General Tamil Model Question Paper 24
41. தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னணியில் நிற்கும் கலை
(அ) பேச்சுக்கலை
(ஆ) ஓவியக்கலை
(இ) சிற்பக்கலை
(ஈ) கட்டக்கலை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஓவியக்கலை
கி.மு.2000 ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தில் வாழந்த தமிழர், தரம் தங்கிய மலைக்குகைளிலும், பாறைகளிலும் ஓவியங்களை கீறி எழுதினர். இவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 25-ற்கும் மேற்பட்ட இடங்களில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டதற்கான சான்றுகளைப் பரிபாடல், குறுந்தொகை பாடல் வரிகள் மூலமாக நாம் அறியலாம்.
42. “நாளை என் தாய்மொழி சாகுமானால் – இன்றே நான் இறந்து விடுவேன்” – என்றவர்
(அ) பாரதியார்
(ஆ) ஷெல்லி
(இ) பாரதிதாசன்
(ஈ) இரசூல் கம்சதேவ்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) இரசூல் கம்சதேவ்
“நாளை என் தாய்மொழி சாகுமானால், இன்றே நான் இறந்து விடுவேன்” – என்று கூறியவர் ருஷ்யக் கவிஞர் இரசூல் கம்சதேவ்.
43. “கண்ணுள் வினைஞர்” என்றழைக்கப்பட்டவர்
(அ) பாடகர்
(ஆ) ஓவியர்
(இ) நாட்டியர்
(ஈ) வனைபவர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) ஓவியர்
பண்டைத் தமிழகத்தில் ஓவியக் கலைஞர்கள் ஓவியர், ஓவியப் புலவர், கண்ணுள் வினைஞர், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் எனப்பட்டனர்.
ஆண் ஓவியர் “சித்திராங்கதன்” எனவும், பெண் ஓவியர் “சித்திரசேனா” எனவும் அழைக்கப்பட்டனர்.
44. மோகனரங்கனின் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கும் பொருள்கள்
(அ) வானொலி
(ஆ) பாவரங்கமேடை
(இ) தொலைக்காட்சி
(ஈ) அனைத்தும்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) அனைத்தும்
ஆலந்தூர் கோ. மோகனரங்கன்.
இவர் எண்ணற்ற இசைப்பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “”இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது.
வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை இவற்றுள் ஏதேனும் ஒன்றனுள் இவரது தமிழ் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
45. “இரட்டைக் கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளிலில்லை” என்றவர் யார்?
(அ) முடியரசன்
(ஆ) சுரதா
(இ) வாணிதாசன்
(ஈ) கண்ணதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) சுரதா
46. “போலச் செய்தல்” பண்பை அடிப்படையாகக் கொண்ட கலை
(அ) சிற்பக்கலை
(ஆ) பேச்சுக்கலை
(இ) நாடகக்கலை
(ஈ) ஓவியக்கலை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) நாடகக்கலை
நாடகம்-நாடு+அகம். நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் எனப்பட்டது. “போலச் செய்தல்” என்னும் பண்பை அடிப்படையாகக் கொண்டது.
47. “தமிழ்வேலி” எனறு மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்
(அ) பரிபாடல்
(ஆ) புறநாநூறு
(இ) திருவாசகம்
(ஈ) தேவாரம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) பரிபாடல்
48. முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை
(அ) அன்னிபெசண்ட் அம்மையார்
(ஆ) தில்லையாடி வள்ளியம்மை
(இ) முத்துலெட்சுமி ரெட்டி
(ஈ) இராணிமங்கம்மாள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) தில்லையாடி வள்ளியம்மை
தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898-ஆம் ஆண்டு முனுசாமி-மங்களம் இணையருக்கு மகளாய்ப் பிறந்தார்.
49. “என்றுமுள தென்தமிழ்” என்றவர்
(அ) பாவாணர்
(ஆ) கம்பர்
(இ) திரு.வி.க
(ஈ) உ.வே.சா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) கம்பர்
கம்பராமாயணம்-ஆரண்ய காண்டம்.
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அமுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல்உரை பகர்ந்தான்
என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்
- கம்பர்.
பொருள்: அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவனாகிய அகத்தியன் ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல்வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தான். உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மையைக் கருதி “என்றுமுள தென்தமிழ்” என்று கம்பர் கூறியுள்ளார்
50. “அந்தமான்” – எவ்வகை மொழி?
(அ) தனிமொழி
(ஆ) தொடர்மொழி
(இ) பொதுமொழி
(ஈ) ஓரெழுத்து ஒருமொழி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பொதுமொழி
பொதுமொழி என்பது ஒரே சொல்லாக இருந்து ஒரு பொருளையும், பிரித்தெழுதும் போது வேறொரு பொருளையும் தருவதும் ஆகும்.
எ.கா.அந்தமான்-ஒரு தீவு.
அந்த+மான்-ஒரு வகை விலங்கைச் சுட்டுகிறது