Tnpsc Current Affairs in Tamil – 13th & 14th April 2024
1. உலகளாவிய 2024 – கல்லீரல் அழற்சி அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. WHO
ஆ. UNICEF
இ. UNDP
ஈ. WTO
- WHOஇன் உலகளாவிய 2024 – கல்லீரல் அழற்சி அறிக்கையின்படி, 2.9 கோடி பேர் ஹெபடைடிஸ் – பி மற்றும் 0.55 கோடி பேர் ஹெபடைடிஸ் – சி வகை நோயுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். உலக கல்லீரல் அழற்சி உச்சிமாநாட்டின்போது வெளியிடப்பட்ட, இந்த அறிக்கை 2030-க்குள் ஹெபடைடிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்றும் சுகாதாரம். 2022ஆம் ஆண்டில், இந்தியாவில் புதிதாக 50,000 பேர் ஹெபடைடிஸ்-பி நோய்க்கும் மேலும் 1.4 இலட்சம் பேர் ஹெபடைடிஸ்-சி நோய்க்கும் ஆளாகியுள்ளனர்; மேலும் 1.23 இலட்சம் இந்த நோய் காரணமாக இறப்பெய்தியுள்ளனர்.
2. அண்மையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியா-கஜகஸ்தான் கூட்டுப்பணிக்குழுவின் கூட்டம் நடத்தப்பட்ட இடம் எது?
அ. அஸ்தானா
ஆ. புது தில்லி
இ. அல்மாட்டி
ஈ. சென்னை
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஐந்தாவது இந்தியா-கஜகஸ்தான் கூட்டுப்பணிக்குழுவின் கூட்டம் 2024 ஏப்ரல்.08 அன்று அஸ்தானாவில் கூடியது. KD தேவால் மற்றும் தல்கட் கலியேவ் தலைமையிலான இந்தக்கூட்டம், தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் எல்லைதாண்டிய பயங்கரவாதம் உட்பட பிற பிராந்திய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்தது. பயங்கரவாதிகளின் தொழில்நுட்ப பயன்பாடு, இணையத்தை தவறாகப் பயன்படுத்துதல், தீவிரமயமாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல்போன்ற சவால்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் பலதரப்பு ஈடுபாடு ஆகியவற்றின்மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்த இருவரும் வலியுறுத்தினர்.
3. புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயான காலா அசாருக்குக் காரணமானது எது?
அ. வைரஸ்
ஆ. பாக்டீரியா
இ. புரோட்டோசோவான் ஒட்டுண்ணி
ஈ. பூஞ்சை
- ஏந்திகள்வழி பரவும் நோய்களுக்கான தேசிய மையத்தின் தரவுகளின்படி, காலா-அசார் என்றும் அழைக்கப்படும் கருங்காய்ச்சலை இந்தியா ஒழித்துள்ளது. காலா-அசார் என்பது உலகளவில் 76 நாடுகளில் காணப்படும் 2ஆவது மிகக்கொடிய புரோட்டோசோவா ஒட்டுண்ணி நோயாகும். இது பாதிக்கப்பட்ட மணல் ஈக்களால் பரவுகிறது மற்றும் முதன்மையாக வலையகச்சவ்வு அமைப்பை பாதிக்கிறது. கருங்காய்ச்சல் (Leishmaniasis) நோயானது வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் காடழிப்பு மற்றும் நகரமயமாக்கல்போன்ற சுற்றுச் சூழல் மாற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது.
4. ஜெனு குருபா பழங்குடியினர் முதன்மையாக இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிக்கின்றனர்?
அ. இமயமலைப்பகுதி
ஆ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்
இ. அந்தமான் & நிக்கோபார் தீவு
ஈ. வடகிழக்குப்பகுதி
- ஜெனு குருபா பழங்குடியினர் மேற்குத் தொடர்ச்சி மலையை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை இழந்தவர்களாவர். ‘ஜெனு’ என்றால் தேன் மற்றும் ‘குருபா’ என்பது அவர்களின் இனத்தைக் குறிக்கிறது; தேன் சேகரிப்பாளர்களாக அவர்களின் பாரம்பரிய தொழிலை அவர்களின் பெயர் பிரதிபலிக்கிறது. அவர்கள் ‘ஹதி’ என்று அழைக்கப்படும் சிறிய குடியிருப்புகளில் வாழ்கின்றனர், இடப்பெயர்ச்சி முறை சாகுபடி செய்கிறார்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்காக வனவளங்களை நம்பியுள்ளனர்.
5. 2024 – உலகளாவிய புத்தொழில் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?
அ. ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ. ஐநாவின் தொழில் வளர்ச்சி அமைப்பு
இ. உலக அறிவுசார் சொத்து அமைப்பு
ஈ. வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐநா கூட்டமைப்பு
- ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தின், 2024 – ‘குளோபல் யூனிகார்ன் இன்டெக்ஸ்’ ஆனது 2000-களில் நிறுவப்பட்ட புத்தொழில் நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது. இந்தியா, 2023இல் 67 புத்தொழில் நிறுவனங்களுடன் (2022 இல் 68ஆக இருந்தது) உலகளவில் 3ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 703 புத்தொழில் நிறுவனங்களுடன் முதலிடத்திலும் சீனா 340 புத்தொழில் நிறுவனங்களுடன் 2ஆவது இடத்திலும் உள்ளது. வான்வெளி / விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியாவுக்கு எந்தவொரு புத்தொழில் நிறுவனங்களும் இல்லை.
6. பலாவுவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தியதற்காக சென்னையில், 2024 – தூதரக நாளில் மதிப்புமிக்க, ‘மெடல் ஆஃப் ஹானர்’ வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்?
அ. சஞ்சீவ் ஜெய் நரேன்
ஆ. சசி குருமாயும்
இ. நீரஜ் சர்மா
ஈ. அமித் சர்மா
- பலாவுவுக்கான இந்தியாவின் கௌரவ தூதர் நீரஜ் ஷர்மா, தூதரக நாளின்போது HCCD-இந்தியாவின் மதிப்புமிக்க, ‘மெடல் ஆஃப் ஹானர்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். HCCD-இந்தியாவால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, உலகளாவிய உறவுகளில் கௌரவ தூதரின் முக்கிய பங்கைக் கொண்டாடியது. KL கஞ்சு, மோகன் சுரேஷ் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். 1995இல் நிறுவப்பட்ட HCCD-இந்தியா, கௌரவ தூதர்களிடையே புரிதலை ஊக்குவிக்கிறது.
7. அண்மையில், சிறுமிகள் அதிகாரமளிப்புத் திட்டத்தின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
அ. DRDO
ஆ. ISRO
இ. NTPC
ஈ. BHEL
- இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனமான NTPC லிமிடெட், அரசாங்கத்தின் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ முன்முயற்சியுடன் இணைந்த சிறுமிகளுக்கான அதிகாரமளிப்புத் திட்டத்தின் (GEM) அண்மைய பதிப்பை அறிமுகப்படுத்துகிறது. சிறுமிகளின் கற்பனைகளை வளர்ப்பதற்கும் வாய்ப்புகளை வளர்ப்பதற்கும் GEM திட்டம் 1 மாத கால பயிற்சியை வழங்குகிறது. 392 பங்கேற்பாளர்களுடன் கடந்த 2018இல் தொடங்கப்பட்ட GEM திட்டம், COVID-19 சவால்களுக்கு மத்தியிலும், இன்றுவரை 7,424 சிறுமிகளுக்குப் பயனளித்து வருகிறது.
8. 2024 – தூய்மைப் பொருளாதார முதலீட்டாளர் மன்றமானது, ஜூன் மாதத்தில், எந்த நாட்டில், செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பால் (IPEF) ஏற்பாடு செய்யப்படவுள்ளது?
அ. இந்தியா
ஆ. சிங்கப்பூர்
இ. பிரான்ஸ்
ஈ. இத்தாலி
- நிலையான உள்கட்டமைப்பு, தட்பவெப்பநிலை தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு தூய்மைப் பொருளாதார முதலீட்டாளர் மன்றத்தை 2024 ஜூனில் சிங்கப்பூரில் நடத்தவுள்ளது. EV மற்றும் சூரிய ஆற்றல் உள்கட்டமைப்பில் இந்திய முதலீட்டுத் திட்டங்களை காட்சிப்படுத்துவதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் (startup) நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
9. அண்மையில், மறதிநோய்குறித்த பிரிட்டனின் ஆராய்ச்சிக் குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
அ. சாந்த் நாக்பால்
ஆ. கைலாஷ் சந்த்
இ. அஷ்வினி கேசவன்
ஈ. கமலேஷ் குந்தி
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரும், லண்டன் பல்கலை கல்லூரியில் (UCL) மூத்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கௌரவ ஆலோசகரும் நரம்பியல் நிபுணருமான Dr அஷ்வினி கேசவன், மறதிநோய் தொடர்பான பிரிட்டனின் ஆராய்ச்சிக்குழுவின் ஒருபகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ADAPT (அல்சைமர் நோய் கண்டறிதல் மற்றும் பிளாஸ்மா pTau217) எனப்படும் அக்குழு, பயோமார்க்கர் p-tau217இல் கவனம் செலுத்தும்; இது அல்சைமர் நோயுடன் தொடர்புடைய மூளையில் காணப்படும் இரு புரதங்களின் (அமிலாய்டு & டவு) அளவை பிரதிபலிக்கிறது.
10. ‘CDP-SURAKSHA’ தளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. தோட்டக்கலை விவசாயிகளுக்கு மானியம் வழங்க
ஆ. பேரண்டத்தில் மிகப்பெரிய முப்பரிமாண வரைபடத்தை உருவாக்க
இ. வாக்காளர் பதிவு செயல்முறைகளை எளிதாக்க
ஈ. தேர்தல் முடிவுகள் குறித்த நிகழ்நேர அறிவிப்புகளை வழங்க
- தோட்டக்கலை விவசாயிகள் எளிமையான முறையில் மானியம் பெறுவதற்காக இந்திய அரசு CDP-SURAKSHA என்ற டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. PM-KISAN உடன் ஒருங்கிணைந்து செயல்படும் இது, உடனடி மானியம் வழங்குவதற்காக e-RUPI சான்றுகளைப் பயன்படுத்துகிறது. அதன் அம்சங்களில் UIDAI சரிபார்ப்பு, eRUPI ஒருங்கிணைப்பு மற்றும் ஜியோடேக்கிங் ஆகியவை அடங்கும். இதில், விவசாயிகள் நடவுப்பொருட்களை ஆர்டர் செய்யலாம், தங்கள் பங்களிப்பை வழங்கலாம் மற்றும் மானியம் தானாகவே பெறலாம்.
11. அண்மையில், US-India Strategic and Partnership Forum (USISPF)மூலம் US-India Tax Forumஇன் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. MN ஸ்ரீனிவாசு
ஆ. தருண் பஜாஜ்
இ. நவீன் அகர்வால்
ஈ. அஜித் சக்சேனா
- முன்னாள் வருவாய் செயலர் தருண் பஜாஜ், தற்போது அமெரிக்க-இந்தியா வரி மன்றத்தின் தலைவராக உள்ளார். அமெரிக்க-இந்தியா உத்திகள் மற்றும் கூட்டாண்மை மன்றத்திற்கு (USISPF) ஓர் ஒருங்கிணைந்த நிதி மற்றும் வரி விதிப்பு நிபுணத்துவத்தை அவர் கொண்டு வருவார். ஆலோசகராக பணியாற்றிவந்த அவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டது, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
12. அண்மையில் ISRO தலைவர் S சோம்நாத் அறிவித்தபடி, இந்தியாவின் சந்திரயான்-4 திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. நிலவின் பாறை மற்றும் மண்ணைச் சேகரித்து அவற்றை அறிவியல் ஆய்வுக்காக மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவது
ஆ. நிலவில் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவது
இ. நிலவில் நீர் உள்ளதா என்பதை ஆராய்வது
ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை
- இந்தியாவின் சந்திரயான்-4 திட்டத்தின் முதன்மை நோக்கமானது நிலவின் பாறை மற்றும் மண்ணைச் சேகரித்து அவற்றை அறிவியல் பகுப்பாய்வுக்காக மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவதாகும். நிலவில் பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கம், நிலவின் மேற்பரப்பிலிருந்து வெற்றிகரமாக வெளியேறுதல், நிலவின் சுற்றுப் பாதையில் நிலவும் சிக்கல்களை களைதல் மற்றும் மாதிரிகள் பூமிக்குப் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்தல் ஆகியவையும் இந்தத் திட்டத்தில் அடங்கும். அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவின் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவந்துள்ளன.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. விண்வெளிக்கு முதல் இந்தியராக சுற்றுலா செல்லும் கோபி தோட்டக்குரா: ஆந்திரத்தைச் சேர்ந்தவர்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் புளூ ஆர்ஜின் நிறுவனம்மூலம், ஆந்திரத்தைச் சேர்ந்த கோபி தோட்டக்குரா என்பவர் விண்வெளிக்குச் சுற்றுலா செல்லவுள்ளார். இதன்மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
2. இந்தியாவில் 23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான மரங்கள் அழிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்.
இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளில் 23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வன கண்காணிப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள்மூலம் வனப்பரப்பு குறித்து தகவல்களை, ‘சர்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
உணவு மற்றும் உழவு நிறுவனம் (FAO) வெளியிட்ட தரவுகளில், கடந்த 2015 முதல் 2020 வரை இந்தியாவில் ஆண்டுதோறும் 6.68 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மர அழிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
நாட்டிலேயே அதிகப்படியான மரங்கள் அழிக்கப்படும் மாநிலங்களில் அஸ்ஸாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில் முறையே மிசோரம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் உள்ளன என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. 14-04-2024: ‘சட்டமேதை’ ‘அண்ணல்’ B R அம்பேத்கரின் 134ஆவது பிறந்தநாள்.
இந்திய அரசமைப்புச் சாசனத்தின் வரைவுக் குழுத் தலைவராக விளங்கிய பி ஆர் அம்பேத்கர், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் முதல் சட்ட அமைச்சராகவும் இருந்தார். சாதி சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச்சின்னமாக விளங்கிய அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்.14ஆம் தேதி தமிழ்நாடு அரசால் சமத்துவ நாள் எனக் கொண்டாடப்பட்டு வருகிறது.