2024

1. அண்மையில், குதிரையேற்றத்தில் மூன்று நட்சத்திர கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியர் யார்?

அ. ரோஷ்னி சர்மா

. ஸ்ருதி வோரா

இ. அலிஷா அப்துல்லா

ஈ. கல்யாணி பொடேகர்

  • கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ருதி வோரா (53), குதிரையேற்றத்தில் மூன்று நட்சத்திர கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியர் ஆனார். 2024 ஜூன்.07 அன்று ஸ்லோவேனியாவின் லிபிகாவில் நடந்த FEI டிரஸ்ஸேஜ் உலகக்கோப்பையில், CDI-3 நிகழ்வில் அவர் தனது குதிரையான மேக்னானிமஸில் 67.761 புள்ளிகளைப்பெற்று வெற்றிபெற்றார். ஸ்ருதி வோரா இதற்கு முன்பு 2022-டிரெஸ்சேஜ் உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2010 மற்றும் 2014 ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

2. லிபுலேக் கணவாய் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. இமாச்சல பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. சிக்கிம்

ஈ. அஸ்ஸாம்

  • லிபுலேக் கணவாய் வழியாக சீனாவுடனான எல்லைப்புற வணிகத்தை மீண்டும் தொடங்க இந்திய வர்த்தகர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். 5,334 மீ உயரத்தில் உத்தரகாண்டில் அமைந்துள்ள லிபுலேக், இந்தியாவை திபெத்துடன் இணைக்கிறது. வணிகம் மற்றும் கைலாய மானசரோவர் யாத்திரைக்கு முக்கியமானது. ஒரு வர்த்தகப் பாதையாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இது, சீனாவுடனான வர்த்தகத்திற்கான முதல் இந்திய எல்லைப்புறச் சாவடியாகும். ஷிப்கிலா மற்றும் நாதுலா கணவாய்களைத் தொடர்ந்து 1992இல் இது திறக்கப்பட்டது.

3. ‘ஒலிம்பஸ் மோன்ஸ்’ என்றால் என்ன?

அ. செவ்வாய் கோளில் உள்ள ஒரு முகடிட்ட எரிமலை

ஆ. ஆக்கிரமிப்பு களை

இ. அணுவாற்றல் திறனுடைய நீர்மூழ்கிக்கப்பல்

ஈ. குறுகிய தொலைவு செல்லும் எறிகணை

  • அறிவியலாளர்கள் செவ்வாய் கோளின் மிகவுயரமான எரிமலையான ஒலிம்பஸ் மோன்ஸில் (Olympus Mons) உறை பனியைக் கண்டுபிடித்துள்ளனர்; இது செயலில் உள்ள நீர்ச்சுழற்சியைக் குறிக்கிறது. செவ்வாய் கோளின் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள ஒலிம்பஸ் மோன்ஸ், 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான முகடிட்ட எரிமலையாகும். இது செவ்வாய் கோளின் மிகவுயரமான இடமும் சூரியமண்டலத்தின் மிகப்பெரிய எரிமலையும் ஆகும். 16 மைல்கள் (24 கிமீ) உயரங்கொண்ட இது, எவரெஸ்ட் சிகரத்தைவிட சுமார் மும்மடங்கு உயரம் கொண்டதாகும்.

4. எந்தெந்தத் துறைகளுக்கு ‘கௌலி பரிசுகள்’ வழங்கப்படுகின்றன?

அ. இலக்கியம், அமைதி மற்றும் இசை

ஆ. பொருளாதாரம். சுற்றுச்சூழல் மற்றும் வேதியியல்

இ. வானியற்பியல், நானோ அறிவியல் மற்றும் நரம்பியல்

ஈ. வேளாண்மை, இயற்பியல் மற்றும் கணிதம்

  • வானியற்பியல், நரம்பியல் மற்றும் நானோ அறிவியலில் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், 2024 கௌலி பரிசு வென்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். டேவிட் சார்போனோ மற்றும் சாரா சீகர் ஆகியோர் புறக்கோள் கண்டுபிடிப்பு மேற்கொண்டாதற்காக வானியற்பியல் துறைக்கானப் பரிசைப்பெற்றனர். நானோ அறிவியலில், உயிரியல் மருத்துவ முன்னேற்றங்களுக்காக ராபர்ட் லாங்கர், அர்மண்ட் பால் அலிவிசாடோஸ் மற்றும் சாட் மிர்கின் ஆகியோர் விருது பெற்றனர். நரம்பியல் அறிவியலில், நான்சி கன்விஷர், வின்ரிச் ஃப்ரீவால்ட் மற்றும் டோரிஸ் சாவோ ஆகியோர் முக அங்கீகாரம் மற்றும் மூளை வரைபடமாக்கலில் அவர்களின் முன்னோடி பணிக்காக அங்கீகரிக்கப்பட்டனர். 2008இல் நிறுவப்பட்ட இந்தப் பரிசுகள், பிரெட் கௌலியின் நினைவாக வழங்கப்படுகின்றன.

5. ஆற்றின் தரத்தை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்காக மின்-ஓட்டம் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. ஜல் சக்தி அமைச்சகம்

ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நிகழ்நேர திட்டமிடல் மற்றும் ஆற்றுத் திட்டங்கள் மற்றும் நீரின் தரம் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக மின்-ஓட்டம் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. NMCGஆல் உருவாக்கப்பட்ட இது, கங்கை மற்றும் யமுனை நீரின் தரத்தை பகுப்பாய்வு செய்கிறது; ‘நமாமி கங்கை’ திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறது மற்றும் STPகள் திறமையாக செயல்படுவதை உறுதிசெய்கிறது. இந்த அமைப்பு 11 திட்டங்களில் முக்கியமான அளவுருக்களை கண்காணிப்பதன்மூலம் நிலையான கங்கையாற்றின் பாய்விற்கு உதவுகிறது.

6. மேற்கு வங்கத்தில் வெள்ளம் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற டீஸ்டா ஆறானது, கீழ்க்காணும் எந்த ஆற்றின் துணையாறாகும்?

அ. பிரம்மபுத்திரா ஆறு

ஆ. யமுனை ஆறு

இ. நர்மதை ஆறு

ஈ. காவேரி ஆறு

  • மேற்கு வங்கத்தில் உள்ள காலிம்போங், கனமழையால் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரம்மபுத்திராவின் துணையாறான டீஸ்டா, சிக்கிம் மாநிலத்தில் உள்ள பனிப்பாறை ஏரிகளில் உருவாகி, 309 கிமீட்டர் நீளத்திற்கு சிவாலிக் மலைகளில் உள்ள ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக தெற்கே பாய்ந்துபின் கிழக்கு நோக்கி வங்கதேசத்துக்குள் திரும்புகிறது. இதன் முக்கிய துணையாறுகளில் லாச்சுங் சூ மற்றும் ரங்கிட் ஆறு ஆகியவை அடங்கும்.

7. அண்மையில், “UNTAPPED: Collective Intelligence for Climate Action” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNEP

ஆ. UNDP

இ. UNESCO

ஈ. உலக வங்கி

  • UNDPஇன் “UNTAPPED: Collective Intelligence for Climate Action” என்ற அறிக்கை, காலநிலை ஏற்பு மற்றும் தணிப்பு ஆகியவற்றில் கூட்டு நுண்ணறிவின் திறனை எடுத்துக்காட்டுகிறது. ஒத்துழைப்பு & தொழில்நுட்பம்மூலம் பல்வேறு பங்களிப்புகளை இணைப்பதன்மூலம் கூட்டு நுண்ணறிவுத் திறன்களை இது மேம்படுத்துகிறது. நிகழ்நேரத் தகவலுக்காக குடிமக்களை அணிதிரட்டுவதன்மூலமும், அதிக நபர்களை ஈடுபடுத்துவதன்மூலமும், காலநிலை செயல்முறைகள் மற்றும் தரவு சேகரிப்பில் உள்நாட்டு சமூகங்கள்போன்ற பல்வேறு கண்ணோட்டங்களைச் சேர்ப்பதன்மூலம் பன்முகத்தன்மையிலும் இது தரவு இடைவெளிகளைக் குறைக்கிறது.

8. எந்த அமைப்பின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்கீழ், ‘திவ்ய திருஷ்டி AI கருவி’ உருவாக்கப்பட்டுள்ளது?

அ. செயற்கை நுண்ணறிவு & ரோபாட்டிக்ஸ் மையம் (CAIR)

ஆ. மேம்பட்ட தொழில்நுட்ப மையம்

இ. தேசிய தகவலியல் மையம் (NIC)

ஈ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)

  • DRDOஇன் ஆய்வகமான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையத்தின் (CAIR) வழிகாட்டுதலின்கீழ், புத்தொழில் நிறுவனத்தின்மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை நுணனைறிவு (AI) கருவியான, ‘திவ்ய திருஷ்டி’, ஒரு வலுவான அங்கீகார அமைப்பை உருவாக்க, நடை பகுப்பாய்வோடு முக அங்கீகாரத்தை ஒருங்கிணைக்கிறது. இது அடையாளத் துல்லியத்தை மேம்படுத்துகிறது மற்றும் தவறான நேர்மறை மற்றும் அடையாள மோசடி அபாயத்தைக் குறைக்கிறது. அதன் பயன்பாடுகளில் பாதுகாப்பு, சட்ட அமலாக்கம், பெருநிறுவனம் மற்றும் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகள் அடங்கும்.

9. கீர் பவானி திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. சிக்கிம்

ஆ. அஸ்ஸாம்

இ. ஜம்மு காஷ்மீர்

ஈ. லட்சத்தீவுகள்

  • கந்தர்பால், துல்முல்லாவில் அமைந்துள்ள கீர் பவானி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜேஷ்டாஷ்டமி திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிட்டுகள் கூடினர். 1912ஆம் ஆண்டு மகாராஜா பிரதாப் சிங்கால் கட்டப்பட்டு, மகாராஜா ஹரி சிங்கால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோவில், துர்கையின் அம்சமான ரக்ஞ தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கீர் பவானி திருவிழாவானது குப்வாரா, அனந்த்நாக் மற்றும் குல்காம் ஆகிய இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.

10. ராஜா பர்ப் என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓர் உழவுசார்ந்த திருவிழாவாகும்?

அ. ஒடிசா

ஆ. அஸ்ஸாம்

இ. பஞ்சாப்

ஈ. உத்தர பிரதேசம்

  • குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த ராஜா பர்ப் கொண்டாட்டத்தில் இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு முதல்முறையாக கலந்துகொண்டார். ஒடிசாவின் விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட திருவிழாவான ராஜா பர்ப், பங்கேற்பாளர்களுக்கு ஒடிய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையின் தனித்துவமான பார்வையை வழங்கியது. ‘ராஜா பர்ப்’ ஒடிசாவின் அதிகம் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாகும். மூன்று நாள் நீடிக்கும் இவ்வேளாண் திருவிழா பருவமழையின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. பெண்களும் குழந்தைகளும் இப் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

11. அண்மையில், கீழ்க்காணும் எந்த நாட்டுடன், இந்தியா, உள்ளூர் நாணய தீர்வு முறையைத் தொடக்கியது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. ரஷ்யா

இ. கனடா

ஈ. மாலத்தீவுகள்

  • இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இந்திய ரூபாய் (`) மற்றும் UAE திர்காம்களில் இருதரப்பு வர்த்தகத்தினை மேற்கொள்வதற்காக உள்ளூர் நாணய தீர்வு முறையைத் தொடங்கியுள்ளன; இது அமெரிக்க டாலரை ($) நம்பி இருப்பதைக் குறைக்கும் நோக்கமுடையது. இந்த முன்முயற்சியானது வர்த்தக செயல்முறைகளை எளிதாக்குவது, பரிவர்த்தனை செலவுகளைக் குறைப்பது மற்றும் நேரடி நாணய தீர்வுகள்மூலம் நாடுகளுக்கிடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.

12. அண்மையில், MD 2 வகை அன்னாசிப்பழங்களின் முதல் தொகுப்பை, கீழ்க்காணும் எந்த நாட்டிற்கு APEDA வெற்றிகரமாக ஏற்றுமதி செய்தது?

அ. இலங்கை

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. மியான்மர்

ஈ. பிரான்ஸ்

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, “கோல்டன் ரைப்” அல்லது “சூப்பர் ஸ்வீட்” என்று அழைக்கப்படும் ‘MD 2’ இரக அன்னாசிப்பழங்களின் முதல் தொகுப்பை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஏற்றுமதியில் 8.7 மெட்ரிக் டன் (650 பெட்டிகள்) அன்னாசிப்பழங்கள் இருந்தன. 1980-களில் டெல் மான்டேவால் உருவாக்கப்பட்ட, ‘MD 2’ இரக அன்னாசிப்பழங்கள் முதன்மையாக கோஸ்டாரிகா, பிலிப்பைன்ஸ் & தாய்லாந்தில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்திய உற்பத்தியைப் பொருத்தவரை மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் இது மேற்கொள்ளப்படுகிறது.

13. வரும் ஆகஸ்டில், பன்னாட்டு விமானப்பயிற்சியான, ‘2024 – தரங் சக்தி’ஐ நடத்தவுள்ள நாடு எது?

அ. ஜெர்மனி

ஆ. ஸ்பெயின்

இ. பிரான்ஸ்

ஈ. இந்தியா

  • இந்திய வான்படை அதன் முதல் பன்னாட்டுப் பயிற்சியான, ‘தரங் சக்தி-2024’ஐ 2024 ஆகஸ்டில் நடத்தவுள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், UAE, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட சுமார் பத்து நாடுகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற நாடுகள் பார்வையாளர்களாக இடம்பெறும். ஆரம்பத்தில் 2023இன் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்ட இந்தப் பயிற்சி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிகழ்வு நட்பு மிகுந்த அண்டை நாட்டு வான்படைகளுடன் இயங்குதிறனை மேம்படுத்த உதவுகிறது.

14. சமீபத்தில், நகரத்தில் நிலையான கழிவுமேலாண்மையை அடைவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஆதரவளித்த அமைப்பு எது?

அ. UNEP

ஆ. உலக வங்கி

இ. UNDP

ஈ. IMF

  • பெருநகர சென்னை மாநகராட்சியானது உலக வங்கி உதவியுடன், 2026-2027க்குள் குப்பை மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது;. கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் கழிவுகளைப் போடுவதை நிறுத்துவதில் அது கவனம் செலுத்துகிறது. மாநில அதிகாரிகளுடனான சமீபத்திய கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்கான உத்திகளை உருவாக்குவது, சுழிய-கழிவு இலக்கை நிர்ணயிப்பது மற்றும் இறுதியில் கொடுங்கையூரைத் தூய்மைப்படுத்துவதில் வெற்றியடைவதைத் தொடர்ந்து பெருங்குடி குப்பைக் கிடங்கையும் மூடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

15. ‘மத்ஸ்யா 6000’ஐ உருவாக்கிய நிறுவனம் எது?

அ. ஐஐடி, ரூர்க்கி

ஆ. தேசிய பெருங்கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), சென்னை

இ. ஐஐடி, கான்பூர்

ஈ. தேசிய பெருங்கடலியல் நிறுவனம்

  • 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 40-50 மீட்டர் ஆழத்தில் முதல் சோதனையை நடத்தவுள்ள ஆழ்கடல் பயணத்தின்மூலம் இவ்வாறு மேற்கொள்ளும் ஆறாவது நாடாக இந்தியா மாறும். சென்னையின் உள்ள தேசிய பெருங்கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) உருவாக்கிய 3 நபர்கள் வரை செல்லமுடிந்த நீர்மூழ்கிக்கப்பல்தான் ‘மத்ஸ்யா 6000’. இதால் 6,000 மீட்டர் ஆழம் வரை செல்ல முடியும். 80 மிமீட்டர் தடிமன்கொண்ட டைட்டானியம் கலவையால் ஆன இது, 96 மணி நேர ஆக்ஸிஜன் விநியோகத்துடன் 12-16 மணி நேரம் செயல்படும். இந்தப் பணி இந்தியாவின் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16. அண்மையில், ‘சுவிஸ் அமைதி உச்சிமாநாடு’ நடைபெற்ற இடம் எது?

அ. இந்தியா

ஆ. சுவிச்சர்லாந்து

இ. பிரான்ஸ்

ஈ. ஜெர்மனி

  • சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் உக்ரைனில் அமைதி ஏற்படுவதற்காக நடத்தப்பட்ட 2 நாள் உச்சிமாநாடு, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் நிறைவடைந்தது. 100 பிரதிநிதிகளில், 80 நாடுகளும் 4 அமைப்புகளும் இறுதி கூட்டறிக்கையை ஆதரித்தன. 2022 பிப்ரவரியில் தொடங்கிய மோதலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் தனது கவனத்தை செலுத்திய அமைதி உச்சிமாநாடு, சமாதான முயற்சிகளை விவாதிக்கவும் மேம்படுத்தவும் சர்வதேச பிரதிநிதிகளை அணிதிரட்டியது.

17. அண்மையில், எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளின் உருவாக்கத்தைக் கணிப்பதற்காக புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. பெருங்கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS)

ஆ. தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT)

இ. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)

ஈ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER)

  • ஹைதராபாத்தைச் சார்ந்த இந்திய தேசிய பெருங்கடல்சார் தகவல் சேவை மையம் (INCOIS) எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளைக் கணிக்க பேய்சியன் கன்வல்யூஷனல் நியூரல் நெட்வொர்க்கை (BCNN) உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), ஆழ்ந்த கற்றல் மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, BCNN கடல்-வளிமண்டல இடைவினைகளைக் கவனிப்பதன்மூலமும் Nino3.4 குறியீட்டைப் பயன்படுத்துவதன்மூலமும் ENSO கட்டங்களை முன்னறிவிக்கிறது.
  • மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் 1999இல் நிறுவப்பட்ட INCOIS, பல்வேறு பங்குதாரர்களுக்கு கடல் தரவு, தகவல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது.

18. ‘பாலைவனமாதல் & வறட்சியை எதிர்த்துப்போராடுவதற்கான உலக நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.16

ஆ. ஜூன்.17

இ. ஜூன்.18

ஈ. ஜூன்.19

  • நிலச்சீரழிவின் கடுமையான பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.17 அன்று, பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “United for Land. Our Legacy. Our Future” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள் ஆகும். இந்தக் கருப்பொருள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் உலகளவில் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் கூட்டான நிலப்பொறுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

19. ‘Pawan-Urja: Powering the Future of India’ என்ற மையக்கருப்பொருளுடன், ‘உலக காற்று நாள்’ நிகழ்வைக் கொண்டாடிய மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. உழவு அமைச்சகம்

இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாடு & வறுமை ஒழிப்பு அமைச்சகம்

  • புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 2024 ஜூன்.15 அன்று ‘உலக காற்று நாள்’ கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியது. இது இதுவரையிலான இந்திய காற்றாலைத் துறையின் புகழ்பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதையும், இந்தியாவில் காற்றாலை எரிசக்தியை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதற்கான சாத்தியமான வழியைப்பற்றி விவாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. “பவன்-உர்ஜா: இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துதல்” என்ற மையக்கருப்பொருளுடன், இந்த நிகழ்வு ‘மின் தேவையைப் பூர்த்திசெய்வதில் காற்றாலை எரிசக்தியின் பங்கு’, ‘இந்தியாவில் கடலோர காற்றாலை ஆற்றல் ஏற்றலை விரைவுபடுத்துதல்’ மற்றும் ‘இந்தியாவில் கடற்காற்று வளர்ச்சி: இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல்’ ஆகியவைபற்றி குழு விவாதங்களை நடத்தியது.
  • 2024 மேக்குள் 46.4 கிகாவாட் ஒட்டுமொத்த நிறுவப்பட்ட காற்றாலை மின்திறனுடன், இந்தியா உலகின் 4ஆவது மிகப்பெரிய காற்றாலை மின்னாற்றலாக முன்னேறியுள்ளது. 2030ஆம் ஆண்டளவில் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி வளங்களிலிருந்து அதன் நிறுவப்பட்ட மின்சார திறனில் 50% மற்றும் 2070க்குள் நிகர சுழியத்தை அடைவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு காற்றாலை ஆற்றல் முக்கியமானது.

20. ‘2024 – சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 156ஆவது

ஆ. 166ஆவது

இ. 176ஆவது

ஈ. 186ஆவது

  • நடுவண் அரசின் சுற்றுச்சூழல் முன்னேற்றக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், 2024 – சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 176ஆவது இடத்தில் உள்ளது; கடந்த 2022இல் 180ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. யேல் மற்றும் கொலம்பியா ஆராய்ச்சியாளர்களால் தொகுக்கப்பட்ட இது, பல அளவுருக்களைக்கொண்டு பசுமை செயல்திறனை மதிப்பிடுகிறது. 2012ஆம் ஆண்டு முதல், இந்தியா தொடர்ந்து இந்தக் குறியீட்டில் சரிவைச் சந்தித்து வருகிறது; இது, தற்போதைய சுற்றுச்சூழல் சவால்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

21. இந்திய ரெயில்வேயானது அண்மையில் எந்த ஆற்றின்மீதுள்ள உலகின் மிகவுயரமான ரெயில் பாலத்தைக் கடந்து, சங்கல்தானிலிருந்து ரியாசிக்குச் செல்லும் முதல் சோதனை ரெயிலை இயக்கியது?

அ. சட்லெஜ்

ஆ. ஜீலம்

இ. செனாப்

ஈ. யமுனை

  • உலகின் மிகவுயரமான ரெயில்வே பாலமான செனாப் பாலத்தைக் கடந்து, சங்கல்தானிலிருந்து-ரியாசிக்கு முதல் சோதனை ரெயிலோட்டம் நிறைவடைந்ததாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள இந்தப் பாலம் செனாப் ஆற்றில் இருந்து 359 மீ உயரத்தில் அமைந்துள்ளது; இது ஈபிள் கோபுரத்தைவிடவும் சுமார் 35 மீட்டர் உயரத்தில் உள்ளது.

22. அண்மையில், செங்கொடி-2024 பயிற்சியின் இரண்டாவது பதிப்பு நடைபெற்ற இடம் எது?

அ. அல்டஸ் விமானப்படைத் தளம், ஓக்லஹோமா

ஆ. ஈல்சன் விமானப்படைத் தளம், அலாஸ்கா

இ. பீல் விமானப்படைத் தளம், கலிபோர்னியா

ஈ. கிரீச் விமானப்படைத் தளம், நெவாடா

  • ஜூன்.04-14 வரை அமெரிக்க வான்படையின் அலாஸ்காவில் உள்ள ஈல்சன் விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட செங்கொடி-2024 பயிற்சியில் இந்திய வான்படை குழு பங்கேற்றது. இது செங்கொடி-2024இன் இரண்டாவது பதிப்பாகும்; இது ஒரு மேம்பட்ட வான்வழி போர் பயிற்சியாகும். இது அமெரிக்க வான்படையால் ஓராண்டில் நான்கு முறை நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இந்திய வான்படை, சிங்கப்பூர் குடியரசு விமானப்படை, இங்கிலாந்தின் ராயல் விமானப்படை, ராயல் நெதர்லாந்து விமானப்படை, ஜெர்மன் லுஃப்ட்வாஃபே மற்றும் அமெரிக்க விமானப்படை ஆகியவை பங்கேற்றன.
  • ‘செங்கொடி’ என்பது யதார்த்தமான போர் அமைப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்ட பல வகைகளில் நடத்தப்படும் ஒரு வான்வழி போர் பயிற்சியாகும். விரும்பிய சூழலை உருவகப்படுத்துவதற்காக படைகளின் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது; சிவப்புப்படை வான் பாதுகாப்புக் கூறுகளை உருவகப்படுத்துகிறது. நீலப்படை தாக்குதல் கலப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது. IAF இந்திய வான்படையின் ரபேல் விமானங்கள் செங்கொடி பயிற்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

23. அண்மையில், லண்டன் மத்திய வங்கியால், ‘2024ஆம் ஆண்டின் இடர் மேலாளர் விருது’ வழங்கி மரியாதை செய்யப்பட்ட இந்திய ஒழுங்காற்று அமைப்பு எது?

அ. RBI

ஆ. NABARD

இ. SEBI

ஈ. SBI

  • லண்டன் மத்திய வங்கியால், ‘2024ஆம் ஆண்டின் இடர் மேலாளர் விருது’ வழங்கி மரியாதை செய்யப்பட்ட இந்திய ஒழுங்காற்று அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகும். இந்தியாவில் இடர் மேலாண்மை கொள்கைகளை மேம்படுத்துவதிலும், நிதி நிலைத்தன்மையை உறுதிசெய்வதிலும் ரிசர்வ் வங்கியின் முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் மனோரஞ்சன் மிஸ்ரா, இடர் கலாச்சாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் சாதனைகள் மற்றும் பயனுள்ள இடர்மேலாண்மை நடைமுறைகளில் உலகளாவிய மத்திய வங்கிகளுக்கான வரையறைகளை நிர்ணயித்து இந்த விருதை ஏற்றுக்கொண்டார்.

24. அண்மையில், அதிகபட்ச காற்றாலை மின் நிறுவல் திறனுக்கான விருதை வென்ற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. இராஜஸ்தான்

ஈ. ஒடிசா

  • புது தில்லியில் உலக காற்று நாளைக் கொண்டாடும், “Pawan-Urja: Powering the Future of India” நிகழ்வில், அதிக காற்றாலை மின் நிறுவல் திறனுக்கான விருதை குஜராத் மாநிலம் பெற்றது. தமிழ்நாட்டின் 10,743 மெகாவாட்டுடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்திற்குள் 11,823 மெகாவாட் நிறுவப்பட்ட திறனுடன் குஜராத் தமிழ்நாட்டை விஞ்சியது. கர்நாடகா 6,312 மெகாவாட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விருதை குஜராத் அதிகாரிகள் மம்தா வர்மா மற்றும் ஜெய் பிரகாஷ் சிவஹரே ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆகஸ்ட் முதல் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம்.

அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வங்கிக்கணக்கில் `1000 வரவு வைக்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வியில் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் ‘காலை உணவுத்திட்டம்’, 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் ‘இல்லம் தேடிக்கல்வி’, 28 லட்சம் மாணவர்களுக்கு திறன்பயிற்சி வழங்கிவரும், ‘நான் முதல்வன்’ திட்டம் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2. சாகித்திய அகாதெமியின் யுவ, பால புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு. தமிழ் மொழியில் லோகேஷ் இரகுராமன், யூமா வாசுகி தேர்வு.

2024ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்திய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியில் யுவ புரஸ்கார் விருதுக்கு லோகேஷ் இரகுராமனும், பால சாகித்திய புரஸ்கார் விருதுக்கு யூமா வாசுகியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப்படைப்புகளுக்கு புகழ்பெற்ற சாகித்திய அகாதெமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

இளையோரின் சிறந்த படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருது, சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி நாடு முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

விருதாளர்களுக்கு கலச வடிவிலான செப்புத்தகடு விருது மற்றும் `50,000-க்கான காசோலை வழங்கப்படுகிறது.

தமிழ் மொழி விருதாளர்கள்:

சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார்-2024 விருதுப்பட்டியலில் தமிழ் மொழியில் லோகேஷ் இரகுராமன் (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது முதல் கதைத்தொகுப்பான ‘விஷ்ணு வந்தார்’ விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான, ‘தன்வியின் பிறந்தநாள்’ சிறுவர் சிறுகதைக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு (64) பால சாகித்திய புரஸ்கார்-2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாரிமுத்து என்ற இயற்பெயரைக்கொண்ட யூமா வாசுகி, எழுத்தாளர், ஓவியர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட பன்முகத்தன்மைகொண்டவராவார்.

3. தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண்கள்.

தமிழ்நாடு காவல் துறையில் 21 சதவீதம் பெண்கள் இருப்பதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் கடந்த 1973இல் சேர்க்கப்பட்டனர். இதன் ஐம்பதாண்டு நிறைவை முன்னிட்டு, தேசிய அளவில் பெண் காவலருக்கான துப்பாக்கி சுடும்போட்டி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது.

4. 2.15 லட்சம் ஆமைக்குஞ்சுகளை கடலுக்கு அனுப்பி சாதனை.

நடப்பாண்டில் 2.15 லட்சம் ஆமைக்குஞ்சுகளை கடலுக்கு அனுப்பி, வனத்துறை சாதனை செய்துள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 1076 கிமீட்டர் நீள கடற்கரையில் இனப்பெருக்கம் மற்றும் முட்டையிட கடலாமைகள் வருகின்றன. குறிப்பாக, ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை மற்றும் லெதர்பேக் ஆமை ஆகிய ஐந்து வகை கடல் ஆமைகள் வருகின்றன. கடலாமைகளுக்கான பருவம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பரில் தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!