General Tamil Model Question Paper 9
71. “என்றுமுள தென்தமிழ்” என்னும் தொடரை இயம்பியவர் யார்?
(அ) கம்பர்
(ஆ) பாரதியார்
(இ) பாரதிதாசன்
(ஈ) வள்ளலார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) கம்பர்
72. “கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்” என்று குறிப்பிடும் இலக்கியம்
(அ) மூதுரை
(ஆ) நாலடியார்
(இ) பழமொழி நானூறு
(ஈ) நான்மணிக்கடிகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பழமொழி நானூறு
பழமொழி நானூறில் – 4ஆவது பாடல். ஆசிரியர்: முன்றுறை அரையனார். “ஆற்றுணா வேண்டுவது இல்” என்ற பழமொழியாகும்
73. மாணவன் பாடம் படித்திலன் – எவ்வகைத் தொடர்?
(அ) எதிர்மறைத் தொடர்
(ஆ) பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
(இ) உடன்பாட்டுத் தொடர்
(ஈ) கலவைத் தொடர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) எதிர்மறைத் தொடர்
74. தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் – இக்குறளில் அமைந்துள்ள தக்கர் – எச்சத்தால் என்ற இணை.
(அ) அடி முரண்
(ஆ) அடி மோனை
(இ) அடி இயைபு
(ஈ) இன எதுகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
வினா தவறு. கொள்குறிகளும் தவறு.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்
தக்கார்-தகவிலர்-இணைமோனை
75. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை”
(அ) தமிழர்க்குப் பெருமை தராதது எது?
(ஆ) நமக்குள்ளே பேசுவது எது?
(இ) பழங்கதைகளால் என்ன நன்மை?
(ஈ) பழங்கதைகளின் மகிமை யாது?
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) தமிழர்க்குப் பெருமை தராதது எது?
76. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
“இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா”
(அ) இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
(ஆ) இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
(இ) இரட்டிற்பிரிந்திசையாதது எது?
(ஈ) இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) இரட்டிற்பிரிந்திசையாதது எது?
77. “எறும்பும் தன் கையில் எண் சாண்” – எனப்பாடியவர்
(அ) கபிலர்
(ஆ) ஒட்டக்கூத்தர்
(இ) ஒளவையார்
(ஈ) புகழேந்தி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) ஒளவையார்
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஒதுகிறாள் – மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்ற்டா; புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண் – ஒளவையார்
ஒளவையார் பாடிய இப்பாடல் “தனிப்பாடல் திரட்டில்” உள்ளது. பல்வேறு காலகட்டங்களில் புலவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டாகும். இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமியின் வேண்டுதலுக்கு இணங்க சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று சேகரித்த பாடல்களின் தொகுப்பாகும். இங்கே குறிப்பிடப்பட்ட ஒளவையார் சங்ககால ஒளவையாருக்கு மிகவும் பிற்பட்டவர், கம்பர், ஒட்டக்கூத்தார், புகழேந்திப் புலவர் போன்றோரின் காலத்தில் வாழ்ந்தவர்
78. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
(அ) தைப்பாவை
(ஆ) திருப்பாவை
(இ) திருவெம்பாவை
(இ) காவியப்பாவை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருப்பாவை
1. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது திருப்பாவை.
2. இதனை எழுதியவர் ஆண்டாள். இவர் ஆழ்வார்களில் ஒருவராவார்.
3. இவர் எழுதிய மற்றொரு நூல் நாச்சியார் திருமொழி ஆகும்.
4. இவரது காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு ஆகும்.
79. காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
(அ) சிவஞான முனிவர்
(ஆ) பலபட்டடைச் சொக்கநாதர்
(இ) அழகிய சொக்க நாதர்
(ஈ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) அழகிய சொக்க நாதர்
1. அழகிய சொக்கநாதர் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
2. இவரது பாடல்கள் பல (25-க்கும் மேற்பட்டவை) தனிப்பாடல் திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளன.
3. இவர் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், காந்தியம்மை அந்தாதி போன்ற நூல்களை எழுதியுள்ளார்
80. சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
(அ) பேராசிரியர்
(ஆ) அடியார்க்கு நல்லார்
(இ) நாச்சினார்க்கினியர்
(ஈ) ந.மு.வேங்கடசாமி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) நாச்சினார்க்கினியர்
1. நச்சினார்க்கினியர், “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்ற பெரும் பாராட்டைப் பெற்றவர். இவரது காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்.
2. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, குறுந்தொகையில் 20 பாடல்கள், சீவகசிந்தாமணி ஆகியவற்றிற்கு இவர் உரை எழுதுpயுள்ளார்.