General Tamil Model Question Paper 23
21. “முயற்சி திருவினை ஆக்கும்” எனக்கூறியவர்
(அ) பாரதியார்
(ஆ) திருவள்ளுவர்
(இ) ஒளவையார்
(ஈ) திருமூலர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருவள்ளுவர்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
– திருக்குறள் 616.
அதிகாரம்-ஆள்வினை உடைமை.
இயல்-அரசியல்.
22. தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்
(அ) கண்ணதாசன்
(ஆ) வாணிதாசன்
(இ) வண்ணதாசன்
(ஈ) பாரதியார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) வாணிதாசன்
“தமிழ்-பிரெஞ்சு கையகரமுதலி” என்னும் நூலை வெளியிட்டவர் கவிஞர் வாணிதாசன் ஆவார். அவர் தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்” என்று அழைக்கப்பட்டார். ரஷ்யா, ஆங்கில மொழிகளில் இவரது பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரெஞ்சுக் குடியரசு இவருக்கு “செவாலியர் விருது” வழங்கியுள்ளது. “ரமி” என்ற புனைப்பெயரில் பல கவிதைகளை இயற்றியுள்ளார்.
23. அறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
(அ) 1330
(ஆ) 30
(இ) 10
(ஈ) 133
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 10
“அறவுரைக் கோவை” எனப்படும் நூல் முதுமொழிக் காஞ்சியாகும். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் பத்து அதிகாரங்களை உடையது.
1. சிறந்த பத்து.
2. அறிவுப்பத்து.
3. பழியாப்பத்து.
4. துவ்வாப்பத்து.
5. அல்ல பத்து.
6. இல்லை பத்து.
7. பொய்ப்பத்து.
8. எளிய பத்து.
9. நல்கூர்ந்து பத்து.
10. தண்டாப்பத்து.
ஒவ்வொரு பத்தின் முதலடியும், “ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம்” எனத் தொடங்கும். ஒவ்வொரு பத்திலும் 10 அடிகள் வீதம் 100 அடிகள் கொண்ட இந்நூல் நீதிநூல்களில் மிகச் சிறியதாகும்.
24. பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய சித்தர்
(அ) தேரையர்
(ஆ) பாம்பாட்டிச் சித்தர்
(இ) போகர்
(ஈ) கடுவெளிச்சித்தர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) கடுவெளிச்சித்தர்
பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன்
பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே!
வேம்பினை உலகில் ஊட்டாதே – உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே!
– கடுவெளிச் சித்தர்.
25. அம்மானை என்பது ———– விளையாடும் விளையாட்டு
(அ) ஆண்கள்
(ஆ) குழந்தைகள்
(இ) பெண்கள்
(ஈ) இளைஞர்கள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பெண்கள்
“அம்மானை” என்பது பெண்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு. மூவர் வட்டமாக அமர்ந்து கல்லை மேலேறிந்து பிடித்தாடுவது வழக்கம். விளையாடும் போது முதலாமவர் ஒரு கருத்தைக் கூறித் தொடங்க, இரண்டாமவர் அது பற்றி வினவ, மூன்றாமவர் அதற்கு விடை கூறுவதாய் முடியும். இவ்வகையில் இயற்றப்படும் சிற்றிலக்கியம் “அம்மானை” எனப்படும். ‘அம்மானை’ என்பது ‘கலம்பகம்’ என்ற சிற்றிலக்கிய வகையிலுள்ள இரண்டாவது உறுப்பாகும்.
26. தமிழக மக்களால் காந்தியக்கவிஞர் என வழங்கப்படுபவர்
(அ) திரு.வி.க
(ஆ) வெ.இராமலிங்கனார்
(இ) பாரதிதாசன்
(ஈ) வே.இராமசாமி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) வெ.இராமலிங்கனார்
27. “களி இன்ப நல்வாழ்வு கொண்டு” – கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” என்று பாடியவர்
(அ) பாரதியார்
(ஆ) கோ.அ.அப்துல் லத்தீப்
(இ) முடியரசன்
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) கோ.அ.அப்துல் லத்தீப்
28. “காந்தியடிகளை அரை நிர்வாணப் பக்கிரி” என்று ஏளனம் செய்தவர்
(அ) சர்ச்சில்
(ஆ) புனித ஜார்ஜ்
(இ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
(ஈ) இராபர்ட் கிளைவ்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) சர்ச்சில்
29. கீழ்ச்சாதி, மேல் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி தேவை என்று கூறியவர்
(அ) அம்பேத்கர்
(ஆ) அயோத்திதாசப் பண்டிதர்
(இ) பெரியார்
(ஆ) காந்தியடிகள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) பெரியார்
30. அவல் – எதிர்ச்சொல்
(அ) பள்ளம்
(ஆ) மேடு
(இ) அவன்
(ஈ) உணவு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) மேடு
புறநானூறு
நாடகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ;
– ஒளவையார்.
பொருள்: நிலமே நீ நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? பள்ளமாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன?
அவல்-பள்ளம்
அவல்xமேடு