General Tamil Model Question Paper 22
91. செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக
(அ) குடியரசுத் தலைவர் உலகத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
(ஆ) பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
(இ) உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது
(ஈ) நான் நாளை மதுரைக்குச் செல்வேன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது
அ-செய்வினை.
ஆ-பிறவினை.
இ-செயப்பாட்டுவினை.
ஈ-செய்தித் தொடர்.
92. பிழை நீக்கி எழுதுக:
“கண்டதைக் கூறவே”
(அ) கண்டது கூறவே
(ஆ) கண்டதை கூறவே
(இ) காண்பது கூறவே
(ஈ) கண்டதனைக் கூறவே
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) கண்டதனைக் கூறவே
93. நீர், நீவிர், நீங்கள் ஆகியன ———— பெயர்கள்
(அ) முன்னிலை ஒருமை
(ஆ) தன்மை ஒருமை
(இ) முன்னிலைப் பன்மை
(ஈ) தன்மைப்பன்மை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) முன்னிலைப் பன்மை
நீ-முன்னிலை ஒருமை.
நான்,யான்-தன்மை ஒருமை.
நாம், யாம்-தன்மைப் பன்மை
94. “ஓ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்
(அ) உயர்ச்சி
(ஆ) தூய்மை
(இ) மகிழ்ச்சி
(ஈ) கொள்கலம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) மகிழ்ச்சி
95. அண்பல் அடிநா முடிவுறத் ———- வரும்
(அ) தந
(ஆ) பம
(இ) ரழ
(ஈ) றன
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) தந
“அண்பல் அடிநா முடியுறத் தந வரும்”
– நன்னூல் 80.
த்ந்-மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.
“மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும்”
– நன்னூல் 81.
ப்,ம் – மேல் உதடும் கீழ் உதடும் பெருந்த இவை தோன்றும்
“அண்ணம் நுனிநா வருட ரழ வரும்’ – நன்னூல் 83
ர்,ழ்-இவை மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.
“அண்ணம் நுனிநா நனியுறின் றனவாகும்” – நன்னூல் 86.
ற், ன்-இவை மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.
96. வயிற்றுக்கும் என்பதில் வரும் உம்மை
(அ) முற்றும்மை
(ஆ) எண்ணும்மை
(இ) உயர்வுச் சிறப்பும்மை
(ஈ) இழிவுச் சிறப்பும்மை
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) இழிவுச் சிறப்பும்மை
97. வெண்பாவிற்குரிய ஓசை
(அ) அகவல்
(ஆ) செப்பல்
(ஈ) தூங்கல்
(ஈ) துள்ளல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) செப்பல்
வெண்பா-செப்பலோசை;
ஆசிரியப்பா-அகவலோசை;
கலிப்பா-துள்ளலோசை;
வஞ்சிப்பா-தூங்கலோசை.
98. கார் காலத்திற்குரிய மாதங்கள்
(அ) ஐப்பசி, கார்த்திகை
(ஆ) ஆனி, ஆடி
(இ) ஆவணி, புரட்டாசி
(ஈ) மார்கழி, தை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) ஆவணி, புரட்டாசி
அகப்பொருள் இலக்கணம்- பெரும் பொழுதுகள்
இளவேனில்- சித்திரை, வைகாசி.
முதுவேனில்- ஆனி,ஆடி.
கார்காலம்- ஆவணி,புராட்டாசி.
குளிர்காலம்- ஐப்பசி, கார்த்திகை.
முன்பனி- மார்கழி, தை.
பின்பனி- மாசி,பங்குனி.
99. ஐந்திணை, ஐம்பால், ஐம்புலன், ஐம்பொறி ________ இவை ஆகும்.
(அ) பெயர்ச்சொற்கள்
(ஆ) வினைச்சொற்கள்
(இ) தொகைச்சொற்கள்
(ஈ) இடைச்சொற்கள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தொகைச்சொற்கள்
தொகைச் சொற்கள்:
ஐந்திணை-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
ஐம்பால்-ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின்பால்.
ஐம்புலன்-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
ஐம்பொறி-மெய், வாய், கண், மூக்கு, செவி.
100. தேன்மொழி கட்டுரை எழுதிலன். இது ——– தொடர் ஆகும்.
(அ) உடன்பாட்டுத்தொடர்
(ஆ) எதிர்மறைத் தொடர்
(இ) பொருள்மாறா எதிர்மறைத் தொடர்
(ஈ) அயற்கூற்றுத் தொடர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) எதிர்மறைத் தொடர்
தேன்மொழி கட்டுரை எழுதினாள்-உடன்பாட்டுத் தொடர்.
தேன்மொழி கட்டுரை எழுதாமல் இராள்-பொருள் மாறா எதிர்மறைத் தொடர்.
தேன்மொழி கட்டுரை எழுதியதாக ஆசிரியர் கூறினார்-அயற்கூற்றுத் தொடர்.