General Tamil Model Question Paper 6
11. “கவி காளமேகம்” எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
(அ) சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
(ஆ) சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
(இ) வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
(ஈ) வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
காளமேகப்புலவர் முதலில் திருவரங்கம் மடப்பள்ளியில் பணிபுரிந்தார். திருவானைக்காவில் உள்ள அகிலாண்டேஸ்வரியின் அருளால் தமிழ் மொழியில் சிறந்த புலமை பெற்றார். அதனால் அவர் வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்.
12. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.
(அ) இந்தியா
(ஆ) குயில்
(இ) தமிழ்ச்சிட்டு
(ஈ) மணிக்கொடி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தமிழ்ச்சிட்டு
பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.
13. மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
(அ) கற்றது மறவாமை
(ஆ) ஒழுக்கம் உடைமை
(இ) கண்ணஞ்சப் படுதல்
(ஈ) வாய்மை உடைமை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) கற்றது மறவாமை
“மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை” முதுமொழிக்காஞ்சி முதல் அதிகாரம் “சிறந்த பத்து” 3-ஆவது பாடல்.
பொருள்: நூல்களை மேலும் மேலும் கற்றுப் பேரறிவுடையவன் ஆவதை விட தான் முன்பு கற்றவற்றை மறவாதிருத்தல் சிறந்ததாகும்.
14. இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:
(அ) வழிக்கரை – 1. வினைத்தொகை
(ஆ) கரகமலம் – 2. உரிச்சொற்றொடர்
(இ) பொங்குகடல் – 3. ஆறாம் வேற்றுமைத் தொகை
(ஈ) உறுவேனில் – 4. உருவகம்
குறியீடுகள்:
அ ஆ இ ஈ
(அ) 3 2 4 1
(ஆ) 3 1 2 4
(இ) 3 4 1 2
(ஈ) 2 3 4 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 3 4 1 2
15. “நான்மணிமாலை” என்ற சொற்றொடர் குறிப்பது
(அ) முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்
(ஆ) முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
(இ) முத்து, மரகதம், கெம்பு, மாணிக்கம்
(ஈ) முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
நான்மணிமாலையை இயற்றியவர் குமரகுருபரர். இவரது காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டாகும். முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்ற நான்கு வகை மணிகளால் ஆன மாலையைப் போன்று வெண்பா. கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா ஆகிய நான்கு வகைப்பாக்களால் திருவாரூர் தியாகராசப் பெருமானைப் புகழ்ந்து இயற்றியுள்ளார். இவரது பிறநூல்கள்: நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்.
16. சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது:
(அ) நுபுவத்துக் காண்டம்
(ஆ) விலாதத்துக் காண்டம்
(இ) ஹிஜ்ரத்துக் காண்டம்
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) நுபுவத்துக் காண்டம்
சீறாப்புரணம்-நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு இந்நூல் மூன்று காண்டங்களை உடையது. விலாதத்துக் காண்டம்-பெருமானாரின் பிறப்பு, இளமை நிகழ்வுகள் மற்றும் திருமணம் ஆகியவை இந்தக் காண்டத்தில் உரைக்கப்படுகின்றன. நுபுவத்துக் காண்டம்-வானவர் ஜிப்ராயில் மூலம் திருமறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன் பின் மெக்காவில் நடந்தவையும் நுபுவத்து காண்டத்தில் உரைக்கப்படுகின்றன. தீர்க்கதரிசனம் இந்தக் காண்டத்தைச் சேர்ந்தது. ஹிஜ்ரத்துக் காண்டம்-மெக்காவை விட்டு பெருமானார் மதீனா சென்றதும் அங்கு நிகழ்ந்த போர்களும் பிறவும் இக்காண்டத்தில் உரைக்கப்படுகின்றன.
17. “வள்ளைக்கு உறங்கும் வளநாட” வள்ளை-என்பதன் பொருள் யாது?
(அ) நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
(ஆ) நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
(இ) கும்பியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
(ஈ) இவை எதுவும் இல்லை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
திருவள்ளுவமாலை-53-வது பாடல்
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்-மனையளகு
வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி – கபிலர்
பொருள்: உலக்கைப் பாட்டின் இன்னிசையைக் கேட்டுக் கண்ணுறங்கும் வீட்டுக் கோழிகளை உடை வளநாட்டு மன்னனே! சிறுபுல்லின் முனையில் உள்ள தினையளவான சிறுபனித் துளியாயினும் நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தினை தன்னுள் தெளிவாகக் காட்டும்.(உவமை). அதுபோல, வள்ளுவரின் குறள் வெண்பாக்கள் தன்னுள்ளே அடங்கியுள்ள அரிய பொருள்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. (உவமேயம்).
18. “மானுடப்பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” என்ற உயிரியியல் தொழில் நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்.
(அ) தேவாரம்
(ஆ) திருவாசகம்
(இ) திருக்கோவையார்
(ஈ) திருப்பள்ளியெழுச்சி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருவாசகம்
திருவாசகத்தில் அமைந்துள்ள மேற்கண்ட பாடலடிகள் கரு வளர்ச்சி பற்றிக் கூறுகிறது.
19. எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
(அ) மீரா
(ஆ) இன்குலாப்
(இ) தருமு.சிவராமு
(ஈ) ந.பிச்சமூர்த்தி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தருமு.சிவராமு
தருமு.சிவராமுவின் கவிதைகள்: விடிவு, எரிகல், கல்வீச்சு, மின்னல் இவருடைய கவிதைகள் “எழுத்து” என்ற இதழில் வெளிவந்துள்ளன.
20. மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் “ஈஸ்வர லீலை” என்னும் கதை நூலின் ஆசிரியர்
(அ) லா.ச.ராமாமிருதம்
(ஆ) சி.சு.செல்லப்பா
(இ) ந.பிச்சமூர்த்தி
(ஈ) தி.ஜானகிராமன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) ந.பிச்சமூர்த்தி