Tnpsc Architectural Assistant / Planning Assistant Exam Previous Questions and Answer Key in Tamil
Tnpsc Architectural Assistant / Planning Assistant Exam Previous Questions and Answer Key in Tamil
ARCHITECTURAL ASSISTANT / PLANNING ASSISTANT IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE
1. ஒரு மனிதன் துருவத்திலிருந்து நில நடுக்கோட்டை நோக்கி வரும்போது அவன் மேல செயல்படும் மைய விலக்கு விசை எவ்வாறு இருக்கும்
(அ) அதிகரிக்கும் (ஆ) குறையும்
(இ) மாறாமல் இருக்கும் (ஈ) அதிகரித்து பின் குறையும்
2. ஹீக் விதியின் படி
(அ) தகைவு α திரிபு (ஆ) தகைவு = E X திரிபு
(இ) E = திரிபு/தகைவு (ஈ) A மற்றும் B இரண்டும் சரி
3. யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரி
(அ) டிரிப்பனசோமா (ஆ) உச்சரீரியா பாங்க்ரப்டி
(இ) அஸ்காரிஸ் லும்பிரிகாய்டஸ் (ஈ) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
4. கீழ்கண்ட எந்த வாயுடன் மனிதனின் ஹீமோகுளோபலின் மிக அதிகமாக பிணைப்பினை ஏற்படுத்தி கொள்ளும்?
(அ) கார்பன் மோனாக்சைடு (ஆ) மீதேன்
(இ) நைட்ரஸ் ஆக்சைடு (ஈ) கார்பன் டை ஆக்சைடு
5. 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக விஸ்டென் பத்திரிகையால் கணிக்கப்பட்டவர்
(அ) சச்சின் டெண்டுல்கர் (ஆ) ரவீந்திர ஜடேஜா
(இ) R. அஸ்வின் (ஈ) வீராட் கோலி
6. இந்திய, சைனா மற்றும் பூட்டானின் முச்சந்திப்பான, “தோக்லாம்” – இன் நிலத்தோற்றம்
(அ) மலைத்தொடர் (ஆ) பீடபூமி (இ) சமவெளி (ஈ) குன்று
7. இந்தியாவின் தேசிய பாடல் “வந்தே மாதரம்” பங்கிம் சந்திராவின் மிகவும் பிரபலமான நாவல் ————ன் ஒரு பகுதியாகும்.
(அ) மைலா ஆஞ்சல் (ஆ) பிஞ்சர் (இ) ஆனந்த மத் (ஈ) பூச்சோ பர்சாய்
8. இந்தியாவின் 23வது தலைமை தேர்தல் ஆணையர் பெயர்
(அ) சுனில் வர்மா (ஆ) சுனில் சிங் (இ) சுனில் தத்தா (ஈ) சுனில் அரோரோ
9. அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள காடுகள் மற்றும் மரம் வெட்டவும், மாடுகள் மேய்ப்பதற்கு பொது மக்களை அனுமதிக்காத காடுகள்
(அ) ஒதுக்கப்பட்ட காடுகள் (ஆ) பாதுகாக்கப்பட்ட காடுகள்
(இ) வகைப்படுத்தப்பாடத காடுகள் (ஈ) அகன்ற இலை காடுகள்
10. பின்வருவனவற்றுள் கோதாவரி நதியின் வலது துணை ஆறு எது?
(அ) பூர்னா (அ) மன்ஜிரா (இ) பென்கங்கா (ஈ) இந்திராவதி
11. சிவாஜியுடன் தொடர்புடைய ஊர்?
(அ) ஹிவ்னெரி (ஆ) ஏற்காடு (இ) அஹமத்நகர் (ஈ) ஹம்பி
12. கீழே கொடுக்கப்பட்டவற்றில் சரியானதை பொருத்துக:
மலைகள் இடங்கள்
1. ஏலக்காய் மலை சோழமண்டலக் கடற்கரை
2. கைமூர் மலை கொங்கனக் கடற்கரை
3. மகாதியோ மலை மத்திய இந்தியா
4. மிகிர் மலை வட கிழக்கு இந்தியா
(அ) 1 மற்றும் 2 (ஆ) 2 மற்றும் 3 (இ) 3 மற்றும் 4 (ஈ) 2 மற்றும் 4
13. முகலாயர்கள் எந்த இனத்து அடிமைகளை அதிகம் பயன்படுத்தினர்?
(அ) ஆப்பிரிக்கர்கள் (ஆ) ஆப்கானியர்கள் (இ) அபிசீனியர்கள் (ஈ) பெர்சியன்கள்
14. கிரேக்க வரலாற்றில் பெரிக்ளியன் காலம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது என மேற்கண்ட வாசகத்தை கூறியது யார்?
(அ) முனைவ் V.A.ஸ்மித் (ஆ) முனைவர் கீய்த் (இ) முனைவர் அல்டேகர் (ஈ) பார்னெட்
15. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துரு ———— உறுப்பாகும்
(அ) ஆட்சித்துறை சட்டம் (ஆ) பன்னாட்டுச் சட்டம்
(இ) சட்டத்தின் ஆட்சி (ஈ) அரசியலமைப்புச் சட்டம்
16. கீழ் சொல்லப்பட்டுள்ளவற்றுள் இந்திய பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கு உள்ள வரம்புகள்
1. அடிப்படை உரிமைகள்
2. நீதிப்புணராய்வு
3. கூட்டாட்சி
4. எழுதப்பட்ட அரசியலமைப்பு
(அ) 1,3 மற்றும் 4 (ஆ) 1,2 மற்றும் 3 (இ) 1 மற்றும் 2 (ஈ) 1,2,3 மற்றும் 4
17. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பகுதியின் கீழ் அரசின் கடமைகள் எனக் கருதப்படுபவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன?
(அ) முகவுரை (ஆ) அடிப்படை உரிமைகள்
(இ) அரசிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (ஈ) அடிப்படைக் கடமைகள்
18. அரசியலமைப்பு விதிகள் 14 முதல் 18 வரை விளக்குவது
(அ) அடிப்படை கடமைகள் (ஆ) தேர்தல் (இ) சமத்துவ உரிமை (ஈ) நீதித்துறை
19. மாநிலங்களுக்கு இடையேயான பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது நடுவண் அரசு வசூலிக்கும் IGST இல் உள்ள “I” என்பதன் விரிவாக்கம் யாது?
(அ) Internal (ஆ) Intra (இ) Integrated (ஈ) Intramural
20. இந்தியாவில் வறுமை தொடர்ந்து நீடிக்கிறது. ஏனென்றால்
(அ) உயரும் விலைவாசி (ஆ) அதிகரித்து வரும் மக்கள் தொகை
(இ) வேலை வாய்ப்பின்மை (ஈ) மேலே உள்ள அனைத்தும்
21. காகித பணம் முறை ———ல் நிர்வகிக்கப்படுகிறது
(அ) மைய பணவியல் அதிகாரி (ஆ) மாநில அரசு (இ) மத்திய அரசு (ஈ) இந்திய ரிசர்வ் வங்கி
22. சர்வோதயா திட்டம் இவரால் உருவாக்கப்பட்டது
(அ) ஜெய் பிரகாஷ் நாராயண் (ஆ) மகாத்மா காந்தி
(இ) ஆச்சார்யா வினோபா பாவே (ஈ) M.N.ராய்
23.”சுயராஜ்யத்தில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள்” – இது யாருடைய வார்த்தைகள்?
(அ) சர் சையத் அகமத்கான் (ஆ) கோபால கிருஷ்ண கோகலே
(இ) B.R.அம்பேத்கார் (ஈ) பா.க.திலகர்
24. பாரத் மாதா பத்திரிக்கையின் ஆசிரியர்
(அ) சுஃபி அஜித் சிங் (ஆ) கஃபி அம்பா பிரசாத் (இ) லால் சந்த் (ஈ) தன்பத் ராய்
25. “பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்” என்ற நூலை எழுதியவர்
(அ) தாதாபாய் நௌரோஜி (ஆ) ஜீ.வி.ஜோஷி (இ) ஆர்.சி.தத் (ஈ) ராணடே
26. கொடுக்கப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்துக:
1. மோப்லாஹ கிளர்ச்சி
2. சந்தால் கிளர்ச்சி
3. பெரும் புரட்சி
4. சம்பாரன்
(அ) 3,2,4,1 (ஆ) 2,3,1,4 (இ) 2,3,4,1 (ஈ) 3,1,4,2
27. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர்
(அ) சட்டம்பி சுவாமிகள் (ஆ) நாராயண குரு (இ) ராமலிங்க அடிகள் (ஈ) ரமண மகரிஷி
28. கீழ்கண்ட கூற்றுகளில் தீரன் சின்ன மலையை பற்றி தவறான கூற்று எது?
1. தீரன் சின்னமலை ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டார்
2. கொங்கு நாட்டு வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைத்தார்
3. 1802ல் மேக்ஸ்வெல் என்ற தளபதி தீரன் சின்னமலை தோற்கடித்தார்
4. இவர் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்
(அ) 1 மட்டும் சரி 2,3,4 தவறானது (ஆ) 1,2 சரியானது 3,4 தவறானது
(இ) 1,2,4 சரியானது 3 மட்டும் தவறானது (ஈ) 1,2,3 சரியானது 4 மட்டும் தவறானது
29. “ஆற்றங்கரைப் பிள்ளையார்” என்ற சிறுகதையின் ஆசிரியர்
(அ) அறிஞர் அண்ணா (ஆ) ஜெயகாந்தன் (இ) தூ.சா.இராமாமிர்தம் (ஈ) புதுமைப்பித்தன்
30. நாடகப் பேராசிரியர் சம்பந்த முதலியாரின் “சபாபதி” என்ற நாடகமானது
(அ) தழுவல் நாடகம் (ஆ) மிகச்சிறந்த நகைச்சுவை நாடகம்
(இ) துப்பறியும் நாடகம் (ஈ) சமூக நாடகம்
31. “நடமாடக் கோயில் நம்பர்க்கு ரென்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”
– என்ற திருமந்திரப்பாடல் உணர்த்தும் கருத்து
(அ) இறைவனுக்குப் படைப்பது மனிதனுக்குப் போய்ச்சேரும்
(ஆ) மனிதனுக்குக் கொடுப்பது இறைவனைச் சேரும்
(இ) மனிதனுக்கு உதவுவது இறைவனை அடையும் வழியன்று
(ஈ) இறைவனை அடைய இறைவனுக்குப் படைத்தலே நன்று
32. “பள்ளமடை” என்று அழைக்கப்பெறும் பாசுரங்கள் யாருடையவை?
(அ) திருமங்கையாழ்வார் (ஆ) சுந்தரர் (இ) ஆண்டாள் (ஈ) மாணிக்கவாசகர்
33. “புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்” – என புறநானூற்றுப்பாடல் யாரைச் சுட்டுகிறது
(அ) சான்றோர்கள் (ஆ) அரசர்கள் (இ) புலவர்கள் (ஈ) வீரர்கள்
34. அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவு பின்வருவனவற்றை உள்ளடக்கியது
அ. வருவாய் செலவினங்கள்
ஆ. பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த கொள்முதல்
இ. நிலையான மூலதன நுகர்வு
ஈ. மாறும் மூலதன நுகர்வு
சரியானவற்றை தேர்ந்தெடு:
(அ) அ மற்றும் ஆ மட்டும் (ஆ) அ மற்றும் இ மட்டும்
(இ) ஆ மற்றும் இ மட்டும் (ஆ) அ மற்றும் ஈ மட்டும்
35. பின்வரும் கூற்றை ஆராய்க:
1. SAKHI-திட்டம் பெண்களுக்கானது
2. பூர்ண சக்தி கேந்திரா பெண்களுக்கானது
3. கிராம ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகளை எளிதாக்கும் திட்டம், பெண்களுக்கானது
4. NAV-YUVAK (நவ்-யுவக்) திட்டம், பெண்களுக்கானது
(அ) 1 மற்றும் 4 சரி (ஆ) 3 மற்றும் 4 சரி (இ) 2 மற்றும் 4 சரி (ஈ) 1,2 மற்றும் 3 சரி
36. கூற்று (A): ஒரு நிலை நெருக்கடி மையம் வன்முறையால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் உதவுகிறது
காரணம் (R): 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு சிறார் நீதிச்சட்டம் மற்றும் போக்சோ சட்டம், 2012 மூலம் நிறுவப்பட்ட நிறுவனங்களும், அதிகாரிகளும் உதவுவர்
(அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மற்றும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம்
(ஆ) (A) தவறு (R) சரி
(இ) (A) சரி (R)தவறு
(ஈ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மற்றும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
37. கால நிலை மாற்றம் குறித்த தமிழ் மாநில செயல் திட்டம் (TNSAPCC), பாதிக்கப்படக் கூடிய ஏழு துறைகளை கண்டறிந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து சரியான துறையை தெரிவு செய்க:
1. நிலையான வேளாண்மை
2. நீர் வளங்கள்
3. தொழிற்சாலை மாசுபடுத்துதல்
4. கடலோர பகுதி மேலாண்மை
5. நிலையான வாழ்விடம்
6. அறிவு மேலாண்மை
குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடை காண்க:
(அ) 1,2,4,5 மற்றும் 6 (ஆ) 2,3,4,5 மற்றும் 6 (இ) 1,3,4,5 மற்றும் 6 (ஈ) 1,2,3,4 மற்றும் 5
38. பொருத்துக:
தேசிய அளவில் தமிழக உற்பத்தித் திறன் நிலை:
தானிய வகை தேசிய தர நிலை
அ. மொத்த தானியங்கள் 1. ஒன்று
ஆ. எண்ணெய் வித்துகள் 2. இரண்டு
இ. நெல் 3. மூன்று
ஈ. கரும்பு 4. நான்கு
உ. திடமான தானியங்கள் 5. எட்டு
அ ஆ இ ஈ உ
அ. 5 1 2 3 4
ஆ. 5 4 3 2 1
இ. 4 1 5 3 2
ஈ. 3 2 4 1 5
39. ₹. 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹.1,852.20 ஆகும்?
(அ) 2 ஆண்டுகள் (ஆ) 5 ஆண்டுகள் (இ) 4 ஆண்டுகள் (ஈ) 3 ஆண்டுகள்
40. “666 கிராமுக்கு 6 கிலோகிராம்” என்பதன் விகிதம் காண்க:
(அ) 111 : 1 (ஆ) 111 : 10 (இ) 111 : 100 (ஈ) 111 : 1000
41. அடுத்த எழுத்தைக் கண்டறிக:
R, U, X, A, D, ————
(அ) E (ஆ) H (இ) G (ஈ) F
42. அடுத்த எண் யாது?
840, 168, 42, 14, 7, ——–
(அ) 7 (ஆ) 1 (இ) 0 (ஈ) -7
43. A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்?
(அ) 2 மணிகள் (ஆ) 5 மணிகள் (இ) 7 மணிகள் (ஈ) 4 மணிகள்
44. A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக்கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க:
(அ) 4 நாள்கள் (ஆ) 6 நாள்கள் (இ) 9 நாள்கள் (ஈ) 7 நாள்கள்
45. ₹.15,625-ஐ 6 மாதங்களுக்கு 16% ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால், வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க:
(அ) ₹.1,300 (ஆ) ₹.1,325 (இ) ₹.1,250 (ஈ) ₹.1,275
46. ₹.8,000 ஆனது மூன்று ஆண்டுகளில் கூட்டுத் தொகை ₹.9,261 ஆகும். கூட்டு வட்டி வீதம் காண்க. (வட்டி ஆண்டிற்கு ஒரு முறை அசலுடன் சேருகின்றது)
(அ) 3 % (ஆ) 4 % (இ) 5 % (ஈ) 2 %
47. 12 மாடுகள் ஒரு வயலை 10 நாட்களில் மேய்கிறது எனில் 20 மாடுகள் அதே வயலை எத்தனை நாட்களில் மேயும்?
(அ) 15 (ஆ) 18 (இ) 6 (ஈ) 8
48. x : 4/9 = 3/11 : 5/33 எனில், Xன் மதிப்பு காண்க:
(அ) 3/7 (ஆ) 11/15 (இ 4/5 (ஈ) 3/17
49. மீ.பொ.வ காண்க:
x2 + xy, x3 y2 + x2 y3
(அ) x (x +y) (ஆ) x2 + xy (இ)x3y2 + x2y3 (ஈ) xy (x+y)
50. x4 – 1, x2 -1? ன் மீ.பொ.வ. காண்க:
(அ) (x+1) (x-1) (ஆ) (x – 1)2 (இ) x2 – 1 (ஈ) (x + 1)2
51. X கதிர்களின் அதிர்வெண் ———– ஆகும்.
(அ) 1017 முதல் 1019 ஹெர்ட்ஸ் வரை (ஆ) 1010 முதல் 1012 ஹெர்ட்ஸ் வரை
(இ) 105 முதல் 1010 ஹெர்ட்ஸ் வரை (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை.
52. க்யூரி வெப்பநிலைக்கு மேல் காந்த பொருட்கள் ————-ஆக இருக்கும்.
(அ) பெர்ரோ காந்தம் (ஆ) பாரா காந்தம் (இ) டையா காந்தம் (ஈ) பெர்ரி காந்தம்
53. பௌர்ணமி நிலவின் சுற்றுவட்டப்பாதை பூமிக்கு மிக அருகில் இருக்கும் பொழுது, மிகவும் பெரியதாகவும் அதிக ஒளி உடையதாகவும் பூமியின் மிகத் தொலைவிலுள்ள ஓர் இடத்திலிருந்து பார்க்கும் பொழுது தெரிவது ————– ஆகும்
(அ) சந்திர கிரகணம் (ஆ) சிவப்பு நில (இ) நீல நில (ஈ) சூப்பர் நிலா
54. உயிரின் அடிப்படை மூலம் என்பது
(அ) அமினோ அமிலங்கள் (ஆ) புரதங்கள்
(இ) கொழுப்பு புரதங்கள் (ஈ) நியூக்ளிக் அமிலங்கள்
55. “டிஜிட்டல் இந்தியா” எனும் பிரச்சாரம் துவங்கப்பட்ட ஆண்டு
(அ) 2016 (ஆ) 2014 (இ) 2015 (இ) 2017
56. கீழ்கண்டவற்றை பொருத்துக:
நூல் ஆசிரியர்
அ. ஒரு வேளை கசிந்தால் 1.R.C. பார்கவா
ஆ. இறுதி விளையாட்டு 2. ஸ்டீபன் கிங்
இ. போட்டியிடும்படியாக இரு; இந்தியாவிற்கான
நடைமுறையாளர் கையேடு 3. V.பட்டாபிராம்
ஈ. உயர் கல்வியின் எதிர்காலம் ; ஒன்பது போக்குகள் 4. S.ஹீசேன் சைதி
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
ஆ. 2 3 4 1
இ. 3 2 1 4
ஈ. 1 2 3 4
57. சரியாக பொருத்துக
2020 நோபல் பரிசு பெற்றவர்கள் துறை
அ. ஹார்வே J.ஆல்டர், மைகேல் ஹோட்டன் 1. இலக்கியம்
ஆ. இம்மானுவேல் கார்பெந்திர் மற்றும் ஜெனிபர் A டவுட்னா 2. பொருளாதாரம்
இ. லுயிஸ் க்ளக் 3. மருத்துவம்
ஈ. போல் ஆர்-மில்கிரம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் 4. வேதியியல்
அ ஆ இ ஈ
அ. 1 3 4 2
ஆ. 3 4 1 2
இ. 2 4 3 1
ஈ. 4 2 1 3
58. இந்திய பழங்குடியினர் வகைகளில் எந்த பழங்குடியில் ஆப்கான் மற்றும் பாலுச்-பிராபி இடம் பெறும்
(அ) துர்கோ-இரானியன் பழங்குடி (ஆ) ஆஸ்டலாய்டு
(இ) நீக்ராய்டு (ஈ) காகித சாய்டு
59. அகலப்பாதை ரயில்வேயின் அகலம்
(அ) 1.576 மீ (ஆ) 1.676 மீ (இ) 1.776 மீ (ஈ) 1.876 மீ
60. “ஐந்து பணி பொக்கிஷங்கள்” என அறியப்படும் இந்திய மலைச்சிகரம்?
(அ) மவுண்ட் அபு (ஆ) குருஷிகார் (இ) ஆனை முடி (ஈ) கஞ்சன் ஜங்கா
61. ஹரிஹரர் மற்றும் புக்கர் எந்த காகதீய வாராங்கள் ஆட்சியாளரிடம் சேவை செய்தனர்.
(அ) முதலாம் பிரதாபருத்திரன் (ஆ) இரண்டாம் பிரதாபருத்திரன்
(இ) மூன்றாம் பிரதாபருத்திரன் (ஈ) நான்காம் பிரதாபருத்திரன்
62. “சம்பத் கௌமுதி” என்ற பத்திரிக்கை யாரோடு தொடர்புடையது
(அ) ராஜா ராம் மோகன் ராய் (ஆ) சுவாமி தயானந்த சரஸ்வதி
(இ) தாதாபாய் நௌரோஜி (ஈ) கேசவ் சந்திர சென்
63. விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் வரி விதிப்பு முறையில் கீழ்க்கண்ட எந்த விதிமுறையை பின்பற்றினார்?
1. நில வரியானது நிலத்தின் தன்மை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது
2. தனியார் தொழில் நிறுவனங்களின் முதலாளிகள் தொழிற்சாலை வரியை செலுத்தினர்
(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும் (இ) 1 மற்றும் 2 மட்டும் (ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
64. மொகஞ்சதாரோவில் உள்ள கட்டிடங்களில் எத்தனை மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
(அ) ஆறு (ஆ) ஏழு (இ) எட்டு (ஈ) ஒன்பது
65. லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தாவின் முதல் அகில இந்திய கருத்தரங்கம் நடைபெற்ற இடம்
(அ) சிம்லா (ஆ) கல்கத்தா (இ) கோவா (ஈ) பெங்களுர்
66. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவி இடங்கள் காலியாக இருக்கும் போது குடியரசுத் தலைவராக செயல்படுபவர் யார்?
(அ) தலைமைத் தேர்தல் ஆணையம் (ஆ) பிரதமர்
(இ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (ஈ) லோக்சபா சபாநாயகர்
67. முதலாவது மக்களவை எப்போது கலைக்கப்பட்டது?
(அ) 26 ஜனவரி, 1957 (ஆ) 04 ஏப்ரல், 1957 (இ) 15 ஆகஸ்ட், 1957 (ஈ) 02 அக்டோபர், 1957
68. கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாராம்சமாகக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
அ. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை அவ்வரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கமல்ல
ஆ. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, அரசதிகாரத்தின் தோற்றுவாயாகவும் அரசதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வரம்பிற்கு உட்பட்டதாகவும் உருவாக்கப்பட்டது.
இ. முகவுரை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
(அ) அ மட்டும (ஆ) இ மட்டும் (இ) அ மற்றும் ஆ (ஈ) ஆ மற்றும் இ
69. சுவர்ணஜெயந்தி கிராம சுயதொழில் திட்டம் (SGSY) எந்த பெயரில் மறுச்சீரமைக்கப்பட்டது?
(அ) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம்
(ஆ) சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்
(இ) தேசிய ஊரக ஜீவாதார இயக்கம்
(ஈ) தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
70. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி ———— அமல்படுத்தப்பட்டது
(அ) ஜீன் 1, 2017 (ஆ) ஜீலை1, 2017 (இ) ஏப்ரல் 1, 2018 (ஈ) ஆகஸ்ட் 1, 2017
71. ASPIRE-2015-வது வருடம் எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டது?
(அ) ஏழை கிராமபுற கல்வி தரத்தை உயர்த்துவதற்காக
(ஆ) நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உயர்த்துவதற்காக
(இ) தொழில் முனைப்பை முடுக்கி விடுதல் மற்றும் புதிய தொழில்களை ஊக்குவித்தல்
(ஈ) கல்வி வசதிகளை ஊரக பகுதிகளில் அதிகப்படுத்துதல்
72. பின்வருவனவற்றில் கோபால கிருஷ்ண கோகலேவுடன் தொடர்பு இல்லாதது எது?
(அ) மாத இதழ், “இந்தியாவின் குரல்” (ஆ) பூன சார்வாஜனின் சபா
(இ) இந்திய ஊழியர் சங்கம் (ஈ) இந்திய தேசியக் காங்கிரசின் செயலாளர், 1903
73. 1937-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது “தனது ஹரிஜன்” என்ற பத்திரிக்கையில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டு, வரதா திட்டம் என்று அழைக்கப்படும் ———- கல்வித்திட்டத்தை முன்மொழந்தார்.
(அ) தொடக்கக் கல்வி (ஆ) அடிப்படைக்கல்வி
(இ) இடைநிலைக் கல்வி (ஈ) உயர் கல்வி
74. பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள்
(அ) மார்ச் 23, 1931 (ஆ) மார்ச் 25, 1931 (இ) மார்ச் 27, 1931 (ஈ) மார்ச் 30, 1931
75. “திராவிட நாடு” எந்தக் கட்சியின் இதழாக இருந்தது?
(அ) திராவிடர் கழகம் (ஆ) திராவிட முன்னேற்ற கழகம்
(இ) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ஈ) நீதிக்கட்சி
76. பொருத்துக:
அ. சுதேசமித்ரன் 1. இளம் ராடிக்கல்ஸ்
ஆ. கீதை 2. நடைமுறை பதிப்பாளர்
இ. பால பாரத் 3. தமிழ் மொழிபெயர்ப்பு
ஈ. தி இந்தியா 4. துணை பதிப்பாளர்
அ ஆ இ ஈ
அ. 4 1 3 2
ஆ. 4 3 1 2
இ. 3 2 1 4
ஈ. 3 1 4 2
77. நாமக்கல் கவிஞரின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” பாடல் முதன்முதலில் ஒலிக்கப்பட்ட நிகழ்வு
(அ) ஒத்துழையாமை இயக்கம்
(ஆ) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்
(இ) மகாத்மா காந்தியின் 1936-ம் ஆண்டு மதுரைப் பயணம்
(ஈ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
78. ————— —————- ————— பசியென்னுந்
தீப்பிணிதீண்ட லரிது.
மேற்கண்ட குறள் யாரைப் பசிப்பிணி தீண்டாது என்கிறது?
(அ) செல்வந்தரை (ஆ) பண்பாளரை (இ) தவத்தினரை (ஈ) பகுத்துண்பவரை
79. சங்க கால நிலங்களுடன் தொடர்புடைய தெய்வங்களை சரியாக பொருத்துக:
(அ) மருதம் 1. வருணன்
(ஆ) நெய்தல் 2. இந்திரன்
(இ) பாலை 3. மாயோன்
(ஈ) முல்லை 4. கொற்றவை
அ ஆ இ ஈ
அ. 2 1 4 3
ஆ. 4 3 2 1
இ. 3 4 2 1
ஈ. 1 2 3 4
80. “போர்தலை மிகுந்த ஈர்ஐம்பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய, கை வண்மையையே!” –
இப்பாடல் வரிகள் குறிப்பிடும் ஆய்வு கருத்து…,
(அ) இராமாயண வரலாறு தமிழில் எழுதப்படுவதறகு முன்பே பாரத வரலாறு தமிழிலே எழுதப்பட்டுவிட்டது.
(ஆ) கௌரவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது
(இ) அக்குரன் என்ற கொடைவள்ளல்
(ஈ) கௌரவர்களோடு சமாதானம் பேச தூது சென்ற வரலாறு
81. அரிக்கமேட்டில் புதைபொருள் ஆராய்ச்சியை மேற்கொண்டவர்
(அ) டாக்டர்.ஜேகர் (ஆ) ஸ்டூவர்ட் (இ) ராபர்ட் புரூஸ்புட் (ஈ) மார்டிமர் வீலர்
82. ஆதாரங்களின் விளைவாக தென் இந்தியாவில் முதலாவது பயன்படுத்திய உலோகம் எது?
(அ) தாமிரம் (ஆ) தங்கம் (இ) வெள்ளி (ஈ) இரும்பு
83. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கருத்தில் கொள்க:
1. இடம் சார்ந்த மற்றும் இடம் சாராத தரவுகளை தடையின்றி இணைப்பதன் மூலம் முடிவெடுப்பதை நிர்வகிப்பதற்கான ஒரு கருவியாகும்.
2. பல்வேறு துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட GIS தகவல்களில் எற்படும் தவறுகளைத் தவிர்க்க
3. வேளாண் நில உடமைகளைக் கண்காணிக்க
4. GISக்காக ஒரு பொது மாதிரியை உருவாக்குதல்
கொடுக்கப்பட்டவைகளுள் தமிழ்நாடு புவியியல் அமைப்பின் (TNGIS) நோக்கங்களை கண்டறிந்து குறியீடுகளைப் பயன்படுத்தி விடை காண்க:
(அ) 1 மற்றும் 2 மற்றும் (ஆ) 2 மற்றும் 3 மட்டும்
(இ) 1,2 மற்றும் 3 (ஈ) 1,2 மற்றும் 4
84. பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் உடல் நலனை மேம்படுத்த பள்ளிகளில் இளம்பருவ மருத்துவமனைகளை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மாநில அரசின் திட்டம் ———- ஆகும்.
(அ) நலமான தமிழகம் (ஆ) வாழ்வொளித் திட்டம்
(இ) புது வாழ்வுத் திட்டம் (ஈ) குடும்ப நலத்திட்டம்
85.ஈ.வெ.ரா. பெரியார் சோவியத் யூனியன் சென்று வந்த பிறகு உருவாக்க தீர்மானித்த சமூக சீர்திருத்தப் பிரிவு ———– ஆகும்.
(அ) சுய மரியாதை பொதுநலக் கட்சி (ஆ) சுய மரியாதைக் குழுமம்
(இ) தனித்தமிழ் இயக்கம் (ஈ) குடியரசு
86. கீழே கொடுக்கப்ட்டவற்றை கருத்தில் கொள்ளவும்:
1. ஒருங்கிணைந்த வேளாண்மை
2. 100 சதவிகித மானியத்துடன் கூடிய நுண் பாசனம்
3. உழவன் மொபைல் செயலி
4. சொலார் பம்ப்செட் அமைத்தல்
5. இயற்கை வேளாண்மை
இந்திய உணவு மற்றும் வேளாண் அமைப்பு தமிழகத்தை சிறந்த வேளாண் மாநிலமாக தெரிவு செய்துள்ளது. அதன் காரணங்களில் சில மேnலு குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலிலிருந்து சரியான விடையை குறியீடுகளைப் பயன்படுத்தி காண்க:
(அ) 1,2,4 மற்றும் 5 (ஆ) 1,2,3 மற்றும் 4 (இ) 2,3,4 மற்றும் 5 (ஈ) 1,3,4 மற்றும் 5
87. “அட்டல் மறுசீரமைப்பு மற்றும் நகர்புற மாற்றத்திற்கான குழு” தமிழ்நாட்டின் AMRUT-குழுவின் நோக்கு
(அ) அடிப்படை வசதிகள் தருவது (ஆ) பால் உற்பத்தி
(இ) ஊரக பகுதிகளை மாற்றி அமைத்தல் (ஈ) கல்வி
88. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ₹.4500 அசலுக்கு மொத்த தொகை ₹.5,000 கிடைத்தால் அதனுடைய தனிவட்டி எவ்வளவு?
(அ) ₹.500 (ஆ) ₹.200 (இ) 20% (ஈ) 15%
89. X = (-1)1 + (-1) 2 + (-1) 3 + (-1) 4 + …..25 உறுப்புகள் Y = (-1) 1 + (-1) 2 + (-1) 3 + (-1) 5 + …..25 உறுப்புகள் X2 + Y2 என்பது
(அ) -625 (ஆ) 624 (இ) 626 (ஈ) -626
90. 3,6,9 …….. 111 என்ற தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்ன?
(அ) 37 (ஆ) 38 (இ) 36 (ஈ) 42
91. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அந்த எண்ணுடன் 27-ஐ கூட்டும் போது இலக்கங்கள் இடம் மாறுகின்றன எனில் அந்த எண் எது?
(அ) 69 (ஆ) 36 (இ) 47 (ஈ) 63
92. சுருக்குக:
(அ) 15 (ஆ) 12 (இ) 8 (ஈ) 7
93. 63 செ.மீ2 பரப்பளவுள்ள ஒரு நாற்கரத்தின் ஒரு மூலைவிட்டம் 7 செ.மீ மேலும் எதிர் உச்சிகளிலிருந்து அம்மூலைவிட்டத்திற்கு வரையப்படும் குத்துக்கோடுகளின் நீளங்கள் 5 செ.மீ மற்றும் X செ.மீ எனில் X-ன் மதிப்பு
(அ) செ.மீ (ஆ) 23 செ.மீ (இ) 35 செ.மீ (ஈ) 13 செ.மீ
94. ஓர் அலுவலகக் கட்டடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்படுகின்றன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுர மீட்டருக்கு ரூ.45 வீதம் மொத்தச் செலவைக் காண்க:
(அ) ₹.900 (ஆ) ₹.200 (இ) ₹.4,500 (ஈ) ₹.450
95. கடனாக வழக்கப்பட்ட அசல் ₹.48,000க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹.55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க:
(அ) 6% (ஆ) 7% (இ) 8% (ஈ) 9%
96. எத்தனை ஆண்டுகளில் ₹.5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹.6,720 ஆக உயரும்
(அ) 2 1/3 ஆண்டுகள் (ஆ) 2 2/3 ஆண்டுகள் (இ) 3 2/3 ஆண்டுகள் (ஈ) 3 1/3 ஆண்டுகள்
97. ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% வருகை புரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை காண்க:
(அ) 36 (ஆ) 7 (இ) 43 (ஈ) 38
98. 25 மாணவர்களில் 72% பேர் கணிதப் பாடத்தில் திறமையானவர்கள். கணிதப் பாடத்தில் திறமையற்றோர் எத்தனைப் பேர்?
(அ) 5 மாணவர்கள் (ஆ) 6 மாணவர்கள் (இ) 7 மாணவர்கள் (ஈ) 8 மாணவர்கள்
99. இரு சார் பகா எண்களின் மீ.சி.ம 5005. ஓர் எண் 65 எனில், மற்றோர் எண் என்ன?
(அ) 65 (ஆ) 66 (இ) 1 (ஈ) 77
100. 48 இன் 48% இன் 64% எனில் X-ன் மதிப்பு ——— ஆகும்
(அ) 64 (ஆ) 56 (இ) 42 (ஈ) 36