TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 11th October 2023

1. ‘வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை – 2023’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. WEF

ஆ. IMF

இ. NITI ஆயோக்

ஈ. UNCTAD 🗹

  • சமீபத்திய ‘வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை – 2023’இன்படி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அறிக்கையை வெளியிட்ட ஐநா வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அவை (UNCTAD), இந்த வளர்ச்சியை தடைபடுத்தப்பட்ட வேகம் என்று வகைப்படுத்தியுள்ளது. உலகளாவிய மந்தநிலை என்பது பொதுவாக வளர்ச்சி வீதம் 2.5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகக் குறையும் போது ஏற்படும் என வரையறுக்கப்படுகிறது.

2. பெர்சிவெரென்ஸ் ரோவர் ஆனது அண்மையில் எந்தக் கோளில் உள்ள ‘டஸ்ட் டெவில்’ஐ கண்டுபிடித்தது?

அ. வியாழன்

ஆ. செவ்வாய் 🗹

இ. சனி

ஈ. வெள்ளி

  • செவ்வாய்க் கோளின் தூசுச் சுழற்காற்று, பெர்சிவெரன்ஸ் ஊர்திகலனால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய்க் கோளில் உள்ள ஒரு தூசுச் சுழற்காற்று தூசுச் சூறாவளியை ஒத்திருக்கிறது; இது பூமியில் காணப்படும் சூறாவளியை ஒத்துள்ளது; இருப்பினும் செவ்வாய்க்கோளின் தூசுச் சுழற்காற்றுகள் பொதுவாக நமது கோளில் உள்ளதை விட சிறியதாக உள்ளன. ஆனால் சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒன்று சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது.

3. கீழ்காணும் எந்த மாநிலத்தில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. தெலுங்கானா 🗹

ஆ. திரிபுரா

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஜார்கண்ட்

  • அண்மையில், மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்மூலம் தெலுங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தெலுங்கானாவில் உள்ள முலுகு மாவட்டத்தில், `889.07 கோடி மதிப்பீட்டில் சம்மக்கா சரகா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமையவுள்ளது.

4. ‘சம்மக்கா சரளம்மா ஜாதரா’ பழங்குடியினர் திருவிழாவை நடத்துகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. மத்திய பிரதேசம்

இ. தெலுங்கானா 🗹

ஈ. பீகார்

  • தெலுங்கானாவில் பழங்குடியின மக்கள் அதிகம் கூடும் உலகின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாகப் புகழ்பெற்ற ‘சம்மக்கா சரளம்மா ஜாதரா’ என்று அழைக்கப்படும் நடைபெற்று வருகிறது. கோயா மக்கள்மீது வரிவிதித்த உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 13ஆம் நூற்றாண்டில் போராடிய தாய்-மகளின் நினைவை இது போற்றுகிறது. ஜாதரா அல்லது யாத்திரை என்பது கோயா பழங்குடிகளால் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்கு இணங்க நடத்தப்படும் சடங்குகளைக் கொண்டுள்ளது.

5. PUSA-44 நெல் வகையை பயிரிட தடை விதித்த மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. பஞ்சாப் 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. கேரளா

  • பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், அதிக நீர் நுகர்வு மற்றும் வைக்கோல் உற்பத்தி காரணமாக, அடுத்த ஆண்டு முதல் PUSA-44 நெல் இரகத்தை பயிரிட தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக, இந்த வகை நெல், மாநிலத்தின் மொத்த நெல் சாகுபடி பரப்பளவில் 70 முதல் 80 சதவீதமாக இருந்தது.

6. ‘ட்ரோன் (திருத்தம்) விதிகள் 2023’ஐ அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் 🗹

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • ‘ட்ரோன் (திருத்தம்) விதிகள், 2023’ஐ மத்திய சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டில் ட்ரோன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் எளிமைப்படுத்துவதற்கும் கடவுச்சீட்டின் கட்டாயம் என்ற விதியை நீக்குகிறது. அதற்குப்பதிலாக, சிவில் வான்போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையின்படி, தனிநபர்கள் கடவுச்சீட்டு வைத்திருக்கவில்லை என்றால், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றை வழங்கலாம்.

7. 2023ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நர்கீஸ் முகமதி சார்ந்த நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. ஈரான் 🗹

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. ஓமன்

  • நார்வே நோபல் குழுமம் ஈரானிய ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியுள்ளது. “ஈரானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது போராட்டம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அவரது போராட்டத்திற்காக” அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘டகார் பிரகடனம்-2023’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. இணையவெளி பாதுகாப்பு

ஆ. பயங்கரவாத எதிர்ப்பு

இ. தட்பவெப்பநிலை மாற்றம் 🗹

ஈ. கல்வி

  • குறைந்த வளர்ச்சியடைந்த 46 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், தட்பவெப்பநிலை மாற்றம் 2023 – டக்கார் பிரகடனத்தை வெளியிட்டனர். இது அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பிரதிநிதிகளின் 28ஆவது மாநாட்டிற்கான (COP28) தயாரிப்பில் அக்கறை காணும் தலைப்புகளை சிறப்பித்துக்காட்டுகிறது. ‘டக்கார் பிரகடனம்’ CO2 (கரியமில வாயு) உமிழ்வைக் குறைப்பதற்கான உடனடி உலகளாவிய முன்னெடுப்புகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

9. ‘மாறும் தட்பவெப்பநிலையில் இடம்பெயர்ந்த குழந்தைகள்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. UNICEF 🗹

இ. CRY

ஈ. ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்

  • ஐநா குழந்தைகள் நிதியமானது (UNICEF) சமீபத்தில், “மாறும் தட்பவெப்பநிலையில் இடம்பெயர்ந்த குழந்தைகள்” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2016 மற்றும் 2021க்கு இடையில், வெள்ளம், புயல், வறட்சி மற்றும் காட்டுத்தீ காரணமாக 43 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.

10. இந்திய வான்படைக்கு இலகுரக போர் விமானமான தேஜாஸ் போர் விமானத்தை வழங்குகிற அமைப்பு எது?

அ. DRDO

ஆ. HAL 🗹

இ. BDL

ஈ. BHEL

  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) LCA தேஜாஸ் போர் விமானத்தின் இரட்டை இருக்கை வகையை இந்திய வான்படையிடம் ஒப்படைத்தது. இலகுரக போர் விமானமான தேஜாஸ் ஓர் அதிநவீன, இலகுரக, அனைத்து வானிலையிலும் இயங்கக் கூடிய, பன்முகத்திறன்கொண்ட 4.5ஆம் தலைமுறை விமானம் ஆகும். HAL ஆனது 18 பயிற்சியாளர்களில் முதல் எட்டு பயிற்சியாளர்களை 2024ஆம் ஆண்டின் மத்தியில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. `45,696 கோடி செலவில் 83 LCA தேஜாஸ் Mk-1A போர் விமானங்களை வாங்குவதற்கு 2021ஆம் ஆண்டில் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கிஷோர் குமார் ஜெனா சார்ந்த விளையாட்டு எது?

அ. குத்துச்சண்டை

ஆ. ஈட்டியெறிதல் 🗹

இ. துப்பாக்கிச் சுடுதல்

ஈ. டென்னிஸ்

  • இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா 88.88 மீ தூரம் ஈட்டியெஎறிந்து ஆசிய விளையாட்டு பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய தடகள வீரர் கிஷோர் குமார் ஜெனா, அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு 85.50 மீட்டர் என்ற தானியங்கி தகுதிக் குறியைத் தாண்டி, 87.54 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

12. 2023ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஜான் ஃபோஸ் சார்ந்த நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஜெர்மனி

இ. நார்வே 🗹

ஈ. ஆஸ்திரேலியா

  • 2023ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. “அவரது அற்புதமான நாடகங்கள் மற்றும் உரைநடையில் வெளிப்படுத்தப்படாததை வெளிப்படுத்தியாதற்காக” அவர் இம்மதிப்புமிக்க விருதைப்பெற்றுள்ளார். நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளை அவர் எழுதுவதில் புகழ் பெற்றவர். அவரது முதல் நாவல் 1983ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘Raudt, svart’ ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இராஜஸ்தான் மாநிலத்தில் சூரிய ஒளி மின்னழுத்த திட்டம் அமைக்க NLCஉடன் ஒப்பந்தம்.

நெய்வேலி NLC இந்தியா நிறுவனம் ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனத்திலிருந்து 810 மெகாவாட் சூரிய ஒளி மின்னழுத்த மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒரு ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை நிறுவிய முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம் NLC இந்தியா நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 2 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்கி வருகிறது. இந்தத்திட்டம் உட்பட 2030-க்குள் 6 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனை அடையும் இலக்குடன் அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

2. கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை.

தமிழக கடலோரப் பகுதிகளில், ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் இரண்டு நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு கடல்வழியாக புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு பின் நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை காவல்துறையினரால் நடத்தப்படுகிறது. இதன்மூலம் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin