Tnpsc
July 2020 Monthly Current Affairs Online Test Tamil
நடப்பு நிகழ்வுகள் -July 2020
Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -July 2020.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
உயர்கல்வி நிறுவனங்களுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டமைச்சரால் தொடங்கப்பட்ட தளத்தின் பெயரென்ன?
DHRUV 2.0 | |
YUKTI 2.0 | |
SHAKTI 2.0 | |
EKTA 2.0 |
Question 1 Explanation:
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான இரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, அண்மையில், ‘YUKTI 2.0’ என்ற பெயரில் ஒரு தளத்தைத் தொடங்கினார். ‘Young India combating COVID with Knowledge, Technology and Innovation’ என்பதன் சுருக்கந்தான் YUKTI. முன்னதாக, YUKTI தளத்தை கடந்த 2020 ஏப்ரல் 11 அன்று அமைச்சர் தொடங்கிவைத்திருந்தார். புத்தாக்க யோசனைகளுக்கான இணையமுறை வைப்பகமாக இந்த 2.0 தளம் செயல்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும் இது உதவும்.
Question 2 |
ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ‘HIP 67522 b’ என்ற புறக்கோளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இது இவ்வாறும் அழைக்கப்படுகிறது?
வெப்பமான வியாழன் | |
மீபுவி | |
சிறு நெப்டியூன் | |
பனி அசுரன் |
Question 2 Explanation:
வானியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, ‘HIP 67522 b’ என்ற புறக்கோளை (exo– planet) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுவரை கண்டிராத இளவயது வெப்ப வியாழனாக இந்தப் புறக்கோள் தோன்றுகிறது. சுமார் 17 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு நன்கு அறிந்த நட்சத்திரத்தை இது சுற்றிவருகிறது. இதன் பொருள் என்னவெனில், இந்த வெப்பமான வியாழன், சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்தான் உருவாகியிருக்கவேண்டும் என்பதாகும். ஏற்கனவே கண்டறியப்பட்ட வெப்பமான வியாழன்கள் அனைத்தும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் பழமையானது என்பதால், இது இளம் வெப்பமான வியாழனாக கருதப்படுகிறது.
Question 3 |
உலக ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
ஜூன் 23 | |
ஜூன் 24 | |
ஜூன் 25 | |
ஜூன் 26 |
Question 3 Explanation:
உலக ஒலிம்பிக் நாள் அல்லது பன்னாட்டு ஒலிம்பிக் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.23 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தற்கால ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 1894 ஜூன்.23 அன்று தொடங்கியதை நினைவுகூரும் வகையில், இந்தச் சிறப்பு நாள், கடந்த 1948’இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
நடப்பாண்டில் (2020) கொண்டாடப்பட்ட இந்நாளின்போது, ‘Stay Healthy, Stay Strong, Stay Active with the #Olympicday Workout On 23 June’ என்ற தலைப்பின்கீழ், உலகின் மிகநீண்டநேர (24 ம.நேரம்) டிஜிட்டல் வழியிலான ஒலிம்பிக் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
Question 4 |
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் கூற்றுப்படி, கடந்த 2017ஆம் ஆண்டிற்கான வாங்கும் திறன் சம நிலை அடிப்படையில் உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது?
மூன்று | |
நான்கு | |
ஐந்து | |
ஆறு |
Question 4 Explanation:
உலகில் பல்வேறு பொருளாதார நிலைகளில், வாழ்க்கைச்செலவு அளவிலுள்ள வேறுபாடுகளை சமன் செய்வதற்கான பன்னாட்டு ஒப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 2017ஆம் குறிப்பாண்டிற்கான புதிய வாங்கும் திறன் சமநிலைகளை உலக வங்கி வெளியிட்டுள்ளது. உலகின் மொத்தப் பொருளாதாரமான $119,547 பில்லியன் டாலரில் 6.7% (8051 பில்லியன்), இந்தியப்பொருளாதாரமாகும். சீனா - 16.4%, அமெரிக்கா - 16.3%. உலக அளவில் மொத்த மூலதனத்தை ஏற்படுத்துவது, தனிநபர் நுகர்வு ஆகியவை, வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையில் உள்ளது.
Question 5 |
H1 B, H2 B J மற்றும் L விசா திட்டங்களை இடைநிறுத்தியுள்ள நாடு எது? ந்து
சீனா | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
ரஷ்யா | |
ஜெர்மனி |
Question 5 Explanation:
H1 B, H2 B, J, L மற்றும் பிற தற்காலிக பணி உரிமங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தார். வெள்ளை மாளிகையின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த இடைநீக்கம் எதிர்வரும் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இந்தத் தற்காலிக விசா திட்டங்கள் மூலம் கூடுதல் பணியாளர்கள் நுழைவதென்பது, COVID-19 நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சேதங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு, வேலைவாய்ப்புகளின் வழியாகவும் அச்சுறுத்தல் ஏற்படும் என அவர் அறிவித்துள்ளார்.
Question 6 |
இரஷ்யா-இந்தியா-சீனா (RIC) முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை நடத்திய நாடு எது?
சீனா | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
ரஷ்யா | |
ஜெர்மனி |
Question 6 Explanation:
இரஷ்யா-இந்தியா-சீனா (RIC) முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மெய்நிகராக நடத்தினார். இதில், இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் கலந்துகொண்டனர்.
லடாக்கில், சமீபத்தில், தங்கள் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப்பின், இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் மெய்நிகராக சந்திப்பது இதுவே முதல்முறையாகும். ஜூன்.24ஆம் தேதியன்று, பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், இரஷ்யாவில் நடந்த வெற்றி அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
Question 7 |
நடப்பாண்டில் (2020) வரும் பன்னாட்டு கைம்பெண்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Invisible Women, Invisible Problems | |
Inheritance rights to widows | |
Social support to all | |
Widows in Developing Countries |
Question 7 Explanation:
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஜூன்.23ஆம் தேதியை பன்னாட்டு கைம்பெண்கள் நாளாக ஐ.நா அவை கடைப்பிடித்து வருகிறது. “Invisible Women, Invisible Problems” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். மரபுரிமைகள், ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு, ஒழுக்கமான வேலை மற்றும் சம ஊதியம் ஆகியவை கைம்பெண்களுக்கும் கிடைக்கவேண்டியதன் அவசியத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட பன்னாட்டுச் சட்டங்களின்படி கைம்பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு, ஐ.நா அவை, அரசாங்கங்களை வலியுறுத்துகிறது.
Question 8 |
உலகின் அதிவேகமுடைய மீத்திறன் கணினி (super computer) சார்ந்த நாடு எது?
இந்தியா | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
ஜப்பான் | |
ஜெர்மனி |
Question 8 Explanation:
ஜப்பானிய மீத்திறன் கணினியான, ‘புகாகு’ அண்மையில் உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த மீத்திறன் கணினிகள் இடம்பிடித்த ‘முதல் 500’ பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இது மேம்பட்ட RISC எந்திர -ங்களின் (ARM) சில்லுத்தொகுதிகளால் இயக்கப்படுகிறது. ARM அடிப்படையிலான ஒரு மீத்திறன் கணினி, இப்பட்டியலில் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறையாகும். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் முதலிடத்தைப் பிடித்தது என்பதையும் இது குறிக்கிறது. அதைத்தொடர்ந்த இடங்களில் IBM நிறுவனத்தின் ‘சம்மிட்’ மீத்திறன் கணினியும் IBM’இன் சியரா மீத்திறன் கணினியும் உள்ளன.
Question 9 |
புது தில்லியில் அமைக்கப்பட்டுள்ள 10000 படுக்கைகள்கொண்ட COVID-19 பராமரிப்பு மையத்தின் மைய முகமையாக அறிவிக்கப்பட்டுள்ள துணை இராணுவப்படை எது?
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப் படை (CISF) | |
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப் படை (CISF) | |
இந்தோ–திபெத்திய எல்லைக்காவல்படை (ITBP) | |
தேசிய பாதுகாப்புப்படை (NSG) |
Question 9 Explanation:
புது தில்லியின் சத்தர்பூரில் அமைக்கப்பட்டுள்ள 10000 படுக்கைகள்கொண்ட COVID-19 பராமரிப்பு மையத்தின் மைய முகமையாக இந்தோ - திபெத்திய எல்லைக்காவல்படை (ITBP) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு தேவையான மருத்துவர்கள் & பிற மருத்துவ வல்லுநர்கள் குழுவை வழங்குவதற்காக, ITBP’ஐ அதன் மைய முகமையாக உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த வாரம் ஈராயிரம் படுக்கை வசதியுடன் செயல்படுத்தப்படவுள்ள இம்மையம், விரைவில் 10000 படுக்கைகளுடன் முழுதாக செயல்படும். இது நாட்டின் மிகப்பெரிய COVID-19 பராமரிப்பு மையமாகும்.
Question 10 |
குருதிக்கிடைப்பை எளிதில் அணுகுவதற்காக, இந்திய செஞ்சிலுவை சங்கம் உருவாக்கிய திறன்பேசி செயலியின் பெயர் என்ன?
eBloodServices | |
Blood Bharat | |
Bharat Blood | |
Bharat Blood |
Question 10 Explanation:
இந்திய செஞ்சிலுவை சங்கம் உருவாக்கியுள்ள, ‘மின்னணு குருதி சேவைகள்’ திறன்பேசி செயலியை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ்வர்தன் தொடங்கிவைத்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரானவர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவருமாவார். கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின்கீழ் செயல்படும், அதிநவீன கணக்கீட்டு மேம்பாட்டு மையத்தைச்சேர்ந்த இ-ரக்தோஷ் குழுவினரால் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலிமூலம், ஒரு குருதி வங்கியிலிருந்து ஒரேநேரத்தில் நான்கு அலகு குருதி கோரி பதிவு செய்வதுடன், 12 மணி நேரம் காத்திருந்தால் குருதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
Question 11 |
‘ஹரிதா ஹரம்’ என்ற திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
ஆந்திர பிரதேசம் | |
கேரளா | |
தெலுங்கானா | |
கர்நாடகா |
Question 11 Explanation:
‘ஹரிதா ஹரம்’ என்பது மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தெலுங்கானா மாநிலத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு மரக்கன்று நடும் திட்டமாகும். தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அண்மையில், ‘ஹரிதா ஹரம்’ திட்டத்தின் ஆறாம்கட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். அவர், நர்சாபூர் நகர்ப்புற வனப்பூங்காவை திறந்துவைத்து, நர்சாபூர் வனப்பகுதியில் செயல் -படுத்தப்பட்டுவரும் வன மறுமலர்ச்சி திட்டத்தையும் ஆய்வுசெய்தார்.
Question 12 |
233 ஆண்டுகால வரலாற்றில், மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் முதல் பெண் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?
கிளேர் கானர் | |
ரேச்சல் ஹேஹோ பிளின்ட் | |
பெட்டி வில்சன் | |
கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் |
Question 12 Explanation:
இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித் தலைவியும், பெண்கள் கிரிக்கெட்டுக்கான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய மேலாண்மை இயக்குநருமான கிளேர் கானர், மேரிலேபோன் கிரிக்கெட் சங்கத்தின் (MCC) 233 ஆண்டுகால வரலாற்றில் அதன் முதல் பெண் தலைமையாக நியமிக்கப்பட்டுள்ளார். MCC’இன் தற்போதைய தலைவராக இருந்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரா, ஆண்டு பொதுக்கூட்டத்தின்போது கிளேர் கானரை அதன் அடுத்த தலைவராக அறிவித்தார். கிளேர் கானர், கடந்த 2009’இல், MCC’இன் கெளரவ வாழ்நாள் உறுப்பினராக இணைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Question 13 |
சந்தனம் மற்றும் மூங்கில் பயிரிடுதலை ஆராய்வதற்காக புதியதொரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
காதி மற்றும் கிராமப்புறத் தொழிலக ஆணையம் | |
தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம் | |
சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு | |
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் |
Question 13 Explanation:
சந்தன மரங்களையும் மூங்கில் மரங்களையும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தி தனது சொத்துக்களை அதிகரிப்பதற்காக 500 சந்தன மரக்கன்றுகளும், 500 மூங்கில் கன்றுகளும், நாசிக்கில் உள்ள பயிற்சி மையத்தில், காதி கிராமப்புறத்தொழில்கள் ஆணையத்தால் (KVIC) நடப்பட்டுள்ளன. சந்தன மரக் கன்றுகள், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிகள் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உத்தர பிரதேசம் கன்னோஜில் உள்ள நறுமணம் & சுவை மேம்பாட்டு மையம் FFDC’இலிருந்து (Fragrance & Flavour Development Centre) வாங்கப்பட்டன. மூங்கில் கன்றுகள் அஸ்ஸாமிலிருந்து வாங்கப்பட்டன.
Question 14 |
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA அதன் தலைமையகத்திற்கு எந்த அமெரிக்க பொறியியலாளரின் பெயரைச் சூட்டியுள்ளது?
மேரி W. ஜாக்சன் | |
மார்க் மூர் | |
இராபர்ட் கரி | |
மைக்கேல் தாம்சன் |
Question 14 Explanation:
வாஷிங்டன் DC’இல் அமைந்துள்ள NASA’இன் தலைமையகத்திற்கு மேரி W ஜாக்சன் அவர்களின் பெயர் சூட்டப்படும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA அறிவித்துள்ளது. மேரி W ஜாக்சன், NASA’இன் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் பொறியாளராவார். NASA’இன் வலைதளத்தில் கூறியுள்ளபடி, அவர் அந்நிறுவனத்தின் ஒரே ஒரு கறுப்பினப் பெண் ஏரோநாட்டிக்கல் பொறியாளர் ஆவார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக NASA’இல் பணியாற்றியுள்ள அவர் கடந்த 1985ஆம் ஆண்டில் ஓய்வுபெறுவதற்கு முன்னர் 12 தொழில்நுட்ப ஆய்வுக்கட்டுரைகளை தனித்தோ அல்லது பிறருடன் இணைந்தோ எழுதியுள்ளார்.
Question 15 |
COVID-19 கொள்ளைநோய்க்கு இடையே, “வறுமை ஒழிப்புக்கான கூட்டணி”யைத் தொடங்கியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
G20 அமைப்பு | |
ஐக்கிய நாடுகள் அவை | |
உலக வங்கி | |
உலக பொருளாதார மன்றம் |
Question 15 Explanation:
“வறுமை ஒழிப்புக்கான கூட்டணி” என்றவொன்றை ஐ.நா அவை தொடங்கியுள்ளது. அண்மையில் இந்தியா, அந்தக் கூட்டணியின் நிறுவன உறுப்பினராக மாறியது. ஐக்கிய நாடுகள் பொது அவையின் 74ஆவது அமர்வின் தலைவர் டிஜ்ஜனி முகமது-பாண்டே, ஒரு முறைசாரா கூட்டத்தின்போது இந்தக் கூட்டணி குறித்து அறிவித்தார். COVID-19 தொற்றுநோயின் விளைவுகளுக்குப் பிறகு, உலகளாவிய பொருளாதாரத்தை உயர்த்த, உறுப்புநாடுகளுக்கு ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட “வறுமை ஒழிப்புக்கான கூட்டணி” ஜூன்.30 அன்று முறையாக தொடங்கப்பட்டது.
Question 16 |
பன்னாட்டு கடல்சார் அமைப்பால் கொண்டாடப்படும் மாலுமிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன
Seafarers are Key Workers | |
Importance of Seafarers | |
Role of Seafarers in Economy | |
Support Seafarers |
Question 16 Explanation:
சர்வதேச வணிகம் மற்றும் உலகப்பொருளாதாரத்தில் மாலுமிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.25 அன்று, “மாலுமிகள் நாள்” கொண்டாடப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில், ஒரு தீர்மானத்தின்மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டிலிருந்து “மாலுமிகள் நாள்” கொண்டாடப்பட்டு வருகிறது. “Seafarers are Key Workers” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 17 |
1.25 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பிரம்மாண்ட வேலைவாய்ப்புத் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
மத்திய பிரதேசம் | |
உத்தர பிரதேசம் | |
ஒடிசா | |
பீகார் |
Question 17 Explanation:
“சுயசார்பு உத்தர பிரதேசம் வேலைவாய்ப்பு இயக்கத்தை” பிரதமர் மோடி காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். இவ்வியக்கத்தின்கீழ், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கப்படும். COVID-19 பெரும்பரவலின்போது வேலை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள பிற ஊழியர்களை உள்ளடக்குவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். நாடு முழுவதும் 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களுக்காக தொடங்கப்பட்ட கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியானின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்படும்.
Question 18 |
தவறான மருந்துப்பயன்பாடு மற்றும் சட்டத்துக்குப்புறம்பான கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாள் (International Day against Drug Abuse and Illicit Trafficking) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
ஜூன் 26 | |
ஜூன் 27 | |
ஜூன் 28 | |
ஜூன் 29 |
Question 18 Explanation:
சட்டத்துக்குப்புறம்பான மருந்துப்பொருட்களால் சமூகத்துக்கு ஏற்படும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.26 அன்று, தவறான மருந்துப்பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் வரும் இந்த நாளுக்கான கருப்பொருள், “Better Knowledge for Better Care” என்பதாகும்.
Question 19 |
தேசிய உற்பத்தித்திறன் குழு என்பது எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி மிகுந்த அமைப்பாகும்?
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் | |
வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் | |
MSME அமைச்சகம் | |
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் |
Question 19 Explanation:
மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தொழில் & உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கீழ் இயங்கும் தன்னாட்சிபெற்ற அமைப்பான தேசிய உற்பத்தித்திறன் குழுவின் (National Productivity Council) 49ஆவது ஆளுகைக்குழுக் கூட்டம், ஜூன்.27 அன்று கானொளிவழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் குழுவின் (NPC) ஆளுகைக் குழுத்தலைவரான மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமைவகித்தார். 15 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Question 20 |
“பணமோசடி மற்றும் சட்டத்துக்குப்புறம்பான வனவுயிரி வணிகம்” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
UNCTAD | |
UNIDO | |
FATF | |
உலக வங்கி |
Question 20 Explanation:
நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவானது (FATF) “பணமோசடி & சட்டத்துக்குப்புறம்பான வனவுயிரி வணிகம்” என்ற தலைப்பில் தனது முதலாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், சட்டத்துக்குப்புறம்பான வனவுயிரி வணிகம் என்பது ஓர் “உலகளாவிய அச்சுறுத்தல்” என அந்தக்குழு விவரித்துள்ளது; அது அடிமைத்தனம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வர்த்தகம் போன்ற பிற குற்றங்களுடனும் தொடர்புகொண்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
அவ்வறிக்கையின்படி, சட்டத்துக்குப்புறம்பான வனவுயிரி வணிகமானது ஓராண்டுக்கு $23 பில்லியன் டாலர் வரை வருவாய் ஈட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்துக்குப்புறம்பான வனவுயிரி வணிகத்து -டன் தொடர்புடைய கொடுங்குற்றங்களுக்கு சட்டங்களைப்பயன்படுத்துவதற்கு சட்டத்தில் மாற்றங்கள் அவசியம் என்பதையும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
Question 21 |
குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் (MSME) நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
ஜூன் 26 | |
ஜூன் 27 | |
ஜூன் 28 | |
ஜூன் 29 |
Question 21 Explanation:
குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் (MSME) நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.27 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நீடித்த வளர்ச்சி மற்றும் உலகப்பொருளாதாரத்திற்கு MSME’களின் பங்களிப்பு குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு ஐ.நா பொது அவை இந்நாளை அறிவித்தது.
UNCTAD, UNIDO உள்ளிட்ட ஐ.நா’இன் முகமைகள், “MSMEs: First Responders to Societal Needs” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தன.
Question 22 |
மின்சாரப் பணிகளுக்கு தடையின்மைச் சான்றிதழ் (NOC) வழங்குவதற்காக புதியதொரு இணைய தளத்தை உருவாக்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
நிலக்கரி அமைச்சகம் | |
மின்துறை அமைச்சகம் | |
பாதுகாப்பு அமைச்சகம் | |
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் |
Question 22 Explanation:
இராணுவ அமைப்புகளுக்கு அருகில் செயல்படுத்தப்படும் மின்சாரம் / காற்றாலை / சூரியமின்னாற்றல் திட்டங்கள் மற்றும் இந்திய எல்லைக்குட்பட்ட நீர்நிலைகள் & சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஆராய்ச்சி, அளவீடு, துரப்பணப்பணிகள், பயன்பாட்டிற்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்குவதற்கான புதிய இணையதளத்தை, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
பயனுள்ள, விரைவான, வெளிப்படையான நடைமுறைகளை செயல்படுத்தி, இதுபோன்ற கோரிக்கை -களுக்குத் தீர்வுகாண்பதற்கு இந்த இணையதளச்செயல்பாடு வழிவகுக்கும். வான் கண்காணிப்புக்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்குவதற்காக, மத்திய பாதுகாப்பு அமைச்சகம், ஏற்கனவே இதுபோன்ற இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Question 23 |
2020 ஜூன்.29 அன்று கொண்டாடப்பட்ட தேசிய புள்ளியியல் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Sustainable Development Goals 3 and 5 | |
Honouring P. C. Mahalanobis | |
Statistics is Life | |
Indian statistics |
Question 23 Explanation:
தேசிய புள்ளியியல் அமைப்பை உருவாக்கியதில், பேராசிரியர். PC மகலனோபிஸின் மதிப்பிடவியலாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான ஜூன்.29 அன்று, தேசிய புள்ளியியல் நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு (2020) புள்ளியியல் நாளுக்கான கருப் பொருள், “நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) - 3 (நலமான வாழ்வை உறுதிசெய்வது மற்றும் அனைத்து வயதினருக்கான நலத்தை ஊக்குவிப்பது) மற்றும் SDG - 5 ( பாலின சமத்துவத்தை அடைவது மற்றும் அனைத்துப் பெண்கள் மற்றும் வளரிளம்பெண்களுக்கு அதிகாரமளிப்பது). மத்திய அரசு, மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அமைப்புகளின் அதிகாரப்பூர்வப் புள்ளியியல் நிபுணர்களின், சிறந்த சாதனையை அங்கீகரிப்பதற்காக, திட்ட அமலாக்கத்துறை புதிய விருதுககளை உருவாக்கியுள்ளது.
இதிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் Dr C இரங்கராஜனுக்கு “பேராசிரியர் P C மகலனோபிஸ் தேசிய விருது” வழங்கப்பட்டது. தேசிய மருத்துவப் புள்ளியல் கழகத்தின் (NIMS) முன்னாள் இயக்குநர் Dr. அரவிந்த் பாண்டே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) மற்றும் மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநர் Dr அகிலேஷ் சந்திரா குல்ஸ்ரேஷ்தா ஆகியோருக்குக் கூட்டாக, ‘பேராசிரியர் PV சுகாத்மே தேசிய விருது – 2020’ வழங்கப்பட்டது.
Question 24 |
இந்திய அரசு அதன் அதிகாரத்தை எச்சட்டத்தின்கீழ் செயல்படுத்தி 59 சீன செயலிகளை தடைசெய்தது?
தகவல் தொழில்நுட்பச் சட்டம் | |
தகவலறியும் உரிமைச் சட்டம் | |
வெளிநாட்டு வர்த்தக (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் | |
ஏற்றுமதி–தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வுச்சட்டம் |
Question 24 Explanation:
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Question 25 |
குற்றவியல் சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான குழுவின் தலைவர் யார்?
ரன்பீர் சிங் | |
A K சிக்ரி | |
தாவர் சந்த் கெலோட் | |
C இரங்கராஜன் |
Question 25 Explanation:
குற்றவியல் சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு, தில்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ரன்பீர் சிங் தலைமைதாங்கவுள்ளார். பல்வேறு மூத்த சட்டக்கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகியவற்றில் சாத்தியம்மிகுந்த சீர்திருத்தங்களை இந்தக்குழு மேற்கொள்ளும்.
Question 26 |
சாலை விபத்துக்குள்ளானவர்களுக்கு `2.5 இலட்சம் மதிப்பிலான காப்பீட்டு வரம்புடன் பணமில்லா சிகிச்சைத் திட்டத்தை தொடங்கவுள்ள மத்திய அமைச்சகம் எது?
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் | |
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் | |
பெண்கள் மற்றும் சிறார்கள் மேம்பாட்டு அமைச்சகம் | |
உள்துறை அமைச்சகம் |
Question 26 Explanation:
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கென, மோட்டார் வாகனச் சட்டம் – 2019’இன்கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ளபடி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைபடம் ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. மோட்டார் வாகன விபத்து நிதியம் ஒன்றை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளது.
இந்த நிதியம், சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் பயன்படுத்தப்படும். பணம் செலுத்தக்கூடிய திறன் பற்றிய வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Question 27 |
‘CogX 2020’ என்ற புகழ்பெற்ற உலக தலைமைப்பண்பு உச்சிமாநாட்டில், இரு விருதுகளை வென்ற இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் தளம் எது?
மைகவ் கொரோனா | |
டிஜிட்டல் இந்தியா | |
கட்டுடல் இந்தியா | |
தூய்மை இந்தியா இயக்கம் |
Question 27 Explanation:
செயற்கை நுண்ணறிவுப் பிரிவால் இயங்கும் அமைப்பான ‘MyGov Corona Helpdesk’, அண்மையில் நடைபெற்ற ‘CogX 2020’, உலக தலைமைப்பண்பு உச்சிமாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் உருவெடுக்கும் தொழில்நுட்ப விழாவில் இரண்டு பெருமைமிகு விருதுகளை வென்றுள்ளது. ஆண்டுதோறும் இலண்டனில் நடைபெறும் இந்த விழாவில், MyGov’இன் தொழில்நுட்ப பங்குதார நிறுவனமான ஜியோஹாப்டிக் டெக்னாலஜிஸ், ‘COVID-19 மற்றும் சமுதாயத்துக்கான சிறந்த புதுமை விருது’, ‘COVID-19 ஒட்டுமொத்த வெற்றியாளர் மக்கள் தேர்வு’ ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
Question 28 |
‘பெளதே லாகோ, பரியவரன் பச்சாவ்’ (மரக்கன்று நடு, சுற்றுச்சூழலைக் காப்பாற்று) என்ற மரம்நடு இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
சிக்கிம் | |
மேற்கு வங்கம் | |
புது தில்லி | |
ஜார்க்கண்ட் |
Question 28 Explanation:
‘பெளதே லாகோ, பரியவரன் பச்சாவ்’ (மரக்கன்று நடு, சுற்றுச்சூழலைக் காப்பாற்று) என்றழைக்கப்படும் ஒரு மரம்நடு இயக்கத்தை தில்லி யூனியன் பிரதேசம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, 17 நாள் நீளும் இவ்வியக்கம் தில்லியில் 31 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு நோக்கம் கொண்டுள்ளது. எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்குள் 350 சதுரகிமீ அளவுக்கு வனப்பரப்பை அதிகரிப்பதே இதன் இலக்காகும். தில்லியில் நிலவிவரும் மாசுபாட்டைக் குறைக்க வனப்பரப்பை அதிகரிப்பதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இவ்வியக்கம் நீளும் காலம் முற்றிலும் “விரிக்ஷரூபன் பகவாடா” என்று கடைப்பிடிக்கப்படும்.
Question 29 |
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், உள்நாட்டு மரவகைகள்கொண்ட புதிய நகர்ப்புற வனத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திறந்துவைத்தார்?
மகாராஷ்டிரா | |
மத்திய பிரதேசம் | |
புது தில்லி | |
உத்தரபிரதேசம் |
Question 29 Explanation:
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சமீபத்தில், புது தில்லியில் நகர்ப்புற வனங்களை திறந்துவைத்தார். ஐம்பத்தொன்பது உள்நாட்டு மரவகைகளின் 12,000 கன்றுகளுடன் இந்த நகர்ப்புற வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அலுவலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 2021ஆம் ஆண்டுக்குள் இது ஒரு முழுமையான காடாக உருவாகும் எனவும் தில்லியின் வளித்தரத்தையும் மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Question 30 |
நடப்பாண்டுக்கான (2020) ‘சிறந்த குடியேறிகள்’ விருதுபெற்ற இந்திய-அமெரிக்க எழுத்தாளர் மற்றும் புற்றுநோயியல் வல்லுநர் யார்?
சித்தார்த்தா முகர்ஜி | |
ஜூம்பா லஹிரி | |
பரீத் ஜகாரியா | |
சஞ்சை குப்தா |
Question 30 Explanation:
புலிட்சர் பரிசு வென்ற இந்திய-அமெரிக்க எழுத்தாளரும், புற்றுநோயியல் வல்லுநருமான சித்தார்த்தா முகர்ஜி, நியூயார்க்கின் கார்னகி நிறுவனத்தால், நடப்பாண்டுக்கான (2020) ‘சிறந்த குடியேறிகள்’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மற்றொரு இந்திய-அமெரிக்க பொருளாதார பேராசிரியரான ராஜ் செட்டியும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளார். COVID-19 சிக்கலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்புக்காக அவர்கள் தேர்வாகியுள்ளனர்
Question 31 |
பசுமை ஆற்றலை உருவாக்குவதற்காக, கூட்டு நிறுவனத்தை நிறுவும் நோக்கில், எந்தப்பொதுத்துறை நிறுவனத்துடன் இந்திய நிலக்கரி நிறுவனம் கூட்டுசேர்ந்துள்ளது?
NLC இந்தியா | |
GAIL | |
ONGC | |
NTPC நிறுவனம் |
Question 31 Explanation:
நிலக்கரி அமைச்சகத்தின் கீழுள்ள இரு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், அதாவது NLC இந்தியா நிறுவனம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனம் ஆகியவை பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இக்கூட்டு நிறுவனம் நாடு முழுவதும் 5000 மெகாவாட் (5 கிகாவாட்) சூரிய ஆற்றல் மற்றும் வெப்பமின்னாற்றல் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட நிறுவனத்தில், இரு நிறுவனங்களும் 50:50 என்ற விகிதத்தில் முதலீடு செய்யும். இரு பொதுத்துறை நிறுவனங்களின் நிபுணத்துவம், மின்சாரத்துறையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
Question 32 |
போபோஸ் என்பது எந்தக் கோளின் மிகப்பெரிய இயற்கை செயற்கைக்கோளாகும்?
வியாழன் | |
செவ்வாய் | |
சனி | |
வெள்ளி |
Question 32 Explanation:
செவ்வாய் கோளுக்கு மிகவருகில் இருக்கக்கூடிய அதன் மிகப்பெரிய துணைக்கோளான ‘போபோஸ்’ஐ ISRO’இன் மங்கள்யான் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இந்தப் படங்களை MoM விண்கலத்திலிருக்கும் Mars Colour Camera (MCC) என்னும் நிழற்படக் கருவி எடுத்துள்ளது. இந்தப் படங்கள் செவ்வாய் கோளிலிருந்து 7,200 கிலோமீட்டர் தொலைவும், ’போபோஸ்’ துணைக்கோளிலிருந்து 4,200 கிலோ மீட்டர் தொலைவும்கொண்ட சுற்றுப்பாதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
Question 33 |
பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
ஜீன் காஸ்டெக்ஸ் | |
இம்மானுவேல் மேக்ரோன் | |
எட்வர்ட் பிலிப் | |
மிகைல் மிஷூஸ்டின் |
Question 33 Explanation:
பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஜீன் காஸ்டெக்ஸை பிரான்சின் அடுத்த பிரதமராக நியமித்துள்ளார். முன்னதாக பிரான்சின் முன்னாள் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவிவிலகலைச் சமர்ப்பித்தார். பிரான்ஸின் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்காக, அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அரசாங்கத்தை மாற்றியமைத்துள்ளார். 55 வயதான அரசாங்க ஊழியர் ஜீன் காஸ்டெக்ஸ், நாட்டின் மறுதொடக்க உத்திகளை ஒருங்கிணைத்துள்ளார்.
Question 34 |
‘Striped Hairstreak மற்றும் Elusive Prince’ என்பவை கீழ்க்காணும் எவ்வுயிரியுடன் தொடர்புடையவை?
ஆமை | |
பாம்பு | |
வண்ணத்துப்பூச்சி | |
சிலந்தி |
Question 34 Explanation:
அந்துப்பூச்சி மற்றும் வண்ணத்துப்பூச்சிகளைப் ஆரய்ந்தறிவதில் நிபுணத்துவம்வாய்ந்த செதிலிறக்கை இன ஆராய்ச்சியாளர்கள், அருணாச்சல பிரதேசத்தில் ஸ்ட்ரைப்ட் ஹேர்ஸ்ட்ரீக் மற்றும் எலுசிவ் பிரின்ஸ் ஆகிய 2 புதியவகை வண்ணத்துப்பூச்சிகளை சமீபத்தில் கண்டுபிடித்தனர். ஸ்ட்ரைப்ட் ஹேர்ஸ்ட்ரீக் வகை வண்ணத்துப்பூச்சி முதன்முதலில் ஜப்பானிலும் எலுசிவ் பிரின்ஸ் வகை வண்ணத்துப்பூச்சி முதன்முதலில் வியட்நாமிலும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்வி மற்றும் சூழல் மேம்பாட்டுச் சங்கத்தின் கூற்றுப்படி, இவ்விரண்டு புதிய உயிரினங்களின் கண்டுபிடிப்பு, நாட்டில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கையை 1327’ஆக உயர்த்தியுள்ளது.
Question 35 |
கங்கையாற்றை புதுப்பிப்பதற்கான இந்தியாவின் திட்டத்திற்கு $400 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி ஆதரவை வழங்கவுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
பன்னாட்டுச் செலவாணி நிதியம் | |
உலக வங்கி | |
ஆசிய வளர்ச்சி வங்கி | |
BRICS வங்கி |
Question 35 Explanation:
கங்கையாற்றை புதுப்பிப்பதற்கு முற்படும், “நமாமி கங்கை” திட்டத்திற்கான ஆதரவை மேம்படுத்துவத -ற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரண்டாவது தேசிய சின்னமான கங்கையாறு மாசுபடுவதைத் தடுப்பதற்கும், ஐந்நூறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஆற்றுப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்தத்திட்டம் உதவும். $400 மில்லியன் டாலர் செயல்பாட்டில், $381 மில்லியன் கடன் மற்றும் $19 மில்லியன் டாலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் ஆகியவை அடங்கும்.
$381 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்தொகை ஐந்தாண்டு சலுகைக்காலம் உட்பட 18.5 ஆண்டுகள் முதிர்ச்சியைக்கொண்டுள்ளது. $19 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உத்தரவாதத்தின் காலாவதி தேதி உத்தரவாத செயல்திறன் தேதியிலிருந்து 18 ஆண்டுகள் ஆகும்
Question 36 |
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற USMCA ஒப்பந்தத்தில் எத்தனை நாடுகள் இடம்பெற்றுள்ளன?
மூன்று | |
நான்கு | |
ஆறு | |
ஐந்து |
Question 36 Explanation:
அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தமானது (USMCA) 25 ஆண்டுகள் பழைமையான NAFTA’ஐ (North American Free Trade Agreement) மாற்றியமைத்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் ஜூலை.1 அன்று நடைமுறைக்கு வந்தது. USMCA என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் (US), மெக்ஸிகோ (M) மற்றும் கனடா (CA) ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் முதன்முதலில் 2018’இல் கையெழுத்தானது. இது, தொழில்நுட்பத் துறையை ஆதரிக்க முற்படுவதோடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக $600 மில்லியன் அமெரிக்க டாலர்களை உள்ளடக்கிய நிதியத்தையும் கொண்டுள்ளது.
Question 37 |
நடப்பாண்டில் (2020) வரும் பன்னாட்டு கூட்டுறவு நாளுக்கான கருப்பொருள் என்ன?
Co-operatives for Climate Action | |
Co-operatives and SDGs | |
Co-operatives and their challenges | |
Co-operatives across the globe |
Question 37 Explanation:
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமையன்று பன்னாட்டு கூட்டுறவு நாள் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு (2020) ஜூலை.4 அன்று இச்சிறப்புநாள் அனுசரிக்கப்பட்டது. “Co-operatives for Climate Action” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். கூட்டுறவுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலகின் வளர்ச்சிக்கு கூட்டுறவு இயக்கத்தின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதும் அன்றைய நாளின் நோக்கமாகும்.
Question 38 |
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) உருவாக்கக்கூடிய COVID-19 தடுப்பூசியின் பெயரென்ன?
கொவிடின் | |
கொவேக்ஸின் | |
கொவிரோ | |
கொவதா |
Question 38 Explanation:
‘கொவேக்ஸின்’ என்னும் COVID-19 தடுப்பூசியை உருவாக்குவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) பாரத் பயோடெக் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. கட்டம்-1 மற்றும் 2 மருத்துவ பரிசோதனைகளை நடத்த இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டகம் அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசியை உருவாக்குவதற்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கு ஏற்ப செயல்படுவதாக அண்மையில் ICMR அறிவித்தது.
Question 39 |
மக்களுக்கு அத்தியாவசிய நலவாழ்வுச்சேவைகளை வழங்கும், ‘தன்வந்திரி ரதம்’ என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
மகாராஷ்டிரா | |
குஜராத் | |
ஒடிசா | |
மேற்கு வங்கம் |
Question 39 Explanation:
அகமதாபாத் மாநகராட்சியானது அந்நகரம் முழுவதும், ‘தன்வந்திரி ரதம்’ என்ற பெயரில் 120 மருத்துவ வாகனங்களை பணியமர்த்தியுள்ளது. இந்த வாகனம், மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று COVID-19 தவிர்த்த பிற அத்தியாவசிய நலவாழ்வுச் சேவைகளை வழங்குகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் ஓர் ஆயுஷ் மருத்துவர், ஓர் உதவி மருத்துவ மற்றும் செவிலியர்கள் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தைச் சார்ந்த உள்ளூர் மருத்துவ அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். இது, வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கும்.
Question 40 |
மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் LPG இணைப்புகளை வழங்கியுள்ள முதல் மாநிலம் எது?
குஜராத் | |
ஹிமாச்சல பிரதேசம் | |
ஆந்திர பிரதேசம் | |
ஒடிசா |
Question 40 Explanation:
அண்மையில் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் LPG இணைப்புகளை வழங்கிய முதல் மாநிலமாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் மாறியது. இதனை செயல்படுத்துவதற்காக அம்மாநில அரசு ‘ஹிமாச்சல கிரிஹினி சுவிதா’ என்றவொரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத்திட்டத்தின்கீழ், மாநிலத்தில் உள்ள சுமார் 2.76 இலட்சம் குடும்பங்கள், LPG இணைப்பு பெற்று பயனடைந்துள்ளன. வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு இலவச LPG இணைப்பை வழங்க, ‘பிரதம அமைச்சர் உஜ்வாலா யோஜனா’வையும் அம்மாநில அரசு செயல்படுத்தியது.
Question 41 |
‘பலராம் யோஜனா’ என்ற பெயரிலான நிதியுதவித்திட்டத்தை தொடங்கவுள்ள மாநில அரசு எது?
குஜராத் | |
ஹிமாச்சல பிரதேசம் | |
ஆந்திர பிரதேசம் | |
ஒடிசா |
Question 41 Explanation:
‘பலராம் யோஜனா’ என்ற பெயரிலான ஒரு புதிய நிதியுதவித்திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்க உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவி வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட, ‘KALIA’ திட்டத்தின் தொடர்ச்சியாக இத்திட்டம் உள்ளது. இப்புதிய திட்டத்தின்கீழ், அடுத்த ஈராண்டுகளில் கூட்டு கடப்பாடுக் குழுக்கள்மூலம் மாநிலத்தில் உள்ள 7 இலட்சம் நிலமற்ற வாரச் சாகுபடியாளர்களுக்கு பயிர் கடன்களை ஒடிசா மாநில அரசு வழங்கும்.
Question 42 |
எந்த மாநிலத்தில், ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி ஆலை என்று அழைக்கப்படும் ரேவா அதிபெரும் சூரிய மின்னுற்பத்தி ஆலை திறக்கப்படவுள்ளது?
குஜராத் | |
ஹிமாச்சல பிரதேசம் | |
ஆந்திர பிரதேசம் | |
மத்திய பிரதேசம் |
Question 42 Explanation:
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் ஆகியோர் இணைந்து ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி ஆலையை திறந்துவைத்தனர். 750 மெகாவாட் உற்பத்தித்திறன்கொண்ட இந்த ரேவா அதிபெரும் சூரிய மின்னுற்பத்தி ஆலையை, அவர்கள், காணொளிவழியில் திறந்துவைத்தனர்.
இது, ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி ஆலைகளுள் ஒன்றென கூறப்படுகிறது. இந்த ஆலை, ம.பி மாநிலத்தின் விந்திய பிராந்தியத்தின் ரேவா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Question 43 |
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Golden Birdwing’ என்பது கீழ்க்காணும் எந்த உயிரினத்துடன் தொடர்புடையதாகும்?
வானம்பாடி | |
வண்ணத்துப்பூச்சி | |
சிலந்தி | |
பாம்பு |
Question 44 |
’Self Scan’ என்ற பெயரில் தனது மாநிலத்துக்கென சொந்த ஆவணம் மேவும் திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
இராஜஸ்தான் | |
மேற்கு வங்கம் | |
கேரளா | |
தெலுங்கானா |
Question 45 |
தேசிய உயிரியல் அறிவியல் மையத்தின்படி, நாட்டில் அதிகளவில் உட்கலப்பினப் புலிகள் காணப்படும் மாநிலம் எது?
மத்தியபிரதேசம் | |
இராஜஸ்தான் | |
மேற்கு வங்கம் | |
கர்நாடகா |
Question 46 |
இந்திய வானியற்பியல் நிறுவன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சூரியன் போன்ற நட்சத்திரங்கள் தங்களின் பிற்கால வாழ்க்கையின்போது பேரண்டத்தில் எந்தத் தனிமத்தை உற்பத்தி செய்கின்றன?
ஹைட்ரஜன் | |
லித்தியம் | |
கரிமம் | |
ஆக்ஸிஜன் |
Question 47 |
கடல்சார் நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்திய கடலோரக் காவல்படையானது எந்த நாட்டின் கடலோரக் காவல்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
ஜப்பான் | |
இந்தோனேசியா | |
பிரான்ஸ் | |
இலங்கை |
Question 48 |
பரஸ்பர தரவு பரிமாற்றத்திற்காக, எந்த அமைப்பு, மத்திய நேரடிவரிகள் வாரியத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது?
இந்திய ரிசர்வ் வங்கி | |
இந்திய ரிசர்வ் வங்கி | |
NITI ஆயோக் | |
அமலாக்க இயக்குநரகம் |
Question 48 Explanation:
பரஸ்பர தரவு பரிமாற்றத்திற்காக, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மற்றும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருநிறுவனங்களும் தத்தம் தரவுத்தளங்களில் உள்ள தேவையான தகவல்களை தானியங்கி மற்றும் வழமையான முறையில் பகிர்ந்துகொள்ளும். மேலும், தரவு பரிமாற்ற நிலையை மதிப்பாய்வு செய்யும் நோக்கத்திற்காக ஒரு தரவு பரிமாற்ற வழிநடத்தும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
Question 49 |
அரசாங்க நிலங்களை பாதுகாப்பதற்காக விண்வெளி தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்திய மாநிலம் எது?
தெலுங்கானா | |
ஒடிசா | |
இராஜஸ்தான் | |
பஞ்சாப் |
Question 50 |
IIT முன்னாள் மாணவர் பேரவையானது உலகின் மிகப்பெரிய மூலக்கூறு கண்டறியும் ஆய்வகத்தை எந்த நகரத்தில் அமைத்துவருகிறது?
மும்பை | |
புது தில்லி | |
பெங்களூரு | |
ஹைதராபாத் |
Question 50 Explanation:
IIT முன்னாள் மாணவர் பேரவையானது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உலகின் மிகப்பெரிய மூலக்கூறு கண்டறியும் ஆய்வகத்தை, ‘MegaLab Mumbai’ என்ற பெயரில் அமைத்துவருகிறது. அண்மையில், இந்தப் பேரவை, CSIR – மரபணுத்தொகுதியியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, COVID-19 பரவல் மற்றும் நோயாளியின் தரவு பகுப்பாய்வுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டது. IIT முன்னாள் மாணவர் பேரவை என்பது அனைத்து இருபத்து மூன்று IIT நிறுவனங்கள் மற்றும் அதுசார் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சார்ந்த முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிகப்பெரிய சங்கமாகும்.
Question 51 |
இந்திய விண்வெளி ஆய்வுமையத்தால் ஏவப்படவிருக்கும் அமேசானியா-1 என்பது எந்த நாட்டின் செயற்கைக்கோளாகும்?
பிரேசில் | |
ஜப்பான் | |
ஆஸ்திரேலியா | |
நியூசிலாந்து |
Question 51 Explanation:
இந்திய விண்வெளி ஆய்வு மையமானது PSLV ஏவுகலத்தைப் பயன்படுத்தி பிரேசிலின் ‘அமேசானியா -1’ என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ளது. பிரேசிலில் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு மற்றும் சோதனை செய்யப்பட்ட இந்தச்செயற்கைகோள் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்தச் செயற்கைக்கோள் அடுத்த மாதம் ஏவப்படவுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Question 52 |
மங்கோலிய கஞ்சூர்’ உரையின் கையெழுத்துப் பிரதிகளை மறுபதிப்பு மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
கலாச்சார அமைச்சகம் | |
சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் | |
தகவல்தொடர்பு அமைச்சகம் | |
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் |
Question 53 |
APStar-6D’ என்ற வணிகரீதியிலான தகவல்தொடர்பு செயற்கைக்கோளை அதன் ‘லாங் மார்ச்’ என்ற ஏவுகலத்தைப் பயன்படுத்தி ஏவிய நாடு எது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
சீனா | |
உருஷ்யா | |
இஸ்ரேல் |
Question 53 Explanation:
அண்மையில், ‘APStar-6D’ என்ற வணிக ரீதியிலான தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சீனத்தின் கிரேட் வால் நிறுவனம் ஏவியது. சீனத்தின் விண்வெளித் தொழில்நுட்ப கழகத்தால் உருவாக்கப்பட்ட இச்செயற்கைக்கோள், அந்நாட்டின், ‘லாங் மார்ச்’ ஏவுகலத்தைப் பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி, இந்தப் புதிய செயற்கைக்கோள், குறைந்தது 50 Gb / ஒரு வினாடி என்ற வேகத்தில், தகவல்தொடர்பு சேவையை அளிக்கும்.
Question 54 |
எந்த நாட்டின் ஆராய்ச்சிக் குழு, உலக வங்கியின் சந்தை மேம்பாட்டு விருதை வென்றுள்ளது?
வங்கதேசம் | |
மியான்மர் | |
இந்தியா | |
கம்போடியா |
Question 54 Explanation:
உலக வங்கிக்குழுமம் மற்றும் பாலியல் வன்முறை ஆராய்ச்சி முன்னெடுப்பு ஆகியவற்றின் அண்மைய அறிவிப்பின்படி, கம்போடிய நாட்டைச் சார்ந்த ஆராய்ச்சிக்குழு, நடப்பாண்டுக்கான “சந்தை மேம்பாடு: பாலின அடிப்படையிலான வன்முறைக்கு தீர்வுகாண்பதற்கான கண்டுபிடிப்புகள்” விருதை வென்றது.
கம்போடியாவில் வசிக்கும் பெண் பொழுதுபோக்கு ஊழியர்களுக்கு நிகழும் பாலின- வன்முறைக்கு எதிராக 24×7 ஆதரவை வழங்கும் வாட்ஸ்அப் சேவையைச் செயல்படுத்துவதற்காக, இந்த விருது, அந்த ஆராய்ச்சிக்குழுவுக்கு நிதி உதவி வழங்கும்.
Question 55 |
இந்தியாவில் தேசிய கடல் வேளாண் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
ஜூலை 10 | |
ஜூலை 11 | |
ஜூலை 12 | |
ஜூலை 13 |
Question 55 Explanation:
மீன்வளத்துறை ஆராய்ச்சியாளர்களான Dr. K H அலிகுனி & Dr. H L செளத்ரி ஆகியோர் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை.10ஆம் தேதியன்று தேசிய கடல் வேளாண் நாள் (National Fish Farmers Day) கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, நடுவணரசின் மீன்வள அமைச்சகத்தின்கீழ்வரும் மீன்வளத் துறையும் தேசிய மீன்வள வாரியமும் இணைந்து இணையவழிக்கருத்தரங்கை நடத்தின.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள், அலுவலர்கள், அறிவியலார்கள், தொழில் முனைவோர் ஆகியோருடன் கலந்துரையாடிய மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், “மீனவர்களின் மீன்வளத் தொழிலின் மேம்பாட்டுக்காக பிரதம மந்திரி மீன்வளத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என அறிவித்தார்.
Question 56 |
இந்தியாவின் முதல், ‘NVIDIA AI தொழில்நுட்ப மையத்தை’ நிறுவுவதற்காக, NVIDIA உடன் கூட்டு சேர்ந்துள்ள இந்திய நிறுவனம் எது?
IIT – மெட்ராஸ் | |
IIT – மெட்ராஸ் | |
IIT – ஹைதராபாத் | |
IIT – காரக்பூர் |
Question 56 Explanation:
இந்தியாவின் முதல், ‘NVIDIA AI தொழில்நுட்ப மையத்தை’ நிறுவுவதற்காக, ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT-H), பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான NVIDIA நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுபற்றிய ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதை இம்மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்ப மையத்தில், இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இத்துறைசார் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். ஹைதராபாத் நகரத்தை சிறந்த 25 உலகளாவிய AI கண்டுபிடிப்பு மையங்களுள் ஒன்றாக நிறுவும் திட்டத்தில், NVIDIA, தெலுங்கானா அரசாங்கத்தின் ஒரு பங்காளராக உள்ளது.
Question 57 |
ஆசியா-பசிபிக்கில் புற்றுநோய் தயார்நிலை’ குறித்த EIU’இன் அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை (rank) என்ன?
ஏழு | |
எட்டு | |
ஒன்பது | |
பத்து |
Question 57 Explanation:
பொருளாதார புலனாய்வு பிரிவானது (EIU) சமீபத்தில், “ஆசியா-பசிபிக் பிரந்தியத்தில் புற்றுநோய்க்கு எதிரான தயார்நிலை: உலகளாவிய புற்றுநோய் கட்டுப்பாட்டை நோக்கிய முன்னேற்றம்” குறித்த அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 10 ஆசிய - பசிபிக் நாடுகளில் புற்றுநோய்க்கு எதிரான தயார்நிலையில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடத்திலும் உள்ளன.
Question 58 |
செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு விண்கலம் அனுப்பவுள்ள முதல் அரபு நாடு எது?
ஐக்கிய அரபு அமீரகம் | |
குவைத் | |
கத்தார் | |
சவூதி அரேபியா |
Question 58 Explanation:
செவ்வாய்கோளுக்கு விண்கலம் அனுப்பும் தனது முதல் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் அறிவித்தது. இதன்மூலம் செவ்வாய் கோளுக்கு விண்கலம் ஏவிய முதல் அரபுநாடாக அது திகழ்கிறது. தற்போதுவரை அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தியா, சோவியத் ருஷியா & ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே செவ்வாய் கோளுக்கு விண்கலங்களை ஏவியுள்ளன. சீனா தனது முதல் செவ்வாய் ஆராயும் ஊர்தியை ஏவும் பணியில் ஈடுபட்டுள்ளது. முகமது பின் ரஷீத் விண்வெளி மையம், ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் திட்டத்துக்கான முகமையாக உள்ளது.
Question 59 |
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஸ்வபிமான் அஞ்சல்’ என்ற இடம் அமைந்துள்ள மாநிலம் எது?
மேற்கு வங்கம் | |
ஒடிசா | |
சத்தீஸ்கர் | |
மத்திய பிரதேசம் |
Question 59 Explanation:
விடுதலைக்குப் பிறகு முதன்முறையாக பேருந்து சேவை தொடங்கப்பட்டதன் காரணமாக, ஒடிசாவின் மால்கான்கிரி மாவட்டத்தில் அமைந்துள்ள, ‘ஸ்வபிமான் அஞ்சல்’ என்ற இடம் அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. தனித்துவிடப்பட்ட பகுதி என அழைக்கப்படும் இவ்விடம் மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டுள்ளது. குருப்ரியா பாலம், இந்தத் தொலைதூரப் பகுதியை மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்தப் பயணிகள் பேருந்து சேவைக்கு முன்னர் வரை, மோட்டார் படகுகள் மற்றும் சாதாரண படகுகள் மட்டுமே பயண முறைகளாக அங்கு இருந்து வந்தன.
Question 60 |
ஹுருன் ஆராய்ச்சியின்படி, உலக கோடீசுவரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி பெற்றுள்ள இடம் என்ன?
ஐந்து | |
ஆறு | |
ஏழு | |
எட்டு |
Question 60 Explanation:
ரிலையன்ஸ் தொழிற்சாலைகள் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ஹுருன் ஆராய்ச்சியின்படி, உலகின் ஐந்தாவது கோடீசுவரர் என்ற பெருமையைப்பெற்றார். கடந்த மாதம், கோடீசுவரர் பட்டியலில் எட்டாவது இடத்தில் அவர் இருந்தார்.
தற்போது அவர், வாரன் பபேவை விஞ்சி, டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் மற்றும் மைக்ரோசாப்ட் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மருடன் 5ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $78 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. முன்னதாக, ஜியோ இயங்குதளங்கள், உலக முதலீட்டாளர்களிடமிருந்து `117,588 கோடி நிதியைத் திரட்டியிருந்தன.
Question 61 |
முதன்முறையாக, இந்திய இரயில்வே, ஆந்திராவின் காய்ந்த மிளகாயை, சிறப்பு சரக்கு ரயில்கள்மூலம் எந்த நாட்டிற்கு கொண்டுசென்றது?
வங்கதேசம் | |
மியான்மர் | |
நேபாளம் | |
லாவோஸ் |
Question 61 Explanation:
இந்திய இரயில்வே, ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாலத்திலிருந்து வரமிளகாயுடன் நாட்டின் எல்லையைத்தாண்டி சிறப்பு சரக்கு இரயிலை வங்கதேசத்தின் பெனாபோல் என்ற இடத்துக்கு இயக்கியது. இதற்கு முன்னர்வரை, குண்டூர் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகளும், வணிகர்களும் வரமிளகாயை சாலைவழியாகவே வங்கதேசத்திற்கு சிறிய அளவில் கொண்டுசென்று வந்தனர், அதற்கு, டன் ஒன்றுனுக்கு `7000 வரை செலவாகியது.
Question 62 |
சிறந்த சாதனைகள் படைத்த பெருநிறுவனங்கள்பிரிவின்கீழ், மதிப்புமிக்க ‘CII-ITC நிலைத்தன்மை விருது - 2019’ஐ வென்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் எது?
SAIL | |
NTPC Ltd., | |
OIL | |
ONGC |
Question 62 Explanation:
சிறந்த சாதனைகள் படைத்த பெருநிறுவனங்கள்பிரிவின்கீழ், மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழக நிறுவனம் (NTPC) மதிப்புமிக்க CII-ITC நிலைத்தன்மை விருது 2019’ஐ வென்றுள்ளது. மேலும், பெருநிறுவன சமூகப்பொறுப்புணர்வு பிரிவில், குறிப்பிடத்தக்க சாதனைக்கான பாராட்டுகளை அந்நிறுவனம் பெற்றுள்ளது.
மின்நிலையங்களைச் சுற்றியுள்ள அதன் சமூகங்களின் நீடித்த வளர்ச்சிக்கு தேசிய அனல்மின் கழக நிறுவனம் எப்போதும் பாடுபடுகிறது. அதன் முதன்மை பெருநிறுவன சமூகப்பொறுப்புணர்வு திட்டமான GEM (பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கம்), அதன் மின்நிலையங்களுக்கு அருகே, பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் நலனுக்காக, பின்தங்கிய பின்னணியிலிருந்துவரும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்க நான்கு வார குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
Question 63 |
e-crop’ என்ற பெயரில் பயிர்களை இணையவழியில் பதிவு செய்யத்தொடங்கியுள்ள மாநில அரசு எது?
கர்நாடகா | |
ஆந்திர பிரதேசம் | |
ஒடிசா | |
தெலுங்கானா |
Question 63 Explanation:
‘இ-பயிர்’ என்ற பெயரில் பயிர்களை இணையவழியில் பதிவுசெய்வதற்கான முன்னெடுப்பை ஆந்திர பிரதேச மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மாநில வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து இணையவழியில் பயிர்கள் குறித்து விவரங்களைப் பதிவுசெய்வார்கள். கிராம வருவாய் அதிகாரிகள் மற்றும் கிராம வேளாண் உதவியாளர்கள் ஆகியோர் உழவர்களின் பெயர்கள், அவர்களின் நிலம், வங்கிக் கணக்கு மற்றும் அவர் பயிரிட்ட பயிர்கள்பற்றிய விவரங்களை சிற்றூர் அளவில் பதிவு செய்வார்கள்.
Question 64 |
முகக்கவசம் அணியுமாறு மக்களை வலியுறுத்துவதற்காக, ‘ரோகோ-டோகோ’ என்ற பரப்புரையைத் தொடங்கவுள்ள மாநில அரசு எது?
மகாராஷ்டிரா | |
குஜராத் | |
மத்திய பிரதேசம் | |
ஹரியானா |
Question 64 Explanation:
முகக்கவசம் அணியுமாறு மக்களை வலியுறுத்துவதற்காக மத்திய பிரதேச மாநில அரசு, ‘ரோகோ -டோகோ’ என்ற பரப்புரையைத் தொடங்கவுள்ளது. ஹிந்தி மொழியில், ‘ரோகோ – டோகோ’ என்றால் ‘நிறுத்து - பரப்புரை’ என்று பொருளாகும்.
பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாத மக்களிடையே முகக்கவசம் அணியும்பழக்கத்தை ஏற்படுத்த இது முற்படுகிறது. ‘ஜீவன் சக்தி யோஜனா’ என்ற திட்டத்தையும் அம்மாநில அரசு நடத்துகிறது; இதன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், மாநில மக்களுக்கு ஒரு முகக்கவசத்தை `20 என்ற விலையில் வழங்கும்.
Question 65 |
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘NEOWISE’ என்றால் என்ன?
வால்மீன் | |
சிறுகோள் | |
விண்மீன் |
Question 65 Explanation:
‘NEOWISE’ என்றும் அழைக்கப்படுகிற C/2020 F3 என்கிற வால்மீன், இந்த ஆண்டு மார்ச்.27 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வால்மீன், வானில் தெரியும் என்பதால் அண்மைச் செய்திகளில் இது இடம் பெற்றது. இந்தியாவில், அடிவானத்திலிருந்து 20° தொலைவில் உள்ள வடமேற்கு வானில், ‘NEOWISE’ வால்மீன் தெரியும். இது, 2020 ஜூலை.14 முதல் 20 நாட்களுக்கு சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 20 நிமிடங்களுக்கு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அது மங்கிவிடும்.
Question 66 |
$10 பில்லியன் டாலர் மதிப்பிலான, ‘இந்தியா டிஜிட்டல்மயமாக்கல் நிதியம்’ என்றாவொன்றைத் தொடங்கவுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
பேஸ்புக் | |
கூகிள் | |
அமேசான் | |
ஆப்பிள் |
Question 66 Explanation:
கூகிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, சமீபத்தில், $10 பில்லியன் டாலர் மதிப்பிலான, ‘இந்திய டிஜிட்டல்மயமாக்கல் நிதியம்’ என்றவொன்றை தொடங்குவதாக அறிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்துவதில் கவனஞ்செலுத்திய, ‘கூகிள் ஃபார் இந்தியா’ என்ற மெய்நிகர் நிகழ்வில் இது அறிவிக்கப்பட்டது. இந்த முயற்சியின்மூலம், கூகிள், அடுத்த 5 முதல் ஏழாண்டுகளில், இந்தியாவில், சுமார் `75000 கோடி நிதியை முதலீடு செய்யும். ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவு விலையிலான அணுகல் & தகவல்களை வழங்குவதில் இது கவனம் செலுத்தும்.
Question 67 |
காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்காக, ‘ஆபரேஷன் முஸ்கான்’ என்றவொன்றைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
மேற்கு வங்கம் | |
மகாராஷ்டிரா | |
ஆந்திர பிரதேசம் | |
குஜராத் |
Question 67 Explanation:
ஆந்திர பிரதேச மாநிலத்தின் அரசு அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்களுடன் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) இணைந்து அம்மாநிலத்தில், ‘ஆபரேஷன் முஸ்கான்’ என்றவொன்றைத் தொடங்கினர். காணாமல்போன சிறார்களைக் கண்டுபிடிப்பது, குழந்தைத் தொழிலாளர்கள் & வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் சிறார்களை மீட்பது ஆகியவற்றை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மீட்கப்படுவார்கள். மேலும் அவர்கள், பெற்றோருடன் ஒன்றுசேர்க்கப்படுவார்கள் அல்லது தங்குமிடத்தில் பாதுகாப்பாக இருத்தப்படுவார்கள்.
Question 68 |
நார் வாரியம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு சட்டபூர்வ அமைப்பாகும்?
வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகம் | |
MSME அமைச்சகம் | |
வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் | |
ஊரக வளர்ச்சி அமைச்சகம் |
Question 68 Explanation:
நார் வாரியம் என்பது MSME அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நார் தொழிற்சாலைகள் சட்டம் 1953’இன் கீழ் இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும். சமீபத்தில், 2019-20ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து தேங்காய் நார் & கயிறு உற்பத்திப்பொருள்கள் `2757.90 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத அளவைவிடவும் அதிகமாகும். முந்தைய 2018-19ஆம் ஆண்டைவிட சுமார் `30 கோடி அதிகமாகும். 2019-20’இல் 9,88,996 மெட்ரிக் டன் கயிறு & கயிறு உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதியானது. இது 2018-19’இல் 9,64,046 மெட்ரிக் டன்னாக இருந்தது.
Question 69 |
வணிகம் மற்றும் தொழிற்துறை (CCI) இளம் தலைவர்கள் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள பிராந்திய அமைப்பு எது?
BRICS | |
ASEAN | |
G20 | |
G7 |
Question 69 Explanation:
BRICS வணிகம் & தொழிற்துறை சபையானது (CCI) BRICS CCI இளம் தலைவர்கள் முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இளம் தலைமைத்துவப்பண்புகள் & தொழில்முனைவோரை ஆதரிப்பதற்கும் வளர்த்தெடுப்பதவதற்கும் ஒரு நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளில், இளையோர்களுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதையும் இது நோக்கமாகக்கொண்டுள்ளது.
Question 70 |
எந்நாட்டோடு இணைந்து, இந்தியா, ஒரு மெய்நிகரான ‘உணவுப்பதப்படுத்துதல் தொடர்பான வணிகத் திட்டத்தை’ நடத்தியது?
பிரான்ஸ் | |
இத்தாலி | |
ஜெர்மனி | |
ஜப்பான் |
Question 70 Explanation:
மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர், மெய்நிகரான டிஜிட்டல் இந்தோ - உணவு பதப்படுத்துதல் தொடர்பான இத்தாலிய வணிகத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இவ்விரு நாள் நிகழ்வில் டிஜிட்டல் மாநாடுகள், வர்த்தக கண்காட்சி மற்றும் B 2 B (பிசினஸ் டூ பிசினஸ்) கூட்டங்கள் அடங்கும். இதில் 23 இத்தாலிய நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
இந்த டிஜிட்டல் துறைசார் வணிக நோக்கம் இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 71 |
இந்தியா முதல் ‘பசகா’ வரையிலான புதிய வர்த்தக பாதை திறக்கப்பட்டுள்ளது. அவ்விடம் அமைந்துள்ள நாடு எது?
வங்கதேசம் | |
பூட்டான் | |
மியான்மர் | |
நேபாளம் |
Question 71 Explanation:
இந்தியாவும் பூட்டானும் அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தின் ஜெய்கான் மற்றும் பூட்டானின் பசகா இடையே ஒரு புதிய வர்த்தக வழியைத்திறந்தன. ஜெய்கான் மற்றும் பசகாவில் உள்ள அலே இடையே மாற்று வர்த்தகப்பாதை வழியாக பொருட்களை ஏற்றிச்செல்லும் வண்டிகள் சென்றுவந்தன. திம்புவில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, கூடுதல் தரைவழி சுங்கச்சாவடிகள் இந்திய அரசாங்கத்தால் பசகாவின் அலேவில் திறக்கப்பட்டுள்ளன.
Question 72 |
நார்வே நிறுவனமான ASKO மேரிடைம் AS நிறுவனத்திற்கு, மின்சாரத்தில் இயங்கும் தானியங்கு படகுகளை கட்டவுள்ள இந்திய கப்பல்கட்டும் தளம் எது?
கொச்சி கப்பல்கட்டுந்தளம் | |
கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள் | |
மசகன் கப்பல்கட்டுந்தளம் | |
ஹிந்துஸ்தான் கப்பல்கட்டுந்தளம் |
Question 72 Explanation:
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொச்சி கப்பல்கட்டுந்தளம், இரு தானியங்கி மின்சாரக் கப்பல்களை உருவாக்கி, நார்வேயின் ASKO மேரிடைம் AS நிறுவனத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிறுவனம், நார்வேயில் சில்லரை வணிகத்தில் பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் நார்ஜஸ் குரூப்பன் ASA குழுமத்தின் துணை நிறுவனமாகும்.
இந்தத் திட்டத்துக்கு நார்வே அரசாங்கம் பகுதியளவு நிதியளித்துள்ளது. உமிழ்வற்ற போக்குவரத்தே இதன் நோக்கமாகும். 67 மீ., நீளமுள்ள இந்தக் கப்பல்கள் முழு மின்சாரப் படகாக வழங்கப்படும். கொச்சி நீர் மெட்ரோவிற்காக 23 கலப்பின மின்சாரப் படகுகளையும் அந்தக் கப்பல்கட்டுந்தளம் கட்டிவருகிறது.
Question 73 |
பன்னாட்டு ஒலிம்பிக் குழுமமானது 2022ஆம் ஆண்டு டக்கார் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை, எந்த ஆண்டிற்கு ஒத்திவைத்துள்ளது?
2024 | |
2026 | |
2028 | |
2030 |
Question 73 Explanation:
பன்னாட்டு ஒலிம்பிக் குழுமமானது (IOC) 2022ஆம் ஆண்டு டக்கார் இளையோர் ஒலிம்பிக்கை நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செனகலின் தலைநகரத்தில் நடைபெற இருக்கும் இளையோர் கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளானது ஆப்பிரிக்காவில் ஏற்பாடு செய்யப்படும் முதல் ஒலிம்பிக் போட்டிகளாகும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிவரும் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும் மற்றும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
Question 74 |
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சாட்டோகிராம் துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?
ஆப்கானிஸ்தான் | |
மியான்மர் | |
வங்கதேசம் | |
தாய்லாந்து |
Question 74 Explanation:
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மன்சுக் மண்டவியா, காணொளிக் காட்சி வாயிலாக கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்கு முதல் சோதனை சரக்குக்கப்பலை வங்கதேசத் -தின் சாட்டோகிராம் துறைமுகம் வழியாக கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
வங்கதேசம் வழியாக இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துகளை இயக்குவதற்காக சாட்டோகிராம் & மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தின்கீழ் இது செய்யப்பட்டுள்ளது. இது வடகிழக்குப் பிராந்தியத்தை வங்கதேசம் வழியாக இணைக்க தொலைவு குறைவாக உள்ள மாற்றுப் பாதையாகும்.
Question 75 |
ஜூலை.16 அன்று அதன் நிறுவன நாளைக் கொண்டாடிய வேளாண் அமைப்பு எது?
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் | |
அக்ரினோவேட் இந்தியா | |
மத்திய வேளாண் பல்கலைக்கழகம்
| |
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் |
Question 75 Explanation:
மத்திய வேளாண் மற்றும் உழவர்நல அமைச்சகத்தின்கீழ் உள்ள வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின்கீழ், ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR), அண்மையில் தனது 92ஆவது நிறுவன நாளை ஜூலை.16 அன்று கொண்டாடியது. இந்நிறுவனம், கடந்த 1929ஆம் ஆண்டில் இதே நாளில் நிறுவப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு ஆண்டு விருதுகளையும் ICAR அறிவித்துள்ளது.
Question 76 |
எந்த ஆப்பிரிக்க நாட்டின் முதல் பெண் பிரதமராக ஒசெளகா ரபோண்டா நியமிக்கப்பட்டுள்ளார்?
காபோன் | |
ஜிம்பாப்வே | |
நைஜீரியா | |
கென்யா |
Question 76 Explanation:
மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனின் முதல் பெண் பிரதமராக ரோஸ் கிறிஸ்டியன் ஒசெளகா ரபோண்டா நியமிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட ஜூலியன் நோகோ பெக்கலேவுக்குப் பதிலாக, 56 வயதான ஒசெளகா ரபோண்டாவை, காபோன் அதிபர் அலி போங்கோ ஒண்டிம்பா நியமித்துள்ளார். இந்நியமனத்திற்கு முன், ஒசெளகா ரபோண்டா, கடந்த 2012ஆம் ஆண்டில் வரவுசெலவுத் திட்ட அமைச்சராகவும் பின்னர் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.
Question 77 |
நடப்பாண்டில் (2020) துணை-வெப்பமண்டல பழக்கண்காட்சியை நடத்திய மாநிலம் எது?
ஹரியானா | |
மத்திய பிரதேசம் | |
ஆந்திர பிரதேசம் | |
கேரளா |
Question 77 Explanation:
ஹரியானா மாநில தோட்டக்கலைத்துறையானது ஜூலை.18-22 வரையிலான ஐந்து நாட்களுக்கு துணை-வெப்பமண்டல பழக்கண்காட்சியை நடத்தவுள்ளது. இந்தக்கண்காட்சி, லாட்வாவில் உள்ள துணை-வெப்பமண்டல பழங்களுக்கான மையத்தில் நடத்தப்பட்டது. இம்மையம் இந்தோ- இஸ்ரேல் கூட்டுத் திட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும். துணை-வெப்பமண்டல பழங்களின் சாகுபடி நுட்பங்கள், சமூக-ஊடகங்கள் வழியாக விளக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பப்படும். இதன்மூலம், விவசாயிகள் ‘மேரா பாணி - மேரா விராசத்’ என்ற பயிர் வகைப்படுத்துதல் திட்டத்தின்கீழ் தொழில்நுட்பங்களை கற்றறிந்துகொள்ள முடியும்.
Question 78 |
மாதிரி பதிவுமுறையின்படி, 2016-18ஆம் ஆண்டில், இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் என்ன?
122 | |
119 | |
117 | |
113 |
Question 78 Explanation:
இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் (MMR) 2016-18’ஆம் ஆண்டில் 113ஆக குறைந்துள்ளது. இந்த விகிதம் 2015-17ஆம் ஆண்டில் 122 ஆகவும், 2014-2016ஆம் ஆண்டில் 130 ஆகவும் இருந்தது. தலைமை மாதிரி பதிவு அமைப்பு அலுவலகம், சமீபத்தில், இந்தியாவில் தாய்வழி இறப்புகுறித்த சிறப்பு அறிக்கை - 2016-18’ஐ வெளியிட்டது. ஐ.நா’இன் நீடித்த வளர்ச்சி இலக்குகளானது, உலகளாவிய தாய்வழி இறப்பு விகிதத்தை இலட்சம் பிறப்புகளுக்கு எழுபதை விடவும் குறைவாக வைத்திருப்பதை நோக்கமெனக் கொண்டுள்ளது.
Question 79 |
பிளாஸ்மா நன்கொடை பரப்புரை’யை நடத்திய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?
புதுச்சேரி | |
குஜராத் | |
தில்லி | |
ஒடிசா |
Question 79 Explanation:
தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான AIIMS’இல், COVID-19 பிளாஸ்மா கொடை இயக்கத்தை சுகாதார & குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் தொடக்கி வைத்தார். தில்லி காவல்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 26 காவலர்கள் தன்னார்வத்துடன் குருதி பிளாஸ்மா கொடையளித்தனர். புதுதில்லியில் அண்மையில் நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Question 80 |
ஜூலை.20 அன்று கொண்டாடப்படும் விண்வெளி ஆய்வு நாள், இப்படியும் ____அழைக்கப்படுகிறது?
ஞாயிறு நாள் | |
திங்கள் நாள் | |
செவ்வாய் நாள் | |
புவி நாள் |
Question 80 Explanation:
1969 ஜூலை.20 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் & எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் திங்களின் மேற்பரப்பில் இறங்கிய முதல் மனிதர்களாக ஆனார்கள். இந்த வரலாற்று சாதனையை நினைவுகூரும் வகையில், இது விண்வெளி ஆய்வு நாளாக (Space Exploration) கொண்டாடப்படுகிறது. இது திங்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் F கென்னடி, “அடுத்த பத்தாண்டுக்குள் ஒரு மனிதனை திங்களில் இறக்கி, பாதுகாப்பாக அவனை/ளை புவிக்குத் மீட்டுவரவேண்டும்” என்ற இலக்கை நிர்ணயித்திருந்தார். ஆம்ஸ்ட்ராங்கின் இந்தச் சாதனைக்குப் பின்னர், அமெரிக்கா, 1969 & 1972’க்கு இடையே திங்களுக்கு, ஆறு அப்பல்லோ விண்கலங்களை ஏவியுள்ளது.
Question 81 |
இயற்கை காலநிலை மாற்றத்தின் ஆய்வின்படி, காலநிலை மாற்றம் காரணமாக எந்த விலங்கினம் அழிந்துபோகக்கூடும்?
துருவக்கரடி | |
பெங்குயின் | |
கடற்பசு | |
ஆர்க்டிக் நரி |
Question 81 Explanation:
“இயற்கை காலநிலை மாற்றம்” என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட அறிவியலாளர்களின் ஆய்வு முடிவின்படி, காலநிலை மாற்றம் காரணமாக மாமிச உண்ணியான துருவக்கரடிகள் அழிந்துபோகக் கூடும். 13 வகையான துருவக்கரடிகளுள் 12 வகையான துருவக்கரடிகள் எதிர்வரும் அடுத்த எண்பது ஆண்டுகளுக்குள் முழுமையாக அழிந்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Question 82 |
மின்சாரம் கடத்தும் கம்பிவடங்கள் & கோபுரங்களை ஆய்வுசெய்வதற்கு ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்த ஒப்புதல் பெற்ற முதல் மாநிலம் எது?
குஜராத் | |
இராஜஸ்தான் | |
மகாராஷ்டிரா | |
மத்திய பிரதேசம் |
Question 82 Explanation:
மின்சாரம் கடத்தும் கம்பிவடங்கள் & கோபுரங்களை ஆய்வுசெய்வதற்கு ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்த, மகாராஷ்டிரத்துக்கு உள்துறை அமைச்சகமும் உள்நாட்டு வான் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரும் அனுமதி அளித்துள்ளனர். மின்துறை ஊழியர்களின் பணி அபாயத்தைக் குறைக்க, சீர்கெட்ட கூடுதல் உயர் மின்னழுத்த மின் இணைப்புகளை கண்காணிக்க ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிபெற்ற முதல் மாநிலமாக மகாராட்டிர மாநிலம் உள்ளது.
மகாராட்டிர மாநில மின் பரிமாற்ற நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு மண்டலத்திற்கும் உயர் தெளிவுத்திறன்கொண்ட நிழற்படக்கருவிகள் கொண்ட ஆளில்லா வானூர்திகள் வழங்கப்படும்.
Question 83 |
நவீன் ரோஜ்கர் சத்ரி யோஜனா’ என்றவொன்றை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
மத்திய பிரதேசம் | |
உத்தர பிரதேசம் | |
உத்தரகாண்ட் | |
பஞ்சாப் |
Question 83 Explanation:
உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமீபத்தில், ‘நவீன் ரோஜ்கர் சத்ரி யோஜனா’ என்றவொரு திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், மாநிலத்தில் உள்ள பட்டியலின சாதியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய் சுவரோஜ்கர் யோஜனா’வின்கீழ், மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் `17.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
Question 84 |
அவசரகால மருத்துவ சேவை’களை அமைப்பதற்காக, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது?
இலங்கை | |
மாலத்தீவுகள் | |
மொரிசியசு | |
வங்கதேசம் |
Question 84 Explanation:
மாலத்தீவின் தலைநகரமான மாலேவில், ‘அவசரகால மருத்துவ சேவை’களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் அண்மையில் இந்தியாவும் மாலத்தீவும் கையெழுத்திட்டன. இத்திட்டத்திற்காக, இந்தியா, சுமார் $20 மில்லியன் டாலர்களை மாலத்தீவுக்கு வழங்கவுள்ளது. பல்வேறு சிறு மற்றும் நடுத்தர திட்டங்களில், இந்தியா, மாலத்தீவிற்கு உதவிவருகிறது. இம்மருத்துவசேவை வசதியானது சிக்கலான பேரிடர் காலங்களில் தரமான அவசரகால சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யும்.
Question 85 |
சுய-உதவிக்குழுக்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்துவதற்காக, எந்த மாநில அரசு, ‘அமுல்’ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
தமிழ்நாடு | |
ஹரியானா | |
ஆந்திர பிரதேசம் | |
உத்தர பிரதேசம் |
Question 85 Explanation:
ஆந்திர பிரதேச மாநில அரசானது பால் கூட்டுறவு நிறுவனமான AMUL (ஆனந்த் பால் யூனியன் லிட்) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம், மகளிர் சுய-உதவிக்குழுக்கள் மற்றும் அரசுத்துறைசார் பால் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் குழுக்களுக்கு சந்தை அணுகல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் வழங்கும்.
Question 86 |
விமான உமிழ்வை கையாளுவதற்காக புதிய, ‘ஜெட் ஜீரோ கவுன்சில்’ என்றவொன்றைத் தொடங்கிய நாடு எது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
ஐக்கியப் பேரரசு | |
சீனா | |
ரஷ்யா |
Question 86 Explanation:
ஐக்கியப் பேரரசின் பிரதமர், அந்நாட்டில் விமான உமிழ்வை கையாளுவதற்காக புதிய, ‘ஜெட் ஜீரோ கவுன்சில்’ என்றவொன்றை தொடங்கியுள்ளார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான £350 மில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒருபகுதியாக, இந்த அவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு, சுற்றுச்சூழல் துறை மற்றும் விமானத்துறைசார் வல்லுநர்களை ஒருங்கிணைத்து சுழிய-உமிழ்வு கொண்ட நீண்டதூரம் பயணிக்கும் விமானத்தை இந்த அவை உருவாக்கவுள்ளது. எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய இங்கிலாந்து எண்ணம் கொண்டுள்ளது.
Question 87 |
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Grand Renaissance’ அணை அமைந்துள்ள நாடு எது?
நைஜீரியா | |
சூடான் | |
எகிப்து | |
எத்தியோப்பியா |
Question 87 Explanation:
Grand Renaissance’ அணை என்பது கடந்த 2011ஆம் ஆண்டு முதல் எத்தியோப்பியாவில் கட்டப்பட்டு வரும் ஒரு நீர்மின்னுற்பத்தி நிலையமாகும். முன்பு, ‘மில்லினியம் அணை’ என்று அழைக்கப்பட்ட இந்த அணை, எத்தியோப்பியாவின் நீல நைல் ஆற்றிலுள்ள பெனிஷங்குல்-குமுஸ் பிராந்தியத்தில் உள்ளது.
சூடான் & எகிப்து ஆகிய நாடுகள், இந்த நீர்மின்னுற்பத்தி அணை கட்டப்பட்டால் தங்கள் நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சுவதால் இதன் கட்டுமானம் தற்போது சிக்கலில் உள்ளது. ஆனால், எத்தியோப்பியா தனது மக்களுக்கு மின்னுற்பத்தி செய்வதற்கு, $4 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அணை தேவை என்று வலியுறுத்துகிறது. அண்மையில், அணை தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
Question 88 |
UNEP மற்றும் IEA ஆகியவற்றின் ‘குளிரூட்டிகள் உமிழ்வு & கொள்கை தொகுப்பு அறிக்கை’யின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் மொத்தம் எத்தனை குளிரூட்டிகள் இருக்கும்?
1.4 மில்லியன் | |
1.4 பில்லியன் | |
14 பில்லியன் | |
140 பில்லியன் |
Question 88 Explanation:
ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் பன்னாட்டு எரிசக்தி நிறுவனம் (IEA) ஆகியவை இணைந்து ‘குளிரூட்டிகளின் உமிழ்வு & கொள்கை தொகுப்பு அறிக்கை: சிறப்பான முறையில் குளிரூட்டிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கிகாலி திருத்தம்' என்ற தலைப்பில் 2020 ஜூலை.17 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டன. அவ்வறிக்கையின்படி, 2050ஆம் ஆண்டில், உலகிற்கு, பத்து பில்லியனுக்கும் அதிகமான புதிய குளிரூட்டிகள் தேவைப்படும். இது, அவற்றின் எண்ணிக்கையை 14 பில்லியனாக மாற்றும்.
இவ்வறிக்கையின்படி, சுமார் 3.6 பில்லியன் குளிரூட்டிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இது, ஒவ்வொரு நொடியும் 10 குளிரூட்டியாக அதிகரித்து வருகிறது.
Question 89 |
அமெரிக்காவுக்கு இயக்கப்படும் இந்தியாவின் முதல் உள்நாட்டு வான் போக்குவரத்து நிறுவனம் எது?
இண்டிகோ | |
ஸ்பைஸ் ஜெட் | |
விஸ்தாரா | |
கோ ஏர் |
Question 89 Explanation:
குருகிராமைச் சார்ந்த இந்திய வான் போக்குவரத்து நிறுவனமான ‘ஸ்பைஸ் ஜெட்’ இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இயங்கவுள்ளது. ஏர் இந்தியாவுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு இயங்கும் முதல் இந்திய வான் போக்குவரத்து நிறுவனமாக ஸ்பைஸ் ஜெட் உள்ளது. இந்திய அரசாங்கத்திற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையிலான இந்திய வான் போக்குவரத்து சேவை ஒப்பந்தத்தின்கீழ் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது ஐக்கியப் பேரரசுக்கு இயக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
Question 90 |
மத்திய MSME அமைச்சரால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டல் தளத்தின் பெயரென்ன?
ரீஸ்டார்ட் இந்தியா | |
உத்தியோக் இந்தியா | |
மீண்டுவா இந்தியா | |
ரீஸ்கில் MSME |
Question 90 Explanation:
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘Restart India’ என்ற வழிகாட்டல் தளத்தை தொடங்கினார். இத்தளத்தை முத்தூட் பின்கார்ப் மற்றும் INK டாக்ஸ் ஆகியவை கருத்தாக்கம் செய்துள்ளன. ‘ரீஸ்டார்ட் இந்தியா’ என்பது அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்குறித்த தகவல்களை வழங்கும் ஒரு தளமாகும். இது வணிகர்களை பல்வேறு துறைகள்சார்ந்த வல்லுநர்களுடன் இணைக்க உதவுகிறது.
Question 91 |
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆபரேஷன் லெஜண்ட்’ உடன் தொடர்புடைய நாடு எது?
மலேசியா | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
ஆப்கானிஸ்தான் | |
ஜப்பான் |
Question 91 Explanation:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஆபரேஷன் லெஜண்ட்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். வன்முறை குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க சிகாகோ, அல்புகெர்கி மற்றும் நியூ மெக்ஸிகோ உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களுக்கு கூட்டாட்சி முகவர்களை அனுப்புவதை இத் திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது. குற்றங்களை எதிர்த்து உள்ளூர் காவல்துறைக்கு உதவ மத்திய சட்ட அமலாக்க முகவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
Question 92 |
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ASTHROS’ திட்டம், எந்த நாட்டின் விண்வெளி நிறுவனத்துடன் தொடர்புடையது?
பிரான்ஸ் | |
இரஷ்யா | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
இந்தியா |
Question 92 Explanation:
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமானது (NASA) ‘ASTHROS’ என்ற புதிய பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. Astrophysics Stratospheric Telescope for High Spectral Resolution Observations at Sub millimeter-wavelengths என்பதன் சுருக்கமே ‘ASTHROS’.
புவியிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத தொலைதூர அகச்சிவப்புக்கதிரைக் காண்பதற்காக, கால்பந்து மைதான அளவிலான ஒரு வளிக்கூட்டில், தொலைநோக்கி ஒன்றை வைத்து அடுக்கு மண்டலத்திற்கு அனுப்புவதே இந்தப் பணியின் நோக்கமாகும். 2023ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிலிருந்து இதனைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Question 93 |
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின், ‘தேன் பரிசோதனை ஆய்வகம்’ திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
மத்திய பிரதேசம் | |
குஜராத் | |
உத்தரகாண்ட் | |
பஞ்சாப் |
Question 93 Explanation:
மத்திய வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மெய்நிகராக, ‘உலகத் தரம்வாய்ந்த தேன் பரிசோதனை ஆய்வக’த்தை திறந்துவைத்துள்ளார். குஜராத்தின் ஆனந்தில், தேசிய தேனீ வாரியத்தின் ஆதரவுடன் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் இத்தகைய நவீன ஆய்வகத்தை நிறுவியுள்ளது. வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர்நலத்துறை ஆகியவை, தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் திட்டத்துக்கு ஈராண்டுகாலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Question 94 |
இந்தியாவில் வருமான வரி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
ஜூலை 23 | |
ஜூலை 24 | |
ஜூலை 25 | |
ஜூலை 26 |
Question 94 Explanation:
வருமான வரி நாளானது ஆண்டுதோறும் ஜூலை.24 அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தாலும் மற்றும் அதுசார் அலுவலகங்களாலும் கொண்டாடப்படுகிறது. முதல் விடுதலைப் போரின்போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக, 1860ஆம் ஆண்டில் இதேநாளில், வருமான வரி என்றவொரு புதிய வரி முதன்முதலில் சர் ஜேம்ஸ் வில்சன் அவர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் (2020) வரும் வருமான வரி நாள், அந்நாளின் 160ஆவது ஆண்டு நாளாகும்.
Question 95 |
தேசிய புலனாய்வுக் கட்டமைப்பு, “NATGRID” என்பதுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
நிதி அமைச்சகம் | |
உள்துறை அமைச்சகம் | |
வெளிவிவகார அமைச்சகம் | |
பாதுகாப்பு அமைச்சகம் |
Question 95 Explanation:
தேசிய புலனாய்வு கட்டமைப்பு (NATGRID) என்பது உள்துறை அமைச்சகத்தின்கீழ் இணைக்கப்பட்ட ஓர் அலுவலகமாகும். விசாரணை மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நிகழ்நேர தகவல்கள் கிடைப்பதை இது உறுதிசெய்கிறது. எந்தவொரு நிறுவனத்தின் நிதி விவரங்களையும் CBI, அமலாக்க இயக்குநரகம் மற்றும் NIA உள்ளிட்ட 10 நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக மத்திய நேரடி வரிகள் வாரியம் ‘NATGRID’ உடன் கூட்டிணைந்துள்ளது. இந்தத் தகவல்பகிர்வு வழிமுறை, NATGRID தளத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
Question 96 |
அகலப்பாதையில் செல்லும் பத்து டீசல் பொறிகளை, இந்தியா, எந்த நாட்டிற்கு வழங்கவுள்ளது?
இலங்கை | |
வங்கதேசம் | |
மியான்மர் | |
லாவோஸ் |
Question 96 Explanation:
இந்திய இரயில்வேயின் அண்மைய அறிக்கையின்படி, அது தனது அகலப்பாதையில் செல்லக்கூடிய 10 டீசல் பொறிகளை வங்கதேசத்துக்கு ஒப்படைக்கவுள்ளது. முன்னதாக, இரயில் பொறிகளை கொள்முதல் செய்வதற்கான கோரிக்கையை, வங்கதேசம், இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது. ஏனெனில், அதன் தற்போதைய இரயில் பொறிகளில் 72 சதவீதத்துக்கும் அதிகமானவை அதன் ஆயுளின் விளிம்பில் உள்ளன. உள்நாடு மற்றும் நாடுகளுக்கிடையேயான இரயில் போக்குவரத்துக்கு இந்த ரயில் பொறிகள் பயன்படுத்தப்படும் என வங்கதேசம் தெரிவித்துள்ளது.
Question 97 |
உன்னத பாரத் அபியானின்கீழ், IIT தில்லியுடன் கூட்டிணைந்துள்ள அமைப்பு எது?
TRIFED | |
NAFED | |
UPSC | |
AICTE |
Question 97 Explanation:
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், ‘உன்னத இந்தியா திட்ட’த்தை தில்லி IITஉடன் இணைந்து TRIFED செயல்படுத்தவுள்ளது. இதற்கான முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் TRIFED, IIT தில்லி மற்றும் விஞ்ஞான பாரதி ஆகிய 3 அமைப்புகளுக்கிடையே IIT தில்லியில் கையெழுத்திடப்பட்டது. TRIFED அமைப்பின், ‘வன் தன்’ திட்டத்தின்கீழ் உள்ள பழங்குடியின தொழில்முனைவோர், ‘உன்னத இந்தியா திட்ட’த்தின்கீழ் ஈராயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களின் அனைத்து நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
Question 98 |
எந்த உலகளாவிய சங்கத்துடனான, ‘அறிவியல் ஒத்துழைப்புக்கான ஒப்பந்த’த்தை அடுத்த ஐந்தாண்டுக -ளுக்கு இந்தியா புதுப்பிக்கவுள்ளது?
ASEAN | |
BIMSTEC | |
ஐரோப்பிய ஒன்றியம் | |
G20 |
Question 98 Explanation:
இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2020-2025) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளன. இருதரப்பினரும் வாய்மொழிக் குறிப்புகள் பரிமாறிக்கொள்வதன்மூலம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடக்கத்தில் நவம்பர் 23, 2001ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. பின்னர் கடந்த காலத்தில் 2007 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இருமுறை புதுப்பிக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் இருதரப்பின் ஒத்துழைப்பை விரிவாக்கும், பொதுவான ஆர்வமுள்ள பகுதிகளில் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதையும், அத்தகைய ஒத்துழைப்பின் முடிவுகளை அவர்களின் பொருளாதார & சமூக நலனுக்காகப் பயன்படுத்துவதையும் பலப்படுத்தும்.
Question 99 |
இந்திய பருத்திக் கழக்கமானது தனது சொந்த பருத்திக்கிடங்கை எந்த நாட்டில் அமைக்கவுள்ளது?
இலங்கை | |
வியட்நாம் | |
மியான்மர் | |
லாவோஸ் |
Question 99 Explanation:
இந்திய பருத்திக் கழக்கமானது ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக வியட்நாமில் தனது சொந்த பருத்திக் கிடங்கை அமைக்கவுள்ளது. 1.52 மில்லியன் சுருள் பருத்தியை வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது. அடுத்துவரும் அறுவடை காலத்திற்கு முன்னதாக உபரி பருத்தியை சேமித்து வைப்பதற்காக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Question 100 |
2020 பிப்ரவரி-ஜூன் காலகட்டத்தில் NITI ஆயோக்கால் தரவரிசைப்படுத்தப்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் எது?
நவாடா | |
மோகா | |
பீஜப்பூர் | |
பக்ரைச் |
Question 100 Explanation:
2020 பிப்ரவரி-ஜூன் காலகட்டத்தில் NITI ஆயோக்கால் தரவரிசைப்படுத்தப்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்களின் பட்டியலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மேகாலயாவின் ரி-போய் மாவட்டம் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் பக்ரைச் மாவட்டம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. இந்த டெல்டா தரவரிசை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர்வளம், நிதியியல் உள்ளடக்கம், திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு உள்ளிட்ட 6 வளர்ச்சிப் பகுதிகளில் 112’க்கும் மேற்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்களால் செய்யப்பட்ட முன்னேற்றத்தை கருதுகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.