General Tamil Model Question Paper 26
71. “நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்பு மினது தான்” – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) திருக்குறள்
(ஈ) ஐங்குநுறூறு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) புறநானூறு
பல்சான் றீரே பல்சான் றீரே —– —– —- —- —- —- —– —- நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான் – நரிவெரூ உத் தலையார். பொருள்: உயிருடன் வாழும்போதே நல்லவற்றை செய்ய வேண்டும். அஃது இயலாதபோது தீயதைச் செய்தலையாவது கைவிட வேண்டும்
72. மறைமலையடிகளாரின் மகள்
(அ) கமலாம்பிகை அம்மையார்
(ஆ) கெசவல்லி அம்மையார்
(இ) நீலாம்பிகை அம்மையார்
(ஈ) ஞானாம்பிகை அம்மையார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) நீலாம்பிகை அம்மையார்
73. நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?
(அ) கொண்டு, உடன்
(ஆ) பொருட்டு, நிமித்தம்
(இ) இருந்து, நின்று
(ஈ) உடைய
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) பொருட்டு, நிமித்தம்
நான்காம் வேற்றுமை உருபு “கு”. இவ்வேற்றுமை ஏழு பொருள்களில் அமையும். அவையாவன: கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, இதன் சொல்லுருபுகள் பொருட்டு, நிமித்தம். எ.கா: பணத்தின் பொருட்டு பயணம் மேற்கொண்டான். தேர்வின் நிமித்தம் கண்விழித்துப் படித்தான்.
74. பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் உள்ள “குளிர்காவுஞ்” என்ற சொல்லில் “கா” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
(அ) சோலை
(ஆ) பாலைவனம்
(இ) வயல்
(ஈ) காடு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) காடு
பாஞ்சாலி சபதம் – பாண்டவரின் நாட்டு வளம் “கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர்காவும்” பொருள்: “அழகு மிக்க பயன் தரு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள குளிர்ச்சியான காடும்”.
75. “நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத்துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
(அ) தொல்காப்பியம்
(ஆ) நன்னூல்
(இ) யாப்பருங்கலக்காரிகை
(ஈ) அகத்தியம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) நன்னூல்
உவம உருபுகள் “போல புரைய ஒப்ப உறழ மான கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே. – நன்னூல்.
76. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சாhந்தவை?
(அ) கி.மு.200 முதல் கி.பி.200 வரை
(ஆ) கி.மு.300 முதல் கி.பி.300 வரை
(இ) கி.மு.400 முதல் கி.பி.400 வரை
(ஈ) கி.மு.200 முதல் கி.பி. 300வரை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) கி.மு.300 முதல் கி.பி.300 வரை
தூத்துக்குடி மாவட்டம் ஆசதிச்ச நல்லூரில் கி.பி.1876 மற்றும் கி.பி. 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழர்ய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளில் இருந்து கி.மு.300 முல் கி.பி.300 வரையிலான காலக்கட்டத்தைச் சார்ந்த மக்கள் இறந்தோரின் உடலுடன் தங்கத்தினால் ஆன ஆபரணங்கள், செம்பினாலான ஆண், பெண் தெய்வ உருவங்கள், இரும்பினாலான கத்திகள், விளக்குத் தாங்கிகள் போன்றவற்றையும் சேர்ந்து புதைத்தது தெரியவந்தது.
77. கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க:
(அ) தினங்களைக் கொண்டாடுவதை விடுங்கள்-கவிக்கோ
(ஆ) மண்புழுவல்ல மானிடனே-பாரதி
(இ) கன்று குரல் கேட்ட பசு-தாராபாரதி
(ஈ) தண்ணீர்போல் பணத்தை செலவு செய்தல்-ஆலந்தூரார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) தினங்களைக் கொண்டாடுவதை விடுங்கள்-கவிக்கோ
சுட்டு விரல் வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே! தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள் – கவிக்கோ அப்துல் ரகுமான். மேற்கண்ட பாடல் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும், பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி எழுதப்பட்ட கவிதையாகும்.
78. புதிய பட வீழத்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன
(அ) எட்வர்டு மைபிரிட்சு
(ஆ) ஈஸ்ட்மன்
(இ) தாமஸ் ஆல்வா எடிசன்
(ஈ) பிரான்சிஸ் சென்கின்சு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) தாமஸ் ஆல்வா எடிசன்
1894-ல் அமெரிக்கக் குமாஸ்தா பிரான்சிஸ் ஜென்க்கின்ஸ் என்பவர் ரிச்மண்ட் எனுமிடத்தில் இயக்கபடத்தை பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். நவீன புரெஜெக்டர்கள் (புதிய பட வீழத்திகள்) உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.
79. “அளவின்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
(அ) பெரியபுராணம்
(ஆ) திருவிளையாடற்புராணம்
(இ) சிலப்பதிகாரம்
(ஈ) சீறாப்புராணம்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) பெரியபுராணம்
பெரியபுராணம் அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றிக் குளம் நிறைந்த நீர்த்தடம்போல் குளிர்தூங்கும் பரப்பினதாம் வளம்மருவும் நிழல்தருதண் ணீர்பந்தர் வந்தணைந்தார் – சேக்கிழார். பொருள்: அளவற்ற மக்கள் கடந்து செல்லும் வழியில் மிகுந்த கோடையின் வெப்பத்தினைப் போக்கியருளும் கருணைமிக்க பெரியோர் உள்ளம் போன்றும் நீர்த்தடாகம் போன்றும் அமைக்கப்பெற்ற குளிர்ச்சி நிறைந்த தண்ணீர்ப்பந்தல் திருநாவுக்கரசர் வந்து சேர்ந்தார்.
80. “அரிசி” என்னும் தமிழ்ச்சொல் “ஓரைஸா” என எம்மொழிக்குச் சென்றது?
(அ) கிரேக்கம்
(ஆ) இலத்தீன்
(இ) போர்ச்சுகீசியம்
(ஈ) வடமொழி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) கிரேக்கம்
கடல்கடந்த தமிழ்
தமிழ் கிரேக்கம்
அரிசி ஒரைஸா
கருவூர் கரோரா
காவிரி கபிரில்
குமரி கொமாரி
தொண்டி திண்டிஸ்
மதுரை மதோரா