General Tamil Model Question Paper 22
11. பொருத்துக:
அ. வட்டி – 1. எருமை
ஆ. யாணர் – 2. பவளம்
இ. துகிர் – 3. பனையோலைப்பெட்டி
ஈ. மேதி – 4. புதுவருவாய்
அ ஆ இ ஈ
அ. 3 2 4 1
ஆ. 3 4 2 1
இ. 2 3 4 1
ஈ. 4 1 2 3
விடை மற்றும் விளக்கம்
விடை: ஆ. 3 4 2 1
12. “வந்தது யாருக்கும் தெரியாது – நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது”
– இவ்வடிகள் இடம் பெறும் பாடலைப் பாடியவர்
(அ) முத்துக்குமார்
(ஆ) கபிலன்
(இ) தாரா பாரதி
(ஈ) இளைய கம்பன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தாரா பாரதி
திண்ணையை இடித்துத் தெருவாக்கு
வந்தது யாருக்கும் தெரியாது – நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது;
சந்ததி கூட மறந்துவிடும் – உன்
சரித்திரம் யாருக்கும் நினைவு வரும்?
– கவிஞர் தாராபாரதி
13. நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தைத் தொகுத்தவர்
(அ) நம்பியாண்டார் நம்பி
(ஆ) வேதமுனி
(இ) நாதமுனி
(ஈ)பெரியவாச்சான் பிள்ளை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) நாதமுனி
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
திவ்ய-மேலான; பிரபந்தம்-பலவகைப் பாடல்களின் தொகுப்பு.
இது பெருமாளைப் பற்றி பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.9ஆம் நூற்றாண்டிற்குள் வாழ்ந்த வைணவ சமய ஆழ்வார்கள் பன்னிருவர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பவரால் தொகுக்கப்பட்டது. பின்னர் வந்த மணவாள மாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த “இராமனுஜ நூற்றந்தாதியையும்” சேர்த்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்
14. எட்டுத்தொகை நூல்களில் அகம் சார்ந்த நூல்எண்ணிக்கை எத்தனை?
(அ) 3
(ஆ) 7
(இ) 2
(ஈ) 5
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) 5
எட்டுத்தொகை நூல்கள்
அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
புறப்பொருள் பற்றியவை: புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும்புறமும் கலந்து வருவது: பரிபாடல்.
15. பொருத்துக:
அ. புள் – 1. எருமை
ஆ. நுதல் – 2. துன்பம்
இ. மேதி – 3. பறவை
ஈ. நடலை – 4. நெற்றி
அ ஆ இ ஈ
அ. 1 3 2 4
ஆ. 3 4 1 2
இ. 4 2 3 1
ஈ. 2 1 4 3
விடை மற்றும் விளக்கம்
விடை: ஆ. 3 4 1 2
16. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” என்னும் அடிகள் இடமபெற்றுள்ள நூல்
(அ) நாலடியார்
(ஆ) புறநானூறு
(இ) திருக்குறள்
(ஈ) நற்றிணை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) நற்றிணை
நற்றிணை (பாடல் எண் 355)
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
அம்சில் ஓதிஎன் தோழி தோள்துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுநீ
என்கண் ஓடி அறிமதி
நின்கண் அல்லது பிறிதுயாதும் இலளே
– இயற்றியவர் பெயர் அறியப்படவில்லை.
17. ஊழிபெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார் – எனும் குறட்பாவில் “ஊழி” என்பதன் பொருள்.
(அ) கடல்
(ஆ) நிலம்
(இ) காலம்
(ஈ) உலகம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) உலகம்
18. அகநானூற்றில் ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்களை சார்ந்த திணை
(அ) குறிஞ்சித்திணை
(ஆ) பாலைத்திணை
(இ) முல்லைத்திணை
(ஈ) நெய்தல் திணை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பாலைத்திணை
அகநானூறு பாடல் வைப்பு முறை:
1,3,5,7 —- பாலைத்திணை.
2,8,12,18— குறிஞ்சித்திணை.
4,14,24,34 —- முல்லைத்திணை.
6,16,26— மருதத்திணை.
10,20,30,— நெய்தல் திணை.
19. பொருந்தாத சொல்லைத் தெரிவு செய்க:
(அ) கலித்தொகை
(ஆ) குறுந்தொகை
(இ) நெடுந்தொகை
(ஈ) நறுந்தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) நறுந்தொகை
கலித்தொகை, குறுந்தொகை, நெடுந்தொகை (அகநானூறு) ஆகியவை எட்டுத்தொகை நூல்களாகும்.
நறுந்தொகை என்பது பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்றாகும். இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படும். இந்நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டிய மன்னர் ஆவார். இவர் இயற்றிய வேறு நூல்கள் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயுசங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவையாகும். இவர் வடமொழியிலும் வல்லவராக இருந்தார் என்பதை மேற்கண்ட நூல்களை தமிழில் எழுதியது மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. இவரின் காலம் கி.பி16-ஆம் நூற்றாண்டு என ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.
1564 முதல் 1604 வரை இவர் ஆட்சி செய்தார் என ஆய்வாளர்கள் கருகின்றனர்.
20. திரிகடுகம் நூலின் ஆசிரியர்
(அ) விளம்பி நாகனார்
(ஆ) நல்லாதனார்
(இ) முன்றுறையரையயார்
(ஈ) பெருவாயின் முள்ளியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) நல்லாதனார்