General Tamil Model Question Paper 22
41. “பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” என்பது
(அ) உணர்ச்சி வாக்கியம்
(ஆ) வினா வாக்கியம்
(இ) செய்தி வாக்கியம்
(ஈ) தன்வினை வாக்கியம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) செய்தி வாக்கியம்
42. பின்வருவனவற்றுள் இரட்டைக்கிளவி எது?
(அ) கலகலவெனச் சிரித்தாள்
(ஆ) வருக வருக என வரவேற்றான்
(இ) பார்த்துப் பார்த்துப் பேசினான்
(ஈ) நொந்தேன் நொந்தேன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) கலகலவெனச் சிரித்தாள்
எ.கா:கலகலவென, மடமடவென, சலசலவெனச் சொற்களைப் பிரித்தால் பொருள் தராதவை இரட்டைக்கிளவி ஆகும்.
எ.கா: வருகவருக, பார்த்துப் பார்த்து, நொந்தேன் நோந்தேன் என சொற்களைப் பிரித்தால் பொருள் தருவது அடுக்குத் தொடராகும்.
43. “கை” என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
(அ) காத்தல்
(ஆ) ஒலிக்குறிப்பு
(இ) ஒழுக்கம்
(ஈ) சோர்தல்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) ஒழுக்கம்
44. “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” என்னும் திருக்குறளில் பயின்று வரும் அணி.
(அ) எடுத்துக்காட்டுவமை அணி
(ஆ) தற்குறிப்பேற்ற அணி
(இ) இல்பொருள் உவமையணி
(ஈ) வேற்றுப்பொருள் வைப்பணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) எடுத்துக்காட்டுவமை அணி
எடுத்துக்காட்டு உவமையணி: உவமை தனி வாக்கியமாகவும் உவமேயம் தனிவாக்கியமாகவும் அமைந்து உவம உருபு பெறாமல் வருவது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.
அகரமுதல எழுத்தெல்லாம் – உவமை.
ஆதிபகவன் முதற்றே உலகு-உவமேயம்.
போல என்ற உவமஉருபு மறைந்து வந்துள்ளது
45. “கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்னும் குறட்பாவில் அமைந்துள்ள மோனை.
(அ) ஒரூஉ மோனை
(ஆ) பொழிப்பு மோனை
(இ) கூழை மோனை
(ஈ) முற்று மோனை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) முற்று மோனை
1,2,3,4 –ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவது முற்றுமோனையாகும்.
1 2 3 4
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
46. “சீதையைக் கண்டேன்” என்னும் தொடர்
(அ) விளித்தொடர்
(ஆ) பெயரெச்சத் தொடர்
(இ) வினைமுற்றுத்தொடர்
(ஈ) உரிச்சொற்றொடர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) வினைமுற்றுத்தொடர்
47. இடைச்சொல் கண்டறிக:
(அ) தவ
(ஆ) நடந்தான்
(இ) தாமரை
(ஈ) மற்று
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) மற்று
பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையே வந்து பொருள் உணர்த்தும் சொற்கள் இடைச்சொற்கள் ஆகும்.
வேற்றுமை உருபுகள், வினையுருபுகள், பண்பு உருபுகள், உவம உருபுகள், சாரியைகள், சுட்டு, வினாக்கள், அசைநிலைகள் ஆகிய யாவும் இடைச்சொற்களாகும். தமக்கெனப் பொருளுடைய ஏ, ஒ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும். தொல்காப்பியர் சொல்லதிகாரம் இடையியலில் 40 இடைச்சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். “மற்று” என்பது அசைநிலை இடைச்சொல்லாகும்.
48. வளர்பிறை என்பது ———- ஆகும்
(அ) பண்புத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) வேற்றுமைத்தொகை
(ஈ) உவமைத்தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) வினைத்தொகை
முக்காலங்களையும் உணர்த்துவது வினைத்தொகை ஆகும்.
வளர்பிறை:வளர்ந்த பிறை, வளருகின்ற பிறை, வளரும் பிறை.
49. பிழையில்லாமல் இலக்கணத்தைக் கல்.
– தன்வினை வாக்கியத்திற்குச் சரியான பிறவினை வாக்கியத்தைத் தேர்க.
(அ) பிழையில்லாமல் இலக்கணத்தை எழுது
(ஆ) பிழையில்லாமல் இலக்கணத்தைக் கற்பி
(இ) பிழையில்லாமல் இலக்கணத்தைப் படி
(ஈ) பிழையில்லாமல் இலக்கணத்தைப் பேசு
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) பிழையில்லாமல் இலக்கணத்தைக் கற்பி
50. செல்வச் செவிலி என்பதன் இலக்கணக்குறிப்பு
(அ) உவமைத்தொடர்
(ஆ) பண்புத்தொகை
(இ) உருவகம்
(ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) உருவகம்
உருவகம்: இதில் உவமேயம் முதல் பகுதியாகவும் உவமை இரண்டாவது பகுதியாகவும் அமைந்திருக்கும். உவமானம், உவமேயம் இரண்டும் ஒன்றாகவே அமைந்திருக்கும்.
எ.கா: வாய்ப்பவளம், மொழியமுது, செல்வச் செவிலி