Answer Key

Tnpsc Combined Engineering Services Exam Previous Questions And Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil

Tnpsc Combined Engineering Services Exam Previous Questions And Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil

COMBINED ENGINEERING SERVICES IN EXAMINATION

1. வண்டாயெழுந்து என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

(அ) வண்டு + எழுந்து (ஆ) வண்டாய் + எழுந்து

(இ) வண்டா + எழுந்து (ஈ) வண்டு + எழு + உந்து

2. கண்டெடுக்கப்பட்டுள்ளன – பிரித்தெழுதுக

(அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன (ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன

(இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன (ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.

3. பெருங்கடல் – பிரித்தெழுதுக

(அ) பெரு+கடல் (ஆ) பெருமை + கடல்

(இ) பெரிய+கடல் (ஈ) பெருங்+கடல்

4. “மிசை” என்பதன் எதிர்ச்சொல்லை காண்க.

(அ) கீழே (ஆ) மேலே (இ) இசை (ஈ) வசை

5. பொருந்தா இணையைக் கண்டறிக.

(அ) உயிர்முன் உயிர் – மணியடி (ஆ) உயிர்முன் மெய் – பனிக்காற்று

(இ) மெய்ம்முன் உயிர் – ஆலிலை (ஈ) மெய்ம்முன் மெய் – கோலாட்டம்

6. பொருந்தா இணையைக் கண்டறிக.

(அ) தகளி – அகல் விளக்கு

(ஆ) இடர் ஆழி – துன்பக்கடல்

(இ) சுடர் ஆழியான் – சிவபெருமான்

(ஈ) வெய்ய கதிரோன் – வெப்பக்கதிர் வீசும் சூரியன்

7.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

(அ) செங்காந்தள் – உம்மைத்தொகை

(ஆ) வீசு தென்றல் – வினைத்தொகை

(இ) மலர்க்கை – உவமைத்தொகை

(ஈ) சாரைப்பாம்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை

8. பொருந்தாத சொல்லை கண்டறிக.

(அ) வடக்கு – வாடைக்காற்று (ஆ) தெற்கு – தென்றல்காற்று

(இ) மேற்கு – கோடைக்காற்று (ஈ) கிழக்கு – கோடைக்காற்று

9. மரபு பிழைகளை நீக்கி எழுதுக.

இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

(அ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை பின்னினர்

(ஆ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்

(இ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை முடைந்தனர்

(ஈ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை செய்தனர்

10. வழுவுச் சொற்களை நீக்கி எழுதுக.

எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின

(அ) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மரம் வீசின.

(ஆ) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

(இ) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மறம் வீசின

(ஈ) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின

11. மரபுப் பிழையற்ற தொடரைக் காண்க.

(அ) கோழி கத்த நரி அலறியது (ஆ) கோழி கூவ நரி உறுமியது

(இ) கோழி கொக்கரிக்க நரி ஊளையிட்டது (ஆ) கோழி உறும நி பிளிறியது

12. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.

(அ) Aesthetics – கலைச்சொல் (ஆ) Artifats – முருகியல்

(இ) Terminology – அழுகியல் (ஈ) Myth – தொன்மம்

13. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.

கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.

(அ) செல்-செல்றான் (ஆ) வந்து-வந்தான்

(இ) கொல்-கொன்றான் (ஈ) வென்று-வென்றான்

14. “மகிழ்ந்தனன்” – இச்சொல்லின் வேர்ச்சொல்லை க்ணடறிக.

(அ) மகிழ்ச்சி (ஆ) மகிழ்ந்தான் (அ) மகி (ஈ) மகிழ்

15. வேர்ச்சொல்லின் வினைமுற்றை காண்க.

உறங்கு.

(அ) உறங்கினாள் (ஆ) உறங்கியவள் (இ) உறங்குகிறார் (ஈ) உறங்கிய

16. “படித்து வந்தான்” எவ்வகை எச்சம்?

(அ) குறிப்புப் பெயரெச்சம் (ஆ) தெரிநிலைப் பெயரெச்சம்

(இ) பெயரெச்சம் (ஈ) வினையெச்சம்

17. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்துக.

(அ) தோட்டம், தவம், தேடி, தாலாட்டு. தொட்டி

(ஆ) தேடி, தாலாட்டு, தொட்டி, தவம், தோட்டம்

(இ) தவம், தாலாட்டு, தேடி, தொட்டி, தோட்டம்

(ஈ) தாலாட்டு, தொட்டி, தோட்டம், தவம், தேடி

18. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்து

(அ) சூடு, சேவடி, செழிப்பு, சீற்றம், சினம் (ஆ) சினம், சீற்றம், சூடு, செழிப்பு, சேவடி

(இ) சேவடி, சூடு, செழிப்பு, சீற்றம், சினம் (ஈ) செழிப்பு, சீற்றம், சூடு, சேவடி, சினம்

19. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்து.

(அ) மீள்பார்வை, மாண்பு,மரம்,மேடை,மௌனம்

(ஆ) மாண்பு,மீள்பார்வை,மரம்,மௌனம்,மேடை

(இ) மரம்,மாண்பு, மீள்பார்வை,மேடை,மௌனம்

(ஈ) மேடை,மௌனம்,மீள்பார்வை,மாண்பு, மரம்

20. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.

(அ) பல வகையான மங்கலப் பொருள்களை முறையாக வைத்தனர்

(ஆ) முறையாக பல வகையான மங்கலப் வைத்தனர் பொருள்களை

(இ) பொருள்களை மங்கல முறையாக பல வகையான வைத்தனர்

(ஈ) மங்கலப் பொருள்களை பல வகையான முறையாக வைத்தனர்

21. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக.

“மணிமேகலை சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்”

(அ) மணிமேகலை எதனால் உணவிட்டாள்?

(ஆ) மணிமேகலை எங்கு சென்று உணவிட்டாள்?

(இ) மணிமேகலை யார்?

(ஈ) மணிமேகலை எதற்கு உணவிட்டாள்?

22. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.

தன் வினைத் தொடரைக் கண்டறிக.

(அ) அவனை திருந்தச் செய்தான் (ஆ) அப்துல் நேற்று வருவித்தான்

(இ) பெரிய ஓவியம் வரைந்து வா (ஈ) அவர்கள் நன்றாகப் படித்தனர்

23. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.

செய்வினைத் தொடரைக் கண்டறிக

(அ) உரை கவிதாவால் படிக்கப்பட்டது (ஆ) அவனை திருந்தச் செய்தான்.

(இ) அப்பா சொன்னார் (ஈ) பணம் காணாமல் போனது

24. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

“கீரியும் பாம்பும் போல”

– உவமை கூறும் பொருள் தெளிக.

(அ) பகைமை (ஆ) நட்பு (ஈ) ஒற்றுமை (ஈ) வேற்றுமை

25. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்.

கரன்சி நோட்.

(அ) கடன் அட்டை (ஆ) காசோலை (இ) வங்கி (ஈ) பணத்தாள்

26. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைக் கண்டறிக.

(அ) சென்னையில் இவ்வரும் மழைப்பொழிவு அதிகம்.

(ஆ) லட்சுமி பள்ளிக்கு விரைந்து சென்றாள்

(இ) மன்னிக்கும் மனம் உள்ளவனே மனிதன்

(ஈ) காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை பாய்மரக் கப்பல்கள்

27. திருச்சிராப்பள்ளி என்தன் மரூஉ.

(அ) திருச்சிராப்பள்ளி (ஆ) திருச்சூர் (இ) திரிச்சூர் (ஈ) திருச்சி

28. ஊர்ப்பெயரின் மரூவை எழுதுக.

திருநெல்வேலி

(அ) திருநல்வேலி (ஆ) நெல்லைபுரம் (இ) நெல்லை (ஈ) திருவேலி

29. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

தேன், மழை, வான், செய், பூ எனும் சொற்களைக் கொண்டு உருவாக்கினால் வரும் தவறான சொல்லைக் கண்டறிக.

(அ) வான் மழை (ஆ) பூ மழை (இ) வான் செய் (ஈ) தேன் மழை

30. சரியான சொல் எது?

வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் ———— நின்றனர்

(அ) எழுதுகோல் (ஆ) சீருடையுடன் (இ) புத்தகம் (ஈ) உயர்நிலை

31. பொருத்தமான காலத்தை எடுத்து எழுதுக.

(அ) மலர் வீட்டுக்குச் செல்வாள் (நிகழ்காலம்)

(ஆ) கண்ணன் வந்தான் (எதிர்காலம்)

(அ) கண்ணன் வருவான் (இறந்தகாலம்)

(ஈ) மலர் வீட்டுக்குச் சென்றாள் (இறந்தகாலம்)

32. கபிலன் பேசினான்.

பேசினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்?

(அ) எதிர்காலம் (ஆ) இறந்தகாலம் (இ) காலவழு (ஈ) நிகழ்காலம்

33. திருக்குறள் கருத்தின் அடிப்படையில் அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (உலகு)

(அ) கடலின்றி அமையாது ———– (ஆ) பகை இன்றி அமையாது ———

(இ) மலையின்றி அமையாது ————- (ஈ) நீரின்றி அமையாது ———–

34. அடைப்புக்குள் உள்ள பூவின் நலை குறித்த சொல்லைத் தகுந்த வாக்கியத்துடன் பொருத்துக.

(செம்மல்)

(அ) பூவின் தோற்றநிலை (ஆ) பூ வாடின நிலை

(இ) பூ விரியத் தொடங்கும் நிலை (ஈ) பூவின் மலர்ந்த நிலை

35. இரு பொருள் தருக.

மாலை – இரு பொருள் தருக.

(அ) மலை – மழை (ஆ) காலை – மாலை

(இ) பூ மாலை – மாலைப்பொழுது (ஈ) பகல் – இரவு

36. இரு பொருள் தருக.

நூல் – இரு பொருள் தருக

(அ) சிலப்பதிகாரம் – மணிமேகலை

(ஆ) ஆடைதைக்க உதவுவது நூல் – மூதுரை அற நூல்

(அ) பத்துப்பாட்டு – எட்டுத்தொகை

(ஈ) இராமாயணம் – மகாபாரதம்

37. குறில் – நெடில் மாற்றம் – பொருள் வேறுபாடு அறிக.

“கொடு – கோடு”

(அ) செய்தல் – வட்டம் (ஆ) தருதல் – நேராக வரைதல்

(இ) விருப்பம் – வளைவு (ஈ) உயரம் – குழந்தை

38. எர்த் வார்ம் தமிழ்ப்படுத்துக.

(அ) நாங்கூழ்ப்புழு (ஆ) புவி வெப்பம் (இ) உலகமயம் (ஈ) நிலநடுக்கம்

39. கலைச்சொல் அறிதல்.

Responsibility

(அ) உரிமை (ஆ) பணிவு (இ) முயற்சி (ஈ) கடமை

40. மெய்க்கீர்த்தி என்ற பெயர் யாருடைய காலத்தில் வந்தது?

(அ) சேரன் (ஆ) சோழன் (இ) பாண்டியன் (ஈ) பல்லவன்

41. கம்பர் தாம் இயற்றிய நூலுக்குத் தாமே இட்டப் பெயர் எது?

(அ) இராம சரிதம் (ஆ) இராமாவதாரம்

(இ) இராம வரலாறு (ஈ) இராமாயணம்

42. கீழ்க்கண்டவற்றுள் அடுக்குத்தொடரைக் கண்டறிக.

(அ) விறுவிறு (ஆ) கலகல (இ) மளமள (ஈ) பிடிபிடி

43. “வருக்கை” என்ற சொல்லின் பொருள் யாது?

(அ) வாழைப்பழம் (ஆ) மாம்பழம் (இ) பலாப்பழம் (ஈ) தேங்காய்

44. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

(அ) மதுரை தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம்

(ஆ) தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம் மதுரை

(இ) ஆணிவேர் துளிர்த்த தமிழ்த்தாயின் இடம் மதுரை

(ஈ) மதுரை இடம் துளிர்த்த ஆணிவேர் தமிழ்த்தாய்

45. பிழை திருத்துதல்.

சரியான பதிலை தேர்ந்தெடு.

(அ) ஓர் ஏரி (ஆ) ஒரு ஏரி (இ) ஓரேரி (ஈ) ஓராரி

46. பிழை திருத்துதல்.

சரியான பதிலை தேர்ந்தெடு.

(அ) ஓர் கடல் (ஆ) ஒரு கடல் (இ) ஓரிரு கடல் (ஈ) ஒன்று கடல்

47. பிழையற்ற தொடரை எழுதுக.

(அ) வலப்பக்கம் சுவற்றில் எழுதாதே (ஆ) வலது பக்கம் சுவறில் எழுதாதே

(இ) வலப்பக்கச் சுவரில் எழுதாதே (ஈ) வலப்பக்கச் சுவறில் எழுதாதே

கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு.

இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார். பன்மொழிப் புலமையும் போர்ப்பயிற்சியும் பெற்றவர். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். காளையார் கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நஙவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படை திரட்டி பயிற்சி அளித்தார். அமைச்சர் தாண்டவராயரும் தளபதிகளாகிய பெரிய மருது சின்ன மருது மற்றும் சிலரும் உடன் இருந்தனர். ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைபிரிவுக்குக் குயிலும் தலைமை ஏற்றனர். வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்கும் படி உடையாள் என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினர். மறுத்ததால் அவளைக் கொன்றுவிட்டனர். உடையாளின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று அவருக்கு ஒரு நடுகல் நடப்பட்டது.

48. இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் யார்?

(அ) செல்லமுத்து (ஆ) வேலுநாச்சியார்

(இ) முத்துவடுகநாதர் (ஈ) மருது பாணடியர்

49. முத்துவடுகநாதர் எப்பகுதியை ஆட்சி செய்தார்?

(அ) இராமநாதபுரம் (ஆ) சிவகங்கை (இ) திண்டுக்கல் (ஈ) காளையார் கோவில்

50. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?

(அ) குயிலி (ஆ) உடையாள் (இ) தாண்டவராயர் (ஈ) முத்துவடுகநாதர்

51. வேலுநாச்சியார் யாருடைய நினைவாக நடுகல் நட்டார்?

(அ) உடையாள் (ஆ) குயிலி

(இ) மருதுபாண்டியர் (ஈ) முத்துவடுகநாதர்

52. ஆண்கள் படைப்பிரிவின் தலைமை பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது?

(அ) செல்லமுத்து (ஆ) தாண்டவராயன் (இ) குயிலி (ஈ) மருது சகோதரர்கள்

53. கதிர் + ஈன – சேர்த்தெழுதுக

(அ) கதிரென (ஆ) கதியீன (இ) கதிரீன (ஈ) கதிரின்ன

54. அருந்துணை – பிரித்தெழுதுக.

(அ) அருமை + துணை (ஆ) அரு + துணை

(இ) அருமை + இணை (ஈ) அரு + இணை

55. எந்தமிழ்நா – பிரித்தெழுதுக.

(அ) எந் + தமிழ் + நா (ஆ) எந்த + தமிழ் + நா

(இ) எம் + தமிழ் + நா (ஈ) எந்தம் + தமிழ் + நா

56. சரியான நிறுத்தற்குறிகளை தருக.

(அ) தமிழ்மொழி இனிமை, வளமை, சீர்மை மிக்கது

(ஆ) தமிழ்மொழி இனிமை, வளமை, சீர்மை, மிக்கது.

(இ) தமிழ்மொழி இனிமை வளமை சீர்மை மிக்கது

(ஈ) தமிழ்மொழி,இனிமை,வளமை,சீர்மை மிக்கது.

57. எதிர்ச்சொல்லை எழுத்தெழுதுக.

நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே

(அ) இகழும்படி (ஆ) போற்றும்படி (இ) துன்புறுத்தும்படி (ஈ) வணங்கும்படி

58. தவறான இணை எது?

(அ) ஆழி-கடல் (ஆ) நாவாய்-கப்பல் (இ) பணி-வேலை (ஈ) பறவை-பரவை

59. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.

(அ) புள்-பறவை (ஆ) புள்-புல் (இ) பறவை-பறப்பது (ஈ) பனி-பணி

60. இதில் தவறான இணை எது?

(அ) போற்றார்-பகைவர் (ஆ) கிளை-உறவினர்

(இ) அலந்தவர்-வறியவர் (ஈ) பேதையார்-அறிவுடையார்

61. சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.

1. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் பாரி

2. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விட புகழ்ப் பெற்றான் வள்ளல் பாரி

3. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்

4. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்

(அ) 1 மற்றும் 3 (ஆ) 1 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 2 மற்றும் 4

62. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(அ) தமிழ் – மூன்று (ஆ) மலையாளம் – மூணு

(இ) துளு – மூஜி (ஈ) தெலுங்கு – மூரு

63. மரபு பிழைகள் (தொகைமரபு)

மரபுப் பிழையற்ற சொல்லுடன் இணை.

ஆட்டு

(அ) நிரை (ஆ) மந்தை (இ) கூட்டம் (ஈ) அணி அணியாக

64. மரபுப் பிழையை நீக்குக.

மயில் கத்த குயில் பாடியது.

(அ) மயில் அகவ குயில் கூவியது (ஆ) மயில் அலற குயில் கத்தியது

(இ) மயில் ஆட குயில் பாடியது (ஈ) மயில் கத்த குயில் கரைந்தது

65. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிக.

(அ) Thesis – ஆய்வறிக்கை (ஆ) Intellectual – அறிவாளிகள்

(இ) Chamber – அறை (ஈ) Emblem – அரசு பதிப்பு

66. ஒலி மரபுப் பிழைகளைத் திருத்துக:

அலறும் மயிலும் கூவும் ஆந்தையும்

அகவும் சேவலும்

(அ) அகவும்,அலறும்,கூவும் (ஆ) அலறும்,அகவும்,கூவும்,

(இ) கூவும்,அகவும்,அலறும் (ஈ)அகவும்,கூவும்,அலறும்

67. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து, சரியான இணையைத் தெரிவு செய்க:

பனி-பணி

(அ) குளிர்ச்சி-பன்றி (ஆ) பன்றி-வேலை

(இ) குளிர்ச்சி-வேலை (ஈ) வேலை-குளிர்ச்சி

68. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

தாள்,தண்டு, கோல், தூறு, தட்டு ஆகிய சொற்கள் தாவரத்தின் எப்பகுதியைக் குறிக்கும்?

(அ) அடிப்பகுதி (ஆ) கிளை (இ) இலை (ஈ) இளம்பயிர்

69. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

போது,அரும்பு,வீ,செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?

(அ) இலை வகை (ஆ) கொழுந்து வகை (இ) கிளைப்பிரிவு (ஈ) பூவின் நிலை

70. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:

தங்கம், நம்பிக்கை, ஞாயிறு, விடுதலை

(அ) தங்கம்,ஞாயிறு,நம்பிக்கை,விடுதலை

(ஆ) விடுதலை,நம்பிக்கை,தங்கம்,ஞாயிறு

(இ) ஞாயிறு,தங்கம்,நம்பிக்கை,விடுதலை

(ஈ) நம்பிக்கை,தங்கம்,ஞாயிறு,விடுதலை

71. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:

தையல்,தம்பி,தீக்குச்சி,தாமரை,தும்பி

(அ) தையல்,தும்பி,தீக்குச்சி,தாமரை,தம்பி

(ஆ) தும்பி,தையல்,தாமரை,தீக்குச்சி,தம்பி

(இ) தாமரை,தீக்குச்சி,தம்பி,தையல்,தும்பி

(ஈ) தம்பி,தாமரை,தீக்குச்சி,தும்பி,தையல்

72. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:

(அ) சேலம்-மாங்கனி நகரம் (ஆ) சிவகாசி-முத்துநகரம்

(இ) திருவண்ணாமலை-தீபநகரம் (ஈ) மதுரை-தூங்கா நகரம்

73. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:

கண்,சுடர்,சிவப்பு,கௌதாரி

(அ) சிவப்பு,கௌதாரி,சுடர்,கண் (ஆ) கண்,கௌதாரி,சிவப்பு,சுடர்

(இ) சுடர்,கௌதாரி,கண்,சிவப்பு (ஈ) சிவப்பு,சுடர்,கௌதாரி,கண்

74. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:

சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக:

(அ) கதிரவன் மறையும் காலையில் உதித்து, மாலையில்

(ஆ) காலையில், மாலையில் உதித்து மறையும் கதிரவன்

(இ) கதிரவன் காலையில் உதித்து, மாலையில் மறையும்

(ஈ) மறையும் மாலையில் கதிரவன், உதித்து காலையில்

75. விடை வகையை கண்டறிக:

“கடைக்குப் போவாயா? ஏன்ற கேள்விக்குப் போக மாட்டேன்” என்று கூறுவது.

(அ) மறை விடை (ஆ) எதிர் விடை (இ) நேர்விடை (ஈ) சுட்டு விடை

76. விடை வகையை கண்டறிதல்:

“பாடம் படிக்கிறாயா? என்ற வினாவிற்கு “படிக்காமல் இருப்பேனா?” என்று கூறுவது.

(அ) மறை விடை (ஆ) இனமொழி விடை

(இ) நேர் விடை (ஈ) வினா எதிர் வினாதல் விடை

77. விடைக்கேற்ற வினா அமைக்க:

மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் இயந்திரம் தானியங்கி.

(அ) தானே இயங்குவது தானியங்கியா?

(ஆ) மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானியங்கி இயங்குகிறதா?

(இ) மனித முயற்சிகளுக்கு மாற்றாக இயங்கும் எந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(ஈ) தானியங்கியின் பணி மனித முயற்சிக்கு மாற்றாக இயங்குவதா?

78. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

“நகமும் சதையும் போல” – உவமை கூறும் பொருளை எழுதுக.

(அ) வேற்றுமை (ஆ) நட்பு (இ) ஏமாற்றம் (ஈ) ஒற்றுமை

79. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க:

(அ) Storm-கடற்காற்று (ஆ) Tempest-புயல்

(இ) Tornado-சூறாவளி (ஈ) Sea Breeze-பெருங்காற்று

80. அலுவல் சார்ந்த கலைச்சொற்கள்:

தவறான இணையைத் தேர்ந்தெடுக்க:

(அ) Humanism-மனிதநேயம் (ஆ) Cultural Boundaries-பாரம்பரிய எல்லை

(இ) Cabinet-அமைச்சரவை (ஈ) Cultural Values-பண்பாட்டு விழுமியங்கள்

81. விடை வகைகள்:

“உனக்குக் கவிதை எழுதத் தெரியுமா?” ஏனற் வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரிபும்” என்று கூறுவது.

(அ) இனமொழி விடை (ஆ) உறுவது கூறல் விடை

(இ) உற்றது உரைத்தல் விடை (ஈ) குறிப்பு விடை

82. நிறுத்தற்குறிகளை அறிதல்:

நிறுத்தற்குறிகள் (எது சரியானது)

(அ) “கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?”

(ஆ) கூரன் இங்கு வந்தாளா! அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா.

(இ) கூரன் இங்கு வந்தாளா. அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?

(ஈ) “கூரன் இங்கு வந்தாளா, அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா”

83. நிறுத்தற்குறிகளை அறிதல்:

நிறுத்தற்குறிகள் (எது சரியானது)

(அ) சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்?

(ஆ) உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம்.

(இ) “பாகற்காய் கசப்புச் சுவை உடையது”

(ஈ) தமிழ்மொழி பேசவும், படிக்கவும் எழுதவும் உகந்த மொழி!

84. அடிக்கோடிட்ட சொல்லின் எழுத்து வழக்கைத் தேர்ந்தெடு:

வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்

(அ) வயிறுக்கு (ஆ) வயறுக்கு (இ) வவுறுக்கு (ஈ) வயிற்றுக்கு

85. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு:

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே!

(அ) நீங்க சொன்ன இடமே தான் அண்ணே!

(ஆ) நீங்க சொன்ன இடத்தில்தான் அண்ணே!

(இ) நீங்க சொன்ன இடத்தில் அண்ணே!

(ஈ) நீங்க சொன்ன இடம் தான் அண்ணே!

86. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

ஆழ்வார்கள் ————– பேர்?

(அ) எப்படி (ஆ) எத்தனை (இ) ஏன் (ஈ) என்ன

87. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

(அ) நெல்லையப்பர் கோவில் எங்கு உள்ளது?

(ஆ) நெல்லையப்பர் கோவில் எங்கு ஆனது?

(இ) நெல்லையப்பர் கோவில் கற்களால் ஆனது?

(ஈ) நெல்லையப்பர் கோவிலில் பெருஞ்சுவர் உள்ளது?

88. அழைப்பு மணி ————, கயல்விழி கதவைத் திறந்தார்.

(அ) ஒலித்தது (ஆ) ஒலித்து (இ) ஒலித்ததால் (ஈ) ஒலிக்கும்

89. பொருத்துக:

அ. அடி அகரம் ஐ ஆதல் 1. செங்கதிர்

ஆ. முன்நின்ற மெய் திரிதல் 2. பெருங்கொடை

இ. ஆதிநீடல் 3. பைங்கூழ்

ஈ. இனமிகல் 4. காரிருள்

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 4 2 1 3

(இ) 3 1 2 4

(ஈ) 2 3 1 4

90. குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக:

விதி – வீதீ

(அ) அகலம் – வீடு (ஆ) வரி வதித்தல் – தெரு

(இ) தடைவிதித்தல் – தலைவலி (ஈ) வீடு பேறு – தலையெழுத்து

91. கூற்று – காரணம் : சரியா? தவறர்?

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்”

கூற்று (1): இப்பாடலைப் பாடியவர் ஒளவையார்

(2) : ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதூரை போன்ற நூல்களை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

(3) : இவ்வடிகள் ஆச்திச்சூடியில் இடம் பெற்றுள்ளன.

(அ) கூற்று (1), (2), (3) தவறு (ஆ) கூற்று (2 சரி, (2), (3) தவறு

(இ) கூற்று: (1), (2), (3) சரி (ஈ) கூற்று : (1), (2) சரி (3) மட்டும் தவறு

92. கூற்று – காரணம் : சரியா? தவறர்?

கூற்று: (1) ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர்.

கூற்று: (2) : முத்தொள்ளாயிரம் சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகின்றது.

(அ) கூற்று இரண்டும் சரி (ஆ) கூற்று இரண்டும் தவறு

(இ) கூற்று (2) மட்டும் சரி (ஈ) கூற்று (1) மட்டும் சரி

93. சொல்லுக்கு இணையான பொருள் தருக:

காமம், வெகுளி, மயக்கம்.

(அ) ஈகை, கருணை, கோபம் (ஆ) கோபம், துன்பம், ஆசை

(இ) கருணை, சினம், ஈகை (ஈ) ஆசை, சினம், அறியாமை

94. சொல்லுக்கு இணையான பொருள் காண்க: ஊழி – ?

(அ) வானம் (ஆ) யுகம் (இ) முறை (ஈ) சிறப்பு

95. பொருத்தமான விடையறிக:

(அ) நீ வந்தேன் (ஆ) நீ வந்தாய் (இ) நாளை வந்தாய் (ஈ) நாளை வந்தேன்

96. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க:

யானை

(அ) யானை மந்தை (ஆ) யானைகள் (இ) யானை நிரை (ஈ) யானைக்கூட்டம்

97. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

(அ) தமிழர்களின் வீர விளையாட்டு தொன்மையான ஏறு தழுவுதல்

(ஆ) தமிழர்களின் வீரு விளையாட்டு ஏறு தழுவுதல் தொன்மையான

(இ) தொன்மையான வீர விளையாட்டு தமிழர்களின் ஏறு தழுவுதல்

(ஈ) தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல்

98. சொல்லையும் பொருளையும் பொருத்துக:

(அ) சாந்தம் 1. சிறப்பு.

(ஆ) மகத்துவம் 2. உலகம்

(இ) தாரணி 3. கருணை

(ஈ) இரக்கம் 4. அ மைதி

அ ஆ இ ஈ

(அ) 4 1 2 3

(ஆ) 1 2 3 4

(இ) 4 3 2 1

(ஈ) 3 4 1 2

99. ஒருமை பன்மை பிழை நீக்குக:

(அ) சூரியன் உதித்தான (ஆ) மாலையில் சூரியன் மறைந்தது

(இ) நானும் அவனும் வந்தேன் (ஈ) மந்தையில் மேய்ப்பர்கள் வந்தார்கள்

100. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக:

(அ) கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கின்றார்கள்

(ஆ) கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்

(இ) கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கின்றன

(ஈ) கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கின்றது

101. குறைந்த செலவில் உருவாக்கப்படும் ஆற்றல் ———— ஆகும்

(அ) காற்று ஆற்றல் (ஆ) நீர்மின் ஆற்றல்

(இ) அணுக்கரு ஆற்றல (ஈ) சூரிய ஆற்றல்

102. மோட்டார் வாகனங்களில் அதிர்வு தாங்கிகள் பொருத்தப்படுவது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

(அ) நியூட்டனின் ஈர்ப்பியல் விதி (ஆ) நியூட்டனின் முதல் விதி

(இ) நியூட்டனின் மூன்றாவது விதி (ஈ) கணத்தாக்கு

103. கீழ்க்கண்டவற்றுள் எவை மலேரியா நோயை உண்டாக்கும் ஓட்டுண்ணி

(அ) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (ஆ) பி.மலேரியா

(இ) பி.ஃபால்சிபாரம் (ஈ) இவை அனைத்தும்

104. வயிற்றில் உண்டாகும் அமிலத்தன்மை அதிகரிக்கும் உபாதையை நீக்கப் பயன்படும் அமில முறிவுப் பொருளின் முக்கிய மூலப்பொருள் —————— ஆகும்.

(அ) அமிலம் (ஆ) காரம் (இ) நடுநிலை கரைசல் (ஈ) வீரிய அமிலம்

105. பௌதீக மற்றும் காலநிலை தேவைகளுக்கு அத்தியாவசியமான காடுகள்

(அ) பாதுகாக்கப்பட்ட காடு (ஆ) தேசிய காடு (இ) கிராம காடு (ஈ) மர நிலங்கள்

106. 2011ல் இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்த நீரின் அளவு என்ன?

(அ) 1545 கன மீட்டர் (ஆ) 1515 கன மீட்டர்

(இ) 1673 கன மீட்டர் (ஈ) 1860 கன மீட்டர்

107. அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கும் அரசாங்கத்திற்க்கும் இடையேயான சமூக சிந்தனையை எடுத்து செல்லும் நீர்க்குழாய் போன்றவை என ஒப்பிட்டவர் யார்?

(அ) பார்கர் (ஆ) சர்தாமஸ்மோர்

(இ) டி.எச்.கிரீன் (ஈ) ஹெர்பர்ட் ஸ்பென்சர்

108. “நிதி கூட்டாட்சி” என்பதன் மிக முக்கியமான அம்சம் என்பது இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதாகும்

(அ) சிக்கனத் திறன் (ஆ) நேர்மை (இ) தார்மிகம் (ஈ) நிர்வாகத் திறன்

109.”சீன நீர் குண்டு” திட்டம் (அணை) இந்நதியின் மீது கட்டப்படுவதால், இந்தியாவுக்கு ஆபத்து உண்டாக்கும்

(அ) சிந்து நதி (அ) யாங்ட்ஸி நதி

(இ) பிரம்மபுத்ரா நதி (ஈ) ஹீவாங் ஹோ நதி

110. மகமது கவான் எந்த குற்றத்துக்காக கொல்லப்பட்டார்

(அ) கொலை (ஆ) நடத்தை-விபச்சாரம்

(இ) போலியான தேசத்துரோக குற்றச்சாட்டு (இ) திருட்டு

111. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, தனது முதல் தொழில்கலையை சூரத்தில் எந்த முதலாயப் பேரரசருடைய அனுமதியின் பேரில் தொடங்கியது?

(அ) அக்பர் (ஆ) ஜஹாங்கீர் (இ) ஷாஜஹான் (ஈ) ஹீமாயூன்

112. பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I உடன் அட்டவணை-II ஐ பொருத்துக:

அட்டவணை-I அட்டவணை-II

பயணிகள் விசயநகர ஆட்சியாளர்கள்

(அ) நிக்கோலோ-டி-காண்டி 1. கிருஷ்ண தேவராயர்

(ஆ) டோமிங்கோ பயஸ் 2. தேவராயர்-II

(இ) பெர்னோ நுன்ஸ் 3. தேவராயர்-I

(ஈ) அப்துல் ரசாக் 4. அச்சுத ராயர்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ 1 4 2 3

இ. 3 2 1 4

ஈ. 2 1 4 3

113. செயற்கை செங்கல் கப்பல் துறைமுகம் கொண்ட ஒரே சிந்துசமவெளி நகரத்தின் பெயர்

(அ) லோத்தல் (ஆ) கலிபங்கன் (இ) சான்குதாரோ (ஈ) சர்கோடோடா

114. துணை குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது அவரை பதவி நீக்கம் செய்யும் முறை யாது?

(அ) கீழவையில் தீர்மானம் இயற்றுவதன் மூலம்

(ஆ) இந்திய தலைமை நீதிபதியின் அனுமதி கிடைத்தவுடன்

(இ) இந்திய தலைமை வழக்குரைஞரின் அனுமதி கிடைத்தவுடன்

(ஈ) குடியரசுத் தலைவர பதவி நீக்கம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட அதே முறை

115. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாக விளங்கக்கூடியது

(அ) உச்ச நீதிமன்றம் (ஆ) அரசியலமைப்பு நிர்ணயசபை

(இ) பாராளுமன்றம் (ஈ) குடியரசுத் தலைவர்

116.மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

(அ) 1963 (ஆ) 1949 (இ) 1959 (ஈ) 1969

117. எந்த சூழ்நிலையில் ஒருவரது இந்திய குடியுரிமையை நீக்க முடியாது?

(அ) அவசர நிலை அமலில் உள்ள போது (ஆ) போர் நடந்து கொண்டிருக்கும் போது

(இ) தேர்தல் நடைபெறும் போது (ஈ) மேலே உள்ள அனைத்தும்

118. கீழ்குறிப்பிடப்பட்டவர்களுள், இந்திய அரசியலமைப்பின் முன்னுரை தான், அரசியலமைப்பின் முக்கிய குறிப்பு என்று கூறியது யார்?

(அ) எர்னஸ்ட் பார்க்கர் (ஆ) ஜவஹர்லால் நேரு

(இ) Dr.B.R.அம்பேத்கர் (ஈ) நெல்சன் மண்டேலா

119. “NABARD” தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

(அ) 1982 (ஆ) 1983 (இ) 1984 (ஈ) 1985

120. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவர்

(அ) ரமேஷ் சந்த் (ஆ) N.K.சிங் (இ) Y.V.ரெட்டி (ஈ) அசோக் லஹிரி

121. தவிர்க்க இயலாத நிலை அல்லது கட்டாயமாகும் திட்டமிடுதல் இவ்வாறும் அழைக்கப்படலாம்.

(அ) குறிக்கும் திட்டமிடல் (ஆ) நெறிமுறை திட்டமிடல்

(இ) இலக்கு திட்டமிடல் (ஈ) அமைப்பு திட்டமிடல்

122. இந்தியாவில் தாராளமயக் கொள்கை செயல்பாடுகள் எந்த குழுவின் கீழ் இயங்கியது?

(அ) விஸ்வேஸ்ரய்யா குழு (ஆ) நரசிம்மம் குழு (இ) ஹசாரி குழு (ஈ) டட் குழு

123. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த ஆண்டு

(அ) 11 ஏப்ரல் 1918 (ஆ) 27 மே 1918 (இ) 13 ஏப்ரல் 1919 (ஈ) 30 மே 1920

124. கூற்று (A): 1929 இன் பிற்பகுதியில் உருவான உலகளாவிய மந்தநிலை இந்தியாவையும் பாதித்தது.

காரணம் (R): குறிப்பாக விவசாயப் பொருட்களின் விலைகளில் மிகக் கடுமையான வீழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஏற்றுமதி சார்ந்த காலனித்துவப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியைக் கொண்டு வந்தது

(அ) (A) சரி, ஆனால் (R) தவறு

(ஆ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும்.

(இ) (A) தவறு, ஆனால் (R) சரி

(ஈ) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல

125. “இந்திய தொண்டர் சங்கத்தை” தொடங்கியவர்

(அ) மகாத்மா காந்தி (ஆ) கோபால கிருஷ்ண கோகலே

(இ) சுபாஷ் சந்திர போஸ் (ஈ) தாதாபாய் நௌரோஜி

126. ராஜ்மஹால் பகுதியில் “டொமின்-இ-கோ” என்றால் என்ன?

(அ) கோல் இனத்தரின் இடம் (ஆ) முண்டோ இனத்தரின் இடம்

(இ) சந்தால் இனத்தரின் இடம் (ஈ) மலபாரின் ஒரு பகுதி

127. சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சியிலிருந்து முதல் அமைச்சராக இருந்தவர்

(அ) பொப்பிலி அரசர் (ஆ) பனகல் அரசர் (இ) ராஜன் (ஈ) சுப்பாராயலு

128.கீழ்வருவனவற்றுள் மாறுபாடான ஒன்றை கண்டுபிடி:

(அ) கட்டபொம்பன் கும்பி பாடல் (ஆ) கான் சாகிப் சண்டை

(இ) கட்டபொம்மன் கூத்து (ஈ) நந்தனர் சரித்திர கீர்த்தனைகள்

129.”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல” – இவ்வுவமை உணர்த்தும் பொருள்

(அ) பொறையுடைமை (ஆ) ஒழுக்கமுடைமை (இ) நட்புடைமை (ஈ) அறிவுடைமை

130. தமிழின் முதல் சென்ரியூ தொகுப்பான “ஒரு வண்டி சென்ரியூ” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

(அ) ஈரோடு தமிழன்பன் (ஆ) அப்துல் ரகுமான்

(இ) அறிவுமதி (ஈ) மீரா

131. “கிழக்கின் டிராய்” என அழைக்கப்படுவது

(அ) வேலூர் கோட்டை (ஆ) செஞ்சிக் கோட்டை

(இ) தரங்கம்பாடி கோட்டை (ஈ) சிவகங்கை கோட்டை

132. ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

– அடுத்த வரிகள்

(அ) அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை

(ஆ) பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

(இ) அறிவெனப்படுவது பேதையர் சொல் நோன்றல்

(ஈ) செரிவெனப்படுவது கூறியது மறாஅமை

133. பின்வரும் நூல்களில் பதினெண் மேற்கணக்கு வகையைச் சேர்ந்தது எது?

(அ) திருக்குறள் (ஆ) திருமுருகாற்றுப்படை

(இ) திருப்பாவை (ஈ) திருத்தொண்டர் புராணம்

134. சங்க காலத்தின் சமுதாயத்தில் நிலவி வந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எடுத்துக் கூறுவது

(அ) தொல்காப்பியம் (ஆ) எட்டுத்தொகை

(இ) பத்துப்பாட்டு (ஈ) பதினெண் கீழ்கணக்கு

135. 2019-2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் TANGEDCO பின்வரும் மாவட்டங்களில் மிதக்கும் சூரிய மின் திட்டத்தை நிறுவும்.

(அ) தேனி

(ஆ) நீலகிரி

(இ) ஈரோடு

(ஈ) சேலம்

சரியான விடையை குறியீடுகளைப் பயன்படுத்தி தெரிவு செய்க:

(அ) (அ) மற்றும் (ஆ) (ஆ) (அ), (ஆ) மற்றும் (இ)

(இ) (அ), (ஆ) மற்றும் (ஈ) (ஈ) (அ), (இ) மற்றும் (ஈ)

136. பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I உடன் அட்டவணை-IIஐ பொருத்துக.

அட்டவணை-I அட்டவணை-II

(அ) வறுமை ஒழிப்புத் திட்டம் 1. மதிய உணவு

(ஆ) மக்கள் மேம்பாட்டுத் திட்டம் 2. இந்திரா ஆவாஸ் யோஜனா

(இ) சமூக உதவித் திட்டம் 3. தேசிய முதியோர் பென்ஷன்

(ஈ) அடிப்படைத் தேவைகள் திட்டம் 4. MGNREGA

அ ஆ இ ஈ

அ. 4 1 3 2

ஆ. 2 3 4 1

இ. 3 4 1 2

ஈ. 4 3 2 1

137. பொருத்துக:

அ. இறையாண்மை 1. எல்லா வித வேற்றுமையையும் தகர்க்க சமூக மாற்றத்தை

உருவாக்குதல்

ஆ. பொது நலக்கோட்பாடு 2. மக்களால், மக்களுக்காக, மக்களாகவே செய்யும் ஆட்சி

இ மதச்சார்பற்ற 3. ஏந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்ற பறைசாற்

சுதந்திரம்

ஈ. ஜனநாயகம் 4. முற்றிலும் அரசியல் சுதந்திரம் மற்றும் இறை அதிகாரம்

அ ஆ இ ஈ

அ. 4 1 3 2

ஆ 2 1 4 3

இ. 3 2 1 4

ஈ. 1 2 3 4

138. வலியுறுத்தல் (A): சமூக பொருளாதார வளர்ச்சிக் கொள்கையானது வருவாய்-நுகர்வு மறுபங்கீடு செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்

காரணம் (R): உற்பத்தியால் மட்டுமே கணிசமான வறுமை குறைப்பு சாத்தியமாகும். அது ஏழை பிரிவு மக்களுக்கு சாதகமாக வருவாய் மறுபகிர்வு செய்ய உதவும்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-வினுடைய சரியான விளக்கமல்ல

(ஆ) (A) என்பது உண்மை ஆனால் (R) என்பது தவறு

(இ) (A) என்பது தவறு ஆனால் (R) என்பது உண்மை

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும்

139. மனோகர் என்பவர் ரூ.4,500 க்கு ரூ.750 வீதம் 2 வருடங்களுக்கு வட்டி செலுத்துகிறார் எனில் அவர் செலுத்திய வட்டி வீதம் என்ன?

(அ) 8% (ஆ) 8 1/3% (இ) 8 2/3% (ஈ) 8 ¾%

140. x + 6, x + 12 மற்றும் x + 15 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் தொடர்ச்சியான மூன்று உறுப்புகள் எனில் ன் மதிப்பைக் காண்க.

(அ) -78 (ஆ) -18 (அ) -12 (ஈ) -6

141. 16, 11, 6, 1—— என்ற தொடர் வரிசையில் -54 என்பது எத்தனையாவது உறுப்பு?

(அ) 16 (ஆ) 19 (இ) 14 (ஈ) 15

142. இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப்போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப்போல் இரு மடங்காகும் எனில் இராமனின் தற்போதைய வயது என்ன?

(அ) 45 (ஆ) 55 (இ) 65 (ஈ) 70

143. கோடிட்ட இடத்தை நிரப்புக:

4,5,9,18,34————-

(அ) 59 (ஆ) 50 (இ) 49 (ஈ) 43

144. இவற்றில் பொருத்தமற்றது எது?

CFD, GJH, VYM, JMK

(அ) CFD (ஆ) GJH (இ) VYM (ஈ) JMK

145. ரூ.8,000 க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள விதியாசத்தைக் காண்க.

(அ) ரூ.80 (ஆ) ரூ.90 (இ) ரூ.70 (ஈ) ரூ.100

146. ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு ரூ.30,000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மதிப்பு என்ன?

(அ) ரூ.25,721 (ஆ) ரூ.25,722 (இ) 27,521 (ஈ) 22,752

147. ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்கு 28 நாட்களுக்கு தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துக்களை விற்றுவிட்டார் எனில் அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்?

(அ) 84 (ஆ) 36 (இ) 72 (ஈ) 68

148. 11 : x : : 6 : 66 என்ற விகித சமத்தில் x-ன் மதிப்பு காண்க:

(அ) 6 (ஆ) 11 (இ) 112 (ஈ) 62

149. x3 – x2 + x – 1 மற்றும் x4 – 1 இவற்றின் மீ.பொ.வ. காண்க:

(அ) (x2 + 1) (x2 -1) (ஆ) (x2 – 1) (x+1) (இ) (x2+1) (x-1) 2 (ஈ) (x2+1) (x-1)

150. 513 மற்றும் 1134-ன் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க:

(அ) 9 (ஆ) 81 (இ) 27 (ஈ) 31

151. பின்வரும் தனிமங்களில், ஒரு அணுக்கரு உலையில் கட்டுப்பாட்டுத் தண்டுகள் செய்யப்பயன்படுவது எது?

(அ) சோடியம் (ஆ) காட்மியம் (இ) பொட்டாசியம் (ஈ) இரும்பு

152. நிலம் மற்றும் கடல் காற்று மற்றும் வியாபார காற்று இதனால் உருவாகிறது ———-

(அ) வெப்பச்சலனம் (ஆ) வெப்பக்கடத்தல் (இ) வெப்ப கதிர்வீச்சு (ஈ) சிதறல்

153. எதிர்கால உற்பத்தி செய்தலில் முப்பரிமான அச்சு முறை மரபு சார்ந்த உற்பத்தியைக் காட்டிலும் விரும்பப்படுகிறது எதனால்?

(அ) விலை குறைவு (ஆ) தரம் மற்றும் விரைவான விற்பனை

(இ) குறைந்த கழிவு (ஈ) இவை எல்லாம்

154. இராணித்தேனீயின் அதிகபட்ச வாழ்வுக்காலம்

(அ) 24 வருடம் (ஆ) 21 வருடம் (இ) 15 வருடம் (ஈ) 5 வருடம்

155. இந்தியாவில் பழங்குடிகளில் ———— இதில் எந்த பழங்குடி இடம்பெறாது.

(அ) திராவிடியன் பழங்குடி (ஆ) மங்கலாய்டு பழங்குடி

(இ) துர்கியோ-இரானியன் பழங்குடி (ஈ) ஆஸ்டோலாய்டு பழங்குடி

156. இரண்டாவது பசுமை புரட்சியின் முக்கிய நோக்கம்:

(அ) உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக விவசாய உற்த்தித் திறனை உயர்த்துவது

(ஆ) நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்காக

(இ) விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

157. பின்வருவனவற்றுள் இந்தியாவில் குறைந்த அளவு மழைப்பொழிவினை பெறும் பிரதேசம் எது?

(அ) மேற்கு மத்தியப்பிரதேசம் (ஆ) மேற்கு இராஜஸ்தான்

(இ) கிழக்கு மத்தியப்பிரதேசம் (ஈ) ஒரிசா

158. சர்வதேச மகளிர் தினம் 19-ஆம் தேதி மார்ச் மாதம் முதல் முறையாக எந்த வருடம் கொண்டாடப்பட்டது?

(அ) 1911 (ஆ) 1913 (இ) 1916 (ஈ) 1921

159. “பறக்கும் சீக்கியர்” என்று பிரபலமாக அறியப்படும் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்

(அ) மனோஜ் சிங் (ஆ) மில்கா சிங் (இ) மித்ரா சிங் (ஈ) மதன் சிங்

160. “தெலுங்கானா” என்ற பெயர் எந்த வார்த்தையை குறிக்கிறது.

(அ) திரிலிங்கா தேசம் (ஆ) தெலுங்கு தேசம் (இ) மலை தேசம் (ஈ) திரிபுரா தேசம்

161. தற்போதைய தெலுங்;கானா மாநில கவர்னர் யார்?

(அ) தமிழிசை சௌந்தர்ராஜன் (ஆ) தமிழ் செல்வி

(இ) சௌந்தர்ராஜன் (ஆ) கண்ணய்யா

162. கோட்டை இல்லாத ஒரே சிந்துசமவெளி நகரம் எது?

(அ) சான்குதாரோ (ஆ) லோத்தல் (இ) கலிபங்கன் (ஈ) ரங்பூர்

163. தைமூர் படையெடுப்பின் போது டில்லி சுல்தானில் சுல்தானாக இருவ்தவர் பெயர்?

(அ) தௌலத் கான் லோடி (ஆ) கியாசுதின் துக்ளக்

(இ) பெரோஸ் ஷா துக்ளக் (ஈ) நஸீருதின் முகமது ஷா துக்ளக்

164. கீழ்க்கண்டவற்றுள் சிவாஜியின் மிகப்பெரிய சாதனை எது?

(அ) மராத்திய பேரரசின் தந்தை

(ஆ) மொகலாயப் படையை தோற்கடித்தார்

(இ) மிகச்சிறந்த ஆட்சியாளர்

(ஈ) மொகலாயப் பேரரசின் விரிவாக்கத்தினை தென் இந்தியாவில் தோன்ற செய்தார்

165. மற்ற அரசர்களுக்கு ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகள் இருக்கலாம். ஏனக்கோ பல்லாயிரக்ணக்கான பிள்ளைகள் இருக்கின்றனர். அதாவது, அவர்கள் தாம் என்னுடைய துருக்கிய அடிமைகள்; அவர்கள்தாம் என்னுடைய ஆட்சிப் பகுதிகளுக்கு வாரிசுகள்; அப்பகுதிகளில் எல்லாம் என் பெயரை குத்பா (Khutba) அழியா வண்ணம் “பாதுகாப்பர்” என்ற வாக்கியத்தை கூறியது யார்?

(அ) பஹாஹயுத்தீன் குர்ஷப் (ஆ) கஜினியின் மஹ்மூத்

(இ) ஷிஹாபுத்தீன் முஹம்மத் (ஈ) குத்புத்தீன் ஐபெக்

166. தேர்தல் ஆணையம் தனது வருடாந்திர அறிக்கையை யாருக்கு சமர்பிக்க வேண்டும்?

(அ) மக்கள் சபை (ஆ) மாநிலங்கள் சபை

(இ) இந்திய பாராளுமன்றம் (ஈ) இந்திய குடியரசுத் தலைவர்

167.உள்ளாட்சித் துறை அரசாங்கத்தில் தேர்தல் கட்டாயம் என்று கூறிய சட்டத்திருத்தம்

(அ) 72-வது சட்டத்திருத்தம் (ஆ) 73-வது சட்டத்திருத்தம்

(இ) 64-வது சட்டத்திருத்தம் (ஈ) 63-வது சட்டத்திருத்தம்

168. வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் பயன்பாடுகள் கீழ்க்காணப்படுபவைகளில் எது/எவை?

1. நெகிழா அரசியலமைப்பு

2.கவர்னர் நியமனம்

3.ஒருங்கிணைந்த நீதித்துறை

(அ) 1,3 (ஆ) 1,2 (இ) 2,3 (ஈ) மேற்கூறிய அனைத்தும்

169. பலபரிமாண வறுமை குறியீடு கீழ் உள்ள குறிகாட்டிகளில் எவற்றை உள்ளடக்கவில்லை?

(அ) கல்வி (ஆ) சந்தை (இ) சுகாதாரம் (ஈ) வாழ்க்கை நிலை

170. “தொலைந்து போன பெண்கள்” – என்பது?

(அ) அதிகபடியான பெண்குழந்தைகள் கருவுறுதலை அளவிடுதல்

(ஆ) அதிகபடியான பெண்கள் குற்றங்களிலிருந்து தப்பிப்பதை அளவிடல்

(இ) அதிகபடியான பெண்கள் இறப்பு விகிதத்தை அளவிடல்

(ஈ) அதிகபடியான பெண்குழந்தைகளின் படிப்பின்மையினை அளவிடல்

171. வரி வருமானங்களில் அடங்குவன:

1.வருவாய்,செலவுகள் மீது போடப்படும் வரி.

2.சொத்துக்கள் மீது போடப்படும் வரி.

3.பொருள்கள் மீது போடப்படும் வரி.

4.பங்குகள் மற்றும் வட்டிகளின் ரசீது

(அ) 1,2 மற்றும் 4 (ஆ) 1,2 மற்றும் 3

(இ) 3,4 மற்றும் 2 (ஈ) மேலே உள்ள அனைத்தும்

172. “இந்தியாவின் பிஸ்மார்க்” என்று அழைக்கப்பட்ட சிறந்த இந்திய தலைவர்

(அ) காந்தி (ஆ) நேரு (இ) சர்தார் பட்டேல் (ஈ) இராஜேந்திர பிரசாத்

173. பட்டுகேஸ்வர தத் மற்றும் ———— மத்திய சட்டசபை மேல் 8 ஏப்ரல் 1929 அன்று குண்டு எறிந்தார்கள்.

(அ) ராம்பிரசாத் (ஆ) ரோஷன் லால் (இ) பகத்சிங் (ஈ) ராஜ்குரு

174. சாண்டர்ஸ் படுகொலை வழக்கில், 23 மார்ச் 1931 லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டவர்கள்

1. ராமபிரசாத் பிஸ்மில் மற்றும் லாலா லஜ்பத்ராய்.

2.பகத்சிங் மற்றும் ராஜ்குரு.

3.ரோஷன் லால், ராம்பிரசாத், ஹீசைனிவாலா.

4.பகத்சிங், ராஜ் குரு மற்றும் சுக்தேவ்

(அ) 1 மட்டும் (ஆ) 1 மற்றும் 3 (இ) 2 மற்றும் 3 (ஈ) 2 மற்றும் 4 மட்டும்

175. 1லிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுப்படும் மிகச்சிறிய எண்

(அ) 1260 (ஆ) 2520 (இ) 5040 (ஈ) 9000

176. மருது பாண்டியனின் தலைமையிடம் எது?

(அ) அறங்தாங்கி (ஆ) ஒக்கூர் (இ) பரமகுடி (ஈ) சிறுவாயல்

177. வேலூர் கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவ தளபதி யார்?

(அ) ஜார்ஜ் கார்மிசெல் ஸ்மித் (ஆ) ரோலோ கில்லஸ்பி

(இ) ஜான் நிக்கல்சன் (ஈ) வில்லியம் ஹாட்சன்

178. சிறுகதை ஆசிரியர்களை அவர்கள் எழுதிய சிறுகதைகளோடு தொடர்புபடுத்துக

ஆசிரியர் சிறுகதை

அ. ஜெயகாந்தன் 1. விடியுமா

ஆ. மௌனி 2. அக்னிப்பிரவேசம்

இ. புதுமைப்பித்தன் 3. ஆழியாச்சுடர்

ஈ. கு.ப.ராஜகோபாலன் 4. சாப விமோசனம்

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 3 2 1 4

(இ) 2 3 4 1

(ஈ) 2 3 1 4

179. “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் (சிவன்) யாரிடம் உரைத்தார்?

(அ) சுந்தரர் (ஆ) மாணிக்கவாசகர் (இ) ஞானசம்பந்தர் (ஈ) நாவுக்கரசர்

180.”லிரிக்” பாடல்கள் என்று எவ்வகைப் பாடல்களைக் குறிப்பிடுகின்றோம்?

(அ) பக்திப் பாடல்கள் (ஆ) வீரயுகப் பாடல்கள்

(இ) தன்னுணர்ச்சிப் பாடல்கள் (ஈ) தெம்மாங்குப் பாடல்கள்

181. 1. அவர் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.

2.வங்காளத்தின் கவர்னராகப் பணியாற்றியவர்.

3.சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937-ல் ஆனார்.

மேற்கூறிய கூற்றுக்கள் யாரை விவரிக்கிறது?

(அ) காமராஜர் (ஆ) இராஜாஜி (இ) நடேசன் (ஈ) முனுசாமி

182. 1843-ம் ஆண்டு ஆங்கிலேயரால் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நவீன வங்கி

(அ) செட்டிநாடு வங்கி (ஆ) ஆர்புத்நாட் கம்பெனி

(இ) மதுரா வங்கி (ஈ) மெட்ராஸ் வங்கி

183. காக்கா கலேல்கர் ஆணையம் எதனோடு தொடர்பு உடையது?

(அ) பட்டியலின ஜாதிக்கான தேசிய ஆணையம்

(ஆ) மலைவாழ் மக்களுக்கான தேசிய ஆணையம்

(இ) பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம்

(ஈ) ஆங்கிலோ இந்தியருக்கான அமைப்பு

184. இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பலவீனமான பிரிவுகளின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை ஊக்குவிக்கும் பிரிவை அடையாளம் காணவும்.

(அ) பிரிவு 46 (ஆ) பிரிவு15 (இ) பிரிவு 334 (ஈ) பிரிவு 342

185. பின்வரும் கூற்றுக்களில் சுய-மரியாதை இயக்கத்தைப் பற்றி சரியானது எது?

(அ) சுய-மரியாதை இயக்கம் என்பது உயர் சாதி இந்துக்களுக்கு எதிரான ஒரு சமூகப்போராட்டம்

(ஆ) சுய-மரியாதை இயக்கம் சமூக சுதந்திரத்தின் மீதே அதிக ஈடுபாடு கொண்டிருந்தது.

(இ) சுய-மரியாதை இயக்கம் பெரும்பாலும் நிலமுள்ள வர்க்கத்திற்காகவே முறையிட்டது.

(ஈ) சுய-மரியாதை அரசியல் சுதந்திரத்தை பெறுவதற்காக தோற்றுவிக்கப்பட்டது.

186. ஜவஹர்லால் நேரு தன்னுடைய தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவின் 90% தீப்பெட்டி பங்களிப்பினை செய்வதால் “சிறிய ஜப்பான்” என்று குறிப்பிட்டது.

(அ) கரூர் (ஆ) சிவகாசி (இ) காஞ்சிபுரம் (ஈ) சிவகங்கை

187. பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I மாறிலி) உடன் அட்டவணை-II (அளவுகள்)ஐ பொருத்துக.

அட்டவணை I அட்டவணை II

அ. அதிக அளவு வருவாய் வளர்ச்சி 1. கினி குணகம்

ஆ. வருவாய் பகிர்வில் பாலினி பாகுபாடு 2. மொத்த மாநில உள்நாட்டு தலா உற்பத்தி

இ. பாலின பிராந்திய ஏற்றத்தாழ்வு 3. மொத்த உள்நாட்டு உற்பத்தி

ஈ. அதிக அளவு மொத்த வருவாய் 4. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்

மற்றும் உற்பத்தி வருடாந்திர வளர்ச்சி வீதம்

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 4 1 2 3

இ. 4 1 3 2

ஈ. 2 3 1 4

188. ரூ.20,000 க்கு 15% ஆண்டு வட்டி வீதத்திற்கு 2 1/3 ஆண்டுகளுக்குக் கூட்டுவட்டியைக் காண்க.

(அ) ரூ.7,772.50 (ஆ) ரூ.6,772.50 (இ) ரூ.7,772 (ஈ) ரூ.2,777.50

189. 18 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம-வின் விகிதம்

(அ) 3 : 5 (ஆ) 15 : 1 (இ) 1 : 15 (ஈ) 5 : 3

190. BANGALORE என்பதை 123426789 என்று எழுதினால், RANGE என்பதை எழுதும் முறை

(அ) 82934 (ஆ) 82439 (இ) 82349 (ஈ) 82943

191. BOOK = 43 மற்றும் PEN = 35 எனில் COPY = ?

(அ) 48 (ஆ) 60 (இ) 59 (ஈ) 79

192. x ன் மதிப்பை காண்க:

4 3 2
6 9 10
9 27 x

(அ) 30 (ஆ) 20 (இ) 50 (ஈ) 54

193. ஒரு மீன் தொட்டியானது 4 மீ x 2 மீ x 3 மீ என்ற அளவுகளை உடையது. இந்தத் தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?

(அ) 24,000 லிட்டர் (ஆ) 2,400 லிட்டர் (இ) 240 லிட்டர் (ஈ) 24 லிட்டர்

194. சதுரத்தின் பரப்பளவும் வட்டத்தின் பரப்பளவும் சமம். வட்டத்தின் ஆரம் 14 செ.மீ. எனில் சதுரத்தின் பக்கத்தின் தோராய அளவு யாது?

(அ) 20 செ.மீ (ஆ) 25 செ.மீ (இ) 15 செ.மீ (ஈ) 30 செ.மீ

195. ராம் தம்மிடமுள்ள ரூ.15,000-ஐ நிரந்தர வைப்புக் கணக்கில் முதலீடு செய்கிறார். ஆந்த வங்கி 4% தனிவட்டி கொடுத்தால் 73 நாட்கள் கழித்து அவருக்கு கிடைக்கும் மொத்த தொகை யாது?

(அ) ரூ.16,000 (ஆ) ரூ.15,000 (இ) ரூ.15,120 (ஈ) ரூ.15,000

196. பூச்சட்டி ஒன்றை ரூ.528-க்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

(அ) ரூ.500 (ஆ) ரூ.550 (இ) ரூ.553 (ஈ) ரூ.573

197. 400 ன் 30% மதிப்பின் 25% என்ன?

(அ) 20 (ஆ) 30 (இ) 40 (ஈ) 50

198. 600-ன் x% என்பது 450 எனில், x-இன் மதிப்பைக் காண்க

(அ) 60 (ஆ) 48 (இ) 75 (ஈ) 89

199. 7 : 5 ஆனது 25-இக்கு விகித சமம் எனில் x-ன் மதிப்பு

(அ) 3.5 (ஆ) 35 (இ) 53 (ஈ) 5.3

200. பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம. காண்க:

8x4y2, 48x2y4

(அ) 8x4y2 (ஆ) 48x2y4 (இ) 48x4y4 (ஈ) 8x2y4

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!