Tnpsc Current Affairs in Tamil – 10th January 2024
1. நடப்பு 2024ஆம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படும் புவி சுழற்சி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Celebrating Earth’s Natural Beauty
ஆ. Recognizing Human Achievements in Space Exploration
இ. Honoring the Discovery of Our Planet’s Movement
ஈ. Promoting Environmental Conservation
- ஒவ்வோர் ஆண்டும் ஜன.08 அன்று புவி சுழற்சி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பூமி அதன் அச்சில் சுற்றுகிறது என்பது இந்தத் தேதியில்தான் கண்டறியப்பட்டது. நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் புவி சுழற்சி நாளுக்கானக் கருப்பொருள், “Honoring the Discovery of Our Planet’s Movement” என்பதாகும். இந்தக் கருப்பொருள் பூமியின் சுழற்சியைப் புரிந்து கொள்வதற்கான நமது பயணத்தையும், பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலில் இது ஏற்படுத்திய தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
2. அண்மையில், “யோக்கியஸ்ரீ” என்ற விரிவான சமூக நலத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
அ. மேற்கு வங்காளம்
ஆ. ஆந்திர பிரதேசம்
இ. ஜார்கண்ட்
ஈ. பீகார்
- மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அண்மையில், “யோக்கியஸ்ரீ” என்ற சமூகநலத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இது மாநிலத்தில் உள்ள பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மாணாக்கர்க்கு இலவச பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பானது நுழைவு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு மாணாக்கரைத் தயார்படுத்துவதில் கவனஞ்செலுத்துகிறது. ‘யோக்கியஸ்ரீ’ திட்டத்தில் மேற்கு வங்கம் முழுவதும் ஐம்பது பயிற்சி மையங்களை நிறுவுதல், SC மற்றும் ST மாணாக்கர்க்கு கட்டணமில்லா பயிற்சியளிப்பது, போட்டித்தேர்வுகளுக்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஆகியவை அடங்கும்.
3. அண்மையில் அறிவியலாளர்களால் வடக்குக் கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு, “கோர விலங்கு” என்று பெயரிடப்பட்ட, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட, ‘மாமிச உண்ணும் புழுவின்’ பெயர் என்ன?
அ. Arcticus wormensis
ஆ. Polarterroris predatoriens
இ. Greenlandicus carnivorous
ஈ. Timorebestia koprii
- அண்மையில் அறிவியாலாளர்கள் வடக்குக் கிரீன்லாந்தில் ஒரு மாமிச உண்ணும் புழுவின் புதைபடிவத்தைக் கண்டறிந்தனர். அதற்கு Timorebestia koprii அல்லது “கோர விலங்கு” எனப் பெயரிட்டுள்ளனர். சுமார் 541 மில்லியன் முதல் 485.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கேம்ப்ரிய காலத்தின் தொடக்கத்தில் இந்த மாமிசம் உண்ணும் விலங்கு வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் புதைபடிவங்கள் வடக்குக் கிரீன்லாந்தில் உள்ள ஆரம்பகால கேம்ப்ரிய சிரியஸ் புதைபடிவ பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
4. கேலுசரண் மொகபத்ராவின் 98ஆவது பிறந்தநாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. கீழ்காணும் எந்த நடன வடிவத்தை புதுப்பிக்கவும் பிரபலப்படுத்தவும் அவர் உதவினார்?
அ. பரதநாட்டியம்
ஆ. கதக்
இ. ஒடிஸி
ஈ. மணிப்பூரி
- பழம்பெரும் இந்திய பாரம்பரிய நடனக்கலைஞர் கேலுசரண் மொஹபத்ரா 1926 ஜனவரி.08இல் பிறந்தார். அவர் இருபதாம் நூற்றாண்டில் ஒடிஸி நடனவடிவத்தை புதுப்பித்து பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர். அவர் பாரம்பரிய ‘கோடிபுவா’ மற்றும் ‘மஹாரி’ நடன வடிவங்களில் விரிவான ஆராய்ச்சி செய்தார்; அது ஒடிஸியை மறுகட்டமைக்க வழிவகுத்தது.
5. ‘அல்வாரோ’ என்ற வெப்பமண்டல சூறாவளியுடன் தொடர்புடைய பகுதி எது?
அ. தென்கிழக்காசியா
ஆ. மடகாஸ்கர்
இ. தென்னமெரிக்கா
ஈ. ஆஸ்திரேலியா
- வெப்பமண்டல சூறாவளியான, ‘அல்வாரோ’ தென்மேற்கு மடகாஸ்கரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. 2024 ஜனவரி.01 அன்று அப்பகுதியைத் தாக்கியது. இது தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் 2023-2024இல் ஏற்பட்ட முதல் பெரிய சூறாவளி தாக்கத்தைக் குறித்தது.
6. அழிந்துவரும், ‘பன்றி மான்’ அண்மையில் முதன்முறையாக எந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தென்பட்டது?
அ. இராஜாஜி புலிகள் காப்பகம்
ஆ. சுந்தரவன வனவிலங்கு சரணாலயம்
இ. பந்திப்பூர் தேசியப்பூங்கா
ஈ. காசிரங்கா தேசியப்பூங்கா
- இராஜாஜி புலிகள் சரணாலயத்தில் இதுவரை தென்பட்டிராத பன்றி மான், அண்மையில் அங்கு தென்பட்டுள்ளது. அதன் தனிமை இயல்புக்கு பெயர் பெற்ற இது, திறந்தவெளியில் உணவு அதிகமாக இருக்கும்போது அவ்வப்போது சிறுகுழுக்களாக வந்து உணவுண்ணும். இமயமலை அடிவாரம் மற்றும் தென்கிழக்காசியா உட்பட இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட இந்தப் பன்றி மான்கள் தற்போது இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பின் அடிப்படையில், பன்றி மான்கள் IUCNஆல் அழிந்துவரும் உயிரனங்கள் என்ற பிரிவின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இது, கடந்த 1972ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச்சட்டத்தின் அட்டவணை-Iஇன் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது.
7. உள்நாட்டு நீர்வழிகள் மேம்பாட்டு கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. சென்னை
ஆ. மதுரை
இ. கொல்கத்தா
ஈ. கன்னியாகுமரி
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகத்தின்கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம், 2024 ஜன.08 அன்று கொல்கத்தாவில் முதல், ‘உள்நாட்டு நீர்வழி மேம்பாட்டு கவுன்சில்’ கூட்டத்தை நடத்தியது. இதனை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடக்கிவைத்தார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், “ஹரித் நௌகா – உள்நாட்டு கப்பல்களின் பசுமை மாற்றத்திற்கான வழிகாட்டுதல்கள்” மற்றும் “நதி கப்பல் சுற்றுலா வரைபடம் – 2047” உள்ளிட்ட அற்புதமான முன்முயற்சிகளையும் இந்தக் கூட்டத்தின்போது வெளியிட்டார்.
8. iDEX-DIO என்பது கீழ்காணும் எந்த அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்?
அ. சுற்றுலா அமைச்சகம்
ஆ. பாதுகாப்பு அமைச்சகம்
இ. MSME அமைச்சகம்
ஈ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
- 10ஆவது 2024 – துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டில் பங்கேற்க Innovations for Defence Excellence (iDEX-DIO) தயாராகி வருகிறது. 2018இல் தொடங்கப்பட்ட, ‘iDEX-DIO’ என்பது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும். துளிர்நிறுவல்கள், புத்தாக்குநர்கள், MSMEகள், அடைவகங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கூட்டுச் சேர்வதன்மூலம் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் ஒரு புதுமையான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்தத் திட்டம், பாதுகாப்பு துறையில் புதுமைக்கான PM விருதைப் பெற்றுள்ளது. 2013 – நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட, இலாபநோக்கற்ற நிறுவனமான Defence Innovation Organisation மூலம் இந்த முன்னெடுப்பு நிதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பாதுகாப்பு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களான HAL & BEL இதன் நிறுவனர் உறுப்பினர்களாக உள்ளன.
9. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பின் (BIMSTEC) 4ஆவது பொதுச்செயலாளர் யார்?
அ. இந்திர மணி பாண்டே
ஆ. டென்சின் லெக்பெல்
இ. அப்துல் மொதலேப் சர்க்கர்
ஈ. ஷபானா ஃபயாஸ்
- இந்தியாவின் மூத்த தூதுரான இந்திர மணி பாண்டே, வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பின் (BIMSTEC) 4ஆவது பொதுச்செயலாளராக பதவியேற்றார். அவர் BIMSTECஇன் பொதுச் செயலாளராக மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். இவருக்கு முன் பூடானின் டென்சின் லெக்பெல் இதன் பொதுச் செயலாளராக இருந்தார்.
10. புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான கேம்ப்டோதெசினின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நோத்தபோடைட்ஸ் நிம்மோனியானா தாவர உயிரணுக்களின் வளர்சிதை மாற்றப்பொறியியலில் கூட்டிணைந்துள்ள நிறுவனங்கள் எவை?
அ. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், பம்பாய் மற்றும் டெல்லி
ஆ. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், மெட்ராஸ் மற்றும் மண்டி
இ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கொல்கத்தா மற்றும் புனே
ஈ. இந்திய அறிவியல் கழகம், பெங்களூர் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கான்பூர்
- மெட்ராஸ் மற்றும் மண்டி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நோதபோடைட்ஸ் நிம்மோனியானாவின் தாவர செல்களில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான கேம்ப்டோதெசினின் (CPT) உற்பத்தியை அதிகரிப்பதற்காக வளர்சிதை மாற்ற பொறியியல் நுட்பங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
- கேம்ப்டோதெசின் ஒரு முக்கியமான புற்றுநோய் எதிர்ப்புமருந்து மூலக்கூறாக செயல்படுகிறது. இது டோபோடெகன் மற்றும் இரினோடெகன்போன்ற உயர்மதிப்பு மருந்துகளின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது. கிழக்காசியாவில் உள்ள காம்ப்டோதெகா அக்குமினாட்டா மற்றும் இந்தியாவில் உள்ள நோதபோடைட்ஸ் நிம்மோனியானா ஆகியவற்றில் இருந்து முதலில் பிரித்தெடுக்கப்பட்ட கேம்ப்டோதெசின், காலநிலை மாற்றம் மற்றும் அதன் பிரித்தெடுக்கும் செயல் ஆகியவற்றால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
11. 1850-1900 சராசரியுடன் ஒப்பிடுகையில், 2023இல் உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை எவ்வளவு உயர்ந்துள்ளது?
அ. 1.48°C
ஆ. 1.53°C
இ. 1.69°C
ஈ. 1.82°C
- 2023ஆம் ஆண்டில், உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை 1850-1900இன் தொழிற்துறை புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட சராசரி வெப்பநிலையைவிட 1.48° செல்சியஸாக (°C) உயர்ந்துள்ளது. ஐரோப்பாவின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவைமூலம் அறிவிக்கப்பட்ட இந்தக் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, 1850ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2023ஆம் ஆண்டை வெப்பமான ஆண்டாகக் குறித்தது. இந்த வெப்பநிலை உயர்வு 2016இல் காணப்பட்ட முந்தைய பதிவைவிட அதிகமாகும். இது தற்போது புவி வெப்பயம் ஆக்கப்பட்டுக் கொண்டிருப்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. வளிமண்டலத்தில் CO2 மற்றும் மீத்தேன்போன்ற பைங்குடில் வாயுக்களின் செறிவு அதிகரித்து வருவதே இந்த வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமாகும். மேலும், முதன்மையாக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதுபோன்ற மனித செயல்பாடுகள் இதற்குக் காரணமாகும்.
12. ICD-11 TM தொகுதி-2இன் முதன்மை நோக்கம் என்ன?
அ. நவீன உயிரி மருத்துவத்தை வகைப்படுத்துதல்
ஆ. WHO வகைப்படுத்தலில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி உட்பட
இ. தொற்றுநோய்களைக் கண்காணித்தல்
ஈ. ஆயுஷ் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குதல்
- இந்திய ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட ICD-11 TM தொகுதி-2 ஆனது முதன்மையாக WHOஇன் சர்வதேச நோய்களின் வகைப்பாடு (ICD11) வகைப்பாட்டில் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா & யுனானி ஆகியவற்றின் அடிப்படையிலான நோய்கள் தொடர்பான தரவு மற்றும் சொற்களை உள்ளடக்குவதை முதன்மையாக நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க உள்ளடக்கம் பாரம்பரிய மருத்துவத்தில் உலகளாவிய சீரான தன்மையை அடைவதற்கான ஒரு படியாகும். ICD11 வகைப்பாட்டில் இந்தப் பாரம்பரிய மருத்துவ முறைகளைச் சேர்ப்பது, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.
13. “மாயத்தீவுகள்” என்ற பதம், கீழ்காணும் எந்த வான்பொருளில் காணப்படும் அம்சங்களைக் குறிக்கிறது?
அ. சனி
ஆ. செவ்வாய்
இ. டைட்டன்
ஈ. புதன்
- சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் காணப்பட்ட, “மாயத்தீவுகள்” பெரும்பான்மையாக நுண்துளை மற்றும் உறைந்த கரிம திடப்பொருட்களால் ஆனவை. தேன்கூடு அல்லது சுவிஸ் பாலாடைக்கட்டி வடிவங்களுடன் ஒப்பிடப்படும் இந்த மிதக்கும் வடிவங்கள் முதன்முதலில் கடந்த 2014இல் காசினி-ஹுய்ஜென்ஸ் விண்கலத்தால் கண்டுபிடிக்கப்பட்டன. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சின்டிங்க் யூ தலைமையிலான அறிவியாலாளர்கள், இதன் மர்மத்தை அவிழ்க்க ஆராய்ச்சி நடத்தினர். இந்த கட்டமைப்புகள் சிக்கலான கரிம பனியின் கொத்துகள் என்று அவர்கள் முடிவுசெய்தனர்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ்நாட்டில் 40,000 பேருக்கு தொலைநிலை மனநல ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை.
“நட்புடன் உங்களோடு” தொலைபேசிவழி மனநல சேவை திட்டமானது 2022 அக்.27 அன்று தொடக்கப்பட்டது. இதன்மூலம் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த அக் 10 அன்று தில்லியில் நடைபெற்ற உலக மனநல நாள் விழாவில், ‘நட்புடன் உங்களோடு’ சேவைமூலம் ஓராண்டில் அதிக எண்ணிக்கையிலான அழைப்புகளை கையாண்டதற்காக மத்திய அரசின் விருதை தமிழ்நாடு பெற்றது. தற்போது அந்தத் திட்டத்தின் இரண்டாவது பிரிவு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ‘104’ என்ற உதவி எண்மூலம் NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான தேசிய விருதுகள் – 2023.
மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது
சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி | பாட்மின்டன் |
சிராக் ஷெட்டி | பாட்மின்டன் |
துரோணாச்சார்யா விருது
லலித்குமார் | மல்யுத்தம் |
ஆர். பி. இரமேஷ் | செஸ் |
மஹாவீர் பிரசாத் சைனி | பாரா தடகளம் |
ஷிவேந்திர சிங் | ஹாக்கி |
கணேஷ் பிரபாகர் | மல்லர்கம்பம் |
துரோணாச்சார்யா விருது – (வாழ்நாள் சாதனையாளர்)
ஜஸ்கிரத்சிங் கிரெவால் | கோல்ஃப் |
இ. பாஸ்கரன் | கபடி |
ஜெயந்தகுமார் புஷிலால் | டேபிள் டென்னிஸ் |
தியான்சந்த் விருது – (வாழ்நாள் சாதனையாளர்)
மஞ்ஜுஷா கன்வர் | பாட்மின்டன் |
வினீத்குமார் சர்மா | ஹாக்கி |
கவிதா செல்வராஜ் | கபடி |
மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோப்பை
குருநானக் தேவ் பல்கலைக்கழகம் (அமிருதசரஸ்) | முதலிடம் |
லவ்லி தொழில்முறை பல்கலைக்கழகம் (பஞ்சாப்) | இரண்டாமிடம் |
குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம் (குருஷேத்ரம்) | மூன்றாமிடம் |
அர்ஜுனா விருது
ஓஜாஸ் பிரவீண் தியோடேல் | வில்வித்தை |
அதிதி சுவாமி | வில்வித்தை |
முரளி ஸ்ரீசங்கர் | தடகளம் |
பாருல் செளதரி | தடகளம் |
முகமது ஹசாமுதின் | குத்துச்சண்டை |
வைஷாலி | செஸ் |
முகமது ஷமி | கிரிக்கெட் |
அனுஷ் அகர்வல்லா | குதிரையேற்றம் |
திவ்யகிருதி சிங் | குதிரையேற்றம் |
தீக்ஷா தாகர் | கோல்ஃப் |
கிருஷண் பகதூர் பாதக் | ஹாக்கி |
சுஷீலா சானு | ஹாக்கி |
பவன்குமார் | கபடி |
ரிது நெகி | கபடி |
நஸ்ரீன் | கோ-கோ |
பிங்கி | லான் பெளல்ஸ் |
ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் | துப்பாக்கி சுடுதல் |
ஈஷா சிங் | துப்பாக்கி சுடுதல் |
ஹரிந்தர்பால் சிங் சந்து | ஸ்குவாஷ் |
அஹிகா முகர்ஜி | டேபிள் டென்னிஸ் |
சுனில்குமார் | மல்யுத்தம் |
அன்டிம் | மல்யுத்தம் |
ரோஷிபினா தேவி | வுஷு |
ஷீத்தல் தேவி | பாரா வில்வித்தை |
அஜய்குமார் ரெட்டி | பார்வையற்றோர் கிரிக்கெட் |
பிராச்சி யாதவ் | பாரா கேனோயிங் |
தமிழர்கள்: அர்ஜுனா விருதுபெற்ற வைஷாலி, துரோணாச்சார்யா விருது பெற்ற ஆர். பி. ரமேஷ் (செஸ்), கணேஷ் பிரபாகர் (மல்லர்கம்பம்), தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோர் தமிழர்களாவர்.