General TamilTnpsc

General Tamil Model Question Paper 8

51. பொருந்தா இணையைத் தேர்க:

சொல் பொருள்

1. மா அழுகு

2. மீ உயர்ச்சி

3. மூ மூப்பு

4. மை மேம்பாடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

4. மை மேம்பாடு

ஓரெழுத்து ஒரு மொழி: மா-அழகு, மேன்மை, மீ-உயர்ச்சி, மூ-மூப்பு, மூன்று. மை-அஞ்சனம்,எழுதுமை. ஓரிஜினல் வினாவில் அழகு என்பது “அழுகு” என்று பிழையாக கொடுக்கப்பட்டுள்ளது

52. ஏழையின் குடிசையில்

அடுப்பும் விளக்கும் தவிர

எல்லாமே எரிகின்றன” – இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?

(அ) அறிஞர் அண்ணா

(ஆ) வல்லிக்கண்ணன்

(இ) பட்டுக்கோட்டையார்

(ஈ) மீரா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வல்லிக்கண்ணன்

53. “வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்

கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்” – இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?

(அ) இராசேந்திரன்

(ஆ) முதல் இராசராசன்

(இ) இராசாதிராசன்

(ஈ) இராச மகேந்திரன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இராசேந்திரன்

விக்கிரமச் சோழன், 2-ஆம் குலோத்துங்கள், 2-ஆம் இராசராசன் ஆகிய மன்னர்களின் சிறப்பினைக் குறித்து ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா என்ற நூலில் மேற்கண்ட செய்யுள் வந்துள்ளது.

பொருள்:ஆண் யானைகள் ஆயிரத்தையும் ஒரு களிற்றைக் கொண்டு கொப்பத்துப் போரில் வென்றவன் இராசேந்திரன் என்பதாகும்.

54. “நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள்” – இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?

(அ) இல்லறவியல்

(ஆ) துறவறவியல்

(இ) ஊழியல்

(ஈ) பாயிரவியல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

இப்பாடல் 999-ஆவது குறளாகும்.

பாயிரம்: 1 முதல் 40 வரை: இல்லறவியல்: 41 முதல் 240 வரை: துறவறவியல்: 241 முதல் 370 வரை: ஊழியல்: 371 முதல் 380 வரை

சரியான விடை: குடியியல்: 951 முதுல் 1080 வரை.

வினாவிற்கு கொடுக்கப்பட்ட 4 கொள்குறி விடைகளும் தவறு

55. பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு

பருமணி பகராநெற் – இத்தொடரில் “புயல்” – என்னும் சொல்லிற்கு பொருள்

(அ) வானம்

(ஆ) காற்று

(இ) மேகம்

(ஈ) நீர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மேகம்

நந்திக் கலம்பகம்

பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு

பருமணி பகராநெற்

கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு

காவிரி வளநாடா!

பொருள்: ஊர்தோறும் மேகங்கள் பொழிகின்ற மணிகளையும், மூங்கில் தந்த பெரிய முத்துகளையும் கொடுத்து அவ்வூர்களிலுள்ள நெற்கதிர்களைத் தொகுத்து கொண்டு வருகின்ற நீர், கரையோடு மோதி வழியும் காவிரியின் வளம் பொருந்திய நாட்டை உடையவனே!

56. கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

(அ) சே-சோலை

(ஆ) சோ-சிவப்பு

(இ) கா-மதில்

(ஈ) மா-விலங்கு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மா-விலங்கு

சே-காளைமாடு, சிவப்பு. கா-காத்தல், சோலை. மதில், நகர். மா-விலங்கு, அழகு, மேன்மை.

57. ‘ஷெல்லிதாசன்” என்று தன்னைக் கூறிக்கொண்டவர் யார்?

(அ) சுப்பிரமணிய பாரதியார்

(ஆ) சுத்தானந்த பாரதியர்

(இ) சோமசுந்தர பாரதியார்

(ஈ) சுப்பிரமணிய சிவா

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சுப்பிரமணிய பாரதியார்

58. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?

(அ) சூளாமணி

(ஆ) நாககுமார காவியம்

(இ) யசோதர காவியம்

(ஈ) நீலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நீலகேசி

குண்டலகேசி என்ற பௌத்தசமய நூலுக்கு எதிராக எழுதப்பட்ட நீலகேசி சமண சமயம் சார்ந்த நூலாகும்.

59. “சேமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே” – இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது – எனப் பாடியவர்

(அ) கண்ணதாசன்

(ஆ) தஞ்சை இராமையாதாஸ்

(இ) மருதகாசி

(ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மருதகாசி

60. கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?

(அ) ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி

(ஆ) இராஜ தண்டனை

(இ) மாங்கனி

(ஈ) கொய்யாக்கனி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மாங்கனி

“கொய்யாக்கனி” – இயற்றியவர் பெருஞ்சித்திரனார்

Previous page 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!