Tnpsc Combined Engineering Subordinate Services Exam Answer Key
Tnpsc Combined Engineering Subordinate Services Exam Previous Questions
Tnpsc Combined Engineering Subordinate Services Exam Answer Key
1. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின் மீது செயல்படும் மையவிலக்கு விசை
A) அதிகரிக்கும்
B) குறையும்
C) மாறாது
D) முதலில் அதிகரித்து, பின்பு குறையும்
2. குறை கடத்திகளாகப் பயன்படும் சிலிகன், ஜெர்மானியம் போன்ற தனிமங்கள் ______ முறையில் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
A) வெற்றிடத்தில் வெப்பப்படுத்துதல்
B) புலத் தூய்மையாக்கல்
C) வா-ஆர்கல் முறை
D) மின்னாற் பகுத்தல்
3. கீழ்கண்டவற்றை பொருத்துக :
a) சூஃபிலி – 1. வாலிஸ்நேரியா
b) ஹைட்ரோஃபிலி – 2. புல்
c) எண்டமோஃபிலி – 3. கல்வாழை
d) அனிமோஃபிலி – 4. சால்வியா
a) b) c) d)
A) 4 3 2 1
B) 3 2 1 4
C) 1 2 3 4
D) 3 1 4 2
4. இதயம் மற்றும் இரத்த நாளங்கள் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் பணிகளைப் புரிந்து கொள்ள உதவும் விதி
A) சார்க்காப் விதி
B) டாப்ளர் விதி
C) ஹார்டி வீன் பெர்க் விதி
D) லாப்ளேஸ் விதி
5. விந்தக நுண் குழல்கள், ஒழுங்கற்ற வலைப்பின்னல் அமைப்பான இதனுள் திறக்கின்றன்
A) அல்பூஜீனியா
B) டெஸ்டிஸ்
C) ஸ்பெர்மாடிக் இழை
D) ரெட்டெஸ்டிஸ்
6. மித வெப்ப மண்டலக் காடுகளின் சராசரி மழைப்பொழிவு என்பது
A) 850mm – 2000mm
B) 850mm – 2600mm
C) 750mm – 1500mm
D) 250mm – 750 mm
7. மூலக்கூறு உயிரியலின் அடிப்படைக் கருத்தில்
A) X – இரட்டிப்பாதல், Y – படியெடுத்தல், Z – மொழிப்பெயர்த்தல்
B) X – படியெடுத்தல், Y – மொழிப்பெயர்த்தல், Z – இரட்டிப்பாதல்
C) X – பிளத்தல், Y – படியெடுத்தல், Z – மொழிப்பெயர்த்தல்
D) X – மொழிப்பெயர்த்தல், Y – இரட்டிப்பாதல், Z – பிளத்தல்
8. மீட்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளிடமிருந்து ஆபத்தான நிலையில் உள்ள ஒரு கொரானா வைரஸ் நோயாளிக்கு இரத்த பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் பரிசோதனையின் பெயர்
A) பிளாஸ்மா-தெரபி
B) சாலிடாரிட்டி
C) ரெம்டீஸிவிர்
D) ஹைட்ராக்சி குளோரோகுயின்
9. திட்டக்குழுவிற்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ நடைமுறைக்கு வந்தது
A) ஜனவரி 1, 2015
B) பிப்ரவரி 2, 2015
C) ஜனவரி 5, 2018
D) மார்ச் 15, 2015
10. இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்தால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த விருது (2019)
A) 3வது இடம்
B) 2வது இடம்
C) 1வது இடம்
D) 10வது இடம்
11. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் நாகாலாந்துக்கு உள்ள கிழக்கு எல்லை எது?
A) அசாம்
B) மேற்கு வங்காளம்
C) மியான்மர்
D) மணிப்பூர்
12. உலக மாற்றுதிறனாளிகள் தினமாக கொண்டாடப்படும் நாள்
A) டிசம்பர் 3
B) நவம்பர் 3
C) அக்டோபர் 3
D) ஆகஸ்ட் 3
13. சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் முதல் கட்டம் முழுமையாக செயல்படும் ஆண்டு
A) 10. 2. 2020
B) 10. 2. 2019
C) 10. 2. 2021
D) 10. 2. 2018
14. 4 ஜூன் 2016 ஆம் ஆண்டில் எந்த நாடு அந்நாட்டின் உயரிய விருதான ‘சிவிலியன்’ விருதை நம் பிரதமருக்கு வழங்கியது?
A) சீனா
B) ரஷ்யா
C) ஆப்கானிஸ்தான்
D) அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
15. கிழக்கு லடாக்கில் “இறந்த ஆறு” என்று அழைக்கப்படும் நதி எது?
A) தாமோதர் நதி
B) தப்தி நதி
C) சிந்து நதி
D) சியோக் நதி
16. கிராண்ட் ஸ்லாம் (grand slam) டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 2020 ல் வெற்றி பெற்ற (2020) இந்தியர் யார்?
A) சானிய மிர்சா
B) ராம்குமார்
C) மகேஷ் பூபதி
D) சுமித் நகல்
17. வெப்ப தலைகீழ் மாற்றத்திற்கான விளக்கம்
A) உயரம் அதிகரிக்கும் போது வெப்பமும் அதிகரிக்கும்
B) உயரம் அதிகரிக்கும் போது வெப்பமும் குறைகிறது
C) உயரம் குறையும் போது வெப்பமும் அதிகரிக்கிறது
D) ஈரப்பதம் அதிகரிக்கும் போது வெப்பமும் அதிகரிக்கிறது
18. கூற்று (A) : வறண்ட பாலை மண் வறண்ட கால நிலை, அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படுகிறது.
காரணம் (R) : மேலும் இவை வறண்டு காணப்படுவதற்கு காரணம் தாவரங்கள் இல்லாமையால் இலை மட்குச் சத்து குறைவாகக் காணப்படுகிறது.
A) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி.
B) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.
C) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கமாகும்.
D) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, காரணம் (R) கூற்றுக்கான (A) சரியான விளக்கம் அல்ல.
19. தவறான வாக்கியம் தெரிவு செய் :
A) நிலநடுக்கம் என்பது புவிப்பரப்பில் ஏற்படும் அதீத புவியதிர்வை குறிக்கும்
B) நிலநடுக்கமானது எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்
C) நிலநடுக்கத்தின் போது பொருட் சேதம், காயங்கள் மற்றும் உயிரிழப்பு போன்றவை ஏற்படும்
D) நிலநடுக்கத்தின் போது கட்டிடத்தின் உள்ளே இருந்தால் மின்தூக்கிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
20. ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக _____ இருந்தது.
A) மீன் பிடித்தல்
B) வேளாண்மை
C) மட்பாண்டம் செய்தல்
D) கைவினைத் தொழில்கள்
21. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை ?
கூற்று (A) : பெரியபுராணம் சேக்கிழாரால் எழுதப்பட்டது. மேலும் சீவகசிந்தாமணி கம்பராமாயணம் ஆகியவை சோழர் காலத்தில் படைக்கப்பட்டன.
காரணம் (R) : சோழர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புத்துணர்வு தந்தது.
A) (A) சரி ஆனால் (R) தவறு
B) (A) தவறு ஆனால் (R) சரி
C) (A) மற்றும் (R) இரண்டும்சரி, மேலும் (R) என்பது (A) – விற்கு சரியான விளக்கம்.
D) (A) மற்றும் (R) இரண்டும்சரி, ஆனால் (R) என்பது (A) – விற்கு சரியான விளக்கமல்ல.
22. ‘ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
A) 1990
B) 1992
C) 1982
D) 1980
23. கூற்று (A) : 42வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் ஒரு குறு அரசியலமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
காரணம் (R) : அதிகமான விதிகளை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தச்சட்டம்.
A) கூற்று (A)ம், காரணம் (R)ம் சரியானவைகள் ஆகும். காரணம் (R) கூற்று (A)க்கான சரியான விளக்கமாகும்
B) கூற்று (A)ம், காரணம் (R)ம் சரியானவைகள் ஆகும். காரணம் (R) கூற்று (A)க்கான சரியான விளக்கவில்லை
C) (A) கூற்று சரி ஆனால் காரணம் (R) தவறு
D) (A) கூற்று தவறு ஆனால் காரணம் (R) சரி
24. கீழ்கண்டவற்றில் சரியாக பொருந்தியுள்ளதை கண்டறிக
I. தேசிய நெருக்கடி நிலை – உறுப்பு, 352
II. போர் நெருக்கடி நிலை – உறுப்பு, 343
III. மாநில நெருக்கடி நிலை – உறுப்பு, 356
IV. நிதி நெருக்கடி நிலை – உறுப்பு, 360
A) I, II மற்றும் IV
B) II, III மற்றும் IV
C) I, II Iமற்றும் II
D) I, III மற்றும் IV
25. சர்வதேச மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?
A) 10 செப்டம்பர்
B) 10 டிசம்பர்
C) 14 நவம்பர்
D) 10 அக்டோபர்
26. பின்வருவனவற்றில் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை ஒழிக்க பாராளுமன்றத்திற்கு
பரிந்துரை செய்வது
A) அந்த மாநிலத்தினுடைய சட்டமன்ற பேரவை
B) குடியரசுத் தலைவர்
C) அந்த மாநிலத்தின் சட்ட மேலவை
D) அந்த மாநிலத்தின் ஆளுநர்
27. உச்சநீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் யாருடைய ஆலோசனையின் பேரில் நியமிக்கிறார்?
A) பிரதமர்
B) தலைமை நீதிபதிகள் தலைமையிலான நீதிபதிகள் குழு
C) சட்ட அமைச்சர்
D) குடியரசுத் துணைத் தலைவர்
28. கீழ்காணும் எந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் எட்டாவது அட்டவணையின் கீழ் 4 மொழிகளை இணைத்து, அலுவலக மொழிகள் 22 ஆக உயர வழி வகுத்தது?
(போடோ, டோக்ரி, மைதிலி, சந்தாலி)
A) 90 வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் 2003
B) 91 வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் 2003
C) 92 வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் 2003
D) 93 வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் 2005
29. “BIMARU” என்பது எதை குறிக்கிறது?
A) குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட மாநிலங்கள்
B) அதிக இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலங்கள்
C) அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்
D) குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்
30. கூற்று (A) : ஏழாவது ஐந்தாண்டு திட்டம் வெற்றி பெற்றது
காரணம் (R) : முதன்முறையாக பொதுதுறைக்கு மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
31. பட்டியல் I உள்ளவற்றை பட்டியல் II ல் பொருத்துக :
பட்டியல் I – பட்டியல் II
a) முதல் உலகப் போர் – 1. அதிக விளைச்சலை தரக்கூடிய விதை
b) புதிய தொழிற் கொள்கை – 2. 1960
c) பசுமைப்புரட்சி – 3. 1991
d) HYV – 4. 1914
a) b) c) d)
A) 4 3 2 1
B) 2 1 4 3
C) 4 3 1 2
D) 2 3 4 1
32. கீழ்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க
கூற்று (A) : ஆசியாவில் ரெட்ராய்ட் என்றழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது
காரணம் (R) : தமிழ்நாடு இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் 28% மும் லாரிக்கான உற்பத்தியில் 19% மும் பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் 18% கொண்டுள்ளது
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் மேலும் (A) க்கான சரியான விளக்கம் (R)
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (A) க்கான சரியான விளக்கம் (R) இல்லை
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
33. கீழ்கண்டவற்றுள் எது/எவை சுதேசி இயக்கத்தின் போது தீவிர தேசியவாதத்தின் இயங்கு தளமாக உருவெடுத்தன?
1. பஞ்சாப்
2. வங்காளம்
3. மாகாராஷ்டிரம்
4. தூத்துக்குடி
A) 1 மட்டும் சரி
B) 1 மற்றும் 4 மட்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) அனைத்தும் சரியானது
34. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
கூற்று (A) : நேரு ஆட்சிக்காலம் நவீன அறிவியல் வளர்ச்சியின் பொற்காலம் ஆகும்
காரணம் (R) : அணு ஆராய்ச்சிகள், விண்வெளி ஆராய்ச்சிகள் போன்றவை இவராலே உருவாக்கப்பட்டவை
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
35. ஒலியானது ஒரு ஊடகத்தில் பரவும் முறையினை ______ நிகழ்வு என லாப்லஸ் கருதினார்.
A) வெப்பநிலை மாறாத
B) வெப்ப பரிமாற்றமில்லாத
C) அழுத்தம் மாறாத
D) பருமன் மாறாத
36. மின்காந்த அலைகளின் திசைவேகம் C எதற்குச் சமம்
A)
B)
C)
D)
37. மக்னீசியம் ஹைட்ராக்ஸைடு எதைக் குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது?
A) கண் மருந்தாக
B) வயிற்று உபாதைகளுக்கு
C) துணிகளில் உள்ள கறைகளை நீக்க
D) தலைவலி
38. தாவரங்கள் பயன்பெறும் 60 ஊட்டச் சத்துக்களைக் கொடுக்கின்ற திரவ உரம்
A) அமோனியம் நைட்டேட் கரைசல்
B) திரவ அமோனியா உரம்
C) திரவ நைட்ரஜன் உரம்
D) திரவக் கடற்களை உரம்
39. பக்கக் கிளைகளில் இருந்து கீழ் நோக்கி நேராக வளர்ந்து மண்ணுக்குள் செல்லும் வேர்கள் _____ எனப்படும்.
A) தொற்று வேர்
B) தூண் வேர்
C) பற்று வேர்
D) முட்டு வேர்
40. பின்வருவனவற்றுள் மிக அதிக அளவில் தாவரங்களுக்குத் தேவைப்படும் தனிமம் எது?
A) நைட்ரஜன்
B) பாஸ்பரஸ்
C) கால்சியம்
D) மெக்னீசியம்
41. ஆந்தோசயனின், லிக்னின் மற்றும் பிற அரோமேடிக் சேர்மங்கள் உருவாக்கத்திற்கு பயன்படுவது
A) எரித்ரோஸ்
B) சுக்ரோஸ்
C) குளுக்கோஸ்
D) ஃப்ரக்டோஸ்
42. பட்டுப்பூச்சி அதன் வாழ்க்கை சுழற்சியின் இந்த நிலையில் பட்டு இழையை தயாரிக்க துவங்குகிறது
A) 3வது இன்ஸ்டார் லார்வா
B) 4வது இன்ஸ்டார் லார்வா
C) 5வது இன்ஸ்டார் லார்வா
D) கூட்டுப்புழு
43. ப்ளு-ரே வட்டின் கொள்ளளவு என்ன?
A) 50 ஜிகாபைட்
B) 4.7 ஜிகாபைட்
C) 1.5 ஜிகாபைட்
D) 2 டெராபைட்
44. காற்றின் தரத்தைக் கண்டறிய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள செயலி
A) சமீர்
B) உமாங்
C) தீக்ஷா
D) ஆரோக்கிய சேட்டு
45. ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செலுத்தப்படும் “அரை மனித உருவ” (ரோபோ)
A) ஸ்கைபோட்
B) வயோமித்ரா
C) சோபியா
D) அஷ்ட்ரோபி
46. மூளையானது வலியைச் செயலாக்குவதை நிறுத்தப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்
A) துல்லிய மருத்துவம்
B) கம்பியில்லா மூளை உணர்வி
C) மெய்நிகர் உண்மை
D) கதிரியக்கவியல்
47. தேசிய புள்ளியல் துறை NSC அமைக்கப்பட்ட ஆண்டு
A) 2001
B) 2006
C) 2005
D) 2008
48. பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வயது 21 ஆண்டுகளில் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது?
A) 60வது சட்ட திருத்தம்
B) 61வது சட்ட திருத்தம்
C) 62வது சட்ட திருத்தம்
D) 63வது சட்ட திருத்தம்
49. பின்வரும் வாக்கியங்களில் மற்ற எல்லாம் சரியானவை ஒன்றைத் தவிர
A) உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை இந்தியாவில் அமைந்துள்ளது
B) கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது
C) அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் பயணம் செய்யும் சுரங்க பாதையின் நீளம் 9.02 கி. மீ. வகையில் அமைக்கப்பட்டுள்ளது
D) இது எல்லைப்புறச் சாலை அமைப்பால் (BRO) உருவாக்கப்பட்டது
50. எந்த மக்கள் அவை தேர்தலில் வாக்கு ஒப்புகை சீட்டு முறை நடைமுறைக்கு வந்தது?
A) 2014 மக்களவை தேர்தல்
B) 2015 மக்களவை தேர்தல்
C) 2006 மக்களவை தேர்தல்
D) 2000 மக்களவை தேர்தல்
51. இந்திய அரசியலமைப்பின் 338 A வது விதிப்படி எவ்வாணையம் தோற்றுவிக்கப்பட்டு பிப்ரவரி 19, 2004 முதல் நடைமுறையில் உள்ளது?
A) தேசிய மனித உரிமைகள் ஆணையம்
B) தேசிய மகளிர் ஆணையம்
C) தேசிய பழங்குடியினர் ஆணையம்
D) தேசிய பிற்பட்டோர் ஆணையம்
52. ராம்விலாஸ் பாஸ்வான் கின்னஸ் ரெக்கார்டு செய்து வெற்றியடைந்த தொகுதியின் பெயர்
A) பகல்பூர்
B) பக்சார்
C) பங்கா
D) ஹாசிப்பூர்
53. கூற்று (A) : ஓர் அண்டம் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள், நட்சத்திர எச்சங்கள், நட்சத்திர வாயுக்கள், தூசு மற்றும் புலப்படாத பொருட்களை உள்ளடக்கியுள்ளது.
காரணம் (R) : பால் வழி அண்டம் என்பது நம் சூரிய குடும்பம் அமைந்துள்ள ஒரு அண்டமாகும்.
A) (A) சரி ஆனால் (R) தவறு.
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.
C) (A) தவறு ஆனால் (R) சரி.
D) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல.
54. கூற்று (A) : தீவிர விவசாய முறையில் குறுகிய கால பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
காரணம் (R) : விளைநிலம் குறைவாக உள்ள பகுதிகளில் இம்முறை பின்பற்றப்படுகிறது.
A) (A) மற்றும் (R) சரியானவை. (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் ஆகும்.
B) (A) மற்றும் (R) சரியானவை. (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் அல்ல.
C) (A) சரி ஆனால் (R) தவறு.
D) (R) சரி ஆனால் (A) தவறு.
55. மனித சமூகங்களின் பரவலும் அச்சமூகங்களின் புவியியல் சூழலும் குறித்த ஒரு படிப்பு
A) மானிடவியல் புவியியல்
B) சமூகப் புவியியல்
C) உயிர் புவியியல்
D) அரசியல் புவியியல்
56. கி. பி. 1191 முதல் தரைன் போரில் ஆஜ்மீர் அரசர் பிரித்விராஜ் சௌகான்
A) முகமது கோரியை தோற்கடித்தார்
B) முகமது கோரி வெற்றி பெற்றார்
C) முதல் தரைன் போர் கி. பி. 1191-ல் நடைபெறவில்லை
D) இவை அனைத்தும் இல்லை
57. பாமினி அரசு கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் பரவி இருந்தது
A) மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா
B) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
C) மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா
D) மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம்
58. 1940 ல் ஆகஸ்ட் கொடையை அறிவித்தவர் யார்?
A) லின்லித்கோ பிரபு
B) வேவல் பிரபு
C) மவுண்ட்பேட்டன் பிரபு
D) மிண்டோ
59. _____ ஒரு கலத்துக்குச் சமம் ஆகும்
A) 27 கிகி
B) 28 கிகி
C) 32 கிகி
D) 72 கிகி
60. 29 மார்ச் 1857-ல் யார் தூக்கிலிடப்பட்டார்?
A) பகதூர் ஷா
B) தாந்தியா தோப்
C) ஜான்சி ராணி
D) மங்கள் பாண்டே
61. கீழ்க்காணும் சொற்கள் முகப்புரையில் எந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன?
1. மக்களாட்சி
2. சமதர்மம்
3. இறையாண்மை
4. குடியரசு
A) 3, 2, 4, 1, 5
B) 2, 3, 4, 1, 5
C) 3, 2, 1, 4, 5
D) 3, 1, 2, 5, 4
62. மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கான பொதுவான நீதிமன்றம்
A) சென்னை உயர்நீதிமன்றம்
B) மும்பை உயர்நீதிமன்றம்
C) இந்திய உச்ச நீதிமன்றம்
D) உயர்நீதிமன்ற மதுரை கிளை
63. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த அம்சம் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் அறிவியல் மனப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்தறியும் வேட்கை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது?
A) அடிப்படை கடமைகள்
B) அடிப்படை உரிமைகள்
C) அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்
D) முகவுரை
64. கூற்று (அ) : 73-வது திருத்தத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
காரணம் (ஆ) : மக்களாட்சியானது உள்ளாட்சி அரசாங்கங்களின் மூலம் அடித்தட்டு மக்களை சென்றடைந்தது.
அமைப்பு : கூற்று (அ) என்றும் காரணம் (ஆ) எனவும் கொண்டு பின்வருவனவற்றுள் எது சரியானவை.
A) (அ) மற்றும் (ஆ) இரண்டும் சரியானது, காரணம் (ஆ) கூற்றுக்கு (அ) சரியான விளக்கமாகும்
B) (அ) மற்றும் (ஆ) இரண்டும் சரியானது, ஆனால் காரணம் (ஆ) கூற்றுக்கு (அ) சரியான விளக்கமல்ல
C) கூற்று (அ) சரி ஆனால் காரணம் (ஆ) தவறு
D) கூற்று (அ) தவறு ஆனால் காரணம் (ஆ) சரி
65. லோக்-அதாலத் கொண்டு வரப்பட்ட ஆண்டு
A) 1950
B) 1987
C) 1984
D) 2000
66. 28 தகவல் அறிவும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்குப் பெற்ற அமைப்பு எது?
A) கல்வித் துறை
B) நெடுஞ்சாலைத் துறை
C) உளவுத்துறை பணியகம்
D) மாநகராட்சி அலுவலகங்கள்
67. பின்வரும் முறைகளில் எந்த முறை கிராம மக்களாலான குழுவினர் நிலச் சொந்தக்காரர்களாக இருந்து நிர்வாகம் செய்தனர்?
A) ஜமீந்தாரி முறை
B) மஹல்வாரி முறை
C) இரயத்துவாரி முறை
D) நில உடைமை முறை
68. “உழவன் கடன் அட்டை” (கிஷான் கிரெடிட் கார்ட்) ஏற்படுத்திய ஆண்டு
A) 1996 – 1997
B) 1998 – 1999
C) 1999 – 2000
D) 2000 – 2001
69. சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்புத் திட்டம் _____ ல் ஆரம்பிக்கப்பட்டது.
A) 1990
B) 1992
C) 2010
D) 2016
70. கூற்று (A) : இராமச்சந்திர குகா அவர்கள் குமரப்பாவை ‘பச்சை காந்தி’ என்று அழைத்தார்.
காரணம் (R) : குமரப்பா இந்தியாவின் சுற்றுச் சூழலியல் குறித்து அடித்தளமிட்டார்.
A) (A) சரி ஆனால் (R) தவறு
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C) (A) தவறு ஆனால் (R) சரி
D) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
71. இங்கிலாந்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தத்துவ அறிஞர்களால் தொடங்கப்படாமல் மன்னராலேயே தொடங்கப்பட்டது. அவர் யார்?
A) 14-ம் லூயி
B) 8-ம் ஹென்றி
C) 16-ம் லூயி
D) 15-ம் லூயி
72. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டுயே சிறந்தது” எனக் கூறியவர் யார்?
A) அன்னிபெசன்ட்
B) M. வீரராகவாச்சாரி
C) G. S. அருண்டேல்
D) B. P. வாடியா
73. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரி, எது தவறு என குறிப்பிடவும்
கூற்று I : காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ள தண்டி வரை 395 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்டியாத்திரை நடைபெற இருந்தது.
கூற்று II : காந்தியடிகள் யாத்திரையாக நடந்து தண்டுயை 25வது நாளில் அதாவது 1930 ஏப்ரல் 6 இல் சென்று அடைந்தார்
A) கூற்று I கூற்று II தவறு
B) கூற்று I சரி ஆனால் கூற்று II தவறு
C) கூற்று I சரி கூற்று II சரி
D) கூற்று I தவறு ஆனால் கூற்று II சரி
74. லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதிய கூற்றுகளில் கீழ்கண்டவற்றில் எது உண்மையானது?
A) கோரால்மில் தொழிலாளர்களின் வெற்றி
B) தண்டி உப்பு சத்தியாகிரகத்தின் வெற்றி
C) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தின் வெற்றி
D) வ. உ. சி. யின் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி