General Tamil Model Question Paper 7
30. வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
(அ) பற்றுக
(ஆ) பற்றற்றான்
(இ) பற்றி
(ஈ) பற்று
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பற்று
பற்று-வேர்ச்சொல். பற்றுக-வியங்கோள் வினைமுற்று. பற்றற்றான்-எதிர்மறை வினைமுற்று. பற்றி-வினையெச்சம்.
31. “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” – எனப்பாடியவர்
(அ) அரிசில் கிழார்
(ஆ) மோசிகீரனார்
(இ) ஒளவையார்
(ஈ) பரணர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) மோசிகீரனார்
நெல்லும் உயிரன்றே: நீரும் உயிரன்றே:
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம். – மோசிகீரனார். புறநானூறில் 186-ஆவது பாடல்.
32. சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?
(அ) பெரியபுராணம்
(ஆ) திவிளையாடற்புராணம்
(இ) கந்த புராணம்
(ஈ) திருவாசகம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருவிளையாடற்புராணம்
திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இவரது காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு
33. பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
(அ) திருநாவுக்கரசர்
(ஆ) திருஞானசம்பந்தர்
(இ) சுந்தரர்
(ஈ) காரைக்கால் அம்மையார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருஞானசம்பந்தர்
பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தரின் வரலாறே அதிகமான பாடல்களைப் பெற்றுள்ளது. எனவேதான் பெரியபுராணத்தை “பிள்ளை பாதி புராணம்பாதி” என்று கூறுகின்றனர்.
34. சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
(அ) திருச்செங்குன்றம்
(ஆ) திருவெண்ணெய் நல்லூர்
(இ) திருச்செந்தூர்
(ஈ) திருவாரூர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருவெண்ணெய் நல்லூர்
இறைவன் திருவெண்ணெய் நல்லூரில் சுந்தரரை தடுத்தாட் கொண்டார். அங்குதான் சுந்தரர் “பித்தா பிறைசூடி பெருமானே” என்ற தனது முதல் பதிகத்தைப் பாடினார்.
35. பிறவினை வாக்கியத்தை கண்டறிக:
(அ) புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
(ஆ) அகநாநூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்.
(இ) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்.
(ஈ) ஐங்குறுநூறு நூலைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்.
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்.
(அ)செய்வினை.
(ஆ) மற்றும்
(ஈ) தன்வினை.
(இ) பிறவினை
36. பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க: பண்புத்தொகை
(அ) மென்கண்
(ஆ) செய்வினை
(இ) நன்கலம்
(ஈ) அருவிலை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) செய்வினை
செய்வினை-வினைத்தொகை: ஏனைய மூன்றும் பண்புத்தொகைகள்.
37. “நெறியினில் உயிர்செகுத் திடுவ” – இதில் “உயிர்செகுத்து” எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
(அ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
(ஆ) வினையாலணையும் பெயர்
(இ) வியங்கோள் வினைமுற்று
(ஈ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்துவரச் சொற்கள் தொடர்ந்து நிற்பதற்கு வேற்றுமைத் தொகை என்று பெயர். இரண்டாம் வேற்றுமை உருபு “ஐ” மறைந்து வந்துள்ளது. “உயிரை செகுத்து” என்பது “உயிர்செகுத்து” என வந்துள்ளது
38. சரியானவற்றைத் தேர்க:
பொருள் – திணை
(அ) எதிரூன்றல் – 1. வெட்சி
(ஆ) மீட்டல் – 2. வஞ்சி
(இ) செருவென்றது – 3. வாகை
(ஈ) எயில்காத்தல் – 4. நொச்சி
(அ) 1ம், 2ம் சரி
(ஆ) 2ம், 3ம் சரி
(இ) 3ம், 4ம் சரி
(ஈ) 1ம், 4ம் சரி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 3ம், 4ம் சரி
(அ) கவர்தல் – வெட்சித் திணையாகும்
(ஆ) மீட்டல் – கரந்தைத் திணையாகும்
(இ) செருவென்றது – வாகைத் திணையாகும்
(ஈ) எயில்காத்தல் – நொச்சித் திணையாகும்
39. பிரித்தெழுதுக: நெடுநாவாய்
(அ) நெடு+நாவாய்
(ஆ) நெடுமை+நா+வாய்
(இ) நெடுமை+நாவாய்
(ஈ) நெடுநா+வாய்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) நெடுமை+நாவாய்
நெடுநாவாய் என்பது பண்புப்பெயர் புணர்ச்சியாகும். நெடுமை+நாவாய் – நெடுநாவாய். ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு இயல்பாய் புணர்ந்தது.
40. செய் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
(அ) செய்தீர்
(ஆ) செய்வாய்
(இ) செய்தவன்
(ஈ) செய்தான்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) செய்தவன்
செய்தீர் – இறந்தகால முன்னிலை ஒருமை வினைமுற்று.
செய்வாய் – எதிர்கால முன்னிலை ஒருமை வினைமுற்று
செய்தவன் – வினையாலணையும் பெயர்
செய்தான் – இறந்தகால வினைமுற்று