TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 13th and 14th June 2024

1. மாநிலத்தில் பெண்கல்வியை மேம்படுத்துதற்காக, ‘முதலமைச்சர் நிஜுத் மொய்னா’ என்ற திட்டத்தைத் தொடக்கிய மாநிலம் எது?

அ. மணிப்பூர்

ஆ. நாகாலாந்து

இ. சிக்கிம்

ஈ. அஸ்ஸாம்

  • அஸ்ஸாம் மாநில அரசாங்கம் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் சிறார் திருமணத்தை ஒழிக்கவுமாக முதலமைச்சர் நிஜுத் மொய்னா திட்டத்தை 2024 ஜூனில் அறிமுகப்படுத்தியது. மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இத் திட்டம் சுமார் 10 லட்சம் மாணவிகளுக்கு நிதியுதவி அளிக்கிறது. உயர்நிலைக்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் `1000, பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு `1200, முதுகலை அல்லது பி.எட் படிப்பவர்களுக்கு `2500 வழங்கப்படும்.

2. ‘PRANA’ மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக இந்திய மருத்துவ அமைப்புகளுக்கான தேசிய ஆணையத்துடன் கூட்டிணைந்துள்ள அமைப்பு எது?

அ. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம்

ஆ. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு

இ. NITI ஆயோக்

ஈ. கல்வி அமைச்சகம்

  • இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் அதன் நான்காவது நிறுவன நாளைக் குறிக்கும் வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து ‘PRANA’ (Protecting Rights and Novelties in ASUS) என்ற இரண்டு நாள் தேசிய மாநாட்டை நடத்தியது. இந்திய மருத்துவ முறைமையில் வணிகமயமாக்கல் மற்றும் புத்தொழில்களுக்கு ஏற்ற காப்புரிமைபெற்ற கண்டுபிடி -ப்புகளை இம்மாநாடு எடுத்துரைத்தது.

3. 2024 – உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக பொருளாதார மன்றம்

ஆ. உலக வானிலை அமைப்பு

இ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

ஈ. உலக வங்கி

  • இந்தியாவின் புதிய அமைச்சரவையில், முப்பது அமைச்சர்களில் இருவர் மட்டுமே பெண்கள்; இந்த எண்ணிக்கை முன்பிருந்த பத்திலிருந்து குறைந்துள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் 2024 – உலகளாவிய பாலின இடை வெளி அறிக்கை உலகளாவிய பாலின வேறுபாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐஸ்லாந்து 14வது ஆண்டாக பாலின சமத்துவ நாடாக முன்னணியில் உள்ளது; இந்தியா 129ஆவது இடத்தில் உள்ளது. பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புகளில் ஓரளவு முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், குறியீட்டில் இந்தியாவின் சிறிதளவு சரிவு கல்வி அடைதல் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் பின்னடைவை பிரதிபலிக்கிறது.

4. ‘Chlorella sorokiniana’ என்றால் என்ன?

அ. நுண்பாசி

ஆ. பாக்டீரியா

இ. அமீபா

ஈ. பூஞ்சை

  • CSIR-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜியின் அறிவியலாளர்கள், ‘Chlorella sorokiniana’ என்ற நுண்பாசியிலிருந்து பெறப்பட்ட குளோரெல்லா வளர்ச்சி காரணி (CGF), உணவு மற்றும் தீவனப்பயன்பாடுகளுக்குப் பயன்தருவதாக குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலும் ஒற்றைசெல்லுடைய இந்நுண்பாசி, பல்வேறு நீர்வாழ் சூழல்களில் செழித்து வளரும் தன்மையுடையது. இவற்றுக்கு வேர்களோ தண்டுகளோ கிடையாது. சுற்றுச்சூழல் அமைப்புகளில் முதன்மை உற்பத்தியாளர்களாக விளங்கும் இவை, கொழுப்புகள், புரதங்கள் மற்றும் நிறமிகள் ஆகியவற்றின் செழுமையின் காரணமாக ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகின்றன.
  • எடுத்துக்காட்டுகளில் ஸ்பைருலினா மற்றும் குளோரெல்லா ஆகியவை அடங்கும்; அவை பொதுவாக அவற்றின் உடல்நல நலன்களுக்காக உணவுப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

5. இந்தியாவின், ‘மக்கள் மருந்தகம்’ திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு எது?

அ. மாலத்தீவுகள்

. மொரிஷியஸ்

இ. பூட்டான்

ஈ. நேபாளம்

  • இந்தியாவின், ‘மக்கள் மருந்தகம்’ திட்டம் பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தக மையங்கள் (PMBJK)மூலம் மலிவு விலையில் பொதுவான மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொரீஷியஸ் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது; இதன்மூலம் இந்தியாவுக்கு வெளியே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் நாடு என்ற பெருமையை அது பெற்றது. நேபாளமும் இதேபோன்ற மையங்களை நிறுவ இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 10,000 PMBJKகளுடன், இந்தத் திட்டம் மருத்துவச் செலவுகளைக் குறைப்பது மற்றும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகத்தால் நிர்வகிக்கப்படும் பொதுவான மருந்துப் பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டில் விசாகப்பட்டினம் துறைமுகம் பிடித்துள்ள இடம் எது?

அ. 18ஆவது

ஆ. 17ஆவது

இ. 15ஆவது

ஈ. 19ஆவது

  • உலக வங்கி, S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் உடன் இணைந்து, கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டை வெளியிட்டது. இது 405 உலகளாவிய துறைமுகங்களின் தரவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகும். இந்தக் குறியீட்டில் விசாகப்பட்டினம் துறைமுகம் 19ஆம் இடத்தைப் பெற்றுள்ளது; இது கொள்கலன் போக்குவரத்தை கையாள்வதில் அதன் செயல்திறன் மற்றும் உள்கட்டமைப்பு தரத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த மதிப்பீடு உலகளாவிய துறைமுக செயல்பாடுகள்பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது, மேம்பட்ட வர்த்தக வசதி மற்றும் தளவாட மேலாண்மைக்கான உத்திசார் மேம்பாடுகளுக்கு உதவுகிறது.

7. நைட்ரஸ் ஆக்சைடு (N2O) உமிழ்வுகளின் உலகளாவிய மதிப்பீட்டின்படி, உலகின் இரண்டாவது பெரிய நைட்ரஸ் ஆக்சைடு (N2O) உமிழும் நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. பிரேசில்

ஈ. ரஷ்யா

  • வலிமிகு பைங்குடில் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடை (N2O) உமிழும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. 2020ஆம் ஆண்டில், சீனாவின் 16%ஐத் தொடர்ந்து, உலகளாவிய மனிதனால் உருவாக்கப்பட்ட N2O உமிழ்வில் இந்தியா சுமார் 11% பங்களித்தது. இந்த உமிழ்வுகள் முதன்மையாக நைட்ரஜன் அடிப்படையிலான உரங்கள் மற்றும் உழவில் பயன்படுத்தப்படும் விலங்கு உரங்களிலிருந்து உருவாகின்றன. இருப்பினும், சீனா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் உமிழ்வுகளை ஒப்பிடும்போது, ​​இந்தியாவின் தனிநபர் உமிழ்வு ஒரு நபருக்கு 0.8 கிலோ என்ற அளவில் குறைவாகவே உள்ளது.

8. அண்மையில், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் அறிவியலாளர்கள் கீழ்க்காணும் எந்தக்கோளில் மூன்று புதிய பள்ளங்களைக் கண்டுபிடித்துள்ளனர்?

அ. வெள்ளி

ஆ. பூமி

இ. செவ்வாய்

ஈ. சனி

  • ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (PRL) அறிவியலாளர்கள் தர்சிஸ் எரிமலைப்பகுதியில் செவ்வாய் கோளில் மூன்று பள்ளங்களைக் கண்டுபிடித்துள்ளனர்; இது விரிவான எரிமலை ஓட்டங்களுக்குப் பெயர் பெற்றதாகும். லால், முர்சன் மற்றும் ஹில்சா என்று பெயரிடப்பட்ட இந்தப் பள்ளங்கள் செவ்வாய் கோளின் மேற்பரப்பு புவியியல் மற்றும் வயதுபற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள் செவ்வாய் கோளின் நிலையான மேலோடு மற்றும் புவியியல் செயல்முறைகள் பற்றிய நமது புரிதலுக்குப் பங்களிக்கின்றன.

9. 2024 – பன்னாட்டு கொழுப்புக் கல்லீரல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Act Now, Screen Today

ஆ. Be Vigilant, Do Regular Liver Check-ups

இ. Keep your liver healthy and disease-free

ஈ. Do Regular Liver Check-up

  • “Act Now, Screen Today” என்ற கருப்பொருளுடன் 2024 ஜூன்.13 அன்று பன்னாட்டு கொழுப்புக் கல்லீரல் நாள் அனுசரிக்கப்பட்டது. கொழுப்புக் கல்லீரல் நோய் (அ) ஸ்டீடோசிஸ் ஆனது கல்லீரல் உயிரணுக்களில் அதிகப்படியான கொழுப்புக் குவிவதை உள்ளடக்கிய ஒரு நோயாகும்; இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் வீக்கம் மற்றும் தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது அதிகப்படியான ஆல்கஹால் நுகர்வு (ஆல்கஹாலிக் ஸ்டீட்டோஹெபடைடிஸ்) அல்லது பிற காரணிகளால் (ஆல்கஹால் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ், NASH) ஏற்படலாம். கல்லீரல் பாதிப்பைத் தடுக்கவும் இந்தப் பொதுவான உலகளாவிய சுகாதாரப்பிரச்சினையை நிர்வகிக்கவும் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை நோயறிதல் முக்கியமானதாகும்.

10. அபுவா ஆவாஸ் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. ஒடிசா

ஆ. ஹரியானா

இ. ஜார்கண்ட்

ஈ. பீகார்

  • பிரதமர் ஆவாஸ் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 2023 நவம்பரில் தொடக்கப்பட்ட, ‘அபுவா ஆவாஸ்’ திட்டத்தின் முதல் கட்டத்தின்கீழ், 2 இலட்சம் வீடுகள் கட்டும் பணியை விரைவுபடுத்துமாறு ஜார்கண்ட் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.
  • தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்ட ஏழைகளுக்கு மூன்று அறைகள் கொண்ட வீடுகளை வழங்க, ஈராண்டுகளில் `15,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

11. புதிய குற்றவியல் சட்டங்கள்பற்றிய தகவல்களை வழங்குவதற்காக அண்மையில் NCRB அறிமுகப்படுத்திய திறன்பேசி செயலியின் பெயர் என்ன?

அ. NCRB சமர்த்

ஆ. NCRB சஹாயக்

இ. NCRB சங்கரா

ஈ. குற்றவியல் சட்டங்களின் NCRB சங்கலன்

  • NCRB ஆனது புதிய குற்றவியல் சட்டங்கள்பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதற்காக, “NCRB சங்கலன் ஆஃப் கிரிமினல் லாஸ்” என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது; இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்தச் செயலி பாரதிய நயயா சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகியவற்றைத் தொகுத்து, புதிய சட்ட ஒப்பீட்டு விளக்கப்படங்களுடன் அவற்றிய விளக்குகிறது. கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் இது, பொதுமக்கள், நீதிமன்ற அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பயனளிக்கிறது.

12. ‘நாகாஸ்திரம்-1’ என்றால் என்ன?

அ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்

ஆ. எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய தற்கொல்லி டிரோன்கள்

இ. அணுவாற்றல் திறன்கொண்ட நீர்மூழ்கிக்கப்பல்

ஈ. புறக்கோள்

  • ஏவுதளங்கள், எதிரிகளின் முகாம்கள் மற்றும் ஊடுருவல்காரர்களை குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நாகாஸ்திரம்-1 என்ற தனித்துவமான எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய தற்கொல்லி ஆளில்லா விமானத்தை இந்திய இராணுவம் பெற்றுள்ளது. அவசரகால கொள்முதல் அதிகாரங்களின்கீழ், சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிட் (EEL) நிறுவனத்திடம் இருந்து இராணுவம் 480 லோய்டர் வெடிமருந்துகளை ஆர்டர் செய்தது.

13. மண்ணலத்தை மேம்படுத்துவதற்காக, “மண்ணுயிர் காத்து மன்னுயிர்க்காப்போம்” திட்டத்தைத் தொடக்கியுள்ள மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. கேரளா

  • தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் `206 கோடி திட்ட மதிப்பீட்டில் மாநிலத்தில் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு, “மண்ணுயிர் காத்து மன்னுயிர்க் காப்போம்” திட்டத்தைத் தொடக்கி வைத்தார். பசுந்தாள் உர முறைகளைப் பயன்படுத்தி மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். `20 கோடி தொடக்க நிதியானது 2024–25 முதல் 200,000 ஏக்கரில் பசுந்தாள் உர விதைகளை விநியோகிக்க உதவும்; இதன்மூலம் 200,000 விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள்.

14. அண்மையில், 2024 – FIDE 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றது யார்?

அ. மரியம் மக்ர்ட்சியன்

ஆ. சலோனிகா சாய்னா

இ. திவ்யா தேஷ்முக்

ஈ. சுபி குப்தா

  • 18 வயது நாக்பூர் சிறுமியும், சர்வதேச மாஸ்டருமான திவ்யா தேஷ்முக், FIDE U-20 பெண்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற 4ஆவது இந்தியப் பெண்மணி ஆனார். 2024 ஜூன்.02-13 வரை குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 44 நாடுகளைச் சேர்ந்த 230 வீரர்கள் கலந்துகொண்டனர். திவ்யா தேஷ்முக், 11-க்கு 10 புள்ளிகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கஜகஸ்தானை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் காசிபெக் நோகர்பெக் ஆடவர் பட்டத்தை வென்றார். திவ்யா தேஷ்முக், 2024ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

15. ஆண்டுதோறும், ‘உலக குருதிக்கொடையாளர்கள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.14

ஆ. ஜூன்.15

இ. ஜூன்.16

ஈ. ஜூன்.17

  • பாதுகாப்பான குருதிக்கொடை செய்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.14ஆம் தேதி உலக குருதிக்கொடையாளர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் நிறுவப்பட்ட இந்த நாள், 1886 ஜூன்.14ஆம் தேதியன்று பிறந்த ஆஸ்திரிய உயிரியலாளர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னரைக் கௌரவிக்கும் விதமாக உள்ளது. 2005ஆம் ஆண்டில், உலக சுகாதார சபை இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கான, “20 years of celebrating giving: thank you, blood donors” கருப்பொருள், அனுசரிப்பின் 20ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

16. அண்மையில், ‘AYUSH’ பற்றிய முதல் அகில இந்திய ஆய்வை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

ஆ. ஆயுஷ் அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • 2022 ஜூலை முதல் 2023 ஜூன் வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் நடத்திய ‘ஆயுஷ்’ பற்றிய முதல் அகில இந்திய ஆய்வை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டது. இதன்மூலம் கிராமப்புற மக்களில் 95%த்தினரும் நகர்ப்புற மக்களில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட சதவீதத்தினரும் ஆயுஷ் பற்றி அறிந்து உள்ளனர் தெரியவந்துள்ளது. முக்கியமாகப் புத்துணர்ச்சிக்கான ஆயுஷின் பயன்பாடும் செலவும் நகர்ப்புறங்களில் அதிகமாகும். ஆயுஷில் ஆயுர்வேதம், யோகம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், சோவா ரிக்பா மற்றும் ஹோமியோபதி ஆகியவை அடங்கும்.

17. அண்மையில், ஒட்டகங்களின் பயன்படுத்தப்படாத திறன்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐநா சபை எந்த ஆண்டை, ‘சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டு’ என அறிவித்தது?

அ. 2024

ஆ. 2025

இ. 2026

ஈ. 2027

  • ஐநா அவையானது 2024ஆம் ஆண்டை சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக அறிவித்தது. இதன்மூலம் கடுமையான சுற்றுப்புறச்சூழலில் வசித்துவரும் ஒட்டகங்களின் இன்றியமையா பங்குபற்றி விழிப்புணர்வு ஏற்படும். சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டானது ஒட்டகங்களின் பயன்படுத்தப்படாத திறனை முன்னிலைப்படுத்துவதையும், ஒட்டகஞ்சார் தொழிற்துறையில் அதிகரித்த முதலீட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது.

18. GREAT திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. ஐக்கிய அரபு அமீரகத்தில் பாரம்பரிய ஜவுளித்தொழில்களை ஆதரிப்பது

ஆ. தொழில்நுட்ப ஜவுளியில் ஒரு புத்தொழில் சூழலை உருவாக்குதல்

இ. நகர்ப்புற இந்தியா முழுவதும் வேளாண் பொருட்களை ஊக்குவித்தல்

ஈ. இந்திய மருந்துகளை உலகளவில் ஏற்றுமதி செய்தல்

  • தேசிய தொழில்நுட்ப ஜவுளிகள் திட்டத்தின் (NTTM) அதிகாரமளிக்கப்பட்ட திட்டக்குழு, ‘GREAT’ திட்டத்தின்கீழ் ஏழு புத்தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. GREAT (Grant for Research & Entrepreneurship across Aspiring Innovators in Technical Textiles) என்பது ஜவுளி அமைச்சகத்தின் தலைமையிலான NTTMஇன் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு கூறுகளின் ஒருபகுதியாகும். புதுமையான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித்துறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு 18 மாதங்களுக்கு `50 லட்சம் வரை மானியங்களை வழங்குகிறது.

19. அண்மையில், NASAஇன் எந்தத் தொலைநோக்கி, பால்வீதி மண்டலத்தில் HM Sagittae (HM Sge) என்ற இணை வாழ்வு அமைப்பைக் கூர்நோக்கியது?

அ. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி

ஆ. பிராட் பேண்ட் X-கதிர் தொலைநோக்கி

இ. ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி

ஈ. காம்ப்டன் காமா கதிர் ஆய்வகம்

  • NASAஇன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, பால்வீதியிலுள்ள இணைவாழ்வு இருமய விண்மீன் அமைப்பான HM சாகிடே (HM Sge)பற்றி ஆய்வுசெய்தது. இது ஒரு வெண்குள்ள விண்மீனையும் ஒரு சிவப்புப் பெருமீனையும் கொண்டுள்ளது. வெண்குள்ள விண்மீன்கள் என்பது எரிந்த விண்மீன்களின் எச்சங்களாகும்; அதே சமயம் சிவப்புப் பெருமீன்கள் அவற்றின் இறுதி நிலையில் உள்ள விண்மீன்களாகும். HM Sgeஇல், சிவப்புப் பெருமீனிலிருந்து வரும் பொருள் அதன் ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்பட்டபிறகு வெண்குள்ள விண்மீனைச்சுற்றி ஒரு வட்டை உருவாக்குகிறது.

20. அண்மையில், நிலவு ஆய்வுக்கான NASAஇன் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் 43ஆவதாகக் கையெழுத்திட்ட நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. ஆர்மீனியா

ஈ. ஆஸ்திரியா

  • நிலவு ஆய்வுக்கான NASAஇன் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் ஆர்மீனியா 43ஆவது நாடாகக் கையெழுத்திட்டது. ஏழு நிறுவன நாடுகளுடன் கடந்த 2020இல் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தங்கள், 1967 விண்வெளி ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அவை உள்நாட்டு விண்வெளி ஆய்வுக்கான கட்டுப்பாடற்ற கொள்கைகள், விண்வெளியில் அமைதியான, நிலையான மற்றும் வெளிப்படையான ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றன. கையொப்பமிட்ட குறிப்பிடத்தக்க நாடுகளில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் & இங்கிலாந்து ஆகியவை அடங்கும்.

21. சமீபத்தில், WHOஆல் “பாரம்பரிய மருத்துவத்தில் அடிப்படை மற்றும் இலக்கிய ஆராய்ச்சி” மேற்கொள்வதற்காக WHO ஒத்துழைப்பு மையமாக அறிவிக்கப்பட்ட மருத்துவ நிறுவனம் எது?

அ. இந்திய தேசிய மருத்துவ பாரம்பரிய கழகம் (NIIMH), ஹைதராபாத்

ஆ. தேசிய ஆயுர்வேத நிறுவனம், ஜெய்ப்பூர்

இ. AIIMS, தில்லி

ஈ. KGMU, லக்னோ

  • உலக சுகாதார நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய மருத்துவ பாரம்பரிய கழகத்தை (NIIMH) 2024 ஜுன்.03 முதல் 4 ஆண்டுகளுக்கு, “பாரம்பரிய மருத்துவத்தில் அடிப்படை மற்றும் இலக்கிய ஆராய்ச்சிக்கான” WHO ஒத்துழைப்பு மையமாக நியமித்துள்ளது. 1956இல் நிறுவப்பட்ட NIIMH, பல்வேறு பாரம்பரிய இந்திய சுகாதார அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ-வரலாற்று ஆராய்ச்சிகளை ஆவணப்படுத்துகிறது.

22. அண்மையில், சிரில் ரமபோசா, கீழ்க்காணும் எந்த நாட்டின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. கென்யா

ஆ. ருவாண்டா

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. நைஜீரியா

  • ANC, மக்களாட்சிக் கூட்டணி (DA) மற்றும் பிற சிறிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தத்திற்குப்பிறகு, 2024 ஜூன்.14 அன்று தென்னாப்பிரிக்காவின் அதிபராக சிரில் ரமபோசா இரண்டாவது முறையாக பதவியேற்றார். ANC, 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக, 2024 மே.29 அன்று நடந்த தேர்தலில் 40% வாக்குகளை மட்டுமே பெற்று, நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறத்தவறியது. சிரில் ரமபோசா முதன்முதலில் 2018 பிப்.15 அன்று அதிபரானார்.

23. கீழ்க்காணும் எந்த அமைப்பும் சன்சாத் அலைவரிசையும் இணைந்து இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை மக்களுக்கு அணுகக்கூடிய வகையில் மாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?

அ. லலித் கலா கலைக்கழகம்

ஆ. கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (INTACH)

இ. சங்கீத நாடக கலைக்கழகம்

ஈ. இந்திராகாந்தி தேசிய கலை மையம் (IGNCA)

  • இந்திராகாந்தி தேசிய கலை மையம் (IGNCA) மற்றும் சன்சாத் அலைவரிசை (TV) ஆகியவை இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. IGNCA தயாரித்த நிகழ்ச்சிகள் சன்சாத் அலைவரிசையில் ஒளிபரப்பப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாக்டர் சச்சிதானந்த ஜோஷி (IGNCA) மற்றும் இரஜத் புன்ஹானி (சன்சாத் அலைவரிசை) ஆகியோர் கையெழுத்திட்டனர். பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புவதையும், IGNCAஇன் காப்பகத்தைப் பயன்படுத்துவதையும் நோக்கம் எனக்கொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து இருவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

24. 50ஆவது G7 தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?

அ. இத்தாலி

ஆ. பிரான்ஸ்

இ. இந்தியா

ஈ. கனடா

  • ஜூன்.14 அன்று இத்தாலியின் போர்கோ எக்னாசியாவில் நடைபெற்ற G7 ஔட்ரீச் அமர்வில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டார். இந்த உச்சிமாநாட்டின்போது செயற்கை நுண்ணறிவு (AI), ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல்குறித்து விவாதம் செய்யப்பட்டது. இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின்பேரில், உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோதி இம்மானுவேல் மேக்ரான், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார். 50ஆவது G7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் ஜூன் 13-15 வரை நடைபெற்றது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீடு: இந்தியா 129ஆவது இடம்.

உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இரண்டு இடங்கள் சரிந்து இந்தியா 129ஆவது இடம்பிடித்துள்ளது. இதுதொடர்பாக உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் ஐந்து (5) இடங்களைப் பிடித்துள்ளன. இதன்மூலம், அந்நாடுகளில் பாலின ஏற்றத்தாழ்வு மிகக்குறைவாக உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய வேகத்தில், பாலின சமத்துவத்தை முழுமையாக எட்ட நூற்று முப்பத்து நான்கு ஆண்டுகள், அதாவது ஐந்து தலைமுறைகளாகும் என்று உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பெற்றோர், சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை.

2025ஆம் ஆண்டுக்குள் குழந்தைத்தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க பெற்றோர், சமுக அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

3. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (NSA) முன்னாள் இ கா ப அதிகாரி அஜித் தோவலை நடுவண் அரசு மூன்றாவது முறையாக மீண்டும் நியமித்துள்ளது. அதேபோல, பிரதமரின் முதன்மைச் செயலராக பி.கே. மிஸ்ரா (75) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. இத்தாலியில் தொடங்கியது G7 மாநாடு

தொழில் வளஎச்சியடைந்த உலகின் ஏழு முக்கிய முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு G7. அதன் உறுப்புநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 50ஆவது மாநாடு இத்தாலியின் அபுலியா மாகாணம், பசானோ நகரத்தில் தொடங்கி நடைபெற்றது.

5. பண்டைய சமண மரபு நூல்: முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு குறித்து எழுத்தாளர் ருச்சி பிரீதம் எழுதிய நூலை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.

6. CNG, LNG எரிவாயுமூலம் இயங்கும் அரசுப்பேருந்துகள்.

அரசுப்போக்குவரத்துக்கழகங்களில் சோதனை அடிப்படையில் CNG, LNG எரிவாயுமூலம் இயங்கும் பேருந்துகளை போக்குவரத்துத்துறை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுச்சூழலுக்குகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக CNG, LNG எனப்படும் இயற்கை எரிவாயுமூலம் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. இதன் தொடர்ச்சியாக சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சென்னை மாநகரம், விழுப்புரம் போக்குவரத்துக்கழகங்களின் 4 LNG பேருந்துகள், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் 2 CNG பேருந்துகள் என மொத்தம் 6 பேருந்துகள் இயக்கும் வகையில் தயார்செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!