TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 13th & 14th November 2023

1. கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ என்ற பாடலைப் பாடியவர் யார்?

அ. ஃபல்குனி ஷா 🗹

ஆ. உதித் நாராயண்

இ. ஏ. ஆர். ரஹ்மான்

ஈ. சங்கர் மகாதேவன்

  • அமெரிக்க வாழ் இந்தியர்களான ஃபல்குனி ஷா மற்றும் அவரது கணவர் கௌரவ் ஷா இணைந்து உருவாக்கிய, பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்ற, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கும், ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ என்ற பாடல், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சிறுதானியங்களின் முக்கியத்துவம் அதன் மருத்துவ குணங்கள் தொடர்பாக இந்தப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. ‘டிஜிட்டல் விளம்பரக் கொள்கை, 2023’ஐ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 🗹

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

  • மத்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகத் துறைக்கு எண்ம ஊடக பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏதுவாக ‘டிஜிட்டல் விளம்பரக்கொள்கை, 2023’க்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிட்டல்மயமாக்கலுக்கு ஏற்ப மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள்குறித்து தகவல்களைப் பரப்புவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் CBCஇன் பணியில் இக்கொள்கை ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது, ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா, 2023இன் வரைவையும் வெளியிட்டுள்ளது.

3. மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீட்டை 75%ஆக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்றிய மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. பீகார் 🗹

இ. ஜார்கண்ட்

ஈ. ஆந்திர பிரதேசம்

  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை தற்போதுள்ள 50%லிருந்து 65%ஆக உயர்த்துவதற்கான மசோதாவை பீகார் மாநில சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது. 10% பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு (EWS) இட ஒதுக்கீட்டுடன், இந்த மசோதா பீகாரில் இடஒதுக்கீட்டை 75%ஆக உயர்த்தும். கடந்த 1992இல் உச்சநீதிமன்ற அமர்வு, OBC ஒதுக்கீட்டை உறுதி செய்தது.

4. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு வளர்ச்சித் தரவை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. NSO 🗹

ஆ. DPIIT

இ. SIDBI

ஈ. RBI

  • உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் மெதுவான செயல்பாடுகள் காரணமாக இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக் குறியீடு வளர்ச்சியானது ஆகஸ்ட் மாதத்தில் 10.34%ஆக இருந்து செப்டம்பர் மாதத்தில் 5.8%ஆக குறைந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தரவுகளின்படி, இந்தக் குறியீட்டில் அதிக பகுதியைக்கொண்ட உற்பத்தித்துறை, 2023 செப்டம்பரில் 4.5% அதிகரித்துள்ளது; அது 2023 ஆகஸ்ட்டில் 9.3%ஆக இருந்தது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘கட்டுபொறி-Baler’ என்பது எந்தத் துறையுடன் தொடர்புடைய சாதனமாகும்?

அ. வானிலையியல்

ஆ. வேளாண்மை 🗹

இ. தானியங்கியியல்

ஈ. குறைகடத்திகள் உற்பத்தி

  • கட்டுபொறி என்பது விவசாய பயிர் எச்சங்களை களத்திலேயே கையாளுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் ஆகும். பஞ்சாபில், தற்போது சுமார் 2,000 கட்டுபொறிகள் செயல்பாட்டில் உள்ளன; அவற்றில் 1,268 மத்திய அரசின் பயிர் எச்ச மேலாண்மை முன்னெடுப்பின்மூலம் 50%-80% வரையிலான மானியங்கள்மூலம் பெறப்பட்டதாகும்.

6. ஓர் அண்மைய ஆய்வின்படி, 2025இல் எந்தக் கோள் பூமியிலிருந்து தற்காலிகமாக புலப்படாமல் இருக்கும்?

அ. நெப்டியூன்

ஆ. வியாழன்

இ. சனி 🗹

ஈ. யுரேனஸ்

  • சனிக்கோளின் வளையங்கள், 2025இல் பூமியிலிருந்து தற்காலிகமாக புலப்படாமல் இருக்கும். இந்தத் தற்காலிக மறைதல் செயல் சனியின் சாய்வு மற்றும் ஒளியியல் மாயை காரணமாக ஏற்படுகிறது. நன்கு அறியப்பட்ட டைட்டன், என்செலடஸ் மற்றும் மிமாஸ் உட்பட சனியின் குறைந்தது 13 நிலவுகள் இதுபோன்றதொரு சந்தர்ப்பத்தில்தான் முன்னர் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ள மாவட்டம் எது?

அ. சென்னை

ஆ. செங்கல்பட்டு 🗹

இ. காஞ்சிபுரம்

ஈ. விழுப்புரம்

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி இமயமலை கருப்புக் கரடிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு ஜோடி வங்காளப் புலிகளும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வழங்கப்படவுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் இது சென்னையின் தென்மேற்குப் பகுதியில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு விலங்கியல் பூங்காவாகும்.

8. ‘நயி சேத்னா-2.0’ உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் 🗹

ஆ. MSME அமைச்சகம்

இ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின்கீழ் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் 9 அமைச்சகங்கள் பங்கேற்றன. அமைச்சகங்களுக்கு இடையிலான இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி அமைச்சகம் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான, ‘நயி சேத்னா-2.0’ (புதிய உணர்வு) என்ற தேசிய இயக்கத்தின் இரண்டாவது ஆண்டிற்கான தனது திட்டங்களை அறிவித்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர்.25 அன்று இந்த இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு நிகழ்வுகள் தொடங்கப்படவுள்ளன. இது 2023 டிசம்பர்.23 வரை 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடைப்பிடிக்கப்படும்.

9. அந்நிய செலாவணி கையிருப்பு மேலாண்மை குறித்த அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. RBI 🗹

ஆ. SEBI

இ. NHB

ஈ. NPCI

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அந்நிய செலாவணி கையிருப்பு மேலாண்மை அறிக்கையின்படி, வெளிநாட்டுப் பத்திரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்களின் பங்கு, மார்ச் மாதத்தில் இருந்த 80.76 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்திற்குள் 81.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. மற்ற மத்திய வங்கிகள் மற்றும் பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட் ஆகியவற்றில் வைப்புகளில் வைக்கப்பட்டுள்ள பணத்தின் பங்கு, 2023 மார்ச்சின் இறுதியில் 14.82%த்திலிருந்து செப்டம்பர் இறுதியில் 13.49 சதவீதமாகக் குறைந்துள்ளது.

10. அறிவியலாளர்கள், ‘சிமெரிக்’ எனப் பெயரிடப்பட்ட எந்த உயிரினத்தின் குட்டியை உருவாக்கியுள்ளனர்?

அ. குரங்கு 🗹

ஆ. வெள்ளாடு

இ. முயல்

ஈ. நாய்

  • மரபணு ரீதியாக வேறுபட்ட ஈவோர் (donor) கருவில் இருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்ககளை குரங்கின் கருவில் செலுத்துவதன்மூலம், ‘சிமெரிக்’ என்ற குரங்குக்குட்டியை சீனத்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் விளைவாக உருவான இவ்விலங்கு, அதிகபட்ச ஈவோர் ஸ்டெம் செல்களுடன் உருவாக்கப்பட்ட முதல் உயிருள்ள சிமெரிக் குரங்கினமாகும். இது மருத்துவ ஆராய்ச்சிக்கும், அழிந்துவரும் உயிரினங்களின் காப்பிற்கும் பயனளிக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மத்திய நிதி ஆணையம்மூலம் தமிழ்நாட்டுக்கு `836.97 கோடி நிதி: ஊரகப்பகுதிகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு.

மத்திய நிதி ஆணையம்மூலம், தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளுக்கு `836.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15ஆவது மத்திய நிதி ஆணையம்மூலமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதிகளை வழங்கியுள்ளது. இந்த நிதிகளை சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 10 வேலை நாள்களுக்குள் தாமதிக்காமல் வழங்கவேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு நிதிகளை அளிக்கும்பட்சத்தில் அதற்கான வட்டித்தொகையையும் சேர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டும் என மத்திய அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சரக்குகளை எடுத்துச் செல்ல உதவும் கைப்பேசி செயலி.

நகரங்களுக்கிடையே சரக்குகளை எளிதாகவும், திறமையாகவும் கொண்டுசெல்வதற்கு உதவும் கைப்பேசி செயலியை சென்னை ஐஐடி-யின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். ‘ஆப்ட்ரூட்’ (OptRoute) என்றழைக்கப்படும் இந்தக் கைப்பேசி செயலியானது, இடைத்தரகரோ, கட்டணமோ இல்லாமல் ஓட்டுநரையும் நுகர்வோரையும் ஒன்றிணைக்கிறது. இடைத்தரகர்கள் யாருமின்றி நுகர்வோரிடமிருந்து பணம் நேரடியாக ஓட்டுநருக்குக் கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு `3,300 கோடி கடன்: இந்தியா, ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்பந்தம்.

உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க 400 மில்லியன் டாலர் (சுமார் `3,300 கோடி) கடன்பெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சேவை விநியோகத் திட்டத்தின் முதல் துணை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்துக்கு 350 மில்லியன் டாலர் (சுமார் `2,900 கோடி) நிதியுதவிபெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்தத் திட்டத்தின் 2ஆவது துணைத் திட்டம் முதலீட்டுத் திட்டமிடல், மாநில மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்வதை ஆதரிக்கிறது. நகர்ப்புறங்களில் குடிநீர் பாதுகாப்பு, நீர்நிலைகளைப் புனரமைத்தல், நிலத்தடி நீர் அளவை நிலையாக பராமரித்தல் உள்ளிட்டவற்றையும் அந்தத் துணைத் திட்டம் ஊக்குவிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது துணைத் திட்டத்தின் கீழ், உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்கவும், சேவை விநியோகத்தை மேம்படுத்தவும், திறன்வாய்ந்த நிர்வாக முறைகளை ஆதரிக்கவும் 400 மில்லியன் டாலர் கடன்பெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2023 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin