TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 10th May 2024

1. வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழியங்கும் மருந்துத்துறையானது அண்மையில் எந்த இடத்தில், ‘MEDITECH STACKATHON-2024’ஐத் தொடங்கியது?

அ. புது தில்லி

ஆ. சென்னை

இ. ஹைதராபாத்

ஈ. இந்தூர்

  • வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழியங்கும் மருந்துத்துறையின் டாக்டர் அருணிஷ் சாவ்லா, CIIஉடன் இணைந்து புது தில்லியில், ‘MEDITECH STACKATHON-2024’ஐத் தொடக்கினார். தெரிவுசெய்யப்பட்ட மருத்துவ சாதனங்களின் மதிப்புச்சங்கிலியை பகுப்பாய்வு செய்வதன்மூலம் இந்தியாவின் மருத்துவ தொழில்நுட்பத் துறையை உருமாற்றுவதை இந்த முன்னெடுப்பு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் மருத்துவ தொழில்நுட்பத் துறையானது 28% ஆண்டு வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. 2030ஆம் ஆண்டளவில் $50 பில்லியன் அமெரிக்க டாலர்களை அது எட்டும் என நம்பப்படுகிறது.

2. திரிபுரா மாநிலத்தின் முதல் பன்னாட்டு கிரிக்கெட் அரங்கமானது அதன் எந்த மாவட்டத்தில் கட்டப்படுகிறது?

அ. தெற்குத் திரிபுரா

ஆ. மேற்குத் திரிபுரா

இ. தலாய்

ஈ. கோமதி

  • திரிபுரா மாநில கிரிக்கெட் சங்கம் மேற்குத் திரிபுராவின் நரசிங்கரில் அம்மாநிலத்தின் முதல் பன்னாட்டு கிரிக்கெட் அரங்கத்தை அமைக்கவுள்ளது. 2025 பிப்ரவரிக்குள் திறக்கப்படும் இம்மைதானம், முக்கிய கிரிக்கெட் நிகழ்வுகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. ‘Spektr-RG’ என்றால் என்ன?

அ. அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்

ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கடல் இனங்கள்

இ. செயற்கை ஓபியாய்டு மருந்து

ஈ. விண்வெளி ஆய்வகம்

  • ‘Spektr-RG’ விண்வெளி ஆய்வகத்தைப் பயன்படுத்தி வானியலாளர்களால் ஒரு புதிய துடிப்பு விண்மீன் (pulsar) கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2019இல் தொடங்கப்பட்ட, ‘Spektr-RG’ என்பது ஒரு ஜெர்மன்-ரஷ்ய கூட்டிணைவில் உருவாக்கப்பட்ட உயராற்றல் வானியற்பியல் ஆய்வகமாகும்; இது பேரண்டத்தை X-ரே வரம்பில் ஆய்வுசெய்கிறது. இது 1.5 மில்லியன் கிமீட்டர் தொலைவில் உள்ள சூரியன்-பூமி அமைப்பின் வெளிப்புற லாக்ரேஞ்ச் புள்ளியை (L2) ஆறுமாத காலத்தில் சுற்றி வருகிறது. இந்த ஆய்வகத்தின் பெயர், ‘Spektr-Rentgen-Gamma’ஐ குறிக்கிறது. இது கஜகஸ்தானின் பைகோனூரிலிருந்து புரோட்டான்-M ஏவுகலம்மூலம் ஏவப்பட்டது.

4. அண்மையில், “Recipe for a Livable Planet: Achieving Net Zero Emissions in the Agrifood System” அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. IMF

இ. WMO

ஈ. ILO

  • உலக வங்கியின், “Recipe for a Livable Planet: Achieving Net 0 Emissions in the Agrifood System” என்ற அறிக்கை, வேளாண் உணவு முறையில் நிகர சுழிய உமிழ்வை அடைவதற்கான உத்திகளைக் கோடிட்டுக்காட்டுகிறது. இது வேளாண் உணவு முறையின் நோக்கத்தை பண்ணையிலிருந்து மேசைவரை வரையறுக்கிறது. வளரும் நாடுகள் மற்றும் சீனா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகியவை முதன்மை உமிழ்பவர்களாக இருப்பதால், உலகளாவிய பைங் குடில் இல்ல வாயு வெளியேற்றத்தில் அவை குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன. இந்தியாவின் உமிழ்வு முதன்மையாக கால்நடைகளிலிருந்து வருகிறது. காலநிலை நிதியுதவி அதிகரித்த போதிலும், வேளாண் உணவுத் திட்டங்கள் அந்நிதிகளில் 4.3% மட்டுமே பெறுகின்றன. CO2 உமிழ்வைக் குறைப்பதற்காக 2030ஆம் ஆண்டுக்குள் முதலீடுகளை ஆண்டுக்கு $260 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

5. அண்மையில், செமி கிரையோஜெனிக் எஞ்சின் (SCE)-200க்கான முதல் ப்ரீபர்னர் இக்னிஷன் சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. HAL

ஈ. NASA

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) மகேந்திரகிரியில் அமைந்துள்ள IPRCஇல் உள்ள செமி கிரையோ ஒருங்கிணைந்த எஞ்சின் சோதனை மையத்தில் (SIET) 2024 மே.02 அன்று செமி-கிரையோஜெனிக் எஞ்சின் (SCE)-200க்கான முதல் ப்ரீபர்னர் இக்னிஷன் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ப்ரீ-பர்னர் இக்னிஷன் சோதனை என்பது டர்போபம்ப்களைத் தவிர்த்த, எஞ்சின் ஆற்றல் மட்ட முறைமையின் முழு நிரப்புக் கூறாகும். ப்ரீ-பர்னரால் சுமூகமாகவும் தொடர்ச்சியாகவும் பற்றவைக்க முடியும் என்பதை சோதனை நிரூபித்தது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) ட்ரைதிலாலுமினியம் மற்றும் ட்ரைதைல்போரான் ஆகியவற்றை இணைத்து செமி-கிரையோஜெனிக் எஞ்சினைப் பற்றவைக்க ஒரு தொடக்கநிலை எரிபொருளை உருவாக்கியது. ISROஇன் 2000 kN செமி-கிரையோஜெனிக் எஞ்சினில் முதன்முறையாக இந்த எரிபொருள் பயன்படுத்தப்பட்டது.

6. இந்தியாவின் எந்த இரு பகுதிகளுக்கு இடையே ஷிங்குன் லா சுரங்கப்பாதை அமைந்துள்ளது?

அ. காங்க்ரா பள்ளத்தாக்கு & ஸ்பிட்டி பள்ளத்தாக்கு

ஆ. நூப்ரா பள்ளத்தாக்கு & பார்வதி பள்ளத்தாக்கு

இ. லாஹவுல் பள்ளத்தாக்கு மற்றும் சன்ஸ்கர் பள்ளத்தாக்கு

ஈ. பட்ராடு பள்ளத்தாக்கு & பாங்கி பள்ளத்தாக்கு

  • இமாச்சல பிரதேச மாநிலத்தின் லாஹவுல் பள்ளத்தாக்கையும் லடாக்கின் சன்ஸ்கர் பள்ளத்தாக்கையும் இணைக்கும் 16,580 அடி உயரங்கொண்ட ஷிங்கு-லா கணவாயின்கீழ் 4.1 கிமீட்டர் நீளமுள்ள ஷிங்குன் லா சுரங்கப்பாதையை எல்லைப்புற சாலைகள் அமைப்பு (BRO) அமைக்கவுள்ளது. இது உலகின் மிகநீளமான உயரமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாக இருக்கும். இதற்கான செலவு மதிப்பீடு `1,681.5 கோடியாகும்.

7. அண்மையில், 2024 – உலக புலம்பெயர்வு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு

ஆ. உலக வர்த்தக அமைப்பு

இ. உலக வங்கி

ஈ. சர்வதேச கடல்சார் அமைப்பு

  • சர்வதேச புலபெயர் அமைப்பு அதன் 2024 – உலக புலம்பெயர்வு அறிக்கையை வெளியிட்டது; இது உலகளாவிய புலம்பெயர்வின் முக்கிய காரணிகள் என மோதலையும் தட்பவெப்பநிலை மாற்றத்தையும் கூறுகிறது. உலகளவில் சுமார் 281 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இந்தியாவில், தட்பவெப்பநிலையின் தாக்கங்கள் இராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாழும் மக்களை புலம்பெயர தூண்டுகிறது. UAE, USA மற்றும் சவூதி அரேபியா ஆகிய முக்கிய இடங்களுடன் இந்தியா அதிக புலம்பெயர்ந்தோரை (18 மில்லியன்) கொண்டுள்ளது.

8. 2024 – உலக தலசீமியா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Be Aware

ஆ. Empowering Lives, Embracing Progress

இ. Addressing Health Inequalities

ஈ. The dawning of a new era for thalassaemia

  • உலக தலசீமியா நாளானது ஆண்டுதோறும் மே.08 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது தலசீமியா, மரபணு இரத்தக் கோளாறு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா தலைமையில், இந்தக் கோளாறைச் சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் தடுப்பதை வலியுறுத்தி புது தில்லியில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பானோஸ் எங்லெசோஸ் தனது மகன் ஜார்ஜின் நினைவாக 1994இல் இந்நாளை நிறுவினார். 2024இல் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Empowering Lives, Embracing Progress: Equitable and Accessible Thalassaemia Treatment for All” என்பதாகும். இரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜன் போக்குவரத்துக்கு முக்கியமான ஹீமோகுளோபின் உற்பத்தியை தலசீமியா கோளாறு பாதிக்கிறது.

9. அண்மையில், ‘ஸ்கூல் ஆன் வீல்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. மணிப்பூர்

ஆ. அஸ்ஸாம்

இ. மிசோரம்

ஈ. நாகாலாந்து

  • இனக்கலவரம் காரணமாக நிவாரண முகாம்களில் உள்ள மாணாக்கர் கல்வி பயில்வதற்காக மணிப்பூர் அரசாங்கம் “நடமாடும் பள்ளிகள்” என்ற திட்டத்தைத் தொடக்கியுள்ளது. நூலகம், கணினிகள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் கொண்ட இந்த ‘நடமாடும் பள்ளி’ திட்டத்தை அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கே தொடக்கி வைத்தார். கடந்த ஆண்டு மே.03 அன்று தொடங்கிய கலவரம் காரணமாக மாணாக்கரின் கல்வியில் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்வதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் நிவாரண முகாம்களில் உள்ள மாணாக்கர்க்கு தேவையான போதனைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. சமீபத்தில், பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் எல்லைகளை மறுமதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுத்த மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. கேரளா

  • பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் பரப்பைக் குறைத்து அதன் எல்லைகளை முற்றிலுமாக மறுமதிப்பீடு செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 720 ச.கிலோமீட்டர் பரப்பளவில், தமிழ்நாட்டிலும் (முதன்மையாக திருவள்ளூர் மாவட்டம்) ஆந்திர பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது.
  • சென்னைக்கு வடக்கே 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது வங்காள விரிகுடாவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா தீவால் பிரிக்கப்பட்டுள்ளது. ஆரணி, காலங்கி மற்றும் சுவர்ணமுகி உட்பட மூன்று முக்கிய ஆறுகளின் பங்களிப்பால், இது பல்வேறு நீர்வாழ் மற்றும் பறவைகளின் சரணாலயமாக திகழ்கிறது. மேலும் சூறாவளிகளின்போது வெள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் இது செயல்படுகிறது.

11. அண்மையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே முதல் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. கான்பெரா

ஆ. புது தில்லி

இ. மெல்போர்ன்

ஈ. சென்னை

  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் முதல் கூட்டுக் குழுக் கூட்டத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் நடத்தின. இந்திய வர்த்தகச் செயலர் சுனில் பார்த்வால் தலைமையிலான குழு, ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் துணைச்செயலர் ஜார்ஜ் மினாவைச் சந்தித்தது. இந்திய-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் நடைபெற்ற இந்த முதல் கூட்டுக் குழுக் கூட்டத்தில், சந்தை அணுகல் பிரச்சினைகள் உள்ளிட்ட செயல்பாட்டு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவரித்தனர். கடலோர சுற்றுலா உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள், முக்கியமான கனிமங்கள் மற்றும் இந்தியாவில் இறால்களுக்கான நோய் இல்லாத மண்டலங்களை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

12. அண்மையில், செலுத்துத் தொகையாக $100 பில்லியன் டாலர்கள் பணம் பெற்ற முதல் நாடு எது?

அ. மியான்மர்

ஆ. இந்தியா

இ. நேபாளம்

ஈ. சிங்கப்பூர்

  • 2022–சர்வதேச புலம்பெயர் அமைப்பு அறிக்கையின்படி, $100 பில்லியன் டாலர்களுக்கு மேல் தாயகத்துக்குப் பணம் அனுப்பியதன்மூலம் வெளிநாடுவாழ் இந்திய மக்கள் சாதனை படைத்துள்ளனர். மற்ற நாட்டினரைவிட இந்தியர்கள் அதிகபட்சமாக $111 பில்லியன் டாலர்கள் பணத்தைத் தாயகத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து மெக்ஸிக்கோ இரண்டாமிடத்தில் உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அம்பேத்கர் முன்னோடித் திட்டம்.

அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டத்தின்கீழ் 1303 ஆதிதிராவிட மகளிர் மற்றும் இளைஞர்கள் தொழில் முனவோர் ஆகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 35% தொகை அரசு மானியமாக வழங்கப்படுகிறது. அத்துடன், 65% மூலதன தொகைக்குரிய வங்கிக்கடன் வட்டியில் 6% வட்டி மானியம் கொடுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!