TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 11th & 12th November 2023

1. “Building trust in science” என்பது நவம்பர்.10 அன்று கொண்டாடப்பட்ட எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?

அ. உலக கல்வி நாள்

ஆ. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள் 🗹

இ. உலக இளைஞர் மேம்பாட்டு நாள்

ஈ. உலக மாணவர் நாள்

  • அறிவியல் மற்றும் அமைதிக்கான பன்னாட்டு வாரமானது ஆண்டுதோறும் நவ.09-15 வரை கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் 1986ஆம் ஆண்டில் சர்வதேச அமைதி ஆண்டின் ஒரு பகுதியாக அனுசரிக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு ஐநா பொது அவையால் இந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள் 2023 நவம்பர்.10 அன்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருள், “Building trust in science” என்பதாகும்.

2. இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டின் கடற்படையுடன் இணைந்து BONGOSAGAR-23 மற்றும் CORPAT ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம் 🗹

இ. பிரான்ஸ்

ஈ. ஈரான்

  • இருதரப்பு பயிற்சியான BONGOSAGAR-23இன் 4வது பதிப்பும் இந்திய மற்றும் வங்காளதேச கடற்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைந்த ரோந்துப்பயிற்சியான CORPATஇன் 5ஆவது பதிப்பு வடக்கு வங்காள விரிகுடாவில் நடைபெற்றது. இப்பயிற்சியின்போது, இரு கடற்படைகளின் கப்பல்களும் விமானங்களும் கூட்டாக சர்வதேச கடல் எல்லைக்கோடு வழியாக ரோந்துசென்று, கடல்சார் பயிற்சிகளில் ஈடுபட்டன.

3. உலகின் முதல் ரோபோ தலைமைச் செயல் அதிகாரியின் பெயர் என்ன?

அ. டினா

ஆ. மிகா 🗹

இ. யோ-யோ

ஈ. ஹாரி

  • கொலம்பியாவின் கார்டஜீனாவைச் சார்ந்த டிக்டேடார், ரோபோவான மிகாவை அதன் தலைமைச் செயலதிகாரியாக நியமித்துள்ளது. மிகா என்பது ஹான்சன் ரோபோடிக்ஸ் மற்றும் டிக்டேடார் இடையேயான ஆராய்ச்சித் திட்டமாகும். இந்த ரோபோ நிறுவனத்தின் மதிப்பைக் குறிக்கும் விதமாக தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. ஹான்சன் ரோபாட்டிக்ஸ் நிறுவனமானது பிரபல ரோபோவான சோபியாவையும் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

4. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கொடுப்பனவு திரட்டிமூலம் (Payment Aggregator), அதிகபட்ச எவ்வளவு மதிப்புக்கு பொருட்கள் மற்றும் சேவைகளில் வர்த்தகம் செய்யலாம்?

அ. ரூ.10 இலட்சம்

ஆ. ரூ.25 இலட்சம் 🗹

இ. ரூ.50 இலட்சம்

ஈ. ரூ.1 கோடி

  • எல்லைதாண்டிய கொடுப்பனவு இயங்குதள வழங்குநரான PayGlocal, ரிசர்வ் வங்கியிடமிருந்து கொடுப்பனவு திரட்டிக்கான உரிமத்திற்காக கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியிடமிருந்து அடுத்த சுற்று அனுமதி கிடைத்த பிறகு, இணையவழி கட்டணச் செயலாக்கத்திற்காக நிறுவனம் அதன் தளத்தில் வணிகர்களை இணைக்கவியலும். இக்கொடுப்பனவு திரட்டிகள்மூலம் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகபட்ச மதிப்பு `25 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

5. நடப்பு நிதியாண்டில் பசுமைப் பத்திரங்கள்மூலம் எவ்வளவு மதிப்புக்குக் கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது?

அ. ரூ.10000 கோடி

ஆ. ரூ.20000 கோடி 🗹

இ. ரூ.50000 கோடி

ஈ. ரூ.75000 கோடி

  • 2023-24ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் இறையாண்மை பசுமைப்பத்திரங்களில் எந்தக்கட்டுப்பாடுகளும் இன்றி முதலீடு செய்ய வெளிநாடுவாழ் இந்தியர்களை அனுமதிக்கும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பசுமைப்பத்திரங்கள்மூலம் `20,000 கோடி அளவுக்குக் கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுத்தமான போக்குவரத்து மற்றும் பசுமைக் கட்டிடங்கள் ஆகியவை பசுமைத் திட்டங்களின் சிற்சில எடுத்துக்காட்டுகளாகும்.

6. இந்தியாவில், ஆண்டுதோறும், ‘தேசிய கல்வி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் 9

ஆ. நவம்பர் 11 🗹

இ. நவம்பர் 13

ஈ. நவம்பர் 15

  • விடுதலை இந்தியாவின் முதல் கல்வியமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர்.11 இந்தியா முழுவதும் தேசிய கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. அவருக்குக் கடந்த, 1992ஆம் ஆண்டில், ‘இந்திய மாமணி’ விருது வழங்கப்பட்டது. அபுல் கலாம் ஆசாத் 1888 நவம்பர் 18இல் பிறந்தார். அவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், கல்வியாளர், அறிஞர் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் என பன்முகத்தவராக இருந்தார்.

7. SC/ST/EBC மற்றும் OBCக்கான இடஒதுக்கீட்டை 50%லிருந்து 65 சதவீதமாக உயர்த்தும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில சட்டமன்றம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. பீகார் 🗹

ஈ. மேற்கு வங்காளம்

  • கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வேலைவாய்ப்பில் பட்டியலின சாதிகள் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீட்டை 50%லிருந்து 65 சதவீதமாக உயர்த்தும் சட்டத்திற்கு பீகார் மாநில சட்டமன்றம் கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) தற்போதைய பத்து சதவீத இடஒதுக்கீட்டையும் கணக்கில் கொண்டால், மொத்த இடஒதுக்கீடு 75%ஆக இருக்கும்.

8. ‘தினைகுறித்த சர்வதேச மாநாட்டை’ நடத்தும் நகரம் எது?

அ. புவனேசுவரம் 🗹

ஆ. கொல்கத்தா

இ. சென்னை

ஈ. பெங்களூரு

  • சர்வதேச தினை மாநாடு சமீபத்தில் புவனேசுவரத்தில் நடத்தப்பட்டது. தினைகளுக்கு உலகளவில் முக்கியத்துவம் வாயந்த உத்தியை வகுப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். ஒடிசா இதற்கான முன்னெடுப்பை வழிநடத்துகிறது. “Millets – Ancient Grains for Modern Challenges” என்ற கருப்பொருளின்கீழ் நடந்த இந்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மரக்கன்றை நட்டு வைத்து தொடக்கி வைத்தார்.

9. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அங்கீகரித்துள்ள வடகிழக்கு மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. நாகாலாந்து 🗹

இ. சிக்கிம்

ஈ. மேற்கு வங்காளம்

  • அண்மையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு நாகாலாந்து மாநில சட்டமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இது கடந்த இருபது ஆண்டுகளாக நாகாலாந்து மாநிலத்தில் நகராட்சித் தேர்தல்கள் நடைபெறாமல், பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அப்போதும், நாகாலாந்து நகராட்சி மசோதா, 2023 ஆனது நகராட்சி அமைப்புகளில் தலைவர் பதவியில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கியுள்ளது.

10. அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட, ‘Ixchiq’ என்பது கீழ்காணும் எந்த நோய்க்கான தடுப்பூசியாகும்?

அ. COVID-19

ஆ. டெங்கு

இ. சிக்குன்குனியா 🗹

ஈ. மலேரியா

  • சிக்குன்குனியாவுக்கென முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள ‘இக்சிக்’ என்ற தடுப்பூசிக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) ஒப்புதலளித்துள்ளது. சிக்குன்குனியா என்பது பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதன்மூலம் பரவும் வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். வால்னேவா ஆஸ்திரியா GmbH தயாரித்த இத்தடுப்பூசி, வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே தவனையாக வழங்கப்படுகிறது.

11. பெண் தொழில்முனைவோரின் திறனை மேம்படுத்துவதற்காக DAY-NRLM திட்டமானது கீழ்காணும் எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. RBI

ஆ. NABARD

இ. SIDBI 🗹

ஈ. NHB

  • ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழுள்ள தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமும் (DAY-NRLM) இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியும் (SIDBI) இணைந்து ஈராண்டுகளுக்குச் செல்லத்தக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பெண் தொழில்முனைவோரின் திறன்மேம்பாட்டிற்காக நம்பகமான மற்றும் உணர்திறன்வாய்ந்த ஓர் ஆதரவு கட்டமைப்பை நிறுவுவதே இதன் முதன்மையான மையமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிலக்கரி இல்லாத சுரங்கங்களில் நீரை சேமித்து மின்சாரம் தயாரிக்க திட்டம்.

நிலக்கரி இல்லாத நிலக்கரி சுரங்கங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி புனல்மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மாற்று எரிசக்தி ஆதாரத்தை பன்முகப்படுத்துவது இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

2. கூர்நோக்கு இல்லங்கள்: முதலமைச்சரிடம் பரிந்துரைகளை வழங்கினார் நீதிபதி சந்துரு!

தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பில்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன்படி இதுகுறித்து ஆய்வுசெய்த நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, அதற்கான அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

3. ஓங்கில்கள் வளங்காப்பு திட்டம்.

இந்திய அரசின் ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விடங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஓங்கில்கள் வளங்காப்பு திட்டத்தினை செயல்படுத்தச் செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இராமேசுவரம் முதல் கன்னியா குமரி வரை நீண்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியானது, 140 கிமீ நீளமுள்ள அதன் கடற்கரையில் மனித காலடித் தடம்படாத 21 தொடர் தீவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் ஸ்டெனோ பிரெடானென்சிஸ், ஸ்டெனெல்லா அட்டனுவாட்டா, ஸ்டெனெல்லா லாங்கிரோஸ்ட்ரிஸ் மற்றும் டெல்பினஸ் டெல்பிஸ் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட ஓங்கில் இனங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

4. பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்!

ஈரோட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 0.77 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தப் பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து, இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இந்தப் பறவைகள் சரணாலயத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கிராமத்தினரும் அதைச்சுற்றியுள்ள அண்டை கிராமத்தினரும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2023 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin