General Tamil Model Question Paper 24
81. பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்:
(அ) பெண்களைப் பழித்துப் பேசாதே!
(ஆ) பாம்போடு விளையாடாதே!
(இ) போலி வேடங்களைப் போடாதே!
(ஈ) தியொழுக்கம் செய்யாதே!
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) தியொழுக்கம் செய்யாதே!
வைதோரைக் கூட வையாதே – இந்த
வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே!
பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே!
வேம்பினை உலகில் ஊட்டாதே – உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே!
போற்றும் சடங்கை நண்ணாதே – உன்னைப்
புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே!
சாற்றும்முன் வாழ்வை எண்ணாதே – பிறர்
தாமும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே!
கள்ளவேடம் புனையாதே – பல
கங்கையிலே உன்கம் நனையாதே!
கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள் முனையாதே!
– கடுவெளிச் சித்தர்
82. பொருத்தமான பழமொழியைக் கண்டறி:
“கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா”
(அ) ஞாயிறைக் கைமறைப்பார் இல்
(ஆ) முள்ளினால் முள்களையும் ஆறு
(இ) ஆற்றுணா வேண்டுவது இல்
(ஈ) பாம்பு அறியும் பாம்பின் கால்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) ஆற்றுணா வேண்டுவது இல்
பழமொழி நானூறு
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு
வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்
– முன்றுறை அரையனார்.
பொருள்: கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்றுநாடுகள் இல்லை. தம்முடைய நாடுகளே. எனவே அந்நாடுகளுக்குச் செல்லும் போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை
83. அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி
(அ) நித்திலக்கோவை
(ஆ) மணிமிடைப்பவளம்
(இ) களிற்றுயானைநிரை
(ஈ) வெண்பாமாலை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) களிற்றுயானைநிரை
அகநானூறு முப்பெரும் பிரிவுகளை உடையது.
களிற்றியானைநிரை – முதல் 120 பாடல்கள்.
மணிமிடைப்பவளம்-அடுத்துள்ள 180 பாடல்கள்.
நித்திலக்கோவை-இறுதி 100 பாடல்கள்.
84. வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
(அ) பெரியபுராணம்
(ஆ) திருவிளையாடற்புராணம்
(இ) பாஞ்சாலி சபதம்
(ஈ) ஞானரதம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலிசபதம்:
இந்நூலை இயற்றியவர் மகாகவி பாரதியார் ஆவார். இந்நூல் வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி எழுதப்பட்டதாகும். இது சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து பிரிவுகளையும் 412 பாடல்களையும் கொண்ட குறுங்காப்பியமாகும்.
85. “முன்றுறை அரையனார்” – என்ற பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்
(அ) ஊர்
(ஆ) அரசன்
(இ) ஆறு
(ஈ) நாடு
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) அரசன்
86. “செரு அடுதோள் நல்லாதன்” எனப்பாராட்டுவது
(அ) தொல்காப்பியம்
(ஆ) அகத்தியம்
(இ) பாயிரம்
(ஈ) நன்னூல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பாயிரம்
திரிகடுகம் என்ற நூலை இயற்றியவர் நல்லாதனார். காப்புச் செய்யுளில், “காயாம் பூவைப் போன்ற கரிய நிறமுடைய திருமாலின் திருவடிகள்” என்று பாடப்பட்டுள்ளதால், இந்நூல் ஆசிரியர் வைணவ மதத்தினர் என்று குறிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த “திருத்து” என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இவரை “செரு அடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதனால், இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
குறிப்பு: கொள்குறியில் நூலின் பெயர் (திரிகடுகம்) அமைந்திருக்க வேண்டும். “பாயிரம்” என்ற பிரிவு ஒவ்வொரு நூலிலும் முதல் பகுதியாக அமைந்திருக்கும். பொதுவாகப் பாயிரம் என்று குறிப்பிட்டு உள்ளது மிகத் தவறானதாகும்.
87. திருவிளையாடற்புராணத்திற்கு உரையெழுதியவர்
(அ) அடியார்க்கு நல்லார்
(ஆ) அரும்பதவுரைக்காரர்
(இ) ந.மு.வேங்கடசாமி
(ஈ) நச்சினார்க்கினியார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) ந.மு.வேங்கடசாமி
பண்டிதமணி ந.மு.வேங்கடசாமி திருவிடையாடற் புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்
88. பொருத்துக:
அ. விபுதர் – 1. அந்தணன்
ஆ. பனவன் – 2. இரவு
இ. வேணி – 3. புலவர்
ஈ. அல்கு – 4. செஞ்சடை
அ ஆ இ ஈ
அ 3 1 4 2
ஆ. 2 1 4 3
இ. 2 3 4 1
ஈ. 3 4 1 2
விடை மற்றும் விளக்கம்
விடை: அ 3 1 4 2
89. பிரித்தெழுதுக:
“வாயினீர்”
(அ) வாய்+நீர்
(ஆ) வாய்ன்+நீர்
(இ) வாயின்+நீர்
(ஈ) வா+நீர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வாயின்+நீர்
தனிக்குறில் முன் ஒற்று புணர்ச்சி.
நிலைமொழியின் ஈற்றில் “ன” கர ஒற்று வந்து வருமொழி முதலில் “ந”கரம் வந்தால் அந்த ‘ந”கரம் “ன” கரமாகத் திரியும்.
எ.கா: வாயின்+நீர்-வாயினீர்.
பொன்+நாடு-பொன்னாடு
90. நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்
(அ) 2004
(ஆ) 2002
(இ) 2005
(ஈ) 2001
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 2004