General Tamil Model Question Paper 23
51. “வங்க சிங்கம்” என அழைக்கப்படுபவர்
(அ) காந்தியடிகள்
(ஆ) ஜவஹர்லால் நேரு
(இ) வல்லபாய் பட்டேல்
(ஈ) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) வல்லபாய் பட்டேல்
52. பதிணெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) திருக்குறள்
(ஈ) பதிற்றுப்பத்து
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) திருக்குறள்
கொடுக்கப்பட்டுள்ள கொள்குறிகளில் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய மூன்றுமே எட்டுத்தொகை நூலுகளாகும். திருக்குறள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
53. நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்?
(அ) உணவு
(ஆ) உடல்நலம்
(இ) நூல்கள்
(ஈ) உடற்பயிற்சி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) நூல்கள்
நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் நூல்கள் பற்றியே அதிகமாகக் குறிப்பிட்டுள்ளார். ஷேக்ஸ்பியர், மில்டன், பெர்னாட்ஷா, பிளேட்டோ, காளிதாசர், டால்ஸ்டாப், பெட்ரண்ட் ரஸ்ஸல் ஆகியோரின் நூல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
54. பட்டினம், பாக்கம்
(அ) மலையை அடுத்து இருக்கும் ஊர்கள்
(ஆ) வயலை அடுத்து இருக்கும் ஊர்கள்
(இ) காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்
(ஈ) கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
மலையை அடுத்து உள்ள ஊர்கள் – சிறுகுடி.
வயலை அடுத்து உள்ள ஊர்கள் – பேரூர், மூதூர்.
காடுகளை உள்ள ஊர்கள் – பாடி, சேரி.
கடலை அடுத்து உள்ள ஊர்கள் – பட்டினம், பாக்கம்
55. தவறான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(அ) 1949-ல் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்
(ஆ) 1954-ல் காமராசர் முதலமைச்சராக இருந்தார்
(இ) 1944-ல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்
(ஈ) 1947-ல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 1944-ல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்
1955-இல் பிரகாசம் முலமைச்சராக இருந்தார்.
1949-ல். குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்.
1947-ல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்.
1954-முதல் 1963-காமராசர் முதலமைச்சராக இருந்தார்.
56. யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?
(அ) பாரி
(ஆ) பேகன்
(இ) அதியமான்
(ஈ) ஓரி
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) அதியமான்
57 “உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்” – இவ்வடிகள் இம் பெற்ற நூல்
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) அகநானூறு
(இ) குறுந்தொகை
(ஈ) புறநானூறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குறுந்தொகை
குறுந்தொகை (283-ஆவது பாடல்).
உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரி லாறே
– பாலைபாடிய பெருங்கடுங்கோ.
பொருள்: “தோழி! தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப் பெற்றுத் தம்பால் உளதாகிய செல்வத்தைச் செலவழிப்போர் செல்வர் என்று உலகத்தாரால் சொல்லப்படார். “தாமாக ஈட்டிய பொருள் இல்லாதார், முந்தையோர் பொருளின் பயனைத் துய்த்து வாழ்தல் இரத்தலைக் காட்டிலும் இழிவு உடையது”. என்று கூறிஆண்மைத் தன்மையை யாம் தெளியும்படி எடுத்துக் கூறி பொருள் ஈட்டச் சென்றுள்ளார் தலைவர். எப்பொழுதும் கூற்றுவனைப் போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலினை உடைய மறவர் வழியின் இடத்தே தங்கி வழிப் போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலை பருந்துகள் எதிர்நோக்கித் தங்கியிருக்கின்ற, நீர் இல்லாத பாலை நிலத்து வழிகளிலே தலைவர் சென்றார்! அவர் வாழ்வாராக!
58. கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்
(அ) பசுவய்யா
(ஆ) க.சச்சிதானந்தன்
(இ) சி.சு.செல்லப்பா
(ஈ) ந.பிச்சமூர்த்தி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) க.சச்சிதானந்தன்
க.சச்சிதானந்தன்.
ஊர்: யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை.
பணி: ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
காலம்: 10.10.1921 முதல் 21.03.2008 வரை.
சிறப்பு: தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார்.
படைப்புகள்: ஆனந்தத்தேன் (கவிதைத் தொகுதி), அன்னபூரணி (புதினம்) யாழ்ப்பாணக் காவியம்.
இவரின் ஆசிரியர்: மகாவித்துவான் நவநீதக் கிருட்டிண பாரதியார்.
இவரது பாடல்களின் சிறப்பு: கம்பனின் மிடுக்கு, பாரதியாரின் சினம் ஆகியவற்றை இவர் பாடல்களில் காணலாம்
59. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?
(அ) பாரதி
(ஆ) தாரா பாரதி
(இ) சுத்தானந்த பாரதி
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பாரதிதாசன்
வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய்
விளைத்த வற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
சொல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே
– பாரதிதாசன்
60. “அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர்
(அ) நாமக்கல் கவிஞர்
(ஆ) கவிமணி
(இ) பாரதிதாசன்
(ஈ) வைரமுத்து
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) நாமக்கல் கவிஞர்
பெண்மை
அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்தும் இன்ப சொரூபமாய்த்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும்;
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்;
உடன்பிறப் பாகி உறுதுணை புரியும்;
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்;
அயலார் தமக்கும் அன்பே செய்யும்;
நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்
– நாமக்கல் கவிஞர்.
பொருள்: அன்பு, ஆர்வம், அடக்கம் முதலியன பெண்மையின் பண்புகளாகும். உண்மைத் தன்மையும் மன உறுதியும் தன்னலமில்லாது குடும்ப நலம் பேணுதலும், யார் எது செய்யினும் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் அமைந்து, தாய் என்னும் அன்பு வடிவில் இவ்வுலகத்தைத் தாங்குபவள் பெண்ணே. கணவன் மனம் தளரும்போதெல்லாம் அவனது கவலைக்கு மருந்தாக இருப்பவள் மனைவி. தமக்கையோ தங்கையோ உடன் பிறந்தானுக்கு உறுதுணையாகத் திகழ்கிறாள். மகளாகப் பிறந்து தந்தைக்குப் பணிவிடை செய்து மகிழ்பவளும் பெண்ணே. அயலாரிடத்து அன்பு காட்டியும் தனக்கே உரிய நாணம் கெடாது, நட்புக் கொள்வதும் பெண்மையின் சிறந்த பண்புகளாகும்.