General Tamil Model Question Paper 22
81. “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்’
– என்று பாராட்டப்படுபவர்
(அ) பாரதியார்
(ஆ) முடியரசன்
(இ) சுரதா
(ஈ) அப்துல் ரகுமான்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) அப்துல் ரகுமான்
“மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று புகழப்பட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார். “தமிழ்நாட்டு இக்பால்” என்றும் புகழப்பட்டார். 1999-ஆம் ஆண்டு “ஆலாபனை” என்ற இவருடைய படைப்பிற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். 02.06.2017 அன்று இவர் இயற்கை எய்தினார்.
82. திருக்குறளின் பெருமைகளைப் போற்றி “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் புகழ்ந்து பாடியவர்
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) சுரதா
(ஈ) தாரா பாரதி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) பாரதிதாசன்
83. “நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” என்று கூறியவர்
(அ) தனிநாயகம் அடிகள்
(ஆ) திரு.வி.கல்யாணசுந்தரனார்
(இ) மறைமலையடிகள்
(ஈ) உ.வே.சாமிநாதர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திரு.வி.கல்யாணசுந்தரனார்
திரு.வி.க. அவர்கள் தம் மனைவியை இழந்தபோது அவரின் நண்பர், “மனைவியை இழந்து வாழ்வது கடினமாக இல்லையா?” எனக் கேட்டார். அதற்கு திரு.வி.க. “நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறினார்.
84. பொருத்துக:
நூல் ஆசிரியர்
அ. போற்றித் திருவகவல் – 1. உமறுப்புலவர்
ஆ. பரமார்த்த குரு கதை – 2. எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
இ. முதுமொழி மாலை – 3. வேதநாயகம் பிள்ளை
ஈ. பெண்மதி மாலை – 4. வீரமாமுனிவர்
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
ஆ. 1 4 2 3
இ. 3 4 1 2
ஈ. 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: இ. 3 4 1 2
85. பொருத்துக
நூல் ஆசிரியர்
அ. பெத்லகேம் குறவஞ்சி – 1. பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை
ஆ. முத்துக்குமராசுவாமி பிள்ளைத்தமிழ் – 2. ஒட்டக்கூத்தர்
இ. அழகர் கிள்ளைவிடு தூது – 3. தஞ்சை வேதநாயக சாத்திரியார்
ஈ. தக்கயாகப்பரணி – 4. குமரகுருபரர்
அ ஆ இ ஈ
அ. 4 3 2 1
ஆ. 2 4 3 1
இ. 3 4 1 2
ஈ. 1 3 2 4
விடை மற்றும் விளக்கம்
விடை: இ. 3 4 1 2
86. “தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு” எனக் கூறியவர்
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) வாணிதாசன்
(ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
87. “தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்” என்று பாடிய கவிஞர்
(அ) பாரதிதாசன்
(ஆ) பாரதியார்
(இ) கம்பர்
(ஈ) இளங்கோவடிகள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கம்பர்
கம்பராமாயணம்
தாதுகு சோலை தோறும் சண்பக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே
– கம்பர்.
பொருள்: சரயு ஆறு, மகரந்தப் பொடிகளைச் சிந்தும் சோலைகளை வளப்படுத்தியும், சண்பக வனங்களைக் கடந்தும், அரும்புகள் விரிந்திருக்கின்ற குளங்களை நிரப்பியும், புது மணல் மிக்க நீர்நிலைகள் வழியாகவும், குருகத்தி வேலியிட்ட கமுகத் தோட்டங்களில் பாய்ந்தும், வயல்களை செழிக்கச் செய்தும் பாய்ந்து செல்வது, உடலினுள் உயிர் புகுந்து பரவுவதைப் போன்று விளங்குகின்றது
88. “வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமைகளைப் பறைசாற்றியவர்
(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
(ஆ) பரிதிமாற் கலைஞர்
(இ) அயோத்திதாசப் பண்டிதர்
(ஈ) பாவாணர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
“வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி”
– பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
“திருத்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய
தூயமொழி தமிழ்ச் செம்மொழி”
– பரிதிமாற்கலைஞர்
“16 செவ்வியல் தன்மைகளைக்கொண்ட செம்மொழி
நம் தமிழ் மொழி”
– தேவநேயப் பாவாணர்
89. கீழுள்ள சொற்களுள் காரணப் பெயரெச்ச சொல் எது?
(அ) காற்று
(ஆ) மரம்
(இ) விண்
(ஈ) முக்காலி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) முக்காலி
ஏதேனும் ஒரு காரணம் பற்றியோ பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயர் காரணப்பெயர் ஆகும்.
முக்காலி-மூன்று கால்கள் அமைந்திருக்கும் காரணத்தால் முக்காலி எனக் காரணப்பெயராய் அமைந்தது.
காற்று, மரம், விண் ஆகியவை இடுகுறிப்பெயராகும். ஒரு காரணமும் இன்றி தொன்றுதொட்டு ஆன்றோரால் வழங்கி வரும் பெயர் இடுகுறிப்பெயராகும்.
குறிப்பு: வினாவில்காரணப் பெயர்ச் சொல் என்று அமைந்திருகு;க வேண்டும். “காரணப் பெயரரெச்சசொல்” எனப் பிழையாகக் கேட்கப்பட்டுள்ளது.
90. குன்றேறி என்பதன் இலக்கணக் குறிப்பு
(அ) ஏழாம் வேற்றுமைத் தொகை
(ஆ) ஆறாம் வேற்றுமைத் தொகை
(இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
(ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) ஏழாம் வேற்றுமைத் தொகை
இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது வேற்றுமைத் தொகை ஆகும். குன்றின் கண் ஏறி என்ற சொல்லில் உள்ள “கண்” என்ற ஏழாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது