General Tamil

General Tamil Model Question Paper 32

General Tamil Model Question Paper 32

General Tamil Model Question Paper 32: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகிறது.

A) பெயரெச்சம்

B) வினையெச்சம்

C) முற்றெச்சம்

D) ஒருபொருட் பன்மொழி

விடை: D) ஒருபொருட் பன்மொழி

விளக்கம்:

ஒருபொருட் பன்மொழி

ஒரே பொருளைத் தரும் வெவ்வெறான சொற்கள் தொடர்ந்து வருவது ஒருபொருட் பன்மொழி

ஆகும்.

(எ.கா.): ஒருதனி, ஓங்கி உயர்ந்த, நடுமையம், மீமிசை, குழிந்தாழ்ந்து.

2. தைத்திங்கள் என்பது _________ பெயரைக் குறிக்கும்.

A) இடப்பெயர்

B) மாதப்பெயர்

C) காலப்பெயர்

D) பொருட்பெயர்

விடை : C) காலப்பெயர்

விளக்கம் : காலத்தைக் குறிக்கும் பெயர்கள் காலப்பெயர்கள் ஆகும். காலப்பெயர்கள் இரண்டு வகைப்படும்.

காலப் பொதுப் பெயர்கள்:

ஆண்டு, மாதம், விநாடி, நாழிகை, கிழமை, நாள் போன்றவை.

சிறப்புக் காலப் பெயர்கள்:

தை, மாசி, போன்ற மாதங்களின் பெயர்கள்.

திங்கள், செவ்வாய் போன்ற கிழமைப் பெயர்கள்.

இளவேனில், முதுவேனில் போன்ற பருவக்காலப் பெயர்கள்.

காலை, மதியம், மாலை, இரவு போன்ற ஒரு நாளின் பிரிவுப் பெயர்கள்.

3. சொற்களை ஒழுங்குபடுத்துக.

“ ஆற்றல் நிரம்பிய சொற்கள் கவிதை தாமாகப் பொங்கி வழிவதுதான்”

A) தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை ஆற்றல் நிரம்பிய சொற்கள்

B) ஆற்றல் நிரம்பிய கவிதை சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான்

C) ஆற்றல் கவிதை நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான்

D) ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை

விடை : D) ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை.

4. சொற்களை ஒழுங்குபடுத்துக.

வியனகர் குறைபடாக் கொளக் கூழுடை கொளக்

A) கொளக் கொளக் கூழுடை வியனகர் குறைபடாக்

B) கூழுடை வியனகர் குறைபடாக் கொளக்கொளக்

C) கொளக் கூழுடைய வியனகர் கொளக் குறைபடக்

D) கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்

விடை : D) கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்

5. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்துக.

சுற்றம் சீர்தூக்கு சிந்தனை சாட்டை சங்கு

A) சீர்தூக்கு, சங்கு , சிந்தனை, சாட்டை, சுற்றம்

B) சிந்தனை சீர் தூக்கு சங்கு சுற்றம் சாட்டை

C) சாட்டை சுற்றம் சீர் தூக்கு சிந்தனை சங்கு

D) சங்கு சாட்டை சிந்தனை சீர் தூக்கு சுற்றம்

விடை : D) சங்கு சாட்டை சிந்தனை சீர் தூக்கு சுற்றம்

6. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக.

நாட்டுக்குத் தேவை

A) அரன்

B) அறன்

C) அறன்

D) அரண்

விடை : D) அரண்

விளக்கம் :

சொல் பொருள்

அரண் – பாதுகாப்பு, மதில்

அரன் – சிவன்

7. வாலை, வாழை, வாளை ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.

A) மீன்வகை, மரவகை, இளம்பெண்

B) இளம்பெண், மரவகை, மீன்வகை

C) இளம்பெண், மீன்வகை, மரவகை

D) மரவகை, மீன்வகை, இளம்பெண்

விடை : B) இளம்பெண், மரவகை, மீன்வகை

விளக்கம் :

சொல் பொருள்
வாலை இளம்பெண், திராவகம், வடிக்கும் பாத்திரம்
வாழை மரவகை
வாளை மீன்வகை

8. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்வு செய்க?

“இன்கம்டேக்ஸ் ஆஃபீஸ்” “Income tax office”

A) வருமானத் துறை அலுவலகம்

B) வருமான வரி அலுவலகம்

C) வருமான அலுவலகம்

D) வருவாய் அலுவலகம்

விடை : B) வருமான வரி அலுவலகம்

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

9. வழூஉச் சொல்லற்ற தொடர் எது?

I. வலது பக்கம் சுவரில் எழுதாதே

II. வலப் பக்கச் சுவரில் எழுதாதே

III. வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே

IV. வலப் பக்கச் சுவறில் எழுதாதே

சரியான விடையளி :

A) IV

B) I

C) II

D) III

விடை : C) . II

10. அணிந்து – எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

A) தொலைவில்

B) உய்த்து

C) கொடுத்து

D) அளத்தல்

விடை : A) தொலைவில்

விளக்கம் :

‘ அணித்து ‘ என்றால் ‘அருகில்’ என்பது பொருளாகும். எனவே அதன் எதிர்ச்சொல் ‘தொலைவில் ‘ என்பதாகும்.

11. சேர்த்து எழுதுக. பனை + ஓலை =

A) பனையோலை

B) பனைஓலை

C) பனைவோலை

D) பனைவ்வோலை

விடை : A) பனையோலை

விளக்கம் :

பனையோலை – பனை + ஓலை.

இது உடம்படுமெய் புணர்ச்சியாகும்.

பனை (ன் + ஐ) + ஓலை

நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் உயிரெழுத்துகளாக இருந்தால், அவ்விரு சொற்களையும் உடம்படுத்தும் பொருட்டு யகரம் (அ) வகரம் உடம்படுமெய்களாக வரும்..

‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்பதிற்கிணங்க பனை+ய்+ஓலை என்றானது.

“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி புணர்ந்து ‘பனையோலை’ என்றானது.

12. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று.

இதில் அன்பகத்து இல்லா என்பதனை எவ்வாறு பிரிக்கலாம் ?

A) அன்பு + பகத்து + இல்லா

B) அன்பு + அகத்து + இலா

C) அன்பு + பகம் + இல்லா

D) அன்பு + அகத்து + இல்லா

விடை : D) அன்பு + அகத்து + இல்லா

விளக்கம் :

அன்பகத்து இல்லா – அன்பு + அகத்து + இல்லா

இது குற்றியலுகரப் புணர்ச்சி ஆகும்.

அன்பு + அகத்து

” உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி அன்ப் + அகத்து என்றானது.

“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி அன்பகத்து என்றானது.

13. இயைபுத் தொடையில் அமைந்த சொற்களை அறிக.

” நீல முடி தரித்த பல மலைசேர் நாடு

நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு”

A) நீலமுடி – நீரமுத

B) நீலமுடி – மலைசேர்

C) நிரம்பு – நாடு

D) நாடு – நாடு

விடை : D) நாடு – நாடு

விளக்கம் :

ஒரு செய்யுளில் உள்ள அடிகளில் இறுதிச் சீர் ஒன்றி வருவது இயைபுத் தொடை ஆகும். முதலடி மற்றும் இரண்டாம் அடிகளில் இறுதிச் சீராக ‘நாடு’ என்ற சொல் அமைந்துள்ளால் இஃது இயைபுத் தொடையாகும்.

14. ‘தாயொப்பப் பேசும் மகள்’ என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக ?

A) தந்தையைப் போன்று பேசுதல்

B) தங்கையைப் போன்று பேசுதல்

C) தாயைப் போன்று பேசுதல்

D) தம்பியைப் போன்று பேசுதல்

விடை : C) தாயைப் போன்று பேசுதல்

15. குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். செய்வினயை செயப்பாட்டு வினையாக மாற்றுக.

A) குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கினார்.

B) உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவர் தொடங்கினார்.

C) குடியரசுத் தலைவர் தொடங்கினார் உலகத் தமிழ் மாநாட்டை.

D) உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றது.

விடை : D) உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றது.

16. நாலடியார் – எனும் நூலைப் பாடியவர் யார்?

A) சமண முனிவர்கள்

B) வைணவர்கள்

C) நாயன்மார்கள்

D) பௌத்தத் துறவிகள்

விடை : A) சமண முனிவர்கள்

விளக்கம் :

‘ நாலடியார் பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். சமண முனிவர்கள் நானூறு பேர் பாடிய நானூறு வெண்பாக்களால் ஆனது இந்நூல். இந்நூலை பால், இயல் மற்றும் அதிகாரமாக வகுத்தவர் பதுமனார் ஆவார். இவரே இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். இந்நூலின் வேறு பெயர்கள் ‘நாலடி நானூறு ‘, “வேளாண் வேதம்” ஆகும்.

17. மணிமேகலையின் தோழி

A) தீவதிலகை

B) சுதமதி

C) மாதரி

D) வீணாபதி

விடை : B) சுதமதி

விளக்கம் :

சுதமதி – மணிமேகலையின் தோழி

தீவதிலகை – மணிமேகலை அமுதசுரபியைப் பெருவதற்குக் காரணமாக இருந்தவள்.

மாதரி – கோவலன், கண்ணகிக்கு மதுரையில் அடைக்கலம் கொடுத்த பெண்மனி.

வீணாபதி – சீவகசிந்தாமனியில், சீவகன் மணந்த எட்டுப் பெண்களுள் ஒருவரான காந்தருவதத்தையின் தோழி ஆவார்.

18. ‘பட்டிமண்டபம் ‘ என்பது சமயக்கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல்

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) நீலகேசி

D) குண்டலகேசி

விடை : B) மணிமேகலை

விளக்கம் :

மணிமேகலை – விழாவறைகாதை

தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும்

புண்ணிய நல்லுரை அறிந்தோர் பொருந்துமின்

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் – சீத்தலைச் சாத்தனார்

பொருள் : குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் மரங்கள் தாழ்ந்து நிழல் தரும் ஊர் மன்றங்களிலும் நல்லன பற்றிச் சொற்பொழிவாற்றுங்கள். அவரவர் சமயத்திற்கு உரிய உட்பொருள் அறிந்து வாதிடுவோர் பட்டிமண்டப முறைகளைத் தெறிந்து வாதிட்டு தீர்வு காணுங்கள்.

19. புறநானூற்றில் உள்ள புறத்திணைகளின் எண்ணிக்கை எத்தனை ?

A) ஐந்து

B) பதினொன்று

C) பத்து

D) ஏழு

விடை : B) பதினொன்று

விளக்கம் :

புறநானூற்றில் 11 புறந்திணைகளும் 65 துறைகளும் உள்ளன. இவற்றில் உழிஞைத் திணைப் பாடல்கள் இல்லை.

20. கீழ்க்கண்ட பாடல் வரிகள் கலித்தொகையில் எப்பிரிவில் இடம் பெற்றுள்ளன ?

எழுந்தது துகள்

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு

கலங்கினர் பலர்

A) குறவஞ்சிக் கலி

B) முல்லைக் கலி

C) மருதக் கலி

D) நெய்தல் கலி

விடை : B) முல்லைக் கலி

விளக்கம் :

கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இந்நூளில் 5 பிரிவுகள் உள்ளன. அவை குறிஞ்சிக் கலி, முல்லைக் கலி, மருதக் கலி, பாலைக் கலி ஆகியனவாகும். முல்லைக் கலியில் ஏறுதழுவுதல் குறித்து.

“எழுந்து துகள்

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு

கலங்கினர் பலர்” என்று கூறப்பட்டுள்ளது.

பொருள் : எங்கணும் புழுதித் துகள் எழுந்தது, ஆயர் மார்புகளைக் காட்டி நின்றனர்; ஏறுகளின் கொம்புகளின் குத்துவதற்குக் கீழே தாழ்ந்தன. தழுவினார் பலரும் கலங்கிப் போயினர். முல்லைக்கலியை இயற்றியவர் சோழன் நல்லுருத்திரன் ஆவார்.

21. “ஈயென இரத்தல் இழிந்தன்று ; அதன் எதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று”

கூற்று 1 : இப்பாடலடிகளைப் பாடியவர் கழைதின் யானையார்

கூற்று 2 : இப்பாடலில் புகழப்படும் வள்ளல் பாரி

A) கூற்று இரண்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்று 1 மட்டும் சரி

D) கூற்று இரண்டும் தவறு

விடை : C) கூற்று 1 மட்டும் சரி

விளக்கம் :

புறநானூறு – 204-ஆவது பாடல்

‘ஈயென’ இரத்தல் இழிந்தன்று ; அதனெதிர்

‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று ;

‘கொள்’ னெக் கொடுத்தல் உயர்ந்தன்று ; அதனெதிர்

‘கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று ;

தெணநீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங்கடல்

உண்ணார் ஆகுப , நீ வேட்டோரே ;

ஆவும் மாவும் சென்று உண , கலங்கி ,

சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும் ,

உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும் ;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை ,

உள்ளிச் சென்றோர்ப் பழியலர், அதனால்

புலவேன் வாழியர், ஓரி ! விசும்பில்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே. – வல்லில் ஒரியை கழைதின் யானையார் பாடியது .

22. ‘தமிழை வளர்க்க வேண்டும் என்றால் பிறமொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளன்று ‘ என்று கூறியவர்

A) மு.வ

B) திரு.வி.க

C) பாரதிதாசன்

D) கவிஞர் சுரதா

விடை : B) திரு.வி.க

23. “சமரச சன்மார்க்க சங்கத்தை” – தோற்றுவித்தவர்

A) சுத்தானந்த பாரதியார்

B) ராமகிருஷ்ண பரமஹம்சர்

C) மறைமலையடிகளார்

D) இராமலிங்க அடிகளார்

விடை : D) இராமலிங்க அடிகளார்

விளக்கம் : இராமலிங்க அடிகளார் , ‘ இறைவன் ஒருவனே ; அவன் ஒளி வடிவினன் ‘ என்பதையும் அருட்பெருஞ்சோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்குத் தனிப்பெருங்கருணையே கருவி என்பதையும் உலகோர்க்கு உணர்த்த சமரச சன்மார்க்க சங்கத்தை வடலூரில் நிறுவினார்.

24. பொருத்துக .

சுவை பயன்

a) இனிப்பு 1 . இனிமை

b) துவர்ப்பு 2 . வளம்

c) புளிப்பு 3 . உணர்வு

d) கார்ப்பு 4 . ஆற்றல்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 1 4 3 2

B) 2 4 1 3

C) 3 2 1 4

D) 4 3 2 1

விடை : B) 2 4 1 3

விளக்கம் :

அறுசுவையின் பயன்கள்

இனிப்பு – வளம்

துவர்ப்பு – ஆற்றல்

புளிப்பு – இனிமை

கார்ப்பு – உணர்வு

கைப்பு (கசப்பு) – மென்மை

25. தமிழினத்தைச் சேர்ந்தோர் குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகள்

A) கனடா , மலேசியா

B) பிரிட்டன் , ரஷ்யா

C) தென் ஆப்பிரிக்கா , சிங்கப்பூர்

D) சிங்கப்பூர் , மொரிசியசு

விடை : D) சிங்கப்பூர் , மொரிசியசு

விளக்கம் :

இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் முதலிய நாடுகளில் உள்ளாட்சி மன்ற உறுப்பினராகவும் , நாடாளுமன்ற உறுப்பினராகவும் , அமைச்சராகவும் தமிழர்கள் உள்ளனர். சிங்கப்பூர் , மொரிசியசு ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

26. “தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது” பெற்ற பெருமைக்குரியவர் யார்?

A) கவிக்கோ அப்துல் ரகுமான்

B) வாணிதாசன்

C) கண்ணதாசன்

D) வண்ணதாசன்

விடை : A) கவிக்கோ அப்துல் ரகுமான்

விளக்கம் :

கவிக்கோ அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள் :

ஆலாபனை படைப்பிற்காக சாகித்ய அகாதெமி விருது

தமிழக அரசின் பாரதியார் விருது

தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ‘ தமிழன்னை விருது’

கவியரசர் பாரி விழா விருது

தமிழக அரசின் கலைமாமணி விருது

சிற்பி அறக்கட்டளை விருது

ராணா இலக்கிய விருது

கொழும்பு கம்பன் கழகம் வழங்கிய ‘ கம்பன் காவலர் விருது’

உமறுப்புலவர் விருது

27. ஆர்க்காடு என்பது எந்த மரங்கள் சூழ்ந்த பகுதி

A) ஆல மரங்கள்

B) மா மரங்கள்

C) அத்தி மரங்கள்

D) ஆர்க் மரங்கள்

விடை : C) அத்தி மரங்கள்

விளக்கம் : முல்லை நில ஊர்கள் :

அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் ஆர்க்காடு

ஆல மரங்கள் சூழ்ந்த ஊர் ஆலங்காடு

களாச் செடிகள் நிறைந்த பகுதி களாக்காடு

மா மரங்கள் செழித்திருந்த பகுதி மாங்காடு

பனைமரங்கள் நிறைந்த பகுதி பனையபுரம்

28. அண்ணல் அம்பேத்கரை “பகுத்தறிவு செம்மல், மக்களின் மாபெரும் வழிகாட்டி” எனப் புகழாரம் சூட்டியவர்

A) ஜவஹர்லால் நேரு

B) தந்தை பெரியார்

C) இராஜேந்திரபிரசாத்

D) மூதறிஞர் இராஜாஜி

விடை : B) தந்தை பெரியார்

விளக்கம் : அண்ணல் அம்பேத்கர் குறித்துத் தலைவர்களின் பாராட்டுகள் :

ஈ.வெ.ரா. பெரியார்

“டாக்டர் அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர் ; பகுத்தறிவுச் செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, இப்பெருந்தலைவரைப் போல் வேறு யாரையும் நாம் காணமுடியாது.”

ஜவஹர்லால் நேரு

” பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியாக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும்.”

இராஜேந்திரபிரசாத்

” அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்ற நிலையில் மிகவும் ஆர்வத்துடன் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் தன்னந்தனியே செயல்பட்டவர். தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்து செயல்பட்டவர் என்பதை நான் நன்கு அறிவேன்.”

29. காமராசர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?

A) 1934

B) 1939

C) 1937

D) 1942

விடை : C) 1937

விளக்கம் :

1937- சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1939-தமிழ்நாடு காங்கிர்ஸ் கட்சியின் தலைவரானார்.

1954-1963- தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

1962- காமராசர் திட்டத்தை (K-Plan) கொண்டு வந்தார்.

30. “அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை வகை யாது?

A) மேற்கதுவாய் மோனை

B) கீழ்க்கதுவாய் மோனை

C) கூழை மோனை

D) பொழிப்பு மோனை

விடை : A) மேற்கதுவாய் மோனை

விளக்கம் : அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவருவது மோனைத் தொடையாகும்.

முதல், மூன்று, நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவது மேற்கதுவாய் மோனையாகும்.

1 3 4

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

31. ஆறுமுக நாவலரை “வசன நடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியவர் யார்?

A) மறைமலை அடிகள்

B) திரு. வி. கா

C) பரிதிமாற் கலைஞர்

D) குணங்குடி மஸ்தான் சாகிபு

விடை : C) பரிதிமாற் கலைஞர்

விளக்கம் : தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு பெருந்தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை “வசன நடை கைவந்த வல்லாளர்” என்று பரிதிமாற் கலைஞர் பாராட்டியுள்ளார்.

32. ” தமிழ் மொழியை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் யார்?

A) தேவநேயப்பாவாணர்

B) பரிதிமாற் கலைஞர்

C) குணங்குடி மஸ்தான் சாகிபு

D) மகாகவி பாரதியார்

விடை : A) தேவநேயப்பாவாணர்

விளக்கம் : “உலக முதன்மை தமிழ். இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்” எனத் தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிறுவிய செம்மல் தேவநேயப் பாவாணர் ” தமிழ் மொழியை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறினார்.

33. நடுவண் அரசு, உ..வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு எது?

A) 2006

B) 2007

C) 2008

D) 2010

விடை : A) 2006

34. சிற்பக்கலை குறித்து தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்ட நூலைக் கண்டறிக.

A) சிற்ப மறை

B) சிற்பக்கலை

C) செந்நூல் சிற்பம்

D) சிற்பச் செந்நூல்

விடை : D) சிற்பச் செந்நூல்

35. நாயக்கர் காலத்தில் சிறந்து விளங்கிய சிற்பக்கலை எது?

A) கற்சிற்பம்

B) செப்புத் திருமேனி

C) மரச் சிற்பம்

D) தந்தச் சிற்பக் கலை

விடை : D) தந்தச் சிற்பக் கலை

விளக்கம் :

கற்சிற்பம் – பல்லவர்கள் காலம்

செப்புத் திருமேனி – சோழர்கள் காலம்

மரச் சிற்பம் – பாண்டியர்கள் காலம்

தந்தச் சிற்பக் கலை – நாயக்கர்கள் காலம்

36. சுவீடன் நாட்டின் ‘பேர் லாகர்க்விஸ்ட்’ என்னும் சிறுகதைகளை தமிழிழ் மொழிபெயர்த்தவர்

A) ஜி.யூ.போப்

B) ஜி. குப்புசாமி

C) லெட்சுமி

D) ப. ஜெயப்பிரகாசு

விடை : B) ஜி. குப்புசாமி

37. இராம நாடகத்தை இயற்றியவர் யார்?

A) விசுவநாத சாஸ்திரியார்

B) அருணாச்சலக்கவிராயர்

C) இராமச்சந்திர கவிராயர்

D) மாரிமுத்துப் பிள்ளை

விடை : B) அருணாச்சலக்கவிராயர்

விளக்கம் :

அருணாச்சலக் கவிராயர்

18-ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் வாழ்ந்தவர். கர்நாடக இசையில் பல பாடல்களை இயற்றியுள்ளார். கர்நாடக இசையில் ஆதி மும்மூர்த்திகளுள் ஒருவர். ஏனைய இருவர் மாரிமுத்துப் பிள்ளை, முத்துத் தாண்டவர் ஆகியோர் ஆவார். – இவருடைய படைப்புகளுள் ‘ இராம நாடகக் கீர்த்தனை’ இவருக்கு அழியாப் புகழைத் தேடித் தந்தது.

38. ‘மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் :

புதுக் கவிதையில் மலர் பார்த்தவர்’ என்று பாராட்டப்படுபவர் யார்?

A) அப்துல் ரகுமான்

B) ந. பிச்சமூர்த்தி

C) தமிழ் ஒளி

D) சுத்தானந்த பாரதியார்

விடை : A) அப்துல் ரகுமான்

விளக்கம் : கவிக்கோ அப்துல் ரகுமான்

இவருடைய கவிதைகளில் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர். புதுக் கவிதையில் மலர் பார்த்தவர்” என்றும் “வானத்தை வென்ற கவிஞன்” “தமிழ்நாட்டு இக்பால்” என்றும் புகழப்படுகிறார்.

39. “உச்சி மலையிலே ஊறும் அருவிகள்”

ஒரே வழியில் கலக்குது

ஒற்றுமை யில்லா மனிதகுலம்

உயர்வு தாழ்வு வளர்க்குது” – என்று பாடியவர்

A) கண்ணதாசன்

B) அ. மருதகாசி

C) உடுமலை நாராயண கவி

D) பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்

விடை : D) பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்

40. “இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை………”

என்று உவமை மரபில் புதுமைகளைச் சேர்த்தவர் யார்?

A) சுப்புரத்தினதாசன்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) கண்ணதாசன்

விடை : A) சுப்புரத்தினதாசன்

41. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் ‘செவாலியார்’ விருதினைப் பெற்றவர்

A) பாரதிதாசன்

B) வாணிதாசன்

C) முடியரசன்

D) சுரதா

விடை : B) வாணிதாசன்

42. சுந்தரர் எவ்வரசரால் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்?

A) நரசிங்கமுனையரையர்

B) நரசிம்மவர்மன்

C) நந்திவர்மன்

D) நரசிங்கநாதர்

விடை : A) நரசிங்கமுனையரையர்

விளக்கம் :

சுந்தரரின் பெற்றோர் சடையனார் – இசைஞானியார் ஆவர். திருமுனைப்பாடி அரசர் நரசிங்க முனையார் இவரைத் தத்துப்பிள்ளையாக தமது அரண்மனையில் வளர்த்து வந்தார்.

43. யார் பாடிய சித்தர் பாடல்கள் “ஞானப்பாமாலை” என்று வழங்கப்படுகிறது?

A) பாம்பாட்டிச் சித்தர்

B) அகத்தியர்

C) சிவவாக்கியர்

D) கடுவெளிச் சித்தர்

விடை : B) அகத்தியர்

விளக்கம் :

சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஆவார். இவர் சித்த மருத்துவ முறையை வகுத்தவர். இவர் பாடிய பாடல்கள் ‘ஞானப் பாமாலை’ என்று அழைக்கப்படுகிறது.

44. நந்த வனத்திலோர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானோரு தோண்டி

என்ற பாடல் வரிகளைப் படியவர் – யார் ?

A) பத்ரகிரியார்

B) அகத்திய ஞானம்

C) கடுவெளிச் சித்தர்

D) சிவவாக்கியார்

விடை : C) கடுவெளிச் சித்தர்

விளக்கம் :

நந்த வனத்திலோர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானோரு தோண்டி – அதைத்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி – கடுவெளிச் சித்தர்

45. ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது

A) தற்குறிபேற்றணி

B) உவமையணி

C) உருவக அணி

D) இரட்டுறமொழிதல் அணி

விடை : D) இரட்டுறமொழிதல் அணி

விளக்கம் :

இரட்டுறமொழிதல் அணி

ஒரு சொல் அல்லது சொற்றொடரை இருபொருள் தருமாறு பாடுவது இரட்டுறமொழிதல் அணி (அ) சிலேடை அணி எனப்படும். (எ.கா.)

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்

அனைகிடந்ததே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு – சந்தக் கவிமணி தமிழழகனார்

மேற்கண்ட பாடல் தமிழையும் கடலையும் ஒப்புமைப்படுத்திப் பாடப்பட்டுள்ளது.

பொருள்:

பாடல்கள் தமிழ் கடல்
முத்தமிழ் இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது. முத்தயும் அமிழ்தத்தையும்

தருகிறது.

முச்சங்கம் முதல், இசை, நாடகம் என் முதமிழாய் கடை வளர்க்கப்பட்டது. வெண்சங்கு, சஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளை தருகிறது.
மெத்த வணிகமும் ஐம்பெருங்காப்பியங்களை அணிகளாகப் பெற்றது. மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி உள்ளது.
சங்கத்தவர் காக்க சங்கப்பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது தன் அலைகளால் தடுத்து நிறுத்தி சங்கினைக் காக்கிறது.

46. எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது ……………. என்று பேரறிஞர் அண்ணா கூறுகிறார்.

A) கலிங்கத்துப்பரணி

B) திருக்குறள்

C) கம்பராமாயணம்

D) குறுந்தொகை

விடை : A) கலிங்கத்துப்பரணி

47. ‘அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகி’…………. தொடரில் அரி என்பதன் பொருள் யாது?

A) மனித வடிவம்

B) சிங்கம்

C) நரசிங்கம்

D) தேவர்கள்

விடை : B) சிங்கம்

விளக்கம் :

அழகர் கிள்ளைவிடு தூது

‘அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப்

பெரியதொரு தூணிற் பிறந்து – பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை

பொருள் : முற்பகுதி சிங்க உருவத்துடனும் பிற்பகுதி மனித உருவத்துடனும் ஒரு பெரிய தூணில் தோன்றியவர் ஆவார்.

48. “நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை” இவ்வடிகள் இடம் பெறும் நூல்

A) தேவாரம்

B) கம்ப இராமாயணம்

C) பெரிய புராணம்

D) சீறாப்புராணம்

விடை : D) சீறாப்புராணம்

விளக்கம் :

சீறாப்புராணம்

விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலம்

இன்று தொட்டிவண் நெறியினில் உயிர்செகத் திடுவ

நன்று வேறொடு காட்டினிற் புகுகவென் றறைந்த

மன்றல் உன்றிய முகம்மதின் மலரடி வணங்கி

நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை – உமறுப்புலவர்

பொருளுரை : முகமது நபி புலியை நோக்கி “நீ இன்று முதல் உயிர்வதை செய்வதனை விடுத்து, இவ்விடத்திலிருந்து அகன்ற வேறொரு காட்டிற்குப் புகுவாயாக” என்று அருளினார். அப்புலியானது, முகம்மது நபியின் மணம் பொருந்திய தாமரைப் பூப்போன்ற அடிகளை வணங்கி ‘நல்லது நல்லது’ என்று சொல்லிப் புகழ்ந்தவாரே அவ்விடத்தை விட்டு நடந்து சென்றது.

49. பெரியபுராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?

A) சென்னை

B) கடலூர்

C) விழுப்புரம்

D) காஞ்சிபுரம்

விடை : D) காஞ்சிபுரம்

விளக்கம் :

பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் பிறந்தார். இவரது காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு ஆகும்.

50. ஒன்றுகொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?

A) சுந்தரர்

B) திருஞான சம்பந்தர்

C) திருநாவுக்கரசர்

D) மாணிக்கவாசகர்

விடை : C) திருநாவுக்கரசர்

விளக்கம் :

அப்பூதியடிகளின் மகன் அரவம் தீண்டி இறந்துவிட்டான். இதனையறிந்த திருநாவுக்கரசர் ‘ ஒன்று கொலாம்’ என்ற திருப்பதிகத்தைப் பாடி அவனை உயிர்ப்பித்தார். அதனால் ‘விடம் தீர்த்த பதிகம்’ என்று அப்பதிகம் அழைக்கப்படுகிறது.

“ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை

ஒன்றுகொலாம் உயரும் மதி சூடுவர்

ஒன்று கொலாம் இடு வெந்தலை கையது

ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே”

பொருள்:

சிவபிரானின் உள்ளம் , அவர் இருக்கும் கயிலை மலை போன்று உயர்வானது. அவரின் கருணயால் ஒப்பற்ற நிலைக்கு உயர்ந்த சந்திரனை தனது சென்னியில் சூடியவர். தனது கையில் வெண்தலையை ஒப்பற்ற பலி பாத்திரமாக ஏந்திள்ளவர். அவரது வாகனமாகிய இடபமும் ஒப்பற்றது.

50. ‘நேற்று மழை பெய்தது’ அதனால், ஏரிக் குளங்கள் நிரம்பின – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.

A) தொடர் வாக்கியம்

B) கலவை வாக்கியம்

C) கட்டளை வாக்கியம்

D) தனிநிலை வாக்கியம்

விடை : A) தொடர் வாக்கியம்

விளக்கம் :

தொடர் வாக்கியம்

ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்களில் அதனால், ஆகையால், ஏனெனில், ஏனென்றால் முதலான இணைப்புச் சொற்கள் அமைந்து, பல பயணிலைகளைக் கொண்டு முடிவது தொடர் வாக்கியம் ஆகும்.

52. நன்னூல் எவ்வகை நூல் ?

A) செய்தி வாக்கியம்

B) விழைவு வாக்கியம்

C) கட்டளை வாக்கியம்

D) வினா வாக்கியம்

விடை : D) வினா வாக்கியம்

53. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

பாரதிதாசன் புரட்சிக்கசிஞர் என அழைக்கப்படுகிறார்.

A) பாரதிதாசன் புரட்சிக்கசிஞர் என அழைக்கப்படுகிறாரா?

B) புரட்சிக்கசிஞர் என அழைக்கப்படுவர் யார்?

C) பாரதிதாசன் புரட்சிக்கவி என அழைக்கப்படுவதேன்?

D) பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

விடை : D) பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

54. பாடலில் வரும் திணையைக் கண்டுபுடி.

“வான் உட்கும் வடிநீண் மதில்,

மல்லல் மூதூர் வய வேந்தே!”

A) பாடாண்திணை

B) பொதுவியல்

C) வாகைத்திணை

D) தும்பைத் திணை

விடை : B) பொதுவியல்

விளக்கம் :

புறநானூறு – 18- ஆவது பாடல்

“வான் உட்கும் வடிநீண் மதில்,

மல்லல் மூதூர் வய வேந்தே!”

இப்பாடலின் ஆசிரியர் குடபுலவியனார்.பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.

திணை : பொதுவியல்

துறை : முதுமொழிக் காஞ்சி

திணை விளக்கம் : வெட்சி முதலாக பாடாண் ஈறாக அமையும் புறத்திணைகளில் கூறப்பெறாததையும் அவற்றிற்குப் பொதுவாகியனவுமான செய்திகளைக் கொண்டது பொதுவியல் திணையாகும்.

55. இலக்கணக்குறிப்பு அறிக : பசிகயிறு

A) உவமை

B) அன்மொழித்தொகை

C) உருவகம்

D) உம்மைத்தொகை

விடை : C) உருவகம்

விளக்கம் :

உவமைத்தொகையை முன்பின்னாக மாற்றுவது, உவமையைப் பொருள்மேல் ஏற்றி, இடையில் ‘ஆகிய’ என்ற சொல் மறைந்து வரும்படி அமைவது உருவகம் ஆகும். (எ.கா.):

உவமைத்தொகை உருவகம்
மலரடி அடிமலர்
கயற்கண் கண்கயல்
தேன்தமிழ் தமிழ்த்தேன்
மதிமுகம் முகமதி
கயிற்றுப்பசி பசிகயிறு
பவளவாய் வாய்ப்பவளம்

56. அகர வரிசையில் எழுதுக.

மொழிபெயர்ப்பு, முந்நீர், மேடுபள்ளம், மனத்துயர், மீமிசை

A) முந்நீர், மனத்துயர், , மீமிசை, மொழிபெயர்ப்பு, மேடுபள்ளம்

B) மேடுபள்ளம் , முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு, மனத்துயர்

C) மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மனத்துயர் , மேடுபள்ளம்.

D) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு

விடை : D) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு

57. ‘படுவிடம்’ – இதில் பயின்றுள்ள தொகைநிலைத் தொடர்

A) வினைத்தொகை

B) பண்புத்தொகை

C) உவமைத்தொகை

D) உம்மைத்தொகை

விடை : A) வினைத்தொகை

விளக்கம் :

வினைத்தொகை

சொற்றொடர்களில் காலம் மறைந்து நின்று பொருள் தருவது விணைத்தொகை ஆகும். இது மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருவதாகும்.

படுவிடம்

பட்ட விடம் – இறந்தகாலம்

படுகின்ற விடம் – நிகழ்காலம்

படும் விடம் – எதிர்காலம்

58. எச்சொல் வேர்ச்சொல் அல்ல?

A) அடி

B) இரு

C) அறி

D) இனிது

விடை : D) இனிது

விளக்கம் :

வேர்ச்சொல் வேர்ச்சொல்லில் இருந்து உருவாகும் சொற்கள்
அடி அடித்தான், அடித்தவன், அடித்து, அடித்த, அடித்தல்
இரு இருந்தான், இருந்தவன், இருந்து, இருந்த, இருத்தல்
அறி அறிந்தான், அறிந்தவன், அறிந்து, அறிந்த, அறிதல்

இனிது கூறினான், இனிது செய்தான் இத்தொடரில் அமைந்திருப்பது குறிப்பு வினையெச்சமாகும்.

59. வந்தான் – வேர்ச்சொல்லைத் தருக.

A) வார்

B) வா

C) வரு

D) வந்து

விடை : B) வா

விளக்கம் :

வா வேர்ச்சொல்

வந்தான் – வினைமுற்று

வந்தவன் – வினையாலணையும் பெயர்

வந்து – வினையெச்சம்

வந்த – பெயரச்சம்

வருதல் – தொழிற்பெயர்

60. “மா” ஓரெழுத்து ஒருமொழியின் பொருளை அறிக.

A) யானை

B) விலங்கு

C) மாடு

D) காடு

விடை : B) விலங்கு

விளக்கம் :

“மா” – விலங்கு, அழகு, மேன்மை, பெரிய, ஒருவகை மரம்

61. வழூஉச் சொல் இல்லாத தொடரை எழுதுக.

A) சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்ல

B) சென்னைக்கு பக்கத்தில் இருப்பது மதுரை அல்ல

C) சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்லை

D) சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அன்று

விடை : D) சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அன்று

விளக்கம் :

‘அல்ல’ என்பது அஃறிணைப் பன்மைச் சொற்களுக்கு உரியது.

‘அன்று’ என்பது அஃறிணை ஒருமைச் சொற்களுக்கு உரியது.

62. பொருந்தா இணையைத் தேர்வு செய்க.

A) திருத்தக்கதேவர் – வளையாபதி

B) இளங்கோவடிகள் – சிலப்பதிகாரம்

C) நாதகுத்தனார் – குண்டலகேசி

D) சீத்தலைச்சாத்தனார் – மணிமேகலை

விடை : A) திருத்தக்கதேவர் – வளையாபதி

விளக்கம் :

திருத்தக்கதேவர் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிறநூல் ‘நரிவிருத்தம் ‘ ஆகும்.

63. பொருந்தா சொல்லைத் தேர்வு செய்க.

A) உள்ளம்

B) அழகு

C) வீடு

D) இடம்

விடை : B) அழகு

64. அரும்புதல் – எதிர்ச்சொல் தருக.

A) மயங்குதல்

B) ஓடுதல்

C) மெலிதல்

D) விரிதல்

விடை : D) விரிதல்

65. இரட்டைக்காப்பியம் – என் வழங்கும் நூல்கள் யாவை ?

A) சிலப்பதிகாரம், மணிமேகலை

B) சீவகசிந்தாமணி, மணிமேகலை

C) குண்டலகேசி, நீலகேசி

D) குண்டலகேசி, சூளாமணி

விடை : A) சிலப்பதிகாரம், மணிமேகலை

66. பொருந்தா இணையைத் தேர்வு செய்க.

திணை சிறுபொழுது

A) குறிஞ்சி – எற்பாடு

B) முல்லை – நண்பகல்

C) மருதம் – வைகறை

D) நெய்தல் – மாலை

விடை : C) மருதம் – வைகறை

விளக்கம் :

திணை சிறுபொழுது
குறிஞ்சி யாமம்
முல்லை மாலை
மருதம் வைகறை
நெய்தல் எற்பாடு
பாலை நண்பகல்

67. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்தக்

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே !

இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

A) மோனை, எதுகை, முரண்

B) மோனை, முரண், அந்தாதி

C) மோனை, எதுகை, இயைபு

D) இயைபு, அளபெடை, மோனை

விடை : C) மோனை, எதுகை, இயைபு

விளக்கம் :

முதற்சீரில் வந்த முதல் எழுத்தே அடுத்தடுத்த சீர்களிளும் அமைவது மோனைத்தொடையாகும்.

காலம், காலமும்

அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகைத் தொடை ஆகும்.

காலம் ; காலமும்

இறுதிச் சீர் ஒன்றிவருவது இயைபுத் தொடை ஆகும்.

தமிழே! தமிழே!

68. நாலடியாரைத் தொகுத்தவர்

A) கபிலர்

B) அணிலாடு முன்ற்லார்

C) பதுமனார்

D) முன்றுறையரையனார்

விடை : C) பதுமனார்

விளக்கம் :

சமண முனிவர்கள் நானூறுபேர் பாடிய நானூறு வெண்பாக்களைக் கொண்ட நூல் நாலடிலடியார் ஆகும். இந்நூலை பால், இயல் மற்றும் அதிகாரமாக வகுத்தவர் படுமனார் ஆவார்.

69. திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறை சாற்றும் செய்யுள் நூல் எது?

A) நாலடியார்

B) பழமொழி

C) திருவள்ளுவமாலை

D) திருகடுகம்

விடை : C) திருவள்ளுவமாலை

விளக்கம் :

திருக்குறளின் சிறப்பினை உணர்த்த இயற்றப்பட்ட நூல் ‘திருவள்ளுவமாலை’ ஆகும். இந்நூல் திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறைசாற்றும் செய்யுள் வடிவ நூலாகும். இந்நூலில் உள்ள 55 பாடல்களை 53 புலவர்கள் இயற்றியுள்ளனர்.

70. அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி

மல்லல் மதுரையார் எல்லாருந் தாம் மயங்கி – இப்பாடலடிகள் இடம் பெற்ற நூல் எது?

A) மணிமேகலை

B) குண்டலகேசி

C) சிலப்பதிகாரம்

D) வளையாபதி

விடை : C) சிலப்பதிகாரம்

விளக்கம் :

சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம் – ஊர்சூழ்வரி

அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு, ஏங்கி,

மல்லல் மதுரையார் எல்லாருந் தாம் மயங்கி

களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி

வளையாத செங்கோல் வளைந்தது இதுவென்கொல் – இளங்கோவடிகள்

பொருள் : மனம் வருந்தி அழுகின்றவளாகிய கண்ணகியை வளம் மிகுந்த மதுரை மாநகரத்து மக்கள் எல்லோரும் கண்டு கலக்கமுற்றனர். அவர்கள், “எவராலும் நீக்கமுடியாத இத்துன்பத்தை இக்காரிகைக்குச் செய்து என்றும் வறையாத செங்கோலானது வளைந்தது. இஃது எக்காரணத்தினால் நிகழ்ந்ததோ?” என்று கூறி வருந்தினர்.

71. கூற்று 1 : நீலகேசி ஒரு சமணசமயக் காப்பியம்,

கூற்று 2 : குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது நீலகேசி.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று இரண்டும் சரி

C) கூற்று 2 மட்டும் சரி

D) கூற்று இரண்டும் தவறு

விடை : B) கூற்று இரண்டும் சரி

விளக்கம் :

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இது பௌத்த சமய நூலாகும். ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியை இயற்றியவர் பெயர் அறியப்படவில்லை. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூலான இது. குண்டலகேசி என்ற பௌத்த நூலுக்கு எதிராக இயற்றப்பட்ட சமண சமய நூலாகும்.

72. கூற்று 1 : ‘கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி’ என்ற புலவர் கடற்செலவு ஒன்றில் இறந்து போனவர்

கூற்று 2 : இவர் புறநானூற்றில் ஒரு பாடலையும், பரிபாடலில் ஒரு பாடலையும் இயற்றியுள்ளார்.

A) கூற்று 2 மட்டும் சரி

B) கூற்று 1 மட்டும் சரி

C) கூற்று இரண்டும் சரி

D) கூற்று இரண்டும் தவறு

விடை : C) கூற்று இரண்டும் சரி

விளக்கம் :

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

பாண்டிய மன்னர்களுள் பெருவழுதி என்ற பெயரில் பலர் இருந்தனர். ஆயினும் அரிய குணங்கள் அனைத்தையும் தம் இளமைக் காலத்திலேயே பெற்றிருந்ததால் அக்கால மக்கள் ‘இளம்பெரு வழுதி’ என்று அழைத்தனர். கடற்செலவு (கடற்பயணம்) ஒன்றில் இறந்தமையால் இவர் ‘கடலுள் மார்ந்த இளம்பெருவழுதி’ என அழைக்கப்பட்டார். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம் பெற்றுள்ளன.

73. தமிழரின் வாழ்வியல் கருவூலம் எது?

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நாலடியார்

D) இனியவை நாற்பது

விடை : A) புறநானூறு

விளக்கம் :

பண்டைத் தமிழரின் உயர்ந்த நாகரிகம், அரசியல், போர்த்திறம், அமுதாயம் பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவுவதால், புறநானூறு ‘தமிழரின் வாழ்வியல் கருவூலம்’ எனப்படுகிறது.

74. தமிழுக்குக் ‘கதி’ போற்றப்படும் இரு நூல்கள்

A) திருக்குறளும், நாலடியாரும்

B) திருக்குறளும், திருவாசகமும்

C) திருக்குறளும், கம்பராமாயணமும்

D) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்

விடை : C) திருக்குறளும், கம்பராமாயணமும்

விளக்கம் :

ம்பராமாயணம், திருக்குறள்

‘தமிழுக்குக் கதி’ எனப்படுபவை கம்பராமாயணமும் திருக்குறளும் ஆகும் என்று கூறியவர் செல்வ கேசவராய முதலியார் ஆவார்.

75. “மலை உருவி மரம் உருவி

மண் உருவிற்று ஒருவாளி”

இவ்வரி இடம்பெற்ற நூல்

A) மகாபாரதம்

B) கலிங்கத்துப்பரணி

C) பெரியபுராணம்

D) இராமாயணம்

விடை : D) இராமாயணம்

விளக்கம் :

கம்பராமாயணம் – பாலகாண்டம்

அலை உருவக் கடல் உருவத்து

ஆண்தகைதன் நீண்டு உயர்ந்த

நிலை உருவப் புய வலியை

நீ உருவநோக்கு ஐயா !

உலை உருவக் கனல்உமிழ் கண்

தாடகைத்தன் உரம் உருவி

மலை உருவி மரம் உருவி

மண் உருவிற்று ஒரு வாளி ! – கம்பர்

பொருள் : அலைகளின் வடிவமாகக் காட்சியளிக்கின்ற கடல்போன்ற திருமேனியுடைய ஆண்மைத் தன்மையுள்ள ராமனது நெடிதாக உயர்ந்துள்ள நிலையான அழகுடைய தோள்களின் ஆற்றலை நீ உற்றுப் பார்ப்பாயாக ! இராமனால் எய்யப்பட்ட அம்பு ஒன்று, உலைக்களத்திலுள்ள நெருப்பைப் போன்ற சிவந்த நிறமுடைய கண்களை உடைய தாடைகையினது மார்பைத் துளைத்து, அடுத்து நின்ற மலைகளையும் துளைத்து பல மரங்களையும் துளைத்து, எதிரே வேறு பொருள் இல்லாமையால் நிலத்தைத் துளைத்துச் சென்றது.

தாடகை – அரக்கியின் பெயர் , வாளி – அம்பு

76. அரிசியும், மயில்தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நாடுகள்

A) ) கிரேக்கம், உரோமாபுரி, சீனா

B) உரோமாபுரி, எகிப்து, சீனா

C) கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து

D) உரோமாபுரி, எகிப்து, அரேபியா

விடை : C) கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து

77. யானையின் உருவத்தைச் செதுக்குவதில் கைதேர்ந்த சிற்பிகள் யார்?

A) சேரர் காலத்துச் சிற்பிகள்

B) பல்லவர் காலத்துச் சிற்பிகள்

C) சோழர் காலத்து சிற்பிகள்

D) நாயக்கர் காலத்துச் சிற்பிகள்

விடை : B) பல்லவர் காலத்துச் சிற்பிகள்

78. தில்லையாடி வள்ளியம்மை – இதில் தில்லையாடி என்பது

A) வள்ளியம்மை பிறந்த ஊர்

B) வள்ளியம்மையின் தாயார் பிறந்த ஊர்

C) வள்ளியம்மையின் தந்தை பிறந்த ஊர்

D) வள்ளியம்மை வாழ்ந்த ஊர்

விடை : B) வள்ளியம்மையின் தாயார் பிறந்த ஊர்

79. காந்தியடிகளால் “தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்

A) தில்லையாடி வள்ளியம்மை

B) அம்புஜத்தம்மாள்

C) வேலு நாச்சியார்

D) ஜான்சிராணி

விடை : B) அம்புஜத்தம்மாள்

80. மனித மூளையில் தண்ணீரின் அளவு எத்தனை சதவீதம் கொண்டது?

A) அறுபது சதவீதம்

B) எழுபது சதவீதம்

C) எண்பது சதவீதம்

D) தொண்ணூறு சதவீதம்

விடை : C) எண்பது சதவீதம்

81. கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழிச் சொல்லின் பொருள் யாது?

A) அஞ்சுபவன்

B) அடக்கமுடையவன்

C) அஞ்சாதவன்

D) அறியாதவன்

விடை : C) அஞ்சாதவன்

விளக்கம் :

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி என்பதாகும். – கான்ஸ்டாண்டின் என்றால் ‘அஞ்சாதவன்’ என்று பொருளாகும். வீரமாமுனிவர் முதலில் ‘அஞ்சாதவன்’ என்ற பொருள்படும்படி ‘தைரியநாதன்’ என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். பின்னர் அப்பெயர் வடமொழிச் சொல் என்பதை அறிந்துகொண்டு தனித்தமிழில் ‘வீரமாமுனிவர்’ என்று மாற்றிக்கொண்டார்.

82. ஜி. யூ. போப் பாய்மரக்கப்பலில் சென்னை வந்த எட்டுத் திங்களும் _____, ______ ஆகிய நூல்களைப் படித்தார்.

A) தமிழ், ஆங்கிலம்

B) வடமொழி, கன்னடம்

C) தெலுங்கு, தமிழ்

D) வடமொழி, தமிழ்

விடை : (*)

விளக்கம் :

கனடா நாட்டைச் சேர்ந்த ஜி. யூ. போப் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக 1839 – இல் தமிழகம் வந்தார். வரு வழியில் கப்பலில் தமிழ்நூல்களைக் கற்று தம் அறிவை மேம்படுத்திக் கொண்டதுடன் வடமொழி, தெலுங்கு ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

83. ஒப்புரவு என்பதன் பொருள்

A) அடக்கமுடையது

B) பண்புடையது

C) ஊருக்கு உதவுவது

D) செல்வமுடையது

விடை : C) ஊருக்கு உதவுவது

விளக்கம் :

‘ஒப்பு’ என்றால் சமம் என்பதாகும். பிறரையும் தனக்குச் சமமாகக் கருதி அவர்களுக்கு உதவி செய்வது ‘ஒப்புரவு’ எனப்படுகிறது.

84. வள்ளை – எனும் இன்னிசைப் பாடல் யாரால் பாடப்படும்?

A) பாணர்கள்

B) பெண்கள்

C) ஆடவர்கள்

D) குழந்தைகள்

விடை : B) பெண்கள்

விளக்கம் :

‘வள்ளை’ என்றால் உலக்கையால் தானியங்களைக் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டாகும்.

85. பரிதிமாற்கலைஞரின் தனிப்பாசுரத்தொகை என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

A) வில்லியம் ஜோன்ஸ்

B) பேராசிரியர் ராஸ்க்

C) கால்டுவெல்

D) ஜி. யூ. போப்

விடை : D) ஜி. யூ. போப்

86. “வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” எனப் புகழ்ந்தவர் யார்?

A) பரிதிமாற்கலைஞர்

B) ரா. பி. சேதுப்பிள்ளை

C) ந. மு. வேங்கடசாமி

D) வையாபுரி

விடை : B) ரா. பி. சேதுப்பிள்ளை

87. தமிழ் வழங்கிய எல்லையினை

“வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்

றந்நான் கெல்லை……” என்று வரையறுத்தவர்

A) காக்கைப்பாடினியார்

B) ஔவையார்

C) இளங்கீரணார்

D) கபிலர்

விடை : A) காக்கைப்பாடினியார்

விளக்கம் :

வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும்

வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்று

இந்நாள் கெல்லை அகவையிற் கிடந்த

நூலதின் உண்மை வாலிதின் விரிப்பின் – காக்கைப்பாடினியார்

காக்கைப்பாடினியார் என்ற பெண்பாற் புலவர் தொல்காப்பியரோடு கல்வி பயின்ற ஒருசாலை மாணாக்கர் ஆவார்.

88. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் எத்தனை?

A) 26,350

B) 26,375

C) 26,400

D) 26,411

விடை : A) 26,350

விளக்கம் :

சங்க இலக்கியங்கள் – எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

பாடிய புலவர்கள் – 473 பேர்

பாடல்களின் எண்ணிக்கை – 2381

பாடல்களில் உள்ள மொத்த அடிகள் – 26350

89. ‘நாடகச் சாலையொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ என்று கூறியவர்

A) பாரதியார்

B) நாமக்கல் கவிஞர்

C) சங்கரதாசு சுவாமிகள்

D) கவிமணி தேசிக விநாயகனார்

விடை : D) கவிமணி தேசிக விநாயகனார்

90. ஆனந்தரங்கர் நாட்குறிப்பைத் தரவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் எது?

A) சஞ்சாரம்

B) அஞ்ஞாடி

C) நாளை ஒரு பூ மலரும்

D) வானம் வசப்படும்

விடை : D) வானம் வசப்படும்

91. ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

A) மேத்தா

B) பாரதிதாசன்

C) சிற்பி

D) அப்துல் ரகுமான்

விடை : D) அப்துல் ரகுமான்

விளக்கம் :

‘ஆலாபனை’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக 1999 – ஆம் ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றார்.

92. கோ. மோகனரங்கன் பிறந்த ஊர் எது?

A) ஆலப்புழை

B) ஆலந்தூர்

C) ஆமூர்

D) ஆனங்கூர்

விடை : B) ஆலந்தூர்

விளக்கம் :

கவிஞர். கோ. மோகனரங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆலந்தூரில் பிறந்தார். ‘இமயம் எங்கள் காலடியில்’ என்ற இவருடைய படைப்பிற்காக தமிழக அரசின் விருதினைப் பெற்றார்.

93. ‘கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்து’ என்ற தாலாட்டுப் பாடலைப் பாடியவர் யார்?

A) இராமலிங்கப் பிள்ளை

B) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

C) பால்வண்ணப் பிள்ளை

D) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

விடை : B) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

விளக்கம் :

“கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழில்

சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ !”

என்ற தாலாட்டுப் பாடலை இயற்றியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆவார். இவர் குழந்தைக் கவிஞர், நாஞ்சில், நாட்டுக் கவிஞர் விடுதலைக் கவிஞர் என்று போற்றப்பட்டவர்.

94. பாரதிதாசன் எழுதிய ‘பிசிராந்தையார்’ என்னும் நூல்

A) கவிதை

B) உரைநடை

C) சிறுகதை

D) நாடகம்

விடை : D) நாடகம்

விளக்கம் :

பாரதிதாசனின் படைப்பான ‘பிசிராந்தையார்’ ஒரு நாடக நூலாகும். 1969 – இல் இந்நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

95. பொருத்துக.

நூல் ஆசிரியர்

a) குயில் பாட்டு 1. அப்துல் ரகுமான்

b) அழகின் சிரிப்பு 2. சுரதா

c) துறைமுகம் 3. பாரதியார்

d) பால்வீதி 4. பாரதிதாசன்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 3 4 2 1

B) 3 4 1 2

C) 3 1 2 4

D) 1 2 3 4

விடை : A) 3 4 2 1

96. “நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இக்கூற்றில் ‘நடலை’ என்னும் சொல்லின் பொருள் அறிக.

A) நோய்

B) பாதுகாப்பு

C) துன்பம்

D) எமன்

விடை : C) துன்பம்

97. பாஞ்சாலி சபதத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை யாது?

A) 401

B) 405

C) 410

D) 412

விடை : D) 412

விளக்கம் :

பாரதியாரின் மும்பெரும் படைப்புகளில் ‘பாஞ்சாலி சபதம்’ ஒன்றாகும். இந்நூல் 5 சருக்கங்களையும் 412 பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியம் ஆகும்.

98. பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது?

A) தென்றல் விடு தூது

B) அன்னம் விடு தூது

C) தமிழ் விடு தூது

D) முகில் விடு தூது

விடை : A) தென்றல் விடு தூது

விளக்கம் :

பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை அவர்களின் படைப்புகளில் இரு தூது நூல்கள் உள்ளன. அவை 1. அழகர் கிள்ளைவிடு தூது, 2. தென்றல் விடு தூது.

99. தஞ்சை வேதநாயக சாத்திரியார் – அவர்களின் ஆசிரியர் யார்?

A) சுவார்ட்ஸ் பாதிரியார்

B) கால்டுவெல்

C) வீரமாமுனிவர்

D) எச். ஏ. கிரிட்டினப்பிள்ளை

விடை : A) சுவார்ட்ஸ் பாதிரியார்

விளக்கம் :

‘பெத்தலகேம் குறவஞ்சி’ என்ற நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் ஆவார். தஞ்சையில் மதபோதகராய் இருந்த சுவார்ட்ஸ் பாதிரியார் இவருடைய ஆசிரியர் ஆவார்.

100. உத்தரகாண்டம் என்னும் பகுதியை இயற்றியவர்

A) ஒட்டக்கூத்தர்

B) வான்மீகி

C) புகழேந்திப்புலவர்

D) கம்பர்

விடை : A) ஒட்டக்கூத்தர்

விளக்கம் :

ஒட்டக்கூத்தர் என்ற புலவர் கம்பரின் சமகாலத்தில் வாழ்ந்தவர், கம்பர் ‘கம்பராமாயணத்தை’ இயற்றிய பின் இவர் ‘உத்தர ராமாயணம்’ என்ற நூலை இயற்றியனார். அதுவே ‘உத்தர ராமாயணம’’ என்ற நூலை இயற்றியவர். அதுவே ‘உத்தர காண்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin