General Tamil Model Question Paper 24
31. முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்
(அ) உழவுத்தொழில்
(ஆ) மீன்வகைகள்
(இ) விதைகளின் பெயர்கள்
(ஈ) அனைத்தும்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) அனைத்தும்
32. “சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே” – இடம் பெற்றுள்ள காப்பியம்
(அ) மணிமேகலை
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) சீவகசிந்தாமணி
(ஈ) குண்டலகேசி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி
வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும் பாம்பு
ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத் தனவே
– திருத்தக்கத்தேவர்.
பொருள்: மலையின் மீது வெண்மேகங்கள் தவழ்ந்து செல்கின்றன. அவ்வாறு மலையைவிட்டு வெண்மேகம் நகர்வது பாம்பு தோலுரிப்பதைப் போன்று இருக்கிறது. மேகம் நகர்ந்துவிட்ட பின், அம்மலையானது தோலுரிக்கப்பட்ட பாம்பு போல் இருக்கிறது. அங்கே வீழ்கின்ற அருவியின் ஒலி, மத்தளம் போன்று ஒலிக்கின்றது. தேன் உண்ணும் வண்டுகள் பாடுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. ஆகையால் இக்காட்சி ஒரு நாடகம் நடப்பது போன்று இருக்கிறது.
33. பொருள் தருக:
“மயரி”
(அ) உறக்கம்
(ஆ) தயக்கம்
(இ) மயக்கம்
(ஈ) கலக்கம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) மயக்கம்
34. திருவிளையாடற் புராணத்தில் வரும் விருத்தப்பாக்கள்
(அ) மூவாயிரத்து முந்றூற்று அறுபத்து மூன்று
(ஆ) மூவாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று
(இ) மூவாயிரத்து மூன்று
(ஈ) மூவாயிரத்து எழுபத்து மூன்று
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) மூவாயிரத்து முந்றூற்று அறுபத்து மூன்று
திருவிளையாடற்புராணம்.
காண்டம்-3.
மதுரைக்காண்டம்-18 படலங்கள்.
திருவாலவாயக்காண்டம்-16 படலங்கள்.
கூடற்காண்டம்-30 படலங்கள்.
பாவகை-விருத்தப்பா.
பாடல்கள்-3363.
35. மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?
(அ) எட்டு
(ஆ) ஏழு
(இ) பத்து
(ஈ) ஒன்பது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பத்து
மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் பத்து.
உடலில் தோன்றுவன (3): கொலை, களவு, காமம்.
சொல்லில் தோன்றுவன (4): பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்ற சொல்.
உள்ளத்தில் தோன்றுவன (3): பேரவா, கடுஞ்சினம் கொள்ளுதல், தெளிவிலா அறிவு.
36. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்ற கூற்று யாருடையது?
(அ) திருமூலர்
(ஆ) திருநாவுக்கரசர்
(இ) இராமலிங்க அடிகள்
(ஈ) திருஞானசம்பந்தர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) திருமூலர்
37. “என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது” என்று கூறியவர்
(அ) திலகர்
(ஆ) காந்தியடிகள்
(இ) வ.உ.சிதம்பரனார்
(ஈ) திருப்பூர் குமரன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) காந்தியடிகள்
38. இந்திய நாட்டை மொழிகளின “காட்சிசாலை” எனக் குறிப்பிட்டவர்
(அ) அகத்தியலிங்கம்
(ஆ) குற்றாலலிங்கம்
(இ) வைத்தியலிங்கம்
(ஈ) நாகலிங்கம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) அகத்தியலிங்கம்
நம்நாட்டில் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளை மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சி சாலை” என்று குறிப்பிட்டுள்ளார் மொழியியல் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.
39. “இந்தியாவின் தேசியப் பங்குவீதம்” – இந்நூலுக்குரியவர் மூச்சைவிட்டுச் சென்ற நாள்
(அ) 1926-டிசம்பர்-6
(ஆ) 1936-டிசம்பர்-6
(இ) 1946-டிசம்பர்-6
(ஈ) 1956-டிசம்பர்-6
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) 1956-டிசம்பர்-6
“இந்தியாவின் தேசிய பங்கு வீதம்” என்ற நூலுக்குரியவர் அம்பேத்கர் ஆவார். இவர் 1956, டிசம்பர் 6-ம் தேதி மறைந்தார்.
40. “கோட்டோவியங்கள்” என்பது
(அ) நேர்கோடு வரைவது
(ஆ) கோணக்கோடு வரைவது
(இ) வளைகோடு வரைவது
(ஈ) மூன்று கோடும் வரைவது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) மூன்று கோடும் வரைவது
நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு போன்றவற்றால் வரையப்படுபவை கோட்டோவியங்கள் ஆகும்.