General TamilTnpsc

General Tamil Model Question Paper 5

91. பொருத்தமான பழமொழியைக் கண்டறி:

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

(அ) ஞாயிறைக் கைமறைப்பார் இல்

(ஆ) முள்ளினால் முள்களையும் ஆறு

(இ) பாம்பு அறியும் பாம்பின் கால்

(ஈ) ஆற்று உணா வேண்டுவது இல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாம்பு அறியும் பாம்பின் கால்

92. “செழுங்கனித் தீஞ்சுவை” என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?

(அ) செழுமை + கனி + தீஞ்சுவை

(ஆ) செழும் + கனி + தீஞ்சுவை

(இ) செழும் + கனி + தீம் + சுவை

(ஈ) செழுமை + கனி + தீம் + சுவை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) செழுமை + கனி + தீம் + சுவை

செழுமை + கனி + தீம் + சுவை. செழுமை + கனி – பண்புப்பெயர் புணர்ச்சி. “ஈறுபோதல்” விதிப்படி மை விகுதி கெட்டு செழு + கனி என்றானது. “இனம் மிகல்” விதிப்படி வருமொழியின் முதலெழுத்திற்கு இனமான ‘ங்’ தோன்றி “செழுங்கனி” என்றானது. தீம் + சுவை – மெய்யீற்றுப் புணர்ச்சி. “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி வருமொழி முதலில் வந்த வல்லினத்திற்கு (சு) இனமான ஞகரமாகத் திரிந்து “தீஞ்சுவை” என்றானது.

93. “முடுகினன்” என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?

(அ) செலுத்தினான்

(ஆ) நிறுத்தினான்

(இ) வளைத்தான்

(ஈ) முரித்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நிறுத்தினான்

முடுகினான் என்பதற்கு “செலுத்தினான்” என்பது பொருளாகும். எனவே “நிறுத்தினான்” என்பது எதிர்ச்சொல்லாகும்.

94. “வையக மெல்லா மெமதென் றெழுதுமே” என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்?

(அ) சேரன்

(ஆ) பல்லவன்

(இ) சோழன்

(ஈ) பாண்டியன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பாண்டியன்

“முத்தொள்ளாயிரம்” என்ற நூல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி புகழ்ந்து பாடுவதாகும்.

பாண்டிய மன்னனின் சிறப்பு: “நெருங்கி அமைந்த இலை போன்ற வடிவிலான வேலையுடைய பாண்டிய மன்னனின் யானையானது பகை மன்னரின் அகன்ற மார்பினை ஓலையாகக் கொண்டு தன் கூரிய தந்தத்தினை எழுத்தாணியாக்கி, “செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பாண்டியருக்கே உரியது” என எழுதியது”

95. சரியானவற்றைக் காண்க:

1. நீ + ஐ – நின்னை.

2. நீ + அது – நினது

3. நீ + ஆல் – நீயால்

4. நீ + கு – நீக்கு

(அ) 2, 3-சரி

(ஆ) 1, 2-சரி

(இ) 3,4-சரி

(ஈ) நான்கும் சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) 1, 2-சரி

நீ + ஐ – நின்னை, உன்னை. நீ +அது – நினது, உனது. நீ+ஆல் – நின்னால், உன்னால். நீ+கு – நினக்கு, உனக்கு

96. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்து எழுதுக:

“கொக்கொக்க கூம்பும் பருவத்து”

(அ) காத்திருத்தல்

(ஆ) வெறுத்திருத்தல்

(இ) அறியாதிருத்தல்

(ஈ) மறந்திருத்தல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) காத்திருத்தல்

97. சினைப் பெயரைத் தேர்ந்து எழுதுக:

(அ) ஊரன்

(ஆ) மூக்கன்

(இ) வறியன்

(ஈ) கடையன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மூக்கன்

98. மனக்குகை – இலக்கணக் குறிப்பு எழுதுக:

(அ) வினைத்தொகை

(ஆ) உவமைத்தொகை

(இ) உருவகம்

(ஈ) உம்மைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உருவகம்

உருவகம்: உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடின்றி உவமையினையே பொருளாகக் கூறுவது உருவகம் ஆகும். (எ.கா) இன்ப வெள்ளம், அடிமலர், மனக்குகை

99. சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற் பரிவகற்று “உறுவேனில்” – இலக்கணம் தேர்ந்து எழுதுக:

(அ) வினைத்தொகை

(ஆ) அன்மொழித்தொகை

(இ) தொழில் பெயர்

ஈ) உரிச்சொல் தொடர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

ஈ) உரிச்சொல் தொடர்

சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா போன்றவை உரிச்சொற்களாகும். உறுவேனிற் – உரிச்சொல் தொடர்

100. கீழ்க்காணும் தொடர்களில் எத்தொடர் சரியானது?

(அ) சன்மார்க்க கவி இராமலிங்க அடிகளார்

(ஆ) சிலம்புச் செல்வர் இளங்கோவடிகள்

(இ) இசைக்குயில் சரோஜினி நாயுடு

(ஈ) கவிக்கோ முடியரசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இசைக்குயில் சரோஜினி நாயுடு

புதுநெறி கண்ட புலவர், வள்ளலார்-இராமலிங்க அடிகளார். சிலம்புச் செல்வர்-ம.பொ.சிவஞானம். இசைக்குயில்-சரோஜினி நாயுடு. கவிக்கோ-அப்துல் ரகுமான்.

Previous page 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!