General Tamil Model Question Paper 23
General Tamil Model Questions Pdf
11. “கடம்” என்ற சொல்லின் பொருள்
(அ) முகம்
(ஆ) கைகள்
(இ) உடம்பு
(ஈ) இடுப்பு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) உடம்பு
கள்ளவேடம் புனையாதே – பல
கங்கையிலே உன் கடம் நனையாதே
– கடுவெளிச் சித்தர்.
பொருள்: போலியான வேடங்களைப் போடாதே!
புண்ணிய நதிகளைத் தேடிச் சென்று முழுகாதே!
கடம் – உடம்பு.
12. அகத்துறுப்பு என்பது
(அ) பல்
(ஆ) மனத்தின் உறுப்பு அன்பு
(இ) இதயம்
(ஈ) வயிறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) மனத்தின் உறுப்பு அன்பு
திருக்குறள்-அன்புடைமை
புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
– குறள்-79.
பொருள்: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு அதன் புறத்து உறுப்புகளால் யாதொரும் பயனும் இராது.
13. “தமிழ் பிறமொழி துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்”
– என்று கூறிய அறிஞர்
(அ) தேவநேயப் பாவாணர்
(ஆ) பாரதிதாசன்
(இ) கால்டுவெல்
(ஈ) ஜி.யூ.போப்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கால்டுவெல்
தமிழின் தூய்மை: “தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்”
– கால்டுவெல் கூற்று.
14. தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?
(அ) சகலகலாவல்லி மாலை
(ஆ) பூங்கொடி
(இ) மணிக்கொடி
(ஈ) உரிமை வேட்கை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பூங்கொடி
கவிஞர் முடியரசன் ‘பூங்கொடி’ என்னும் காவியத்திற்காக 1966-இல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றார்.
15. “நற்கலை” என்று அழைக்கப்படும் கலை
(அ) நாடகக்கலை
(ஆ) சிற்பக்கலை
(இ) ஓவியக்கலை
(ஈ) அழுகுக்கலை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) நாடகக்கலை
நாடகக் கலையை ‘நற்கலை’ என்று கவிமணி தேசிய விநாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடக சாலையை நற்கலாசாலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.. நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ?
– கவிமணி
கொடுக்கப்பட்டுள்ள 4 கொள்குறிகளும் தவறானவை.
16. “கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்
(அ) புளியங்குடி
(ஆ) சிறுகூடல் பட்டி
(இ) மாங்குளம்
(ஈ) இடையன்குடி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) இடையன்குடி
இராபர்ட் கால்டுவெல்
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல் 1841-இல் தமிழகம் வந்து, திருநெல்வேலியில் உள்ள இடையன்குடி என்ற ஊரில் தனது சமயப் பணியையும் தமிழ்ப்பணியையும் தொடங்கினார். இடையன்குடி என்ற ஊரில் 50 ஆண்டுகள் வாழ்ந்தார். 1891-இல் தனது சமயப் பணியிலிருந்து ஓய்வு பெற்று கொடைக்கானல் சென்று தங்கியிருந்த போது இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்கு கொண்டுவரப்பட்டு, அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது,
17. பொருத்துக:
திணை பொழுது
அ. குறிஞ்சி – 1. எற்பாடு
ஆ. முல்லை – 2. நண்பகல்
இ. மருதம் – 3. மாலை
ஈ. நெய்தல் – 4. யாமம்
உ. பாலை – 5. வைகறை
அ ஆ இ ஈ உ
அ. 4 3 5 1 2
ஆ. 2 1 4 5 3
இ. 5 4 1 2 3
ஈ. 3 1 2 4 5
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
அ. 4 3 5 1 2
அகப்பொருள் திணைகள் ஐந்து அவற்றிற்கான பெரும்பொழுதுகள், சிறுபொழுதுகள் தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் கூறுபாடுகள் ஆகும். அவை, சிறுபொழுது என்பது ஒரு நாளின் கூறுபாடுகள் ஆகும்.
1.காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை
2. நண்பகல் – காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
3. எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
4. மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
5. யாமம் – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
6. வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
ஐந்திணைகளுக்கும் உரிய முதற்பொருள்:
திணை | நிலம் | பெரும் பொழுது | சிறுபொழுது |
குறிஞ்சி | மலையும் மலை சார்ந்த இடமும் | குளிர்காலம், முன்பனிக் காலம் | யாமம் |
முல்லை | காடும் காடு சார்ந்த இடமும் | கார்காலம் | மாலை |
மருதம் | வயலும் வயல் சார்ந்த இடமும் | ஆறுபெரும் பொழுதுகள் | வைகறை |
நெய்தல் | கடலும் கடல் சார்ந்த இடமும் | ஆறுபெரும் பொழுதுகள் | எற்பாடு |
பாலை | மணலும் கடல் சார்ந்த இடமும் | இளவேனில், முதுவேனில், பின்பணி | நண்பகல் |
18. “எற்பாடு” என்னும் சொல்லில் “பாடு” என்பதன் பொருள்
(அ) தயார் செய்தல்
(ஆ) பாட்டு பாடுதல்
(இ) மறையும் நேரம்
(ஈ) துன்பப்படுதல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) மறையும் நேரம்
எற்பாடு – எல்+பாடு
எல்-ஞாயிறு
பாடு-மறையும் நேரம்
19. “வயிரமுடைய நெஞ்சு வேணும்” – எனக்கூறிய கவிஞர்
(அ) பாரதிதாசன்
(ஆ) கவிமணி
(இ) பாரதியார்
(ஈ) அழ.வள்ளியப்பா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பாரதியார்
பாப்பா பாட்டு
உயிர்களிடத்து அன்பு வேணும் – தெய்வம்
உண்மை என்று தானறிதல் வேண்டும்
வயிரமுடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமை யடிபாப்பா!
– பாரதியார்.
20. “ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” – என்ற பாடல் இடம் பெறும் நூல்.
(அ) மாறனலங்காரம்
(ஆ) காரிகை
(இ) தண்டியலங்காரம்
(ஈ) நன்னூல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தண்டியலங்காரம்
“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னோர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத் தமிழ்”
– தண்டியலங்காரம்