General Tamil Model Question Paper 3
51. “மயில்” உரிய மரபுச் சொல்லை எழுதுக:
(அ) கரையும்
(ஆ) பிளிறும்
(இ) அலறும்
(ஈ) அகவும்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) அகவும்
காகம்-கரையும், யானை-பிளிறும், ஆந்தை-அலறும், மயில்-அகவும்
52. “வந்தான்” என்னும் வினைமுற்று —– என வினையாலணையும் பெயராய் வரும்
(அ) வருவான்
(ஆ) வாரான்
(இ) வந்தவன்
(ஈ) வந்த
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வந்தவன்
வருவான்-எதிர்கால வினைமுற்று. வாரான்-எதிர்மறை வினைமுற்று. வந்தவன்-வினையாலணையும் பெயர். வந்த–பெயரெச்சம்
53. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் —- முடிவது சிறப்பு
(அ) ஆகாரத்தில்
(ஆ) ஏகாரத்தில்
(இ) ஓகாரத்தில்
(ஈ) ஈகாரத்தில்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஏகாரத்தில்
ஆசிரியப்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு. எனினும் ஓ, ஈ, ஆய், என், ஐ ஆகிய ஓசைகளிலும் முடியும்.
54.. “தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்”
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
(அ) எதுகை மட்டும் வந்துள்ளது
(ஆ) மோனை மட்டும் வந்துள்ளது
(இ) எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன
(ஈ) எதுகையும், மோனையும் வந்துள்ளன
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) மோனை மட்டும் வந்துள்ளது
55. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
(அ) தரங்கம், தையல், திட்பம், தோடு
(ஆ) தையல், தோடு, திட்பம், தரங்கம்
(இ) தரங்கம், திட்பம், தையல், தோடு
(ஈ) தரங்கம், தையல், தோடு, திட்பம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) தரங்கம், திட்பம், தையல், தோடு
56. பொருத்துக:
புலவர் நூல்
(அ) உமறுப்புலவர் – 1. தொன்னூல் விளக்கம்
(ஆ) கம்பர் – 2. நரிவிருத்தம்
(இ) திருத்தக்கதேவர் – 3. சிலை எழுபது
(ஈ) வீரமாமுனிவர் – 4. முதுமொழிமாலை
குறியீடுகள்:
(அ) (ஆ) (இ) (ஈ)
(அ) 4 2 3 1
(ஆ) 4 3 2 1
(இ) 3 1 4 2
(ஈ) 2 4 1 3
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) 4 3 2 1
57. “உறுமிடத் துதவா உவர்நிலம்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(அ) புறநானூறு
(ஆ) அகநானூறு
(இ) ஐங்குறுநூறு
(ஈ) திருக்குறள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) புறநானூறு
புறநானூறு
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுத லல்லது
படைமடம் படான்பிறர் படைமயக் குறினே. – பரணர். மேற்கண்ட பாடல் வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் குறுநில மன்னனை பரணர் புகழ்ந்து பாடியதாகும்
58. திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?
(அ) தேசபக்தன்
(ஆ) தென்றல்
(இ) இந்தியா
(ஈ) சுதேசமித்திரன்
விடை மற்றும் விளக்கம்
(அ) தேசபக்தன்
விளக்கம்:
திரு.வி.க.தேசபக்தன் என்ற பத்திரிகையில் 2 ½ ஆண்டுகள் ஆசியரியராகப் பணிபுரிந்தார். பின்னா திராவிடன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
59. “பொறு” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரரைத் தேர்ந்தெடு,
(அ) பொறுத்தான்
(ஆ) பொறுத்து
(இ) பொறுத்தல்
(ஈ)பொறுத்தவர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ)பொறுத்தவர்
பொறு-வேர்ச்சொல். பொறுத்தான்-வினைமுற்று. பொறுத்து-வினையெச்சம். பொறுத்தல்-தொழிற்பெயர். பொறுத்தவர்-வினையாலணையும் பெயர்.